தமிழக அரசு பேருந்துகளில் வளர்க்கப்படும் தமிழ்.
TN 33 N 5231 என்ற பேருந்து எண்ணானது தநா 33 நா 5231 என்று தமிழ் படுத்தியிருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்கு N என்பது நா ஆகும்.
எனக்கும் என் வண்டியின் எண்களை தமிழில் எழுத வேண்டும் என்று ஆசை. தமிழக அரசு பேருந்து எண் போல் பாதி தமிழ் அல்லாமல் கர்நாடக அரசு பேருந்துகளில் முழு கன்னடத்தில் இருப்பதை போல் முழு தமிழில் எழுதவே விருப்பம். எனக்கு தமிழ் எண்கள் தெரியும். என் வண்டியின் எண் TN 12 A 3456 அதை தநா ௧௨ A ௩௪௫௬ என்று எழுத ஆசை. இங்கு A என்பதற்கு என்ன தமிழ் எழுத்தை எழுதுவது என்று குழப்பம். A என்பதற்கு அ என்று எழுதலாமா? N என்பதற்கு 'நா' என்று எப்படி எழுதினார்கள் என்று புரியவில்லை. வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலோ அல்லது மற்ற அரசு அலுவலகங்களிலோ இது தொடர்பான செய்தி அல்லது உத்தரவு உண்டா? அவ்வாறு இருந்தால் ஏன் இதை பரவலாக அறியச்செய்யக்கூடாது? எந்த உத்தரவும் இல்லையென்றால் எதை கொண்டு இவர்கள் N என்பதை 'நா' என்று முடிவெடுத்தார்கள்? தமிழ் பரப்பும் இவர்கள் முயற்சியை மற்றவர்கள் ஏன் செய்யக்கூடாது? அதற்கான தகவலை அரசு ஏன் மறைக்கவேண்டும்?
கர்நாடக அரசு பேருந்து மற்றும் தமிழக அரசு பேருந்துகளை படம் பிடிக்க மறந்து விட்டேன். இப்போ எனக்கு அந்த வாய்ப்பு இல்லை. பெங்களூர், தமிழக பதிவர்கள் புகைப்படம் எடுத்து அனுப்பினால் தான் உண்டு.
தமிழ் எண்கள்;
௧ - 1
௨ - 2
௩ - 3
௪ - 4
௫ - 5
௬ - 6
௭ - 7
௮ - 8
௯ - 9
௰ - 10
௱ - 100
௲ - 1000
7 கருத்துகள்:
வணக்கம் குறும்பன் ,
ஒரு சந்தேகம் உதவவும் ம்ம்ம் நானும் ரொம்ப நாட்களாக தேடிக்கொண்டு இருக்கின்றேன், தமிழ் எண்களின் வரிவடிவம் சரி ஆனால் ஒலி வடிவம் எப்படி இருக்கும் என.
தெரிந்தால் அறியத்தரவும்
இராஜராஜன்
ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்கும் ஓர் பதிவு .
http://no-bribe.blogspot.com
வாங்க வனம்.
ஒன்று, இரண்டு, மூன்று,... என்பது தான் ஒலி வடிவம். ஒலி வடிவில் எங்கிட்ட இல்லைங்க.
பெயரில்லாதவரே தேவையான பதிவு. உங்களுக்கு தெரிந்திருக்கலாம் 5th Piller - http://india.5thpillar.org/ இந்த அமைப்பும் அதற்காக தான் உழைக்கிறது. அறிமுகமில்லாவிட்டால் அவர்களை தொடர்பு கொள்ளவும். இணைந்து செயல்படுங்கள்.
வணக்கம் குறும்பன்
தகவலுக்கு நன்றி, கொஞ்சம் சந்தேகமாக இருந்தது.
இராஜராஜன்
//தமிழ் பரப்பும் இவர்கள் முயற்சியை மற்றவர்கள் ஏன் செய்யக்கூடாது? அதற்கான தகவலை அரசு ஏன் மறைக்கவேண்டும்?
//
ஆகா, நல்ல கேள்வி! அதுக்கெல்லாம் ஏதுங்க நேரம்?? “C"க்கள் சேர்த்தும் நேரமிது!
வாங்க பழமை, இவங்க "C" என்பதற்கு ப என்று தமிழ் படுத்தாவிட்டால் சரி.
கருத்துரையிடுக