வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், மே 14, 2009

வாக்கு பதிவு விழுக்காடும் நம்ம கருத்தும்

தமிழ்நாட்டில் நடந்த வாக்கு பதிவு விழுக்காடுகளை வைத்து நாம் கொஞ்சம் ஊகம் செய்யலாம். இந்த விழுக்காடு செய்தி thatstamil.com ல் வந்தது.

1. திருவள்ளூர் (தனி) - 54% - யாரும் சரியா வேலை செய்யவில்லை

2. வட சென்னை - 61% - தா.பா வெற்றி அடைந்து விடுவார் என்று உடன்பிறப்புகள் வேலை செய்யவில்லையா?

3. தென் சென்னை - 62% - ஓரளவு வேலை செய்திருக்காங்க.

4. மத்திய சென்னை - 58% - அடுத்தவன வாக்கு பெட்டி பக்கம் வராம அடிச்சி வெரட்டங்குள்ள வாக்கு பதிவு முடிஞ்சுன்னு சொல்லிட்டாங்கப்பா.

5. ஸ்ரீபெரும்புதூர்- 65% - தொகுதி மாறினது வீண்.

6. காஞ்சீபுரம் (தனி)- 66% - தேவலை

7. அரக்கோணம்- 65% - இரயிலு ஓடுமா? இல்லை ஜெகத்ரட்சகன் காசு வேலை செய்யுமா?

8. வேலூர்- 58% - யாரும் சரியா வேலை செய்யவில்லை, சரியா வேலை செய்யாதவங்களை வேலூர் கிறித்துவ மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தான் அனுப்பனும்.

9. கிருஷ்ணகிரி - 70% - சுகமாகிடுமா இல்ல நஞ்ச குடிச்ச கதை தானா?

10. தர்மபுரி - 70.5% - பாமக நல்லா வேலை செய்து இருக்காங்க.

11. திருவண்ணாமலை- 69% - குருவும் அவர தோற்கடிக்க வேண்டும் என்பவர்களும் நல்லா வேலை செய்திருக்காங்க.

12. ஆரணி- 59% - யாரும் சரியா வேலை செய்யவில்லை

13. விழுப்புரம் (தனி) - 70% - சிறுத்தையா இலையா என்பதை விட பொன்முடியா தைலாபுரமான்னு கேக்கறது தான் சரி.

14. கள்ளக்குறிச்சி - 60% - நட்சத்திர தொகுதியா இது?

15. சேலம் - 69% - தங்கபாலுக்கு ஆப்பு தான்.

16. நாமக்கல்- 75% கொங்குநாடு முன்னேற்றப் பேரவை & கொங்கு இளைஞர் பேரவையின் வேலை.

17. ஈரோடு - 71.6% - கொங்குநாடு முன்னேற்றப் பேரவையின் வேலை.

18. திருப்பூர்- 71% - கொங்குநாடு முன்னேற்றப் பேரவையின் வேலை.

19. நீலகிரி (தனி) - 62% - கொங்குநாடு முன்னேற்றப் பேரவை சரியா வேலை செய்யலையா அல்லது தோழர்கள் சரியா வேலை செய்யலையா?

20. கோவை- 60% - ஈசுவரா எல்லாம் உன் வேலை தானா?.

21. பொள்ளாச்சி- 65.5% - அப்ப இங்க BEST தானா?

22. திண்டுக்கல் - 68% - காங்கிரசுக்கு பெரிய பூட்டு கொடுக்கப்பட்டிருக்கலாம்.

23. கரூர்- 80% - பணக்காரரு நல்லா இறைச்சி இருக்கார்ங்கறது தெரியுது.

24. திருச்சி - 67% - தோழர்களும் மாமாக்களும் அதிகம் உள்ள இடத்தில் காங்கிரசா? விளங்கிடும்.

25. பெரம்பலூர் - 71% - பணத்த டாலரா இறைச்சதா கேள்வி.

26. கடலூர் - 67% - திமுக ஆதரவு பதிவர்கள் அதிமுகவுக்கு ஆப்பு அப்படிங்கறாங்க, திமுக எதிர்ப்பாளர்கள் காங்கிரசா அப்படின்னு சிரிக்கறாங்க. விருதாச்சலம், பண்ருட்டி எல்லாம் இந்த தொகுதிக்கு கீழதாம்பா வருது. தேமுதிகவையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க.

27.சிதம்பரம் (தனி) - 74% - சிறுத்தையும் சிங்கமும் நல்லா வேலை செஞ்சிருக்காங்க.

28. மயிலாடுதுறை - 70% - ஐயருக்கு ஆப்பு தான்.

29. நாகப்பட்டினம் (தனி) - 69% - சித்தமல்லிகாரங்க விளையாடி இருக்காங்கப்பா.

30. தஞ்சாவூர் - 68% - மந்திரி தொகுதி, அதுவும் இல்லாம லோ.கணேசன் வேற மதிமுகவுல இருந்து திமுகவுக்கு வந்திருக்காரு.

31. சிவகங்கை - 66% - சீக்கியரை மன்னிக்கும் கனவான் போட்டியிடுராரு, அவருக்கு தமிழர்கள கண்டா கொஞ்சம் இலப்பம் தான், பணத்த தண்ணியா செலவு பண்றதுக்கு தான் கண்ணப்பன் இங்க நிக்கறாரு. நம்ம கனவாணுக்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வேற, பார்க்கலாம்.

32. மதுரை - 76.6% - அஞ்சா நெஞ்சன் எப்படி வாக்கு வாங்கனும்ன்னு தெரிஞ்ச ஆளு. 3 லட்சம் வாக்கு வேறுபாட்டுல வெற்றி பெருவேன்னு சூழுறைத்திருக்கார்.

33. தேனி - 62% - எப்பவாவது தான் ஆள்கூழ் (luck) அடிக்கும். அது தெரியாத ஆளா ஆருண்?

34. விருதுநகர் - 70% - வைகோவுக்குன்னு எழுதி வச்சிருக்கு.

35. ராமநாதபுரம் - 64.5% - வள்ளலுக்கே சோதனை.

36. தூத்துக்குடி - 65.7% - சித்த மருத்துவரான இந்து நாடாருக்கும் முன்னால் பல்கலைக்கழக துணைவேந்தரான கிறுத்துவ நாடாருக்கும் போட்டி. முரட்டு பக்தரின் தொகுதி. என்ன வேண்டும்மென்றாலும் நடக்கலாம்.

37. தென்காசி (தனி) - 63% - கைய மறந்துடுங்க.

38. திருநெல்வேலி - 65% - திமுகவுக்கு தெரியும் இப்ப இந்த தொகுதி கை கூடாதுன்னு.

39. கன்னியாகுமரி - 63.09% - தாமரை மலருமா?

40. புதுச்சேரி - 80% - காங்கிரசுக்கு கொஞ்சம் தொண்டர்கள் இருக்குமிடம்.


http://thatstamil.oneindia.in/news/2009/05/14/tn-67-votes-polled-in-tamil-nadu.html

கருத்துகள் இல்லை: