வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?செவ்வாய், டிசம்பர் 28, 2010

தேசிய மால்

நமக்கு தமிழில் உள்ள கோல் மால் என்றால் என்ன என்று நன்கு தெரியும், மால் கொடுத்தியா என்றால் அதன் பொருளும் புரியும். -

இப்ப அமெரிக்காவ பாத்து நம்பெரு நகர்களிலும் மால் (இது இங்கலிபீசு மால்)நிறைய வந்திருச்சு. நானும் மால் அப்படின்னா பெரிய வணிக வளாகம் அதில் நிறைய கடைகள் இருக்கும் என்று புரிந்து வைத்திருந்தேன். நானும் பல மால்களுக்கு பொருட்கள், துணிகள் வாங்க சென்றிருக்கறேன்.  அமெரிக்காவின் பெரிய மால் புளூமிங்டன் மின்னசோட்டாவில் உள்ள மால் ஆப் அமெரிக்கா அப்படின்னு சொல்லுவாங்க. ஆனா அமெரிக்காவின் தேசிய மால் அப்படி கிடையாது சொல்லப்போனா அது மாலே கிடையாது. அது ஒரு வெட்ட வெளி.


தேசிய மால் படம்:-  அமெரிக்க காங்கிரசு கட்டடம் - வாசிங்டன் நினைவுத்தூண் தூரத்தல தெரியறது லிங்கன் நினைவகம். 

எனக்கு இது மொதல்ல தெரியல. அமெரிக்க விடுதலை தினத்தன்று அமெரிக்காவின் கிட்டதட்ட எல்லா ஊர்லயும் வாண வாடிக்கை நடக்கும். நான் இருந்த ஊர்லயும் நடந்திச்சு அதை கண்டு நான் வாய பொழந்தப்ப  பக்கத்திலிருந்த நண்பர் வாசிங்டன் டிசில நடக்கும் வாண வேடிக்கை பெருசா இருக்குமுன்னார். அடுத்த ஆண்டு அங்க போங்கன்னு சொன்னார். அந்த வாண வேடிக்கை தேசிய மால்ல தான் நடத்துவாங்கன்னு கூட வேலை செய்யறவங்க சொன்னாங்க.. மால்ல எப்படி வாண வேடிக்கைன்னு நினைச்சேன். மால்ல எப்படின்னு கேட்டேன், அதுக்கு மால் பெரிசா இருக்கறதால அங்க தான் பட்டாசு கொளுத்துவாங்கன்னு சொல்லிட்டாங்க.. நான் மாலில் ஏன் என்று ஏன் கேக்கறன்னு அவங்களுக்கு புரியலை. திருப்பி திருப்பி மால பத்தி கேட்டா நல்லா இருக்காதுன்னு அதைப்பத்தி கேக்கறத விட்டுட்டேன். நம்ம மரியாதையை நாமே கெடுத்துக்கலாமா?  எப்படி போகனும் எங்க உட்கார்ந்தா வாண வேடிக்கை நல்லா தெரியும் என்று எல்லா விவரத்தையும் கூட வேலை செய்யும் மக்கள் சொல்லிட்டாங்க. வாசிங்டன் டி.சி-யில் வாண வேடிக்கைக்கு போகாதது தான் பாக்கி. எனக்கு மால்ல எப்படி? அப்படிங்கற சந்தேகம் மட்டும் தீரவேயில்லை.

சூலை 4-லும் வந்தது. மெட்ரோ ஏறி (அதாங்க local train) வாசிங்டன் நினைவுத்தூண் போயி லிங்கன் நினைவகத்தை பார்க்கற மாதிரி துண்ட போட்டு எடத்தை புடிச்சேன். நமக்கு முன்னாடியே பல பேர் குடும்பத்தோட வந்து துண்டு மன்னிக்க சமக்காளத்தையே போட்டு இடத்தை புடிச்சிருந்தாங்க. நாற்காலி, தண்ணி, தின்பண்டம், போர்வை என்று அனைத்து வசதிகளோடும் முகாம் போட்டிருந்தாங்க. நேரம் ஆக ஆக கூட்டம் நிறைய வந்தது. கூட்டத்தை சமாளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள். சிறுநீர் கழிக்கவும் ஆய் போகவும் தற்காலிக கழிவறைகளை அமைத்திருந்தனர். கூட்டம் நிறைய வர இடத்துல இது முக்கியம் இல்லைன்னா இடம் நாறிடும்.


தேசிய மால் படம்:-  லிங்கன் நினைவகம் - வாசிங்டன் நினைவுத்தூண் தூரத்தல தெரியறது அமெரிக்க காங்கிரசு கட்டடம்.

தேசிய மால் அப்படிங்கிறது லிங்கன் நினைவகத்திலுருந்து அமெரிக்க காங்கிரசு கட்டடம் வரை உள்ள வெட்ட வெளி தான். இதன் நீளம் கிட்டதட்ட 3 கி.மீ.  லிங்கன் நினைவகத்துக்கும் அமெரிக்க காங்கிரசு கட்டடத்துக்கும் இடையில் வாசிங்டன் நினைவுத்தூண் இருக்கு. லிங்கன் நினைவகத்துக்கு முன்னாடி செவ்வக வடிவில் குளம் உள்ளது. (ஆழம் குறைவு அதனால வாத்த தவிர யாரும் நீச்சல் அடிக்க முடியாது) வாசிங்டன் நினைவுத்தூணின் நிழல் இதில் விழும் அதனால இதை எதிரொலிக்கும் குளம் (reflecting pool) அப்படின்னு சொல்லுவாங்க. வாசிங்டன் நினைவுத்தூணில் இருந்து வலது பக்கதில்  வெள்ளை மாளிகை இருக்குது.

வாண வேடிக்கை நடக்கறப்ப இந்த குளத்து தண்ணிய காலி செய்து அங்கிருந்து தான் வாண வேடிக்கை நடத்துவாங்க. அதனால லிங்கன் நினைவகத்தை நோக்கி வாசிங்டன் நினைவுத்தூண் பக்கம் உட்கார்ந்து பார்த்தா வாண வேடிக்கை நல்லா தெரியும். 20 நிமிடம் நடக்கும் இந்த வாண வேடிக்கை நல்லாவே இருக்கும்.

அறிவது: எல்லா மாலும் மாலல்ல.

ஞாயிறு, டிசம்பர் 05, 2010

கருத்துப்படம் - இதில் 3 இருக்கு

தினமணியில் வந்த 3 கருத்துப்படங்கள். அனைத்தும் பார்க்கவேண்டியவை....சொல்றது நியாமாதான் படுது, அவருக்குன்னு ஏதாவது மதிப்பு உண்டா?இந்த நெருப்பு  போர்ஸ்ன்னா சுடும் ஸ்பெக்டர்ம்ன்னா அணைஞ்சிடும்.


பிரதமரை எருமைன்னு சொல்லிட்டாங்களே.....

வெள்ளி, டிசம்பர் 03, 2010

திமுக வரலாறு - கருத்துப்படம்

நல்லா பாருங்க.  புரிஞ்சுக்குங்க . 2G-spectrumத்துக்கு இதில் இடம் இல்லையா? ஓ! இது 2007ல போட்ட படமா.