இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தன்மான சிங்கம் தமிழின காவலர் கருணாநிதி இன்று காலை திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதும், இதையடுத்து கருணாநிதியுடன் தொலைபேசியில் பேசிய சிதம்பரம், போரை நிறுத்துவதாக மத்திய அரசிடம் இலங்கை உறுதி மொழி தந்துள்ளதாகவும், இனி இராணுவத்தை தாக்குதலுக்கு பயன்படுத்த மாட்டோம், மறுசீரமைப்புக்கும் மற்றும் மக்களை இடம் அமர்த்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துவோம் என்றும் மத்திய அரசிடம் இலங்கை உறுதியளித்துள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து பகல் 12.30 மணியளவி்ல் உண்ணாவிரதத்தை கருணாநிதி முடித்துக் கொண்டது நமக்கு தெரியும்.
ஆனால் அன்று மாலை இலங்கை அரசு உண்மையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை என்றும் கன ரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்படும் என்றே கூறியதாகவும் கூறியது. இதை போர் நிறுத்தம் என்று சில மிடையங்கள் தவறான, அவதூறான, விசமனத்தனமான செய்தி வெளியிட்டுள்ளன என்றும் கூறியது.
அதாவது மக்களே இந்திய முன்னால் நிதி அமைச்சரும் தற்போதய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரத்தின் கூற்றுப்படி போர் நிறுத்தம் என்றால் வான் தாக்குதலும் பீரங்கி தாக்குதலும் இருக்காது என்பது பொருள்.
அதாவது பெரிய குண்டு போட்டு கொல்ல மாட்டாங்க, சின்ன குண்டால கொல்வாங்க. இந்த உண்ணாவிரதத்தால் இந்திய அரசு இலங்கையிடம் கடுமையாக கொடுத்த அழுத்தம் காரணமாக இது நிறைவேறியுள்ளது. அதற்கு நீங்கள் நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும். திமுக கூட்டணிக்கு வாக்கு போட மறந்திடாதிங்க. காலையிலிருந்து நண்பகல் வரை சோறு திங்காம உண்ணாவிரதம் இருந்தது அதுக்காக தான்.
5 கருத்துகள்:
உண்ணாவிரதம் எனும் தேர்தல் பிரச்சாரம்.
கருணாநிதி யின் துரோகங்கள் மாற்று நாடகங்களாக ஈழப்பிரச்சினை யை அவர் கையாள்கிறார்.
கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஈழபிரச்சினையில் உற்று பார்த்தல், எப்பெப்போலுதேல்லாம் அம்மையார் ஈழபிரச்சனையை பேசுகிறாரோ அப்பொழுது அவரின் பேச்சு அல்லது செய்திக்கு எதிராய் கருணாநிதியும் எதாவது ஒன்று எதாவது ஒன்று செய்வார்.
இதன் நோக்கம் அரசியல் பரப்புரை சமன் வேலை . அம்மையாரின் செய்தியை இங்கே காணுங்கள் .
அவர் ஒன்று செய்கிறார் நான் ஒன்று செய்து விட்டேன் அவ்வளவுதான் .
* எதிர்கட்சிகள் உண்ணாவிரதம் இருக்கலாம் - ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை வைத்து .
* அரசை நடுதுபவரே உண்ணாவிரம் இருந்தால் . அந்த உண்ணாவிரதம் யாரின் பார்வைக்கு ? . மத்திய அரசின் பார்வைக்கு என்றால் இவரது திமுக கட்சியும் மத்திய அரசி ஒரு அங்கம் தானே ? பின் ஏன் இந்த உண்ணாவிரதம் சென்னையிலும் நெல்லையிலும் உள்ள தமிழர்களை நோகியா உண்ணாவிரதம்? அவர்கள் இலங்கை சென்று போரை நிருதுவார்கள அல்லது அவர்களால் முடியுமா? ஒரு பக்கம் காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராய் வேலைபார்த்த மாணவர்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராய் பரப்புரை செய்த தோழர்களை கைது செய்தது கருணாநிதி அரசு . இங்கே செய்தியை பாருங்கள் ,
http://www.mdmkonline.com/news/latest/tamil_likes_arrested.html
http://www.mdmkonline.com/news/latest/29703007298029903021298629922980302129803007299330212965.html
* மறுநாளே தாம் உண்ணாவிரதம என்கிறார் . எதை நம்புவது அல்லது அவரின் உண்மையான நோக்கம் என்ன .? தமிழர்கள் இழிச்சவாயர்கள ?
