வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 13, 2023

கருநாடக தேர்தல்- 2023

 கருநாடக தேர்தல்- 2023



சிக்மகளூரில் தமிழக பாசக பொறுப்பாளர் CT ரவி - தோல்வி. 

CT இரவி (பாசக) 79,128 - 46.53%

தம்மைய்யா (காங்கிரசு) 85,054 - 50.01%



பாசகவிலிருந்து காங்கிரசுக்கு தாவிய ஊப்ளி-தார்வார்ட் மத்தி தொகுதியில் செகதீசு சட்டர் தோல்வி

செகதீசு சட்டர் (காங்கிரசு) 60,775 - 37.89%

மகேசு தென்கினாகை (பாசக) 95,064 - 59.27%


கீழுள்ள அனைவரும் வெற்றி.

சிவக்குமார்- 143,023 (75.03%) - நாகராசு (மசத) 20,631 (10.82%) - அசோகா (பாசக) 19,753 (10.36%)

சித்தராமையா- 119,816(60.09%) - சோமன்னா 73,653 (36.94%) - பாரதி சங்கர் (மசத) 1,037 (0.52%)

குமாரசாமி - 96,592 (48.83%) - யோகராசா (பாசக) 80,677 (40.79%) - கங்காதர் (காங்) 15,374 (7.77%)

பொம்மை - 100,016 (54.95%) - பதன் யாசிராமெத்கான் (காங்) 64,038 (35.18%) - சசிதர் யெலிகர் (மசத) 13,928 (7.65%)


திங்கள், ஏப்ரல் 10, 2017

ஆர் கே நகர் தேர்தல் ஒத்தி வைப்பு

ஆர் கே நகர் தேர்தல் தள்ளி வைப்பு - சரியா? எனது சிறுபார்வை

சசி அணி 4,000 அளவுக்கு கொடுத்தது என்றால் பன்னீர் அணியும் மற்ற சில பணக்கார கட்சிகளும் 2,000, 1,000 என்று வசதியைப் பொருத்து கொடுத்துள்ளன. சில கட்சிகளும் கட்சி சாரா வேட்பாளர்களும் பிசுனாறிங்க. பண பலம் இல்லாதவர்கள். இதில் பலர் சொத்து அது இதுன்னு உடைமைகளை அடமானம் வைத்து தேர்தலுக்கு செலவு செய்திருப்பார்கள். தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால் அவர்கள் இது வரை தங்களின் சொத்தை அடமானம் வைத்து கிடைத்த பணத்தை இறைத்து செய்த பரப்புரை எல்லாம் வீண். அடுத்த தேர்தல் காலத்துக்கு பணத்துக்கு என்ன செய்வார்கள்? தேர்தல் ஆணையம் அவர்களுக்கு பணத்தை தருமா? இது நியாமான எல்லோரும் சம வலிமையுடன் போராடும் தேர்தல் ஆகுமா? அரவக்குறிச்சி தஞ்சையில் என்ன ஆயிற்று. பணம் கொடுத்தவர்களே தான மீண்டும் போட்டியிட்டார்கள்? பணம் கொடுக்கப்பட்டது என்றால் கொடுத்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வது தானே முறை? 

அதாவது தேர்தல் ஆணையம் அதிமுக திமுக பாசக பொதுவுடமை வாதிகள் போன்ற பெரிய கட்சிகளையே கணக்கில் கொண்டு தேர்தல் நடத்துகிறது. நேர்மையற்ற கூழை கும்பி போடும் முதுகெலும்பு இல்லாத தேர்தல் ஆணையம்.

வியாழன், மார்ச் 23, 2017

ஐந்து மாநில சட்டமன்ற முடிவும் மோதியின் அரசியலும்

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்டம், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களின் முடிவுகள் வந்துள்ளன.

