- மகன்: அப்பா நாம சீக்கிரம் பணக்காரர்கள் ஆகிடலாம்.
அப்பா: எப்படி?
மகன்: நாளைக்கு எங்க கணக்கு வாத்தியார் பைசாவை எப்படி ரூபாயாக மாற்றுவது என்று சொல்லி கொடுக்க போறார்.
அப்பா: எப்பவும் உன்னை முட்டாள்னு சொல்ற உங்க வாத்தியார் உனக்கு நான் கணக்கு போட்டு கொடுத்தப்புறம் என்ன சொல்றார்? பையன்: முட்டாப் பய மவனேன்னு திட்டறார் அப்பா.
51 ரூபாய் கடன் வாங்கினவர் 15 ரூபாய் மட்டும் திருப்பித் தந்தார். ஏன்?
பணத்தை 'திருப்பி' தந்தாராம்.
ஒரு பெருங்குடி மகன் பேருந்தில் ஏறிட்டு நடத்துனரிடம் திருச்சியில் இருந்து மதுரை போக எவ்வளவு நேரமாகுன்னு கேட்டார். நடத்துனர் "4 மணி" நேரமாகும் என்றார். சரி மதுரையில் இருந்து திருச்சி போக எவ்வளவு நேரமாகுன்னு கேட்டார் நம்ம குடிமகன். அதே 4 மணி நேரம்தான்யா ஆகும்ன்னு சொல்லிட்டு, ஆமா ஏன் வித்தியாசம் இருக்கும்ன்னு நினைச்ச என்றார்? . அதுக்கு நம்ம குடிமகன் சொன்னார் கிறிஸ்துமஸில் இருந்து ஒரு வாரத்தில் புத்தாண்டு வந்திடும், ஆனா புத்தாண்டில் இருந்து கிறிஸ்துமஸ் வர ஒரு ஆண்டாகும், அது மாதிரி இருக்குமோன்னு நினைச்சேன்னார்.
காவல்காரர் இரண்டு குடிமக்களை ஓரங்கட்டி விசாரிச்சார். பேர் & முகவரி என்னன்னு ஒருத்தரை பார்த்து கேட்டார். என் பேரு கனகு எனக்கு நிலையான முகவரி கிடையாது நாடோடி மாதிரி சார் என்றார். அடுத்த குடிமகனிடமும் அதே கேள்வியை ( பெயர் & முகவரி) காவல்காரர் கேட்டார். இரண்டாவது ஆள் சொன்னார் என் பேரு மணி, 15 வருசமா கனகு வீட்டிற்கு மேல் வீட்டில் தான் குடி இருக்கிறேன் சார் என்றார்.
வணக்கம்
வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?
ஞாயிறு, மார்ச் 26, 2006
நகைச்சுவை - 1
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக