வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், மார்ச் 29, 2006

நகைச்சுவை சித்திரம் - 1

இந்த படங்களுக்கு விளக்கம் தேவையா?

அதிகாரத்தின் வளர்ச்சி - Evolution

Out House

புதையல் - Fortune

ஞாயிறு, மார்ச் 26, 2006

நகைச்சுவை - 1

  • மகன்: அப்பா நாம சீக்கிரம் பணக்காரர்கள் ஆகிடலாம்.
    அப்பா: எப்படி?
    மகன்: நாளைக்கு எங்க கணக்கு வாத்தியார் பைசாவை எப்படி ரூபாயாக மாற்றுவது என்று சொல்லி கொடுக்க போறார்.

  • அப்பா: எப்பவும் உன்னை முட்டாள்னு சொல்ற உங்க வாத்தியார் உனக்கு நான் கணக்கு போட்டு கொடுத்தப்புறம் என்ன சொல்றார்? பையன்: முட்டாப் பய மவனேன்னு திட்டறார் அப்பா.

  • 51 ரூபாய் கடன் வாங்கினவர் 15 ரூபாய் மட்டும் திருப்பித் தந்தார். ஏன்?
    பணத்தை 'திருப்பி' தந்தாராம்.

  • ஒரு பெருங்குடி மகன் பேருந்தில் ஏறிட்டு நடத்துனரிடம் திருச்சியில் இருந்து மதுரை போக எவ்வளவு நேரமாகுன்னு கேட்டார். நடத்துனர் "4 மணி" நேரமாகும் என்றார். சரி மதுரையில் இருந்து திருச்சி போக எவ்வளவு நேரமாகுன்னு கேட்டார் நம்ம குடிமகன். அதே 4 மணி நேரம்தான்யா ஆகும்ன்னு சொல்லிட்டு, ஆமா ஏன் வித்தியாசம் இருக்கும்ன்னு நினைச்ச என்றார்? . அதுக்கு நம்ம குடிமகன் சொன்னார் கிறிஸ்துமஸில் இருந்து ஒரு வாரத்தில் புத்தாண்டு வந்திடும், ஆனா புத்தாண்டில் இருந்து கிறிஸ்துமஸ் வர ஒரு ஆண்டாகும், அது மாதிரி இருக்குமோன்னு நினைச்சேன்னார்.

  • காவல்காரர் இரண்டு குடிமக்களை ஓரங்கட்டி விசாரிச்சார். பேர் & முகவரி என்னன்னு ஒருத்தரை பார்த்து கேட்டார். என் பேரு கனகு எனக்கு நிலையான முகவரி கிடையாது நாடோடி மாதிரி சார் என்றார். அடுத்த குடிமகனிடமும் அதே கேள்வியை ( பெயர் & முகவரி) காவல்காரர் கேட்டார். இரண்டாவது ஆள் சொன்னார் என் பேரு மணி, 15 வருசமா கனகு வீட்டிற்கு மேல் வீட்டில் தான் குடி இருக்கிறேன் சார் என்றார்.

செவ்வாய், மார்ச் 21, 2006

எழுதுவது எவ்வளவு சிரமம்

எழுதுவது எவ்வளவு சிரமம் என்பது எழுதிபார்க்கையில் தான் தெரிகிறது. 2 வரி எழுதி முடித்தவுடன் என்ன எழுதுவது என்று தோன்ற மாட்டேங்குது. எப்படி தான் பக்கம் பக்கமாக எழுதுகிறார்களோ? அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். ஒரு சில சமயம் உணர்ச்சி வேகத்தில் 20 வரி எழுத முடிகிறது மற்ற வேளைகளில் முடிவதில்லை. எழுதுவதற்கு மற்றொரு பெரிய தடைக்கல் தட்டச்சு தெரியாதது, பார்த்து பார்த்து தட்டங்குல்ல போது போதும் என்றாகிவிடுகிறது, எழுத நினைத்ததும் பாதியில் மறந்து விடுகிறது.

அப்படியே ஒரு 10 வரி எழுதிவிட்டு படித்து பார்த்தால் நமக்கே (எனக்கே) சகிக்கமாட்டேங்குது என்னதான் பண்றது? அப்புறம் சொல்றத/எழுதறத ஒழுங்கா முறையா எழுதுனாதானே ( ஒரு கோர்வையா இருந்தாதானே) படிக்கிறப்போ புரியும். எதை முதல்ல சொல்றது எதை நடுவில் சொல்றதுன்னு தெரிய மாட்டேங்குது. அப்புறம் ஒரு விசயத்தை பற்றி எழுதிக்கிட்டு இருக்கிறப்போ சம்மந்தம் இல்லாத ஒரு தகவலை நடுவில் எழுதறது. இந்த மாதிரி பல பல பல பிரச்சனைகள்.

இதையெல்லாம் எப்படி சரி செய்து ஒழுங்கா எழுதறது? ஒரு எழுத்தாளனாவது? தப்பாக இருந்தாலும் எழுதறது தான் ஒரே வழி. தப்பை சரி செய்துவிட்டு எழுதுவதை விட ( அப்புறம் எழுதவே முடியாது :-( ) எழுதி எழுதி தப்பை சரி பண்ணிக்கலாம் என்று உள்ளேன்.
அதனால் என் எழுதில் குறை இருந்தால் (இருக்கும்) மன்னிக்கவும்.