உத்தரப் பிரதேசம்
இதில் அனைவராலும் கவனிக்கப்படுவது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைத் தான். 81 மக்களவை உறுப்பினர்களை அனுப்பும் பெரிய மாநிலம். 2014 மக்களவை தேர்தலில் இங்கு பாசக 71 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான அப்னா தளம் (2) இடங்களையும் பெற்றது, தொகுதிகளில் வென்றது. இங்கு பெற்ற 71 தொகுதிகளால் தான் பாசக கூட்டணி கட்சிகள் இல்லாமலே பெரும்பான்மை பெற்றது. 282 தொகுதிகளில் பாசக வென்றது. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகளில் வென்றால் போதும். இதிலிருந்து இது பாசகவிற்கு எத்தனை சிறப்புத்துவம் வாய்ந்த மாநில தேர்தல் என்பது புரியும். கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 336 தொகுதிகள். செல்லாக்காசு போன்ற நாட்டு மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை பயமில்லாமல் எடுக்கிறது.

பாசக பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாச்வாதி கட்சிக்குள் கடுமையான குடும்ப தகராறு. முலாயம் சிங் யாதவும் கடைசி வரை சமாச்வாதிக்காக வாக்கு கேட்க வரவில்லை அது பெரிய சறுக்கல் தான்.  காங்கிரசு வைத்த கூட்டு பலனளிக்கவில்லை.

மாயாவதி வரமுடியாது என்றே பல வட இந்திய நாளேடுகளும் காட்சி ஊடகங்களும் கூறின. அதே போன்று 19 தொகுதிகளைத்தான் பெற்றுள்ளார். இசுலாமியர்களை அளவுக்கு அதிகமாக கூப்பிட்டது, ஐசு வைத்தது, மற்றவர்களுக்கு வெறுப்பை கொடுத்து விட்டததோ?

காங்கிரசு தலித் முசுலிம் வாக்கு வங்கியை வைத்திருந்தது. தலித் மாயாவதிக்கு போய் விட்டது. முசுலிம்களை இழுக்க முடியும். மாயாவதியுடன் காங்கிரசு கூட்டு வைத்திருந்தால் தலித் முசுலிம் வாக்குகள் இக்கூட்டணிக்கு அதிகம் கிடைத்திருக்கும். பாசக 39.7% வாக்குகள் வாங்கி 312 தொகுதிகளை பெற்றது பசக 22.8% வாக்குகள் பெற்று 19 தொகுதிகளைப் பெற்றது. காங்கிரசு இதனுடன் இணைந்திருந்தால் இக்கூட்டணி குறைந்தது 30% வாக்குகளை பெற்றிருக்கும் மேலும் இது பாசகவின் வாக்கு % குறைத்திருக்கும் என்பது என் கணிப்பு.

பச்சை சமாச்வாதி+, நீலம் பசக, காவி பாசக+
வாரணாசி பக்கம் தோற்க கூடாது என்பதற்காக அப்பகுதியில் பலமாக உள்ள அப்னா தளம் (சோனா வால்)  உடனும் மக்களவை தேர்தலிலேயே கூட்டு, கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் உள்ள ராச்பார் சமூகத்தில் ஆதரவு பெற்ற சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சியுடன் இந்த தேர்தலில் தான் கூட்டணி வைத்தது. இக்கட்சி தலைவர் பகுசன் சமாச்சிலிருந்து பிரிந்து வந்தவர். இது அவர்களின் உத்தியை காட்டுகிறது.  சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி கிழக்கு உத்தரப் பிரதேசத்தை தனியாக பிரித்து கொஞ்ச நிலத்தை பீகாரிலிருந்து எடுத்து பூர்வாஞ்சல் மாநிலம் அமைக்க போராடுகிறது.

ஏழ்மையான பகுதியான  புதல்காண்டம் பகுதி முழுவதும் பாசக கைப்பற்றியது கவனிக்கத்தக்கது.  வடக்கு பகுதியில் முசுலிம்கள் அதிகம் உள்ள மத கலவரம் நிகழ்ந்த தாத்ரி போன்றவை நிறைந்த அப் பகுதியில் பாசக 73% வெற்றி பெற்றுள்ளது.  எது எப்படி இருந்தாலும் பாசகவின் பெரு வெற்றி பல காலம் பேசப்படக்கூடியது.



ஏழு கட்டங்களில் வாக்குப்பதிவு நடந்தது. 



