வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?வெள்ளி, அக்டோபர் 30, 2009

தினமணி கருத்துப்படம் - முல்லை, குவாத்ரோச்சி, உசார், அமைச்சர்

படம் பெரிதாக தெரிய அதன் மேல் சொடுக்கவும்.

முல்லைப்பெரியார் அணை சிக்கலை என்ன லாவகமா தலைவர் கருணாநிதி தீர்க்கப்போறார்ன்னு பாருங்க.
வழக்கில் இருந்து தப்ப ஒரே வழி பேரை குவாத்ரோச்சின்னு மாத்திக்கிறதுதான். பேரை குவாத்தோச்சின்னு மாத்திக்க நிறைய பேர் வந்ததால அரசு அலுவலகத்தில் விண்ணப்பம் தீர்ந்திடுச்சாம். அந்த விண்ணப்பத்த முதல்லயே பேரை குவாத்ரோச்சின்னு மாற்றிக்கிட்டவர் விலை அதிகம் வைச்சு வெளியில் விக்கறதா பேசிக்கிறாங்க.பிரமரும் உள்துறை அமைச்சரும் ரொம்ப உசாரா இருக்காங்க. இதைத் தான் வரும் முன் காப்பது என்கிறார்களோ?
தலைவருக்கு தெரியும்யா யாரை சட்டமன்ற உறுப்பினராக்கனும் யாரை மக்களவை உறுப்பினராக்கனும்னு அதுலையும் யாரை எப்ப எங்க அமைச்சராக்கனும்ன்னு. அதனால தான் நாம் அவரை அரசியல் சாணக்கியன் அப்படின்னு சொல்லறோம்.

புதன், அக்டோபர் 28, 2009

அரசு பேருந்தில் தமிழ் பதிவு எண்

தமிழக அரசு பேருந்துகளில் வளர்க்கப்படும் தமிழ்.

TN 33 N 5231 என்ற பேருந்து எண்ணானது தநா 33 நா 5231 என்று தமிழ் படுத்தியிருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்கு N என்பது நா ஆகும்.

எனக்கும் என் வண்டியின் எண்களை தமிழில் எழுத வேண்டும் என்று ஆசை. தமிழக அரசு பேருந்து எண் போல் பாதி தமிழ் அல்லாமல் கர்நாடக அரசு பேருந்துகளில் முழு கன்னடத்தில் இருப்பதை போல் முழு தமிழில் எழுதவே விருப்பம். எனக்கு தமிழ் எண்கள் தெரியும். என் வண்டியின் எண் TN 12 A 3456 அதை தநா ௧௨ A ௩௪௫௬ என்று எழுத ஆசை. இங்கு A என்பதற்கு என்ன தமிழ் எழுத்தை எழுதுவது என்று குழப்பம். A என்பதற்கு அ என்று எழுதலாமா? N என்பதற்கு 'நா' என்று எப்படி எழுதினார்கள் என்று புரியவில்லை. வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலோ அல்லது மற்ற அரசு அலுவலகங்களிலோ இது தொடர்பான செய்தி அல்லது உத்தரவு உண்டா? அவ்வாறு இருந்தால் ஏன் இதை பரவலாக அறியச்செய்யக்கூடாது? எந்த உத்தரவும் இல்லையென்றால் எதை கொண்டு இவர்கள் N என்பதை 'நா' என்று முடிவெடுத்தார்கள்? தமிழ் பரப்பும் இவர்கள் முயற்சியை மற்றவர்கள் ஏன் செய்யக்கூடாது? அதற்கான தகவலை அரசு ஏன் மறைக்கவேண்டும்?
கர்நாடக அரசு பேருந்து மற்றும் தமிழக அரசு பேருந்துகளை படம் பிடிக்க மறந்து விட்டேன். இப்போ எனக்கு அந்த வாய்ப்பு இல்லை. பெங்களூர், தமிழக பதிவர்கள் புகைப்படம் எடுத்து அனுப்பினால் தான் உண்டு.

தமிழ் எண்கள்;
௧ - 1
௨ - 2
௩ - 3
௪ - 4
௫ - 5
௬ - 6
௭ - 7
௮ - 8
௯ - 9
௰ - 10
௱ - 100
௲ - 1000

செவ்வாய், அக்டோபர் 27, 2009

தினமணி கருத்துப்படம் - ஐநா, ஈழம், அரசியல்

தினமணியோட கருத்துப்படம் நாட்டு\உலக நடப்பை அப்படியே சொல்லுது.


