வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?சனி, மே 30, 2009

தமிழ்மணத்தின் புதிய வாக்களிக்கும் முறை

தமிழ்மணத்தின் புதிய வாக்களிக்கும் முறை பயனர்களுக்கு சிரமத்தை குடுக்கிறது. பிடித்த இடுகைக்கு வாக்களிக்க முயன்ற போது 'OpenID authentication failed: Bad signature' என்று வருகிறது. நான் kurumban.blogspot.com , http://kurumban.blogspot.com இரண்டையும் கொடுத்துப்பார்த்தேன். புண்ணியமில்லை.

சிலரின் இடுகைகள் எப்போதும் 40க்கும் அதிகமான வாசகர் பரிந்துரை வாக்குகளையும், சமீபத்திய ஒரு இடுகை 80க்கும் அதிகமான வாக்குகளையும் பெற்றதனால் தமிழ்மணம் இப்புதிய முறைக்கு வந்திருக்கலாம். அதாவது பதிவர் அல்லாதவரும் பரிந்துரைப்பதால் இவ்வாறு நேருகிறது என கருதியிருக்கலாம், அதுக்கு வாய்ப்பு அதிகம் தான். சில குழுக்கள் மூலம் இவ்வாறு நடப்பதற்கு அதிக வாய்ப்புண்டு. இது வாசகர் பரிந்துரை என்பதையே கேலிக்குள்ளாக்கிவிடுகிறது.

வாசகர் பரிந்துரை என்பதற்கு பதிலாக பதிவர்கள் பரிந்துரை என தலைப்பை மாற்றலாம். வாசகர் அனைவரும் பதிவராக இருப்பது அவசியமில்லையே?
தமிழ்மணத்தில் வாக்களிப்பதற்கு உங்கள் OpenIDஐ பயன்படுத்த வேண்டும்.

உங்கள் ப்ளாகர், வேர்ட்பிரஸ் முகவரிகளே OpenID முகவரி ஆகும். உதாரணமாக கீழே உள்ள பெட்டியில் உங்களது ப்ளாகர் முகவரியை இவ்வாறு அளிக்க வேண்டும் - username.blogspot.com அல்லது username.wordpress.com

அவ்வாறு அளித்தவுடன் ப்ளாகர் தளத்திற்கோ, வேர்ட்பிரஸ் தளத்திற்கோ நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு உங்கள் பயனர்பெயரையும், கடவுச்சொல்லையும் அளிக்க வேண்டும். ப்ளாகர்/வேர்ட்பிரஸ் அதனை சோதித்து அது ஒரு சரியான முகவரியே என்ற தகவலை மட்டும் தமிழ்மணத்திற்கு வழங்கும்

முக்கிய குறிப்பு : உங்கள் பயனர் பெயரோ, கடவுச்சொல்லோ தமிழ்மணத்திற்கு தெரியாது. உங்களது வலைப்பதிவு முகவரி மட்டுமே தமிழ்மணத்திற்கு தெரியும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு OpenID குறித்த தகவல்களை வாசிக்கலாம்

வியாழன், மே 28, 2009

உடன்பிறப்புகளுக்காக ஒரு Cartoon

எப்ப பார்த்தாலும் கடித தந்தி புகழ் தலைவரை/கட்சிய பத்தியே கருத்துப்படம் போடராங்கன்னு சில உடன்பிறப்புகளுக்கு கவலை அதனால ஒரு மாறுதலுக்காக....
இருந்தாலும் இந்த cartoon ன பார்த்ததும் மனசு கேக்காம இங்க உங்களுக்காக...;-)

என்னதான் இருந்தாலும் உண்ணாவிரதத்தை இப்படி கேலி ஆக்கி இருக்கக்கூடாது..... (கருத்துபடம் வரைந்தவரை சொல்லலிங்க ... )

புதன், மே 27, 2009

தினமணி கருத்துப்படம்

தினமணியில் வந்த இந்த கருத்துப்படங்கள் உங்களுக்காக...

1. சிங்களத்தின் இரத்தவெறி2. கருணாநிதியின் தொண்டு...

