வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?செவ்வாய், மார்ச் 17, 2009

போப்பும் ஆணுறையும்.

போப்போட வேலை என்ன? உலகம் முழுக்க கிருத்துவ மதத்தை (கத்தோலிக கிருத்துவம்) பரப்புவது. குறிப்பா சீனா, இந்தியா & ஆப்பிரிக்க கண்ட நாடுகளில் பரப்புவது. கிருத்துவ மதத்தினர் மீது தாக்குதல் நடந்தால் அதை கண்டிப்பது. அப்பப்ப கருத்துகளை சொல்வதும் அவர் வேலை தான். ஆணுறை எயிட்சை கட்டுப்படுத்துவதில்லை அதற்கு மாறாக அதிகம் பரவ காரணமாக உள்ளது என போப் சான்பெனடிக்ட் தன் ஆப்பிரிக்க பயணத்தில் கூறியுள்ளார். இக்கருத்துக்கு பலரும் குறிப்பாக மேற்கு நாடுகளை சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நம்மூர்ல இதைப்பற்றி ஏதாவது செய்தி வந்ததா என்று தெரியவில்லை.

இக்கருத்து மிகவும் அபாயமானது. ஆப்பிரிக்க கண்டத்தில் தான் அதிகளவில் எயிட்சு நோய் உள்ளது. உடலுறவு கொள்ளணுமா? குறைந்தபட்சம் ஆணுறை கொண்டு அதை செய்யுங்கள் என்பது எயிட்சுக்கு எதிராக போராடுபவர்களின் கோரிக்கை. ஆணுறை மூலம் எயிட்சு கட்டுபடுத்தப்படுமா? இதன் மூலம் பலன் உண்டு. இது எயிட்சை கட்டுப்படுத்தும் வழிகளில் ஒன்று. குறிப்பா உடல் உறவு மூலம் பரவும் முறையை இது தடுக்கும். அதிக அளவிலான எச்.ஐ.வி கிருமிகள், பாதிக்கப்பட்டோர் உடல் உறவு கொள்வதன் மூலமே அடுத்தவருக்கு பரவுகிறது. அதாவது உடல்உறவு எயிட்சு நோயை பரப்புவதில் முதலிடத்தில் உள்ளது.

ஏன் போப் சொன்னதுக்கு இவ்வளவு எதிர்ப்பு? போப் நிறுவனத்தப்பட்ட சமயத்தின் ஒரு பெரும் பிரிவின் தலைவர். இலத்தின் அமெரிக்கா எனப்படும் தென் அமெரிக்க கண்டத்தைச் சார்ந்த நாடுகள், ஆப்பிரிக்க கண்டத்தைச் சார்ந்த நாடுகள், ஆசியா கண்டத்தைச் சார்ந்த நாடுகள் குறிப்பாக சொல்வதானால் ஏழை மற்றும் வளரும் நாடுகளில் கத்தோலிக கிருத்துவம் அதிகளவில் பின்பற்றப்படுகிறது. இங்குள்ள சர்ச்சுகள் இவரின் உத்தரவு (பேச்சு) காரணமாக ஆணுறைக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டால் அதனால் பாதிக்கப்படப்போவது யார்? அறியா மக்கள் தான்.

போப் இது போன்ற மக்களை பாதிக்கும் கருத்துக்களை சொல்வதை நிறுத்த வேண்டும்.

8 கருத்துகள்:

அருண்மொழிவர்மன் சொன்னது…

ஆணுறை எயிட்சை கட்டுப்படுத்துவதில்லை அதற்கு மாறாக அதிகம் பரவ காரணமாக உள்ளது என போப் சான்பெனடிக்ட் தன் ஆப்பிரிக்க பயணத்தில் கூறியுள்ளார். //

மதத் தலைவர்கள் இப்படி சோலும் கருத்துகளால் தான் அடிப்படைவாதமும் அறியாமையும் பரவுகின்றன.

போப் மட்டுமல்ல, இந்து மத, இஸ்லாமிய, பௌத்த என்று அனைத்து மத தலைவர்களுமே இப்படித்தான்

குறும்பன் சொன்னது…

உண்மை அருள்மொழிவர்மன். ஆனால் மற்ற மதத்தலைவர்களை விட போப்பின் சொல்லுக்கு வீச்சு (உலகளவில்) அதிகம்.

Suresh Kumar சொன்னது…

ஒருவருடன் உடலுறவு கொண்டால் எயிட்ஸ் வராமல் தடுக்கலாமல்லவா ? ஒரு காலத்தில் உடலுறவின் மூலமாக தான் எயிட்ஸ் வருகிறது என்பது தெரியாமல் இருந்தது . பின்னர் அது தெரிய வந்ததும் ஒருவருடன் உடலுறவு கொள்ளுங்கள் என அனைவரும் பிரச்சாரம் செய்தனர் . ஆனால் மனிதன் அதை கேட்கவில்லை . பின்னர் அதற்கு மாற்று வழிகளை கண்டு புடித்தத்தில் ஓன்று தான் ஆணுறை .

ஆனால் இப்போது ஆணுறை இருக்கும் தைரியத்தில் மனிதன் பலருடன் உடலுறவு கொள்கிறான் . இது தான் நிதர்சனம் . ஆணுறை பயன் படுத்தி அற்ப சுகம் அனுபவிப்பதை விட ஒருவருடன் உடலுறவு கொண்டு நிம்மதியாக இருக்கலாமே . அந்த வகையில் போப் சொல்லியிருக்கலாம் .

குறும்பன் சொன்னது…

Suresh Kumar ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தால் எயிட்சு தவிர பல பாலியல் வராமல் வாழலாம்.

ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தால் எயிட்சு வராமல் தடுக்கலாம், மக்களே இத் தத்துவத்தை பின்பற்றுங்கள் என போப் சொல்லியிருந்தால் அது மிகவும் சரியான கருத்து.

போப் ஆணுறையை பயன்படுத்துவதால் எயிட்சு அதிகம் பரவுகிறது என்று ஆப்பிரிக்காவில் சொல்லி உள்ளார். இது தான் மிகவும் தவறு. ஆணுறை பிடிக்கவில்லை என்றால் அதைப்பற்றி சொல்லாமல் விட வேண்டியது தானே? எயிட்சுக்கு எதிராக போராடுபவர்கள், குறைந்தபட்சம் ஆணுறை போட்டாவது உடலுறவு கொள்ளுங்கள் என கடுமையாக பிரச்சாரம் செய்ய இவர் அதுல மண்ணள்ளி போடுறார். என்னத்த சொல்ல.

உலகின் மூத்த தொழில் பாலியல் தொழில். இதை அழிக்க நினைப்பது முடியாத செயல்.

பெயரில்லா சொன்னது…

நல்ல தலைப்பு :-)

வெண்காட்டான் சொன்னது…

these all fools want to increase the no. of people in their religion. that's what they say don't use condoms. there is no other reason for it. now govt and religious never worry about population. govt want money so population is not a problem for them. they want a large market so they can make more money. religious fools (not only pope all other religion which never control the population.) are selfish and fanatic about their religion. crazy

குறும்பன் சொன்னது…

நன்றி அனானி :-))

குறும்பன் சொன்னது…

சரியா சொன்னீங்க வெண்காட்டான்.