இந்த செய்தியை பாருங்கள் ,
http://www.mdmkonline.com/article/avoid_congress__dmk/pc_and_srilanka_minister_in_same_statement.html
* இன்னும் இரண்டு நாளில் போரை முடிவுக்கு கொண்டுவருவதென்று கருணாநிதி , சிதம்பரம் , மன்மோகன் சிங்க் , ராஜ p அக்ஷே ஆகியோர் சேர்ந்து முடிவெடுத்துவிட்டார்கள் . எனென்றால் போரை நடத்துவது இந்த கூட்டணிதான் .
அவர்களின் நாடக இருதிகட்டம்தான் இந்த உண்ணாவிரதம் என்று என்ன தோன்றுகிறது .
* அடுத்து இந்த செய்தியும் கருணாநிதியின் தூக்கத்தை கெடுத்து விட்டது .
http://www.mdmkonline.com/news/latest/295129942969302129653016_29703014298530212993301529853021.html
* எனென்றால் விடுதலைபுலிகளை சர்வாதிகாரிகள் மற்றும் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற தோரணையில் கருணாநிதியின் பேச்சு இருந்தது .
இந்த செய்தியையும் பாருங்கள்
* நான் சொல்வதை மத்திய அரசு கேட்கவில்லை என்று கருணாநிதி சொன்னால் அது இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக்குகளில் ஒன்றாகும் . ஏனென்றால் மத்திய அல்லது மாநில அரசாங்கம் நல்ல புரிதலில் உள்ளது . இரு அரசாங்கங்களும் ஒன்றுக்கொன்று முட்டுகொடுதுகொண்டிருக்கின்றன , இந்த இரு அரசாங்கம் இணைந்து மூன்றாவதாய் இலங்கை அரசாங்கத்திற்கு முட்டு கொடுத்து போரை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் அதுவே உண்மை .
* நேற்று அமெரிக்கன் அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுதுவிட்டது
* அதை தொடர்ந்து ஜீ எட்டு நாடுகளும் போரை நிறுத்த நிர்பந்தம் கொடுத்துவிட்டது . இதனால் போரை நடத்தும் இந்தியாவிற்கு தர்ம சங்கடம் ஆகிவிட்டது என்பதைவிட பெரும் அவமானமும் ஆகிவிட்டது .
* போரை நாம்தான் நடுதுகிறோம் என்பதை உலகம் பகிரங்கமாய் உணரதொடங்கிவிட்டது . இந்த நிலைமையில் இந்த ஈழ போர் விஷயத்தை அப்படியே பூசி மொழுகி அமுக்கவேண்டும் .
* ஆகவே இன்னும் நிச்சயம் போர் இரண்டு நாளில் நிற்கும் . அதற்குள் தமிழர்கள் குறைத்து பத்தாயிரம் பேர்களை கொள்ளுவார்கள் . அதற்குத்தான் இலங்கை அனுமதி கேட்டுள்ளது இந்தியாவிடம் .
* இடையில் இங்கே இந்தியாவில் கருணாநிதி , மன்மோகன் , சிதம்பரம் சோனியா கூட்டணியின் நாடகம் . தேர்தலுக்காக .
* ஒரே ஒரு சந்தோசம் , இன்னும் சிறுது நாளில் ( இரண்டொரு நாளில் ) இலங்கையும் போர் நிறத்த செய்தியை அறிவிக்கும் என்பதுதான் அது எஅர்கனவே முடிவானதுதான் .
* வாழ்க கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் . வெல்க அவர்களது கூட்டணியின் ஈழப்பற்று .
http://www.mdmkonline.com/news/latest/india_directly_supporting_sla.html
- தோழர் .
-------------------------------------------------------------------------------------
இலங்கையில் மத்திய அரசு நடவடிக்கையால் போர் நிறுத்தம் ஏற்பட்டது; கருணாநிதி அறிக்கை
மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.
திரைப்படம் திரைப்படம்
சென்னை, ஏப். 27-
முதல்-அமைச்சர் கருணாநிதி உண்ணா விரதத்தை முடிக்கும் முன்பு வாசித்த அறிக்கை வருமாறு:-
1924ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 3ஆம் நாள் முத்துவேலர் என்கிற இசைத் தமிழ் தந்தைக்கும் - அஞ்சுகம் என்கிற அன்னைக்கும் திருக்குவளை எனும் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து, குவா குவா என்று குளிர் தமிழ் மொழியில் ஒலியெழுப்பிய அந்தக் காலத்தில் நான் பிறந்த அறையிலேயே திருடர்கள் புகுந்து-பொருள்களைக் களவாடிய போது - அவர்களிலே யாரோ ஒருவருடைய கையோ, காலோ என் கழுத்தில் அழுத்தப்பட்டிருந்தால் அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி தமிழ் என்கிற அந்த தன்னேரில்லா சொல் என்னால் உச்சரிக்கப்பட்டிருக்க மாட்டாது.