கருணாநிதியா தேடி அமைத்த வேலி இது. இதுல இருந்து அவரை காப்பாற்றுவதாவது. அவரை மீறி உடையக்கூடியது ஒரு பக்கம் தான் அது காங்கிரசு கூட்டணி. அது உடையக்கூடாதுன்னு தான் எல்லா வேலையும் செய்கிறார். உடன்பிறப்பே இது 2004 அல்ல 2009, எல்லா கணக்கும் மாறி போயிடுச்சி. மீதி மூனு பக்கமும் அசைக்க முடியாத வலுவோட இருக்கு.
ஐநா-ன்னு ஒன்னு இருக்கா? ஓஓஓ இருந்ததா...
சிபிஐ சோதனை என்பது அரசியல் சதுரங்கத்தில் பயன்படும் ஒரு சீட்டு. அதுக்கு போயி யாராவது(அரசியல்வாதி) கவலைப்படுவாங்களா? அரசியல்ல இதல்லாம் சகஜம்ப்பா...

வெள்ளி, அக்டோபர் 23, 2009

வாஸ்து - எதிரில் கண்டது 3

வாஸ்துவ பற்றி முதல் இடுகையிலும் அடி அளவுகள் பற்றி இரண்டாம் இடுகையிலும் எழுதியிருந்தேன். நான் வாஸ்துவை பற்றி எழுத காரணமான நிகழ்வு இங்கே.

தெரிந்த ஒருவரின் நிலம்\வீடு இரண்டு கிழமேற்கு தெருக்களுக்கு நடுவில் இருந்தது. தெற்கு பார்த்த பகுதியில் இருந்த தெரு அகலமானது. வடக்கு பார்த்த பகுதியில் இருந்த தெரு அகலம் சற்று குறைவானது. வடக்கு பார்த்த தெருவை அவர்கள் புழங்கவில்லை. உயரமான (8 ~ 10 அடி) மதிலெலுப்பி இருந்தார்கள். அதனால் அவங்க வீட்டை கூட இத்தெருவில் இருப்பவர்களால் பார்க்க முடியாது. செல்வாக்காக இருந்தார்கள். புதிய வீடு கட்டலாமென முடிவு செய்தார்கள். எல்லோரும் வாஸ்து வாஸ்து-ன்னு அலையறப்போ அவங்க மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா? வாஸ்துகாரங்க அறிவுரைப்படி தான வீடு கட்ட முடியும்.

வாஸ்துகாரங்க வந்தாங்க டும் டும் டும்
தெற்கு பார்த்த தெருவுக்கு மதில் வந்தது டும் டும் டும்
வடக்கு பார்த்த தெருவின் மதில் போச்சு டும் டும் டும்


பூமி பூசை, கடக்கால் அதாவது அஸ்திவாரம் எல்லாம் தொழில் முறை வாஸ்துகாரரின் சொல்படி கேட்டு வீடு கட்டதொடங்கினார்கள். பல சிக்கல்கள் எழுந்தன, (எனக்கு என்ன மாதிரியான சிக்கல்கள் என்று தெரியவில்லை). வேறு வாஸ்துகாரரை அழைத்து காட்டினார்கள், அவர் சில வாஸ்து திருத்தங்களை சொன்னார் அப்படியும் சிக்கல் தீரவில்லை வேறு வாஸ்துகாரரை அழைத்து காட்டினார்கள், அவர் சில வாஸ்து திருத்தங்களை சொன்னார். எனக்கு தெரிந்து 4 ~ 5 வாஸ்துகாரரை அழைத்து காட்டியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்படி இப்படின்னு வீடு கட்டி முடித்து புது மனை புகுவிழா நடத்தினார்கள். 3 மாடி கட்டடம். மார்பிள் தரை, தேக்கு மர கதவுன்னு நல்லா செலவு பண்ணி கட்டினார்கள். என்ன இந்த வீடு கட்டினதில் அவர்களுக்கு சில பண நட்டங்கள் ஏற்பட்டது. அதாவது அவர்கள் உடைமைகள் சிலவற்றை விற்க நேரிட்டது.

இவ்வளவு செலவு பண்ணி கட்டிய வீட்டில் அவர்கள் எப்படி இருந்தார்கள்? குடி இருந்தா தான சொல்ல முடியும். மேலும் பல சிக்கல்கள் வரவே சோசியக்காரரின் அறிவுரைப்படி அவர்கள் வாடகை வீட்டுக்கு குடி பெயர்ந்தார்கள். பல லட்சங்கள் போட்டு கட்டிய புது வீட்டை வாடகைக்கு விட்டார்கள். நாலஞ்சு வாடகை வீடு மாற்றி விட்டார்கள். என்ன கொடுமை சரவணன் மன்னிக்க வாஸ்து இது?

