வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வியாழன், ஆகஸ்ட் 20, 2009

வெண்ணைவெட்டி யார்?

ஐநா சபை தலைவர் பான் கீ மூன் தான் சிறந்த வெண்ணைவெட்டி என ஐ.நாவுக்கான நார்வே தூதர் மோனா ஜூல் கூறியுள்ளார். அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்யுது. இவர் ஐநா தலைவரா இருக்கும் வரை ஐநா தலையிடும் நல்லது நடக்கும் என்று யாராவது எதிர்பார்த்தால்????? தப்பு எதிர்பார்ப்பவர்களிடம் தான் பான் கீ மூனிடம் இல்லை.

http://www.washingtonexaminer.com/world/ap/53694632.html

http://thatstamil.oneindia.in/news/2009/08/20/world-norway-diplomat-blasts-absent-un-chief.html

இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக பலவீனமான ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் இருக்கிறார். இலங்கை உள்ளிட்ட எந்தப் பிரச்சினையையும் தீர்க்க அவர் தவறி விட்டார். உலகப் பொருளாதார நெருக்கடி உள்பட உலகில் ஏற்பட்ட எந்த நெருக்கடியையும் சமாளிக்கவும், தீர்க்கவும் அவர் முயற்சிக்கவில்லை. அவரிடம் கொண்டு செல்லப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுமே செவிடன் காதில் ஊதிய சங்காக மாறியுள்ளது என்று நார்வே கடுமையாக விமர்சித்துள்ளது.

ஐ.நாவுக்கான நார்வே தூதர் மோனா ஜூல் இதுதொடர்பாக நார்வே வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை நார்வேயின் ஆஃப்டன்போஸ்டன் இதழ் வெளியிட்டுள்ளது.

அதில் மோனா கூறியிருப்பதாவது...

இதுவரை இருந்த ஐ.நா. பொதுச் செயலாளர்களிலேயே மிக மிக பலவீனமானவர் பான் கி மூன்தான். கொஞ்சம் கூட திறமையே இல்லாமல் இருக்கிறார். எந்தவிதமான ஆக்கப்பூர்வமான செயல்பாடும் அவரிடம் இல்லை. சமீபத்திய பல்வேறு உலக நெருக்கடிகளை தீர்த்து வைக்கவோ அல்லது சமாளிக்கவோ அவர் சிறிதும் முயற்சி எடுக்கவில்லை.

சவால்களை துரிதமாக சந்திக்கவும், தீர்த்து வைக்கவும் அவர் தவறி விட்டார். அவர் மிகத் தாமதமாக விழித்து எழுந்தபோது கிட்டத்தட்ட அந்த நெருக்கடிகள் கை விட்டுப் போயிருந்தன அல்லது எல்லாமே நடந்து முடிந்து போயிருந்தன. பான் கி மூனின் செயல்பாடுகள் ஐ.நா. சபையின் அனைத்துத் தரப்பினைரயும் எரிச்சல்பட வைத்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு உலகப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலையில் ஐ.நா. சபை உள்ளது. ஆனால் அதற்கேற்ற வேகமோ, விவேகமோ பான் கி மூனிடம் இல்லாதது வேதனை அலிக்கிறது. எல்லாப் பிரச்சினைகளிலும் அவர் தலையிடாமல் ஒதுங்கியிருப்பது புரியாத புதிராக உள்ளது. சந்தேகங்களை எழுப்புகிறது.

உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதுகுறித்து ஐ.நா. சபையிலிருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. அதேபோல உலக சுற்றுச்சூழல் தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் கூட ஐ.நா. பங்கெடுக்காமல் உள்ளது வியப்பைத் தருகிறது.

இலங்கையில் அப்பாவிகள் கொல்லப்பட காரணம் மூன்தான்...

மியான்மர் ஜனநாயகத் தலைவி ஆங் சான் சூகியி விடுதலை தொடர்பாக பான் கி மூன் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வாய் மூடி மெளனியாக இருந்து வருகிறார். அவர் அங்கு சென்றதால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. மியான்மரில் நடப்பதை அவர் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இலங்கையில் இந்த ஆண்டு நடந்த இனப்போரின் முடிவின்போது நடந்த பெருமளவிலான போர்க் குற்றங்கள், அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள், அட்டூழியங்களை தடுக்க பான் கி மூன் தவறி விட்டார். அதற்காக அவர் முயற்சிகளைக் கூட எடுக்கவில்லை.