வியாழன், மே 21, 2009

சொக்க தங்கமும் அமைச்சர் பதவியும்

மத்திய அரசுக்கு திமுக வெளியில் இருந்து ஆதரவு தருவதாக கூறியது பல திமுக எதிர்ப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. நாளை என்ன திருப்பம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை அறிந்தும் அவர்கள் அற்ப மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

சொக்க தங்கம் சோனியா அம்மையாரும் பிரதமரும் திமுக கேட்ட அமைச்சகங்களை தருவதாக திமுக தலைவர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளார்கள். இதற்கு மேலும் வேறு என்ன உறுதி மொழி வேண்டும்? அவர்கள் சொன்ன சொல்லை காப்பார்கள் என்பது உங்களுக்கு வேண்டுமானால் நகைப்புக்குரியதாக இருக்கலாம் ஆனால் கருணாநிதிக்கு தெரியும் அது நகைப்புக்குரியது அல்ல என்று.

இந்த தள்ளாத வயதிலும் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் விமானம் ஏறி வேண்டிய அமைச்சகங்களை தன் குடும்பத்தாருக்கு (திமுகழகமே அவர் குடும்பம்) வாங்குவதற்காக டில்லி சென்றிருப்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல. இப்ப காங்கிரசு ஓங்கி இருப்பதையும் அறியாதவர் அல்ல இந்த சாணக்கியர்.

திங்கள், மே 18, 2009

புதிய தேடு பொறி

இணையத்தின் இணையில்லா இராசா கூகுளுக்கு இது போட்டியாக இல்லாமல் போட்டியாக புதிய தேடல் பொறி வந்துள்ளது. சாதாரண தேடலுக்கு இது அவ்வளவாக உதவாது. இது கூகுள், யாகூ, எம் எசு என் லைவ் போன்ற தேடல் பொறிகளில் இருந்து வேறுபாடுடையது. இது இன்னும் சோதனை அளவிலேயே உள்ளது. முயன்று பாருங்கள்.

http://www.wolframalpha.com/

தேர்தல் நகைச்சுவை

ஈழம் பற்றி நினைத்தால் மனம் சொல்லனா துயரம் அடைகிறது. எனவே அதைப்பற்றி இப்போதைக்கு பேசப்போவதில்லை\எழுதப்போவதில்லை. ஆனால் தேர்தல் முடிவு பற்றி ஊர்ல விசாரித்தேன். அங்க நடமாடும் செய்தி உங்களுக்கு இங்கே...

ஊர்ல பேசும் போது என்னடா நீங்க நினைச்ச அளவுக்கு கூட வாக்கு வாங்கலையாட்டக்குது என்றேன்.

ஆமாண்ணா, இதுல எங்கோ தப்பு நடந்திருக்கு... வெற்றி பெறுவது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை... ஆனா வாக்கு எண்ணிக்கை தான் உதைக்குது. பசங்களை கேட்டேன். அவங்க இப்படி தான் சொல்றாங்க..

"நான் போட்டது என்னமோ நம்ம கட்சிக்கு தான் ஆனா அது எதுல விழுந்ததுன்னு தான் எனக்கு தெரியாது."

இது தான் இப்ப ஊர்ல சூடானா தேர்தல் செய்தி....

வியாழன், மே 14, 2009

வாக்கு பதிவு விழுக்காடும் நம்ம கருத்தும்

தமிழ்நாட்டில் நடந்த வாக்கு பதிவு விழுக்காடுகளை வைத்து நாம் கொஞ்சம் ஊகம் செய்யலாம். இந்த விழுக்காடு செய்தி thatstamil.com ல் வந்தது.

1. திருவள்ளூர் (தனி) - 54% - யாரும் சரியா வேலை செய்யவில்லை

2. வட சென்னை - 61% - தா.பா வெற்றி அடைந்து விடுவார் என்று உடன்பிறப்புகள் வேலை செய்யவில்லையா?

3. தென் சென்னை - 62% - ஓரளவு வேலை செய்திருக்காங்க.

4. மத்திய சென்னை - 58% - அடுத்தவன வாக்கு பெட்டி பக்கம் வராம அடிச்சி வெரட்டங்குள்ள வாக்கு பதிவு முடிஞ்சுன்னு சொல்லிட்டாங்கப்பா.

5. ஸ்ரீபெரும்புதூர்- 65% - தொகுதி மாறினது வீண்.

6. காஞ்சீபுரம் (தனி)- 66% - தேவலை

7. அரக்கோணம்- 65% - இரயிலு ஓடுமா? இல்லை ஜெகத்ரட்சகன் காசு வேலை செய்யுமா?

