வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், நவம்பர் 29, 2010

கஜேந்திர மோட்சம் தவறியது

கஜேந்திர மோட்சம் என்றால் என்ன பெரும்பாலோருக்கு தெரிந்திருக்கும்.
தெரியாதவங்களுக்கு -  பாகவதத்தில் கூறப்பட்ட கதை...

கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் தன் பிடிகளுடனும் குட்டிகளுடனும் காட்டில் மரங்களை உடைத்தும் மூங்கிலை உண்டும் உலாவி கொண்டிருந்தது அதன் அந்த சப்தத்தை கேட்டதுமே சிங்கம் புலி முதலிய பலம் மிகுந்த மிருகங்கள் பயந்து ஓட மற்ற சிறிய மிருகங்களான மான் , முயல் முதலியவை பயமில்லாமல் அதனுடன் ஒட்டி வந்து கொண்டிருந்தன. அப்போது எங்கிருந்தோ தாமரை மலரின் நறுமணம் அவனது துதிக்கையை எட்டியது .உடனே தனது பரிவாரங்கள் சூழ அந்த பொய்கையை நோக்கி ஓடத்தொடங்கினான். வழியில் உள்ளவற்றையெல்லாம் துவம்சம் செய்து கொண்டு பொய்கையை அடைந்த கஜா தன் துதிக்கையால் தாமரைப் பூ. அல்லி ஆகியவற்றின் மகரந்தங்கள் நிறைந்த அந்த இனிய பொய்கை நீரை உறிஞ்சி உளம் குளிர பருகி, அந்த நீரை தன் பரிவாரங்களுக்கும் வழங்கினான் ஒரு குடும்பத்தலைவனைப் போல, பின் ஒரு தாமரை மலரை தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்பிக்க பறிக்க பொய்கைக்குள் காலை வைத்த போது அந்த பொய்கையிலிருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டு கஜேந்திரனை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது. கதை முடிந்தது என்று நினைத்த கஜா, ஆதிமூலமே என்று அலறியது. அந்த அபயக்குரல் கேட்டவுடனே பெருமாள் புள்ளேறி ( கருடன்), சுதர்சன சக்கரத்தால் முதலையை வதைத்து கஜேந்திரனைக் காப்பாற்றி அவனுக்கு மோட்சம் அளித்தான்.
சுருக்கமா --- தண்ணிக்குள்ள வந்த யானையை அங்கிருந்த முதலை பிடிச்சுக்கிச்சி உடனே யானை பெருமாளே காப்பாத்துன்னு கத்த அதைக்கேட்ட திருமால் விரைந்து அங்குவந்து தன் சக்ராயுதத்தால் முதலையை கொன்று யானையை காப்பாற்றினார். பின்பு யானைக்கு மறுபிறவி இல்லாத நிலையை (மோட்சம்) திருமால் அருளினார். சுதர்சனத்தால் முதலை கொல்லப்பட்டதால் அதற்கும் மோட்சம் கிடைத்திருக்கும் ஆனா அதை பற்றி யாரும் ஒன்னும் சொல்லக்காணோம் ஏன்னு தெரியலை. 

இக்காலத்தில் நடந்தது -
கால கடிச்சு துதிக்கையை சும்மா விட்டதால தான யானை ஆதிமூலமேன்னு கத்துச்சு. அதனால முதலை இம்முறை காலை கடிக்காமல் துதிக்கையை கவ்விறுச்சு. இப்ப ஆதிமூலமேன்னு கத்தமுடியாதில்லையா. அதாவது யானைக்கு மோட்சம் கிடைக்காம தடுத்து விட்டது இந்த புத்திசாலியான முதலை.  (முடிவு:- முதலையின் பிடியில் இருந்து யானை தப்பி ஓடிவிட்டது)
குறிப்பு :- இது களிறு (ஆண் யானை) அல்ல பிடி (பெண் யானை)



முதலை யானையின் துதிக்கையை கடிக்கும் காட்சி.


முதலையிடம் இருந்து தப்ப யானை போராடும் காட்சி.

பிபிசி-யில் இந்த காட்சிகள் வந்திருக்கு. அதிலிருந்து சுட்டதுதான் மேல் இருக்கும் 2 படமும்.