இவை மட்டுமல்ல, தர்பூர், சோமாலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, காங்கோ என எந்தவித பிரச்சினை குறித்தும் அவர் ஆக்கப்பூர்வமாக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரிடம் கொண்டு செல்லப்பட்ட எல்லா பிரச்சினையிலும், செவிடன் காதில் ஊதிய சங்காகவே அவர் நடந்து கொண்டிருக்கிறார். எதையும் கவனிக்கும் அக்கறையும் அவரிடம் காணப்படவில்லை.

பான் கி மூன் சிறப்பாக செயல்பட சிறிது கால அவகாசம் தரலாம் என்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், தூதர்களும் முன்பு கூறினார்கள். ஆனால் இப்போது பான் கி மூனின் போக்கைப் பார்த்தால் அவரிடம் எந்தவிதமான செயல் திறனும் இல்லாததுதான் பெரிய பிரச்சினையாகத் தெரிகிறது என்று சரமாரியாக விமர்சித்துள்ளார் மோனா.

நார்வே தூதரின் இந்த பகிரங்க விமர்சனத்தால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பான் கி மூன் நார்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்த நிலையில் மோனா வெளியிட்டுள்ள இந்த அறிக்கை நார்வே அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய், ஆகஸ்ட் 18, 2009

சிரிக்க சிந்திக்க - 2


என்னங்க
ஏன் அடிக்கடி சமையல் அறை பக்கம் போறீங்க?
டாக்டர்
சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.


நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக
சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.


டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''
எந்த
அளவுக்கு பாக்குறாங்க?
''
கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!


வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்
: ஆகிவிட்டது.
வக்கீல்
: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்
: ஒர் பெண்ணை.
வக்கீல்
: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்
: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..


சார்,
டீ
மாஸ்டர் டீ போடறாரு,
பரோட்டா
மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ்
மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
நீங்க
ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...


''
நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''
அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''


ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5
ரூபாய்.
எதிர்த்த
கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய்
. சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!


உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான்
என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.


இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?
இல்லை
அவங்களே சொன்னங்க...


திங்கள், ஆகஸ்ட் 17, 2009

சிரிக்க சிந்திக்க - 1

கண்ணா நீ
திருமணத்திற்கு
முன்னாடி சூப்பர்மேன்,
திருமணத்திற்கு
பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து
ஆண்டிற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது
ஆண்டிற்கு பிறகு டாபர்மேன்...



ஒரு
பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி
இருந்தாலும்
நெகடிவ்ல பிசாசு
மாதிரிதான் இருப்பா...


அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா
அடிச்சா வலிக்கும்
ஆனால்
சைட் அடிச்சா வலிக்காது!


உன்னை யாரவது லூசுன்னு சொன்னா
கவலை
படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு
எப்படி தெரியும்ன்னு கேள்!



காதல் ஒரு மழை மாதிரி,
நனையும்
போது சந்தோஷம்.
நனைந்த
பின்பு ஜலதோஷம்.



மகனே
பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா.
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீப் இட் அப்.


டேய்
என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப அதிகமாம்.
இப்பவாவது
தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????

புதன், ஆகஸ்ட் 12, 2009

புகழ்பெற்ற பதிவரும் அடையாளமும்.

ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ஒரு அடையாளம் இருக்கும். அது முத்திரையாகவோ அல்லது சொற்றொடராகவோ இருக்கும். அந்த சொற்றொடரை\முத்திரையை பார்த்தா நமக்கு அந்த நிறுவனம் நினைவுக்கு வரும். விளம்பரத்துக்கு நிறைய செலவு பண்ணி நம்ம மனசுல அவங்க நிறுவன முத்திரை\சொற்றொடரை பதிய வைக்க முயற்சிப்பாங்க. அதே போல் சில தனி நபர்களுக்கும் அடையாளம் உள்ளது. இவங்க நிறுவனம் மாதிரி எல்லாம் செலவு பண்ணமாட்டாங்க. காலப்போக்கில் அடையாளம் தங்கிவிடும். இங்க சில தனி நபர்களின் அடையாளங்களை பார்ப்போம்.