ஐந்து ஆண்டுக்குப்பிறகு மூன்றாவது மாடிக்கு குடி வந்துட்டாங்க. மூன்றாவது மாடியில் 2 அறைதான் உள்ளது. உங்களுக்கே தெரியும் கடைசி மாடியை நாம் எப்படி கட்டுவோம் என்று. இதற்கு மேல் சொன்னால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சொல்வது போல் ஆகும், அதனால மேலும் சொல்லாம நிறுத்திக்கிறது தான் நல்லது.


.
.

வியாழன், அக்டோபர் 22, 2009

வாஸ்து - எதிரில் கண்டது 2

வாஸ்து முறைப்படி வீடு கட்டினால் செல்வச்செழிப்போடு நலமாக வாழலாம் என்று வாஸ்து அறிஞர்கள் சொன்னதை பார்த்தோம். மனையடி சாத்திர நூலை படித்த பொழுது வீட்டின் உள்கூட்டளவு எந்த அடிகளில் இருந்தால் என்ன வகையான பலன்கள் கிடைக்கும் என்று போட்டிருந்தது. 120 அடி வரைக்கும் கொடுத்திருந்தார்கள் , இங்கு 60 அடி வரை கொடுத்துள்ளேன். அது என்ன உள்கூட்டளவு? அதாவது அறையின் அளவு இதுவாகும். சுவற்றின் அளவை கணக்கில் கொள்ளமாட்டார்கள். பெரும்பாலான கொத்தனார்கள் இந்த அளவு படி கட்டடம் கட்டுவார்கள்.
6x6, 6x8, 8x8, 8x10, 10x10, 10x17, 10x11, 10x16, 16x17 என்று அறையின் அளவு இருப்பதன் ரகசியம் இது தான் (நம்மூரில்).

அடி அளவுகளின் பலன்கள்

6 - நன்மை ஏற்படும்
7 - தரித்திரம் பிடுங்கி தின்னும்
8 - செல்வம் செல்வாக்கு படிப்படியாக உயரும்
9 - துன்பம் துயரம்
10 - பொருள் சேரும் தினமும் விருந்து
11 - மகிழ்ச்சியும் வளமும் பெருகும்
12 - துயரம் புத்திரசோகம்
13 - துன்பம் நோயினால் அவதி
14 - பொருள் இழப்பு, கவலை
15 - துன்பம் துயரம்
16 - தனசேர்க்கை, குறைவற்ற வாழ்க்கை
17 - விரோதிகள் பணிவர்
18 - கைப்பொருள் இழப்பு, வீடு அழியும்
19 - புத்திர பாக்கியம் கிடையாது, வறுமை உண்டு
20 - செய்தொழில் வெற்றி, சுகபோகம்
21 - பொருள் விருத்தி, புகழ் உண்டு
22 - விரோதிகள் நாசம்
23 - கெடுதி ஏற்படும்
24 - வரவும் செலவும் சமம்
25 - மனைவிக்கு கண்டம்
26 - பொருள் அபிவிருத்தி
27 - சமூக கவுரவம் அதிகரிக்கும்
28 - தெய்வ அருள் கிட்டும், சுபிட்சம் உண்டாகும்
29 - வறுமை ஒழியும்
30 - லட்சுமி கடாட்சம், மக்கள் செல்வம் அதிகரிக்கும்
31 - தெய்வ அருள் கிட்டும்
32 - செல்வ அபிவிருத்தி, வெளிநாடு பயணம்
33 - வாழ்க்கையின் நிலை உயரும்
34 - இடமாற்றம் ஏற்படும்
35 - திருமகள் அருள்
36 - சுகபோக வாழ்க்கை ஏற்படும்
37 - செய்தொழில் முன்னேற்றம்
38 - வறுமை, துன்பம்
39 - நல்ல வாழ்வு
40 - விரோதிகள் வலிமை பெறுவர்
41 - செல்வம் பெருகும்
42 - அஷ்டலட்சுமி வாசம்
43 - நன்மை ஏற்படாது
44 - பெரிய இழப்பு உண்டாகும்
45 - மக்கள் செல்வம் அதிகரிக்கும்
46 - வறுமை, நோய்
47 - பொருள் இழப்பு
48 - தீயினால் ஆபத்து
49 - தவறுகள், இழப்புகள்
50 - நன்மை உண்டாகாது
51 - வீண் தொல்லைகள்
52 - பொருள் அபிவிருத்தி
53 - பெண்களால் பொருள் நட்டம்
54 - அரசின் சீற்றம்
55 - உறவினர் விரோதம்
56 - குடும்ப விருத்தி
57 - சந்ததி நாசம்
58 - கண்டம் ஏற்படும்
59 - கவலைகள் வறுமை
60 - செய்தொழில் அபிவிருத்தி
.
.