பாரதிய சனதா - 312 ( 39.2% )
சமாச்வாதி+காங்கிரசு - 54 (47+7) (21.8%+6.2)
பகுசன் சமாச் - 19 ( 22.2%)
அப்னா தளம் (சோனேவால்)-9 (1%)
சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி -4 ( 0.7%)
ராசுட்டிரிய லோக்தளம் - 1 ( 1.8%)
நிர்பல் இந்தியன் சோகித் அமாரா ஆம் தளம் - 1 (0.6%)
கட்சி சார்பற்றவர்கள் - 3
(பம்பர் பரிசு மாநிலம்)

அடுத்த பெரிய மாநிலம் பஞ்சாப்,
காவி அகாலி+, கத்தரிப்பூ- ஆம் ஆத்மி+, நீலம்-காங்கிரசு

இங்கு அகாலி தளம் - பாசக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அகாலி முதல்வர் பாதல் குடும்பத்து மேலும், அகாலிகள் மேலும் கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதி அமைச்சர் அருண் செயிட் லீ பஞ்சாபிலுள்ள நவசோத் சிங் சித்து வெற்றி பெற்ற அகாலி-பாசக பலமான இருந்த அமிர்தசரசு தொகுதியில் மோதி அலையிலும் தோற்றவர் தான்.
காங்கிரசு பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக

ஆம் ஆத்மி கட்சி இல்லையென்றால் அதிக சுவாரசியம் பஞ்சாப் தேர்தலில் இருக்காது. இப்ப காங்கிரசு - அகாலி தளம்- பாசக - ஆம் ஆத்மி என்று மும்முனைப் போட்டி உள்ளது. ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் அல்லது தொங்கு சட்டமன்றம் வரும் என்றார்கள் இப்போது காங்கிரசு பெரு வெற்றி பெற்றுள்ளது ஆம் ஆத்மி 20 மட்டுமே பெற்றுள்ளது. 20இக்கும் மேலான தொகுதிகளில் வைப்புத்தொகையை இழந்துள்ளது. அகாலி-பாசக கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாலும் வாக்கு % அடிப்படையில் அது இரண்டாவது இடத்தில் உள்ளது. மால்வா பகுதியில் தான் ஆம் ஆத்மிக்கு அதிக செல்வாக்கு என்றார்கள் அங்கு தான் அதிக தொகுதிகளை பெற்றுள்ளது. மகசா பகுதியில் வெல்பவரே ஆட்சியமைக்க முடியும் என்றார்கள் அது போலவே அங்கு காங்கிரசு வென்றுள்ளது. ஆம் ஆத்மி அங்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 2014 மக்களவை தேர்தலில் பாட்டியாலா, பரித்தாகோட், பாட்டாஃகரப் சாகிப்,  சங்குரூர் ஆகிய நான்கு மக்களவைத் தொகுதிகளில் ஆஆக வென்றிருந்தது.  பாட்டியாலா மக்களவை தொகுதியில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இப்போது தோற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 5 தொகுதிகளில் வென்றிருந்தது. பரித்தாகோட் மக்களவை தொகுதியில் 9 இல் 3சட்டமன்ற தொகுதிகளிலும் மட்டும்  இப்போது வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 8 தொகுதிகளில் வென்றிருந்தது. பாட்டாஃகரப்  சாகிப்  மக்களவை தொகுதியில் 9 இல் 1  சட்டமன்ற தொகுதிகளிலும் மட்டும்  இப்போது வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 6 தொகுதிகளில் வென்றிருந்தது.  சங்குரூர்  மக்களவை தொகுதியில் 9 இல் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் மட்டும்  இப்போது வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 7 தொகுதிகளில் வென்றிருந்தது.  இந்த நான்கு தொகுதிகளும் மால்வா பகுதியில் உள்ளன. ஆஆக இக்கு இத் தேர்தல் தோல்வி. 2014இல் 24% வாக்குகளை பெற்றிருந்த இக்கட்சி இப்போது 23.7% தான் பெற்றுள்ளது. உட்கட்சி பூசல் மாநில தலைமை இல்லாதது பெரும் தொல்வியை இதற்கு கொடுத்துள்ளது. தன்னார்வத் தொண்டர்கள் நிரம்பிய இக்கட்சியை அரவிந்து கெச்ரிவால் தில்லியில் இருந்து இயக்க முற்பட்டது போணியாகவில்லை இது தோற்றதே நல்லது இப்போதாவது கெச்ரிவாலுக்கு அறிவு வருதான்னு பார்ப்போம். இது சீக்கியர்களிடம் தான் அதிக ஆதரவை பெற்றிருந்தது.  காங்கிரசு 40 ஊர்ப்புற தொகுதிகளில் வென்றுள்ளது அதாவது அங்கு பெரிய நகரங்கள் இல்லை. அதில் 30இல் ஆஆக மூன்றாவதாக வந்துள்ளது.  டரன் டரன் மாவட்டமே அதிக சீக்கியர்களை கொண்டது அதில் உள்ள நான்கு தொகுதிகளையும் காங்கிரசு அள்ளிவிட்டது, அங்கும் ஆஆக மூன்றாவது இடம் தான். லோக் இன்சாப் கட்சி ஆஆக துணையுடன் போட்டி போட்டது அதனால் தான் ஆம் ஆத்மி பஞ்சாபில் 22 இடங்களை பெற்றதாக செய்தி இதழ்களில் போடுவார்கள்.

