வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?சனி, மார்ச் 07, 2009

திருமண வாழ்க்கை - சமன்பாடு மூலம் விளக்கம்

சமன்பாடு - 1

மனிதன் = சாப்பிடுதல் + தூங்குதல் + வேலை செய்தல் + வாழ்க்கையை அனுபவித்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே மனிதன் = கழுதை + வேலை செய்தல்+ வாழ்க்கையை அனுபவித்தல்.
அதாவது மனிதன் - வாழ்க்கையை அனுபவித்தல் = கழுதை + வேலை செய்தல்.
ஆக முடிவாக என்னான்னா, மனுசனுக்கு வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியலைன்னா, அவன் சும்மா வேலை செஞ்சுக்கிட்டே இருக்குற கழுதைக்குச் சமம்.

சமன்பாடு - 2

ஆண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் சம்பாதித்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல
ஆகவே ஆண் = கழுதை + பணம் சம்பாதித்தல்
அதாவது ஆண் - பணம் சம்பாதித்தல் = கழுதை
ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தன் ஆணாப் பொறந்து அவன் பணம் சம்பாதிக்கலேன்னா அவன் கழுதைக்குச் சமம்.

சமன்பாடு - 3

பெண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் செலவு செய்தல்
கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே பெண் = கழுதை + பணம் செலவு செய்தல்
அதாவது பெண் - பணம் செலவு செய்தல் = கழுதை
ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தி பொண்ணாப் பொறந்து அவள் பணம் செலவழிக்கலேன்னா அவள் கழுதைக்குச் சமம்.
ஆகவே இறுதியாக,

சமன்பாடு 2, 3 இலிருந்து,

ஆண் - பணம் சம்பாதித்தல் = பெண் - பணம் செலவு செய்தல்
அதாவது ஆண் பணம் சம்பாதிக்கலைன்னா பெண் பணம் செலவழிக்க மாட்டாள்.
ஆகவே,

முடிவு 1 - ஆண், ஒரு பெண்ணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் சம்பாதிக்கிறான்.

முடிவு 2 - பெண், ஒரு ஆணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் செலவு செய்கிறாள்.
அப்படீன்னா,
ஆண் + பெண் = கழுதை + பணம் சம்பாதித்தல் + கழுதை + பணம் செலவு செய்தல்
இதிலிருந்து என்ன தெரியுதுன்னா,

சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற ரெண்டு கழுதைங்க சேர்ந்து பணம் சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை அனுபவிக்குறதுதானுங்க திருமண வாழ்க்கை..!

8 கருத்துகள்:

குசும்பன் சொன்னது…

//சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற ரெண்டு கழுதைங்க சேர்ந்து பணம் சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை அனுபவிக்குறதுதானுங்க திருமண வாழ்க்கை//

ஹா ஹா ஹா:)

வேத்தியன் சொன்னது…

சூப்பர் தல...
கலக்கிப்புட்டீக போங்க...
அருமை அருமை...
:-)

அன்புடன் அருணா சொன்னது…

எங்கேயோ படிச்சிருக்கேனே!!!! இருந்தாலும் சிரிப்பு வந்தது...
அன்புடன் அருணா

SUREஷ் சொன்னது…

//

சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற ரெண்டு கழுதைங்க சேர்ந்து பணம் சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை அனுபவிக்குறதுதானுங்க திருமண வாழ்க்கை..!//கல்யாணம் ஆயிருச்சா பாஸ்....

வீட்டுக்குத்தெரியாம இந்த இடுகைய மறைச்சு வைங்க

குறும்பன் சொன்னது…

வருகைக்கு நன்றி குசும்பன்

குறும்பன் சொன்னது…

வருகைக்கு நன்றி தல.

குறும்பன் சொன்னது…

வாங்க அருணா, எத்தனை தடவை படிச்சாலும் இது சிரிப்ப தான் வரவலைக்கும். :-)

குறும்பன் சொன்னது…

வாங்க SUREஷ். இதெல்லாம் அவங்ககிட்ட காட்ட முடியுமா? நாம கழுதைன்னா ஒத்துக்குவாங்க.. ஆனா அவங்களை கழுதைன்னா ஒத்துக்குவாங்களா?