வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



வெள்ளி, ஏப்ரல் 17, 2009

பிரியங்கா வதேரா - காந்தி

காங்கிரசு தலைவி சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி இராபர்ட் வதேராவை மணமுடித்த செய்தி அனைவருக்கும் தெரியும். மணமான பின்பு இவரை பிரியங்கா வதேரா என்றே நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. இப்போது இவர் பெயரை பிரியங்கா காந்தி என பெரும்பாலும் என குறிக்கின்றன. இது தவறல்லவா? NDTV க்கு இது தொடர்பான கட்டுரையில் இத்தவறை குறிப்பிட்டேன், அதை அவர்கள் வெளியிடவேயில்லை. (என்னுடைய ஒரு commentம் அதுல வரமாட்டுங்குதுங்க ;-)) ). காந்தி மயக்கம் போகமாட்டிக்குது. (மகாத்மா காந்தி மயக்கம் இல்லைங்க, அவரை எப்பவோ மறந்தாச்சு) இதை மோசடி என்றே குறிப்பிடவேண்டும். பெயரை கூட மாற்றி வெளியிடும் இவற்றின் செய்திகளை எவ்வாறு நம்புவது?

பின்னாளில் சில செய்திகளை ஆவணப்படுத்த முயலும் போது இது எல்லோரையும் குழப்பும்.

நளினியை பிரியங்கா சந்தித்ததை எழுதிய போது கூட பிரியங்கா வதேராவை பிரியங்கா காந்தி என்றே எழுதினார்கள். நளினி - பிரியங்கா காந்தி சந்திப்பு...

தமிழ்நாட்டின் முதல்வர் யாருன்னு கேட்டா MGR ன்னும், பிரதமர் இந்திரா காந்தின்னும் சிலர் சொல்லுவாங்க. அவங்களுக்கும் இந்த செய்தியாளர்களுக்கும் என்ன வேறுபாடு?

2 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

பெண்கள் அப்பாவின் பெயரையே திருமணத்திற்கு பிறகு தொடர்வதில் தவறு இல்லை என்று நான் சொன்னால், அப்பறம் எப்படி ஆண்டனோ மொய்னோ சோனியா 'காந்தி'யானார் என்று கேட்பிங்க, நான் வெளையாட்டுக்கு வரலை
:))))))))

Machi சொன்னது…

:-))கோவி நானும் அந்த விளையாட்டுக்கு வரலை :-))

நாட்டு மக்களுக்கு நல்லது பண்ணுவதற்காகவே பிறந்த நடுநிலை பேணுவதாக கூறிக்கொள்ளும் இந்த நாளிதழ்காரர்கள் ஏன் பெயரை மாற்றி மாற்றி எழுதுகிறார்கள் என்று தான் புரியவில்லை.
பிரியங்கா காந்தின்னு எழுது இல்ல பிரியங்கா வதேரான்னு எழுது ஏன் இரண்டையும் மாற்றி மாற்றி எழுதுகிறார்கள். ;-))