புதன், அக்டோபர் 21, 2009

வாஸ்து - எதிரில் கண்டது

இப்பொழுதெல்லாம் வீடு கட்டறவங்க வாஸ்து பார்க்காம கட்டறதில்லைன்னு தெரியும். வீட்டின் ஒவ்வொரு அறையும் அதிலுள்ள பொருட்களும் வாஸ்துவின் படி தான் உள்ளன. வீடு மட்டும் இல்லை கோயிலும் வாஸ்து படி இருந்தால் தான் அக்கோயில் சிறக்கும் என்பது வாஸ்துகாரர்களின் கூற்று. திருப்பதி திருமலை வேங்கடவன் கோயிலுக்கு மட்டும் ஏன் அவ்வளவு செல்வம் வருகிறது? ஏனென்றால் வாஸ்து படி அமைந்த சிறந்த கோயில் அதுவாகும். மற்றகோயில்கள் சைவ்வாறு அமையவில்லையா? சாமிக்கே வாஸ்தா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதை வாஸ்து அறிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

வடக்கிலும் கிழக்கிலும் அதிக காலியிடம் வேண்டும் என்பது வாஸ்து விதி. அப்ப தெற்கு, மேற்கு? அது இரண்டும் ஆகாத இடங்கள் அதனால் அங்கு காலியிடங்கள் கூடாது அல்லது குறைவான காலியிடம் இருக்கலாம். குறிப்பாக வடக்கு & கிழக்கு காலியிடத்தை ஞவிட தெற்கு & மேற்கு காலியிடங்கள் குறைவாக இருக்க வேண்டும். தெற்கு, மேற்கு பகுதி உயர்ந்தும் வடக்கு, கிழக்கு பகுதி தாழ்ந்தும் இருக்கவேண்டும். ஈசானிய மூலையாகிய வடகிழக்கில் கிணறு அதாவது நீர் தேங்கும் தொட்டி (நிலத்தில்) இருக்க வேண்டும். அக்னி மூலையாகிய தென்கிழக்கில் சமையலறை இருக்கவேண்டும். பழனி மூலையாகிய தென்மேற்கு மூலை உயர்ந்து இருக்கவேண்டும், அதனால் இப்பகுதியில் நீர் தேங்கும் தொட்டியை (மாடியில்) அமைக்கவும். வாயு மூலையாகிய வடமேற்கு மூலையிலோ அல்லது மேற்கு பகுதியிலோ கழிவறை & கழிவறை தொட்டி இருக்கவேண்டும்.

எந்த பகுதியில் பூசை அறை, படுக்கை அறை, பணம் வைக்கும் பெட்டி இருக்கலாம் என்றெல்லாம் வாஸ்துவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

வாஸ்துவினால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன. இது விற்கும் மனைகளின் விலையில் கூட தெரியும். கிழமேற்காக செல்லும் சாலையின் இருபுறமும் உள்ள நிலங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. எப்பகுதி நிலம் அதிக விலைக்கு போகும்? தென் பகுதி நிலம் அதாவது வடக்கு நோக்கி உள்ள நிலம் வடபகுதி நிலத்தை விட அதிகமாக விலை போகும். அதுபோலவே கிழக்கு நோக்கி உள்ள நிலம் மேற்கு நோக்கி உள்ள நிலத்தை விட மதிப்பு அதிகமாக இருக்கும்.

வாஸ்து படி வீடு கட்டி வாழ்ந்தால் செல்வத்திற்கும் நலத்திற்கும் குறைவிருக்காது என்பது வாஸ்துகாரர்களின் கூற்று. எனவே வாஸ்து அறிஞர்களின் அறிவுரைபடி வீடு கட்டி நலமாக வளமாக வாழவும்.
.
.

வெள்ளி, அக்டோபர் 16, 2009

தினமணி கருத்துப்படம் - நோபல்


நோபல் பரிசு நம்ம நாட்டு தலைவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும் தினமணியின் குரல் நியாமானதே. இது மேல் நாட்டு அரசியல் அதனாலதான் நம்மாளுங்களுக்கு கிடைக்கலை. நாம் எப்பவும் அமைதி விரும்பிங்க தான், அதை மாற்ற யாராலும் முடியாது. பரிசு கிடைக்கலைங்கறதுக்காக நம்ம குணத்தை மாற்றி கொள்ளமுடியுமா?

புதன், அக்டோபர் 14, 2009

தினமணி கருத்துப்படம்திமுக காங்கிரசு கூட்டணி தமிழக மக்களவை உறுப்பினர்களின் இலங்கை பயணம் இராஜபக்சேவுக்கு பொன்னாடை போர்த்தி நல்ல முறையில் முடிந்தது. முகாமில் இருக்கும் தமிழர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு இவர்கள் சொல்லிட்டாங்கப்பா. அதனால அவங்களெல்லாம் அங்க எந்த குறையும் இல்லாம இருக்குறாங்க நம்புங்க.