8. வேலூர்- 58% - யாரும் சரியா வேலை செய்யவில்லை, சரியா வேலை செய்யாதவங்களை வேலூர் கிறித்துவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தான் அனுப்பனும்.

9. கிருஷ்ணகிரி - 70% - சுகமாகிடுமா இல்ல நஞ்ச குடிச்ச கதை தானா?

10. தர்மபுரி - 70.5% - பாமக நல்லா வேலை செய்து இருக்காங்க.

11. திருவண்ணாமலை- 69% - குருவும் அவர தோற்கடிக்க வேண்டும் என்பவர்களும் நல்லா வேலை செய்திருக்காங்க.

12. ஆரணி- 59% - யாரும் சரியா வேலை செய்யவில்லை

13. விழுப்புரம் (தனி) - 70% - சிறுத்தையா இலையா என்பதை விட பொன்முடியா தைலாபுரமான்னு கேக்கறது தான் சரி.

14. கள்ளக்குறிச்சி - 60% - நட்சத்திர தொகுதியா இது?

15. சேலம் - 69% - தங்கபாலுக்கு ஆப்பு தான்.

16. நாமக்கல்- 75% கொங்குநாடு முன்னேற்றப் பேரவை & கொங்கு இளைஞர் பேரவையின் வேலை.

17. ஈரோடு - 71.6% - கொங்குநாடு முன்னேற்றப் பேரவையின் வேலை.

18. திருப்பூர்- 71% - கொங்குநாடு முன்னேற்றப் பேரவையின் வேலை.

19. நீலகிரி (தனி) - 62% - கொங்குநாடு முன்னேற்றப் பேரவை சரியா வேலை செய்யலையா அல்லது தோழர்கள் சரியா வேலை செய்யலையா?

20. கோவை- 60% - ஈசுவரா எல்லாம் உன் வேலை தானா?.

21. பொள்ளாச்சி- 65.5% - அப்ப இங்க BEST தானா?

22. திண்டுக்கல் - 68% - காங்கிரசுக்கு பெரிய பூட்டு கொடுக்கப்பட்டிருக்கலாம்.

23. கரூர்- 80% - பணக்காரரு நல்லா இறைச்சி இருக்கார்ங்கறது தெரியுது.

24. திருச்சி - 67% - தோழர்களும் மாமாக்களும் அதிகம் உள்ள இடத்தில் காங்கிரசா? விளங்கிடும்.

25. பெரம்பலூர் - 71% - பணத்த டாலரா இறைச்சதா கேள்வி.

26. கடலூர் - 67% - திமுக ஆதரவு பதிவர்கள் அதிமுகவுக்கு ஆப்பு அப்படிங்கறாங்க, திமுக எதிர்ப்பாளர்கள் காங்கிரசா அப்படின்னு சிரிக்கறாங்க. விருதாச்சலம், பண்ருட்டி எல்லாம் இந்த தொகுதிக்கு கீழதாம்பா வருது. தேமுதிகவையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க.

27.சிதம்பரம் (தனி) - 74% - சிறுத்தையும் சிங்கமும் நல்லா வேலை செஞ்சிருக்காங்க.

28. மயிலாடுதுறை - 70% - ஐயருக்கு ஆப்பு தான்.

29. நாகப்பட்டினம் (தனி) - 69% - சித்தமல்லிகாரங்க விளையாடி இருக்காங்கப்பா.

30. தஞ்சாவூர் - 68% - மந்திரி தொகுதி, அதுவும் இல்லாம லோ.கணேசன் வேற மதிமுகவுல இருந்து திமுகவுக்கு வந்திருக்காரு.

31. சிவகங்கை - 66% - சீக்கியரை மன்னிக்கும் கனவான் போட்டியிடுராரு, அவருக்கு தமிழர்கள கண்டா கொஞ்சம் இலப்பம் தான், பணத்த தண்ணியா செலவு பண்றதுக்கு தான் கண்ணப்பன் இங்க நிக்கறாரு. நம்ம கனவாணுக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வேற, பார்க்கலாம்.

32. மதுரை - 76.6% - அஞ்சா நெஞ்சன் எப்படி வாக்கு வாங்கனும்ன்னு தெரிஞ்ச ஆளு. 3 லட்சம் வாக்கு வேறுபாட்டுல வெற்றி பெருவேன்னு சூழுறைத்திருக்கார்.