  • MGR என்று சொன்னாலே வெள்ளை நிற தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடி நினைவுக்கு வரும். அவரு போட்ட வெள்ளை நிற தொப்பியின் வடிவமைப்பில் தமிழ்நாட்டில் யாரும் தொப்பி போட்டு நான் பார்த்ததில்லை. விபி சிங்கும் அந்த வடிவமைப்புல்ல தொப்பி போட்டிருப்பார்.
  • கருணாநிதி என்றாலே கர கர குரலும் கருப்பு கண்ணாடியும் நினைவுக்கு வரும். பலருக்கு கடிதமும் தந்தியும் நினைவுக்கு வரும்.
  • செயலலிதா என்றால் கொடாநாடு நினைவுக்கு வருதோ இல்லையோ கொடாநாடு என்றால் செயலலிதா நினைவுக்கு வருவார்.



  • இரஜினிகாந்த் என்றால் தூக்கி போட்டு சிகரெட் பிடிப்பது, தலை முடியை கையால் கோதி விடுவது நினைவுக்கு வரும்.
  • நம்பியார் என்றால் கையை பிசைந்து கொண்டு பேசுவது, சபரிமலை ஐயப்பன் சாமி நினைவுக்கு வரும்.
  • பாகவதர் என்றால் சிகை அலங்காரம் நினைவுக்கு வரும்.
  • என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டிங்கிறிங்களே அப்படின்னா அது சத்தியராஜ்.
  • 007 அப்படின்னா அது James Bond.
  • கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளவனை சுவற்றில் ஏறி உதைச்சா அது விஜயகாந்த்.
  • அப்துல் கலாம் என்றால் அக்னி & பிருத்வி இராக்கெட்டு, அணுகுண்டும் நினைவுக்கு வரும்.
  • தமிழ்வாணன் என்றால் தொப்பியுடன் கண்ணாடி அணிந்த படம் நினைவுக்கு வரும்.
  • பாரதியார் என்றால் முண்டாசு & முறுக்கு மீசை நினைவுக்கு வரும்.
  • பெரியார் என்றால் வெண்தாடி உடைய வயதானவர் நினைவுக்கு வருவார்.

  • பேஷ் பேஷ் நன்னா இருக்குன்னு சொன்னா நரசூஸ் காபி நினைவுக்கு வரும். (இது உசிலைமணி நடிச்சதுங்க)
  • நான் வளருகிறேனே மம்மி அப்படின்னா காம்பிளான் நினைவுக்கு வரும்.
  • 32 ஊட்டச்சத்துக்கள் உள்ளது அப்படின்னா கார்லிக்ஸ் (Horlicks) நினைவுக்கு வரும்.
  • இது பில்டர் காபியான்னு கேட்டா புரூக் பாண்ட் நினைவுக்கு வரும்.
  • புதுசு கண்ணா புதுசு அப்படின்னா குங்குமம் இதழ் நினைவுக்கு வரும்.
குறிப்பு:
  1. நான் தொலைக்காட்சி பார்த்து நாளாகிவிட்டது. ( சொல்லாமலே தெரியுது அப்படிங்கிறீங்களா)
  2. பழம FETNA வுல தொப்பியோட இருக்கும் படத்தை பார்த்ததும் எழுத ஆரம்பித்தது. (என்னா சுறு சுறுப்பு)

அதுபோல பழமைபேசி என்றால் தொப்பி நினைவுக்கு வரும்\வரவேண்டும். . இப்ப புரியுதா அவர் தொப்பியோடயே சுத்தும் இரகசியம்.
தொப்பில என்ன கொக்கி? பழமை தொப்பியில் ஒரு சின்னம் போட உள்ளார், அது என்னவென்று இன்னும் முடிவாகவில்லை. உங்களுக்கு ஏதாவது தோன்றினால் தெரிவிக்கவும். ஏன் நீல நிறம்? அது பழமைக்கு பிடித்த நிறம்.