அகில இந்திய காங்கிரசு தலைவி சோனியா காந்தியின் சம்பந்தி இராசேந்தர் வதேரா மின் விசிறியில் தூக்கு மாட்டி மரணமடைந்தார்.
60வயதுடைய இவர் நுறையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சில காலமாக டில்லியில் யூசப் சராய் பகுதியில் உள்ள சிட்டி இன் என்ற விருந்தினர் விடுதியில் தங்கி இருந்தார். காலை 9:30 க்கு இவரது உடலை விடுதி ஊழியர் கண்டு சொல்லியுள்ளார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு இவரை கொண்டு சென்றனர், அங்கு இவர் இறந்து விட்டதாக கூறினர். பின் இவரது உடல் சப்தர்சங் மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேதபரிசோதனைக்கு பின் இவரது உடல் மகன் இராபர்ட் வதேராவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரியங்கா வதேராவின் கணவர் இராபர்ட் வதேராவின் தந்தை இராசேந்தர் வதேரா. இவருக்கும் இவர் மகன் இராபர்ட் வதேராவுக்கும் சுமூக உறவு இல்லை.
7 ஆண்டுகளுக்கு முன் இராபர்ட் வதேரா தன் தந்தைக்கும் சகோதரர் இரிச்சர்டு வதேராவுக்கும் வழக்குரைஞர் மூலம் நோட்டீசு அனுப்பி இருந்தார். அதில் தனக்கும் பிரியங்காவுக்கும் உள்ள உறவை பயன்படுத்தி இவர்கள் உத்திரப்பிரதேச காங்கிரசு செயற்குழுவிலும், மொரதாபாத் மாவட்ட காங்கிரசு செயற்குழுவிலும் சிலரை நியமிக்க முயன்றார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
ஒரு பேட்டியில் இந்த புகார்களை மறுத்திருந்த இராசேந்தர் வதேரா, தனது மகன் பிரியங்காவை மணந்தது பிடிக்கவில்லை என்றும் சொல்லி இருந்தார்.
செப்டம்பர் 30, 2003 ல் இராசேந்தர் வதேராவின் மூத்த மகன் இரிச்சர்டு வதேரா மொரதாபாத் நகரில் தற்கொலை செய்து கொண்டார். ஏப்ரல் 2001ல் இவரின் மகள் மிச்சேல், டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் கார் விபத்தில் அடிபட்டு இறந்தார்.
ஏப்ரல் 3ம் தேதி எழுத ஆரம்பித்து இப்போது முடித்துவிட்டேன். அப்பாடி.....
4 கருத்துகள்:
//ஏப்ரல் 3ம் தேதி எழுத ஆரம்பித்து இப்போது முடித்துவிட்டேன். அப்பாடி.....//
கடமையுணர்வைப் பாராட்டி ஆகணும்ல?! இஃகிஃகி!!
பாராட்டுக்கு நன்றி பழமைபேசி இஃகி இஃகி.
இப்படி எழுதுனா எப்படி சுட சுட செய்திகள் தறதுன்னு தான் விசனமா இருக்கு.
சோனியா காந்திக்கு சம்பந்தியாக இருப்பதைவிட தூக்கு மாட்டிக்கொள்வது மேல் என்று நினைத்தார் போலும்.!
யாரு கண்டா? அப்படியும் இருக்கலாம்.
கருத்துரையிடுக