வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?செவ்வாய், மார்ச் 17, 2009

போப்பும் ஆணுறையும்.

போப்போட வேலை என்ன? உலகம் முழுக்க கிருத்துவ மதத்தை (கத்தோலிக கிருத்துவம்) பரப்புவது. குறிப்பா சீனா, இந்தியா & ஆப்பிரிக்க கண்ட நாடுகளில் பரப்புவது. கிருத்துவ மதத்தினர் மீது தாக்குதல் நடந்தால் அதை கண்டிப்பது. அப்பப்ப கருத்துகளை சொல்வதும் அவர் வேலை தான். ஆணுறை எயிட்சை கட்டுப்படுத்துவதில்லை அதற்கு மாறாக அதிகம் பரவ காரணமாக உள்ளது என போப் சான்பெனடிக்ட் தன் ஆப்பிரிக்க பயணத்தில் கூறியுள்ளார். இக்கருத்துக்கு பலரும் குறிப்பாக மேற்கு நாடுகளை சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நம்மூர்ல இதைப்பற்றி ஏதாவது செய்தி வந்ததா என்று தெரியவில்லை.

இக்கருத்து மிகவும் அபாயமானது. ஆப்பிரிக்க கண்டத்தில் தான் அதிகளவில் எயிட்சு நோய் உள்ளது. உடலுறவு கொள்ளணுமா? குறைந்தபட்சம் ஆணுறை கொண்டு அதை செய்யுங்கள் என்பது எயிட்சுக்கு எதிராக போராடுபவர்களின் கோரிக்கை. ஆணுறை மூலம் எயிட்சு கட்டுபடுத்தப்படுமா? இதன் மூலம் பலன் உண்டு. இது எயிட்சை கட்டுப்படுத்தும் வழிகளில் ஒன்று. குறிப்பா உடல் உறவு மூலம் பரவும் முறையை இது தடுக்கும். அதிக அளவிலான எச்.ஐ.வி கிருமிகள், பாதிக்கப்பட்டோர் உடல் உறவு கொள்வதன் மூலமே அடுத்தவருக்கு பரவுகிறது. அதாவது உடல்உறவு எயிட்சு நோயை பரப்புவதில் முதலிடத்தில் உள்ளது.

ஏன் போப் சொன்னதுக்கு இவ்வளவு எதிர்ப்பு? போப் நிறுவனத்தப்பட்ட சமயத்தின் ஒரு பெரும் பிரிவின் தலைவர். இலத்தின் அமெரிக்கா எனப்படும் தென் அமெரிக்க கண்டத்தைச் சார்ந்த நாடுகள், ஆப்பிரிக்க கண்டத்தைச் சார்ந்த நாடுகள், ஆசியா கண்டத்தைச் சார்ந்த நாடுகள் குறிப்பாக சொல்வதானால் ஏழை மற்றும் வளரும் நாடுகளில் கத்தோலிக கிருத்துவம் அதிகளவில் பின்பற்றப்படுகிறது. இங்குள்ள சர்ச்சுகள் இவரின் உத்தரவு (பேச்சு) காரணமாக ஆணுறைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டால் அதனால் பாதிக்கப்படப்போவது யார்? அறியா மக்கள் தான்.

போப் இது போன்ற மக்களை பாதிக்கும் கருத்துக்களை சொல்வதை நிறுத்த வேண்டும்.

காங்கிரசுக்கு யாதவ் வைச்ச ஆப்பு

உத்திரப் பிரதேசம்

உங்களுக்கு முன்னமே தெரிஞ்சிருக்கும் உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் காங்கிரசு நினைப்புல மண்ணை அள்ளி போட்டுட்டாறுன்னனு. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரசுக்கு தர முலாயம் சிங் யாதவ் முன்வந்தார், ஆனால் 25 வேண்டும் என காங்கிரசு கேட்கிறது. 17 இடங்களே காங்கிரசுக்கு அதிகம் என்பது முலாயம் சிங் யாதவின் கணக்கு. 17-ம் மாயாவதி வெற்றி பெற கூடாது என்பதால் தான். இல்லைன்னா காங்கிரசு கூட கூட்டே வைச்சுக்க மாட்டாரு யாதவு. வேலை செய்யும் தொண்டனெல்லாம் என் கட்சி வேட்பாளர் மட்டும் உன கட்சியா? அப்படின்னு முலாயம் சிங் யாதவ் நினைக்கிறதில் தப்பில்லையே?

பீகார்

இப்ப பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் பெரிய ஆப்பை வைச்சிட்டார். இருக்குற 40 தொகுதில 3 தான் காங்கிரசுக்கு அப்படின்னு சொல்லிட்டார். இதுல பாருங்க போன முறை பீகாரில் காங்கிரசு 4 தொகுதிகளில் போட்டியிட்டது. போன முறை 26 தொகுதிகளில் போட்டியிட்ட லாலு கட்சி இம்முறை 25 தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. போன முறை 8 தொகுதிகளில் போட்டியிட்ட இராம் விலாசு பாசுவான் கட்சி இம்முறை 12 தொகுதிகளில் போட்டியிடுகிறது. லாலு சும்மாவா அதிகமா 4 தொகுதிய பாசுவான் கட்சிக்கு கொடுத்திருப்பார்?

பீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாசுவான் கட்சிக்கும் லாலு கட்சிக்கும் தொகுதி பங்கீடில் சிக்கல். அதனால் பாசுவான் கட்சி தனித்து போட்டியிட்டது, இதன் காரணமாக லாலு கட்சி பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டு பாசக-ஐக்கிய சனதா தளம் கூட்டணி பீகார் ஆட்சி கட்டிலில் அமர நேரிட்டது என்பதை லாலு மறப்பாரா? காங்கிரசு பீகாரில் செல்லாக் காசு என்பதை காங்கிரசுகாரர்களே அறிவர், 3 தொகுதியே அவங்களுக்கு அதிகம் தான். :-))

புதன், மார்ச் 11, 2009

Erode, Salem & தொல்லை

ஏதாவது தகவல் வேண்டுமா? கூகுள் பண்ணுனா போச்சு. அதாவது இணையத்தில் தேடல் பண்ணுனா போச்சு அப்படிங்கறது உங்களுக்கு நல்லா தெரியும். ஆனா பாருங்க இந்த Erode & Salem பெரிய தொல்லை கொடுக்குது. Salem என்ற பெயரில் அமெரிக்காவில் பல நகரங்கள் இருக்கு, தேடுனா அது தான் முதல்ல வருது. நம்ம ஊர் சேலம் வரமாட்டிக்குதுங்க. ஐக்கிய அமெரிக்காவின் ஆரகன் என்ற மாநிலத்தின் தலைநகரமே சேலம் தான். நம்ம சேலத்துக்கு இப்ப தான் பல கடும் போராட்டங்களுக்கு பிறகு இரயில்வே கோட்டம் கிடைச்சிருக்கு.

அதே மாதிரி Erode ன்னு தேடுனாலும் தொல்லை தான். Salem மாதிரி இங்க Erode அப்படின்னு ஊரெல்லாம் கிடையாது, ஆனா Erode தேடல் வேற மாதிரி தொல்லைகளை கொடுக்குது. ஆங்கிலத்தில Erode அப்படின்னா வேற மாதிரி பொருள் தருது.

merriam-webster Erode க்கு என்ன பொருள் சொல்லுதுன்னா
transitive verb1: to diminish or destroy by degrees: a: to eat into or away by slow destruction of substance (as by acid, infection, or cancer) b: to wear away by the action of water, wind, or glacial ice eroded the hillside> c: to cause to deteriorate or disappear as if by eating or wearing away eroding buying power> 2: to produce or form by eroding erode U-shaped valleys>

இது நமக்கு தேவையான தகவல் இல்லையே....

இந்த இணைய தேடல் சிக்கல் தீர ஒரு வழி இருக்கு. அதாவது நம்மூர் ஈரோடு, சேலத்தோட பெயரை மாத்திடனும் இஃகி இஃகி. என்ன பெயர் வைக்கலாம்? அவ்வூர் மக்களின் ஆதரவு பெற்ற பெயரை வைக்கலாம் அல்லது பதிவர்களின் பேராதரவு பெற்ற பெயரை வைக்கலாம் இஃகி இஃகி. என் பரிந்துரை என்னன்னு கேட்கறீங்களா? ஈரோடை, சேரலம் என்று இவற்றின் பெயரை மாற்றலாம் என்பது என் பரிந்துரை.

சனி, மார்ச் 07, 2009

திருமண வாழ்க்கை - சமன்பாடு மூலம் விளக்கம்

சமன்பாடு - 1

மனிதன் = சாப்பிடுதல் + தூங்குதல் + வேலை செய்தல் + வாழ்க்கையை அனுபவித்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே மனிதன் = கழுதை + வேலை செய்தல்+ வாழ்க்கையை அனுபவித்தல்.
அதாவது மனிதன் - வாழ்க்கையை அனுபவித்தல் = கழுதை + வேலை செய்தல்.
ஆக முடிவாக என்னான்னா, மனுசனுக்கு வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியலைன்னா, அவன் சும்மா வேலை செஞ்சுக்கிட்டே இருக்குற கழுதைக்குச் சமம்.

சமன்பாடு - 2

ஆண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் சம்பாதித்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல
ஆகவே ஆண் = கழுதை + பணம் சம்பாதித்தல்
அதாவது ஆண் - பணம் சம்பாதித்தல் = கழுதை
ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தன் ஆணாப் பொறந்து அவன் பணம் சம்பாதிக்கலேன்னா அவன் கழுதைக்குச் சமம்.

சமன்பாடு - 3

பெண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் செலவு செய்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே பெண் = கழுதை + பணம் செலவு செய்தல்
அதாவது பெண் - பணம் செலவு செய்தல் = கழுதை
ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தி பொண்ணாப் பொறந்து அவள் பணம் செலவழிக்கலேன்னா அவள் கழுதைக்குச் சமம்.
ஆகவே இறுதியாக,

சமன்பாடு 2, 3 இலிருந்து,

ஆண் - பணம் சம்பாதித்தல் = பெண் - பணம் செலவு செய்தல்
அதாவது ஆண் பணம் சம்பாதிக்கலைன்னா பெண் பணம் செலவழிக்க மாட்டாள்.
ஆகவே,

முடிவு 1 - ஆண், ஒரு பெண்ணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் சம்பாதிக்கிறான்.

முடிவு 2 - பெண், ஒரு ஆணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் செலவு செய்கிறாள்.
அப்படீன்னா,
ஆண் + பெண் = கழுதை + பணம் சம்பாதித்தல் + கழுதை + பணம் செலவு செய்தல்
இதிலிருந்து என்ன தெரியுதுன்னா,

சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற ரெண்டு கழுதைங்க சேர்ந்து பணம் சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை அனுபவிக்குறதுதானுங்க திருமண வாழ்க்கை..!