அதை உச்சரிப்பதற்கு - உயர்த்துவதற்கு - உலக மொழிகளில் - செம்மொழிகளில் ஒன்றாக ஆக்குவதற்கு நான் உயிரோடு இருக்க வேண்டுமென்று தமிழன்னை கருதினாள் போலும்! அதனால் நான் ஊர்ந்து தவழ்ந்து வளர்ந்து 13ஆம் வயதிலேயே தமிழ் எழுதவும் - கட்டுரைகள் தீட்டவும் - கதைகள் புனையவும் கற்கண்டு தமிழ் எனக்கு உதவிற்று. அந்நாளில் தான் 1938ஆம் ஆண்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் தமிழ்ப்புலவர் பெருமக்கள் தமிழ்க்காத்திடும் போரில் குதித்த வரலாறு தோன்றிற்று. அந்த வரலாற்றில் ஒரு துளியாக நான் இருந்தேன். சிறு துளி பெரு வெள்ளம் என்பார்களே, அப்படி இன்று கோடிக்கணக்கான தமிழ் மக்களின் நல் இதயங்களின் வாழ்த்துகளைப் பெறுகின்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறேன்.
இந்த வளர்ச்சியும், வலிமையும் எதற்காக பயன்பட வேண்டும்? என் தமிழைக்காக்கவும் - என் தமிழர் எங்கெல்லாம் அல்லல் படுகின்றாரோ அவர்களைக்காக்கவும் - பயன்படாத இந்த உடல் இருந்து என்ன பயன்? உயிர் இருந்து தான் என்ன பயன்?
உடலில், முதுகில் அறுவை சிகிச்சை ஆயிற்றே, இந்த நிலையில் இலங்கைத்தமிழர்களுக்காக இப்படி ஒரு உண்ணா நோன்பு போராட்டம் என்றால் உடல் என்னவாகும்? உயிர் என்னவாகும்? எங்களுக்கு நீங்கள் வேண்டும் என்றெல்லாம் என் தமிழர்கள், என் உடன் பிறப்புகள் முழக்கமிடுகிறார்கள்; வேண்டுகிறார்கள்.
ஆமாம், அவர்களுக்கு நான் வேண்டும் - எனக்கு அவர்கள் வேண்டும் - என் தமிழ் வேண்டும் - என் தமிழன் காலமெல்லாம் நலமாக வாழ வேண்டும். அவனை அல்லலோ, அவதியோ அண்டவும் கூடாது. தமிழனுக்கு ஒரு காயம் என்றால், அந்தக் காயம் என் உள்ளத்தில் ஆகாய மளவு பரவி நிற்கிறது.
அதனால் தான் இலங்கையிலே வாடிக்கொண்டிருக்கின்ற - மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களை - தமிழ்த் தாய்களை - தமிழ்ச்சகோதரிகளை - தமிழ் மழலைகளை காப்பாற்ற முடியவில்லையே என்ற சோகத்தோடு வாடினேன், வதங்கினேன்.
நேற்றிரவெல்லாம் கண் விழித்து இலங்கையில் போர் நிறுத்தம் என்ற நல்ல செய்தி ஏதாவது வருகிறதா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டே இருந்தேன். உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை பல முறை தொடர்பு கொண்டேன்.
பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். நல்ல வார்த்தைகள் தான் சொன்னார்கள். நல்லதே நடக்கும் என்று தான் உறுதியளித்தார்கள்.
அதிகாலை 4 மணி வரையில் தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று எதிர்பார்த்தேன். எந்தச்செய்தியும் வரவில்லை. இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை என்ற செய்தி தான் கிடைத்தது.
அதற்குப்பிறகு 5 மணியளவில் என் வீட்டாருக்கும் சொல்லாமல் அறிவாலயம் செல்கிறேன் என்று கூறி விட்டு, அண்ணா இருக்கும் இடம் எனக்கு அறிவாலயம் தானே என்று இந்த அறிவாலயத்திற்கு வந்து உண்ணா நோன்பைத்தொடங்கினேன்.
இதன் விளைவாக இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இலங்கை அரசின் பாதுகாப்பு கவுன்சில் கூடி போருக்கான நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைத்திருக்கிறது என்பதோடு, இனி இலங்கை ராணுவம் இந்தப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பணிகள் அளிக்கப்பயன் படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
கருத்து
உதவி
// Load the Google Transliteration API google.load("elements", "1", { packages: "transliteration" }); function onLoad() { var options = { sourceLanguage: google.elements.transliteration.LanguageCode.ENGLISH, destinationLanguage: google.elements.transliteration.LanguageCode.TAMIL, shortcutKey: 'ctrl+g', transliterationEnabled: true }; // Create an instance on TransliterationControl with the required // options. var control = new google.elements.transliteration.TransliterationControl(options); // Enable transliteration in the textfields with the given ids. var ids = [name,comment]; control.makeTransliteratable(ids); // Show the transliteration control which can be used to toggle between control.showControl('transctrl', { controlType: google.elements.transliteration.TransliterationControl. ControlType.SINGLE_LANGUAGE_BUTTON }); } google.setOnLoadCallback(onLoad);
பெயர்
இமெயில்
கருத்து
மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Monday, April 27,2009 04:29 PM, saajan said:
இப்ப மட்டும் எப்படி கேட்டர்களாம்...?