33. தேனி - 62% - எப்பவாவது தான் ஆள்கூழ் (luck) அடிக்கும். அது தெரியாத ஆளா ஆருண்?

34. விருதுநகர் - 70% - வைகோவுக்குன்னு எழுதி வச்சிருக்கு.

35. ராமநாதபுரம் - 64.5% - வள்ளலுக்கே சோதனை.

36. தூத்துக்குடி - 65.7% - சித்த மருத்துவரான இந்து நாடாருக்கும் முன்னால் பல்கலைக்கழக துணைவேந்தரான கிறுத்துவ நாடாருக்கும் போட்டி. முரட்டு பக்தரின் தொகுதி. என்ன வேண்டும்மென்றாலும் நடக்கலாம்.

37. தென்காசி (தனி) - 63% - கைய மறந்துடுங்க.

38. திருநெல்வேலி - 65% - திமுகவுக்கு தெரியும் இப்ப இந்த தொகுதி கை கூடாதுன்னு.

39. கன்னியாகுமரி - 63.09% - தாமரை மலருமா?

40. புதுச்சேரி - 80% - காங்கிரசுக்கு கொஞ்சம் தொண்டர்கள் இருக்குமிடம்.


http://thatstamil.oneindia.in/news/2009/05/14/tn-67-votes-polled-in-tamil-nadu.html

KU-AM நிறுவனத்தின் கருத்து கணிப்பு

பல்வேறு நாளிதழ்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள் கருத்து கணிப்புகள் வெளியிட்டுள்ளன. இவற்றை சில புகழ்பெற்ற கருத்து கணிப்பு நிறுவனங்கள் செய்தன. அரசியல் கட்சிகளும் கருத்து கணிப்புகளை நடத்தியுள்ளன. ஏவல் துறையான உளவுதுறையை வைத்து ஆளும்கட்சிகளும் கருத்து கணிப்புகளை நடத்தியுள்ளன.

இதுல பாருங்க எதுவுமே ஒரே மாதிரி வரவில்லை, அப்படி என்றால் என்ன பொருள்? புரிஞ்சா சரி.

இங்கு புகழ்பெற்ற KU-AM புள்ளியியல் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பு உங்களுக்காக.

காங் கூட்டணி - 182
பாசக கூட்டணி- 204
மூன்றாவது அணி- 92
நான்காவது அணி & சுயேச்சைகள் - 59

4 விழுக்காடு முன்னபின்ன இருக்கலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

செவ்வாய், மே 12, 2009

மக்களே மறக்காதீர்கள்.

மக்களே நாளை தேர்தல் மறக்காமல் வாக்கு செலுத்துங்கள். இந்த தேர்தல் ஈழ தமிழர் விதயத்தில் துரோகம் செய்த திமுக கூட்டணிக்கு பாடம் கற்பிக்கும் தேர்தல். மறந்தும் திமுக & காங்கிரசுக்கு வாக்கு செலுத்தாதீர்கள். இப்ப தோற்றால் தான் வரும் தேர்தலில் தமிழருக்கு துரோகம் செய்யமாட்டார்கள். இனி யாரும் தமிழருக்கு துரோகம் செய்ய நினைக்கமாட்டார்கள்.

பல திமுக அனுதாபிகள் திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துவிட்டார்கள். நீங்களும் எதிராக வாக்களியுங்கள், நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க உங்கள் வீட்டில் சொல்லுங்கள். நான் சொல்லிவிட்டேன். அவங்களே எதிராகதான் வாக்களிப்போம் என்று கூறினார்கள். எனக்கு நன்கு பழக்கமான 4 குடும்பத்தாரிடமும் என் வேண்டுகோளை விடுத்தேன், அவர்களும் திமுக கூட்டணிக்கு எதிராதான் வாக்களிக்க போறாங்க. ஏதோ என்னால முடிந்தது.

கொங்கு பகுதி - தேர்தல் அலசல்

கொங்கு பகுதியின் தொகுதிகளை பற்றி இது வரை யாரும் சரிவர கணிக்கவில்லை. கொங்கு பகுதி வாழ் பதிவர்கள் கணித்தார்களா என்று தெரியாது. கோயமுத்தூர், ஈரோடு பகுதியில் வசிக்கும் பதிவர்கள் பலர் உள்ளனர். ஏன் அவர்கள் செய்யவில்லை?

