வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், மார்ச் 21, 2006

எழுதுவது எவ்வளவு சிரமம்

எழுதுவது எவ்வளவு சிரமம் என்பது எழுதிபார்க்கையில் தான் தெரிகிறது. 2 வரி எழுதி முடித்தவுடன் என்ன எழுதுவது என்று தோன்ற மாட்டேங்குது. எப்படி தான் பக்கம் பக்கமாக எழுதுகிறார்களோ? அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். ஒரு சில சமயம் உணர்ச்சி வேகத்தில் 20 வரி எழுத முடிகிறது மற்ற வேளைகளில் முடிவதில்லை. எழுதுவதற்கு மற்றொரு பெரிய தடைக்கல் தட்டச்சு தெரியாதது, பார்த்து பார்த்து தட்டங்குல்ல போது போதும் என்றாகிவிடுகிறது, எழுத நினைத்ததும் பாதியில் மறந்து விடுகிறது.

அப்படியே ஒரு 10 வரி எழுதிவிட்டு படித்து பார்த்தால் நமக்கே (எனக்கே) சகிக்கமாட்டேங்குது என்னதான் பண்றது? அப்புறம் சொல்றத/எழுதறத ஒழுங்கா முறையா எழுதுனாதானே ( ஒரு கோர்வையா இருந்தாதானே) படிக்கிறப்போ புரியும். எதை முதல்ல சொல்றது எதை நடுவில் சொல்றதுன்னு தெரிய மாட்டேங்குது. அப்புறம் ஒரு விசயத்தை பற்றி எழுதிக்கிட்டு இருக்கிறப்போ சம்மந்தம் இல்லாத ஒரு தகவலை நடுவில் எழுதறது. இந்த மாதிரி பல பல பல பிரச்சனைகள்.

இதையெல்லாம் எப்படி சரி செய்து ஒழுங்கா எழுதறது? ஒரு எழுத்தாளனாவது? தப்பாக இருந்தாலும் எழுதறது தான் ஒரே வழி. தப்பை சரி செய்துவிட்டு எழுதுவதை விட ( அப்புறம் எழுதவே முடியாது :-( ) எழுதி எழுதி தப்பை சரி பண்ணிக்கலாம் என்று உள்ளேன்.
அதனால் என் எழுதில் குறை இருந்தால் (இருக்கும்) மன்னிக்கவும்.


1 கருத்து:

ர. சோமேஸ்வரன் சொன்னது…

முதலில் தங்களுக்கு வாழ்த்துகள் 10 வருடங்களுக்கும் மேலாக எழுதி வருவதற்க்கு.

//ஒரு எழுத்தாளனாவது? தப்பாக இருந்தாலும் எழுதறது தான் ஒரே வழி. தப்பை சரி செய்துவிட்டு எழுதுவதை விட ( அப்புறம் எழுதவே முடியாது :-( ) எழுதி எழுதி தப்பை சரி பண்ணிக்கலாம் என்று உள்ளேன்.//

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே, தவறுகளே இல்லாமல் எழுதுவேன் என்றால் நம்மால் எழுதவே முடியாது.