Monday, April 27,2009 04:24 PM, muthu said:
அண்ணாவின் ஒரு இரவு நாடகத்தை போல் நீங்களும் ஒரு இரவு நாடகத்தை அரங்கேற்றம் செய்துள்ளீர்கள். இந்த நாடகம் வெற்றி நாடகம் அல்ல என்பதை வரும் தேர்தலில் மக்கள் தீர்ப்பு தருவார்கள் முதல்வரே.
Monday, April 27,2009 04:17 PM, Sankar said:
ப சிதம்பரம் இந்தியாவின் உள்துறை அமைச்சரா அல்லது இலங்கை அமைச்சரா . அவர்கள் போர் நிறுத்தம் அறிவிக்கவில்லை . ஆனால் சிதம்பரம் போர் நிறுத்தம் ஆகிவிட்டதாக சொல்லி மக்களை ஏமாற்றுகிறார். கருணாநிதியும் அதற்கு தாளம் போடுகிறார்
Monday, April 27,2009 04:06 PM, kaalan said:
நீங்கள் கொடுக்கும் அறிக்கை இந்தியா தான் இலங்கை போருக்கு காரணம் என்ற மாயையை உருவாக்குகிறது. இது இலங்கை தமிழ் மக்கள் மனதில் பெரும் கோபத்தை உருவாக்கி இந்தியாவுக்கே பெரும் ஆபத்தை உருவாக்கும். எனவே இனி மேலும் இதில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்.
Monday, April 27,2009 03:26 PM, ஸ்ரீ said:
No ceasefire in Sri Lanka - Military spokesman Udaya Nanayakkara speaking to the Daily Mirror ascertained that the government has not declared a ceasefire. He clarified that only the use of heavy weapons and combat aircraft will be halted. His comment came after some International Media claimed that Sri Lanka has declared a ceasefire with the LTTE.
onday, April 27,2009 03:26 PM, ஸ்ரீ said:
No ceasefire in Sri Lanka - Military spokesman Udaya Nanayakkara speaking to the Daily Mirror ascertained that the government has not declared a ceasefire. He clarified that only the use of heavy weapons and combat aircraft will be halted. His comment came after some International Media claimed that Sri Lanka has declared a ceasefire with the LTTE.
Monday, April 27,2009 03:02 PM, Rajkumar said:
karunanidhi, do you have common sense? don't make our people as fools. If you want act like this, please act infront of your family. Don't act with us.
Monday, April 27,2009 02:53 PM, ராஜேஷ் said:
statement with beautiful words... thanks M.K
Monday, April 27,2009 02:53 PM, kumar said:
ராஜபக்சே போரை நிறுத்தினால் 'நான் தான் போரை நிறுத்த சொன்னேன்' என்பதும் குண்டுகளை வீசினால் 'நான் பொறுப்பல்ல' என்று கூறுவதும், போதும் உங்கள் அறிக்கைகளும் பதில்களும்.
Source : http://www.maalaimalar.com/2009/04/27144815/CNI0640270409.html
அன்பின் "கருணா"நிதி அவர்களுக்கு, எவ்வாறு கூசாமல் பொய் கூறுகிறீகள். கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்காமல் கண்ணை திறந்து பாருங்கள் நீங்கள் அம்மணமாய் நிப்பதை உலகமே வேடிக்கை பார்க்கிறது.
அன்பின் "கருணா"நிதி அவர்களுக்கு, எவ்வாறு கூசாமல் பொய் கூறுகிறீகள். கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்காமல் கண்ணை திறந்து பாருங்கள் நீங்கள் அம்மணமாய் நிப்பதை உலகமே வேடிக்கை பார்க்கிறது.\\
வாங்க சத்தியன், அவருக்கு தெரியாதுன்னா நினைக்கிறிங்க?
சங்கொலி இவ்வளவு பெரிசா பின்னூட்டமா? இணைப்பு கொடுத்தா படிச்சிக்க மாட்டோமா?
மன்னிக்கவும் குறும்பன் அவர்களே & வாசிப்பாளர்களே,
இனி மேல் இப்படி நிகழாமல் பார்த்து கொள்கிறோம்.
நட்புடன்
தோழர்.
www.mdmkonline.com
கருத்துரையிடுக