சென்னை வாழ் பதிவரே சென்னை, மதுரை, விருதுநகர், கடலூர் பற்றி கணித்துள்ளார். மதுரைக்காரங்க மதுரையை பற்றி ஒன்னும் சொல்லக்காணோம்.

தேமுதிகவின் பாதிப்பு பற்றி பேசி இருக்காங்க. சரத்குமாரின் சமுத்துவ கட்சியின் பாதிப்பு பற்றி பேசி இருக்காங்க. விருதுநகர்ல நடிகர் கார்த்தி தேவர் சமுதாய வாக்குகளை பிரிப்பதால் வைகோ வெற்றி இழுப்பறின்னு பேசறாங்க. இது மாதிரி ஆளுக்கு வேண்டிய மாதிரி கணிப்பு எழுதறாங்க. எழுதட்டும் எழுதட்டும் தேர்தல் முடியும் வரை இதத்தான செய்யமுடியும்.

சரி கொங்கு பகுதி பற்றி நாம கொஞ்சம் அலசுவோம்.

இங்கு கொங்குநாடு முன்னேற்றப் பேரவை போட்டியிடுகிறது. எனக்கு தெரிந்து இப்பேரவையை யாரும் (கணிப்பு பதிவர்கள்) கணக்கில் எடுத்த மாதிரி தெரியவில்லை. ஆனால் கொங்கு பகுதியில் இதன் பாதிப்பு பலமாக இருக்கப்போகிறது. கள நிலைமையை பார்த்தவர்கள் இப்பேரவைக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கும் என்று நினைக்கவில்லை என்பது தான் உண்மை.

இதனால திமுக கூட்டணி பாதிக்கப்பட போகுதா இல்ல அதிமுக கூட்டணி பாதிக்கப்பட போகுதான்னு தான் தெரியலை. சில தொகுதிகளில் இரண்டாம் இடம் வரவும் வாய்ப்பிருக்கு. குறிப்பா கோவை, பொள்ளாட்சி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் தொகுதிகளில்.

கோவை, நீலகிரி, பொள்ளாட்சி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர் ஆகிய 12 தொகுதிகளில் கொங்குநாடு முன்னேற்றப் பேரவை போட்டியிடுகிறது.

இப்பகுதிகளில் அதிமுக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என்று சொன்னாலும் கொங்குநாடு முன்னேற்றப் பேரவை அதை பாதிக்குமா என்று தெரியவில்லை.

சனி, மே 09, 2009

யாருக்கு வாக்கு செலுத்துவது? திமுகவுக்கு மறந்தும் வேண்டாம்

ஈழ தமிழர் விதயம் காரணமாக யாருக்கு வாக்கு போடுவது என்று நமக்கு குழப்பம். இதில் குழப்பமே வேண்டாம். திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு செலுத்தாதீர்கள்.

திமுக கூட்டணி தோற்க வேண்டும் அப்போது தான் இனி வரும் இந்திய அரசு தமிழருக்கு துரோகம் செய்யாது. குறிப்பாக காங்கிரசு படுதோல்வி அடைய வேண்டும். அப்போதான் அதனுடன் சேர்ந்து தமிழர்களை அழித்த திமுகவுக்கும் பாடம் வரும்.

சில திமுக உடன்பிறப்புகளுக்கு இது கடினமான செயல் தான். அவர்கள் 'மழை விட்டும் தூவானம் விடவில்லை' போன்ற அழகிய சொல்லாடலுக்கு மயங்கி நிற்பவர்கள். மயக்கம் தெளிஞ்சா எல்லாருக்கும் நல்லது. மயக்கம் தெளிய கூடாது என்று தான் முழு அடைப்பு அன்று டாஸ்மார்க் திறந்திருந்தது, சன், கலைஞரில் சிறப்பு படம் போட்டார்கள். புரிஞ்சுக்குங்கப்பா...

அதிமுகவுக்கு வாக்கு செலுத்துங்க. அதிமுக பிடிக்கலையா தேமுதிகவுக்கு வாக்கு செலுத்துங்க, அதுவும் பிடிக்கலையா உங்க தொகுதியில் நிற்கும் வேற கட்சிக்கு அல்லது சுயேச்சைக்கு வாக்கு செலுத்துங்க. மறந்தும் உதயசூரியனுக்கோ, கைக்கோ வாக்கு செலுத்தாதிங்க.

கருணாநிதியை விட செயலலிதா எவ்வளவோ மேல்...
முதல் நாள் பிரபாகரன் நண்பன் என்று பேட்டி கொடுக்க வேண்டியது அடுத்த நாள் நான் அப்படி சொல்லவேயில்லை என்பது.

எனக்கு தெரிந்து கருணாநிதி என்றும் ஈழமே தமிழர்களுக்கு தீர்வு என்று ஆணித்தரமாக சொன்னதில்லை. என்றுமே இவரு வழவழா கொழகொழா தான்.
செயலலிதா இத்தேர்தலில் அப்படி சொல்லி உள்ளார். அப்படி சொன்னதற்காக அவரை பாராட்டவேண்டும்.

தமிழகத்தில் ஆட்சி, மத்தியில் பல அமைச்சர்கள் மேலும் அங்கு இவருக்கு பெரும் செல்வாக்கு. எல்லாம் இருந்தும் ஈழ மக்களை காக்க ஒன்றும் செய்யவில்லை... அப்புறம் எதற்கு திமுகவிற்கு வாக்கு செலுத்தவேண்டும்?

வியாழன், மே 07, 2009

திமுகவுக்கு ஆப்பு வைக்க காங்கிரசு தயாராகிவிட்டது

இன்னும் தமிழ்நாட்டில் தேர்தல் முடியவில்லை ஆனால் அதற்குள் திமுகவிற்கு ஆப்பு வைக்க காங்கிரசு தயாராகி கொண்டுள்ளது.
இதுல கொடுமை என்னன்னா காங்கிரசால தான் திமுக-விற்கு இத்தேர்தலில் சிக்கலே. காங்கிரசு கூட்டணி வேண்டாம் என்று பல பேர் கூறியும் திமுக, காங்கிரசுடன் தான் கூட்டணி என்று கொள்கை முடிவெடுத்தது. திமுக குறைந்த தொகுதிகளில் வென்றால் பலனை உடனடியாக அனுபவிக்கவேண்டியது தான். உடன்பிறப்புகளே இதை மனதில் கொண்டு எப்படியாவது வென்று விட வேண்டும் என்பதில் முனைப்பாக இருங்கள்.


அதிமுகவுடன் கூட்டணி வரும் என்று கூறி வரும் காங்கிரஸ் தலைவர்கள் வரிசையில் லேட்டஸ்டாக ஷீலா தீட்சித் இணைந்துள்ளார்.

ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத்தைத் தொடர்ந்து, சோனியா காந்தியின் நிழல் போல கருதப்படும் ஷீலா தீட்சித்தும், தேர்தலுக்குப் பின்னர்அதிமுகவுடன் கூட்டணி வரும் என்று கூறியிருப்பது திமுக வட்டாரத்துக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரும் செய்தி அல்ல.

http://thatstamil.oneindia.in/news/2009/05/07/india-sheila-hints-at-post-poll-tie-ups-with-admk.html

திணமனி கருத்துப்படம் - மதுரை, பிச்சை, சலுகை

தமிழகமே மதுரைன்னு அமைச்சர் நேரு தவறாக புரிந்து கொண்டதின் விளைவு .....இப்ப பிச்சை வாங்க கூட வாக்குரிமை கேக்கறாங்கப்பா.. சாமி..எப்ப தேர்தல் முடியுமோ?தேர்தலுக்கு பின் மக்கள் விருப்பப்பட்ட சலுகைகள் கிடைக்கும்... இந்த சலுகைகள் இப்ப கிடைக்காமல் போனதற்கு தேர்தல் ஆணையமே காரணம்...

ஞாயிறு, மே 03, 2009

தினமணி கருத்துப் படம் - விலை/ கட்டண குறைப்பு

தேர்தலை முன்னிட்டு குவார்ட்டர் விலையை குறைக்க அரசு முடிவெடுத்திருப்பதால் குவார்ட்டர் கோயிந்தனெல்லாம் திமுக கூட்டணிக்கு வாக்கு செலுத்தும் படி "குடிமக்கள் முன்னேற்ற சங்கம்" கேட்டுக் கொள்கிறது. நமது சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று முழுஅடைப்பு அன்று டாஸ்மார்க் கடைகளை மட்டும் அரசு திறந்திருந்ததை கோயிந்தன்கள் இத்தருணத்தில் எண்ணிப்பார்க்க வேண்டும்.