காங்கிரசு - 77 ( 38.5% )
அகாலிதளம்-பாசக - 18 (15+3) ( 25.2%+5.4%)
ஆம் ஆத்மி - 20 ( 23.7%)
லோக் இன்சாப் கட்சி - 2 ( 1.2 %)

உத்தராகண்டம்
காவி-பாசக, நீலம் - காங்கிரசு

உத்தராகண்டத்தை பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. காங்கிரசு - பாசக என இரு தேர்வு தான் மக்களுக்கு உள்ளது. இருந்தாலும் இவ்வளவு பெரிய வெற்றி யாரும் எதிர்பார்க்காதது.
பாசக பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக

இமாச்சலப் பிரதேசதை ஒட்டியுள்ள எல்லைப் புறத்திலும் நேபாள எல்லைப் புறத்திதலும் மட்டும் காங்கிரசு வென்றுள்ளது. நிறைய காங்கிரசு காரர்கள் பாசகவுக்கு தாவி அந்த கட்சி சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதுவும் காங்கிரசின் மரண தோல்விக்கு காரணம் எனலாம்.
ஒரு சிலர் கட்சி மாறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது ஆனால் நிறைய பெருந்தலைகள் மாறியது கட்சி தொண்டர்களுக்கு சோர்வை கொடுக்கும்.

பாசக வேட்பாளர்களாக போட்டியிட்ட 14 முன்னாள் காங்கிரசுகாரர்களில் 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர். முடிந்த 3-வது சட்டமன்றத்தின் தொடக்கத்தில் ஓர் ஆண்டு வரை முதல்வராக இருந்த விசய் பகுகுணா பாசவுக்கு மாறி தன் பையனுக்கு தான் போட்டியிட்ட தொகுதியையே வாங்கிவிட்டார்.  உத்தராகண்டத்தில் காங்கிரசின் தலித் முகமாக இருந்த மூத்த தலைவர் யசுபால் ஆரியா தனக்கும் தன் மகன் சஞ்சீவ் ஆரியாவுக்கும் பாசகவில் தொகுதிகளை பெற்றார் (பேச்பூர், நைனிடால்). இது பழைய உத்தரப் பிரதேசம் என்பதை மறக்கக் கூடாது. ஆனாலும் இங்கு சமாச்வாதி கட்சி 2% வாக்கு வாங்கும் அளவில் கூட இல்லை. பல இந்து புண்ணிய தலங்கள் அதாவது கேதர்நாத் ரிசிகேசு பத்ரிநாத் அரித்துவார் கங்கோத்திரி யமுனோத்திரி போன்றவை தான் இங்குள்ளன உத்தரப் பிரதேச காத்து இங்கும் பலமாக அடித்துள்ளது போலும்.

பாசக பெருவெற்றி பெற்றாலும் அது கேதார்நாத்தில் நான்காவது இடமே பிடித்தது. மூன்றாவது சட்டமன்றத்தின் வெளியேரும் முதல்வர் அரிசு ரவாட் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் ( அரித்துவார் புறநகர், கிச்சா) தோற்றார்.

பாரதிய சனதா - 57 ( 46.5%)
காங்கிரசு - 11 (33.5)
கட்சி சார்பற்றவர்கள் - 2

மணிப்பூர்

காவி- பாசக, நீலம்-காங்கிரசு, சாம்பல்-மற்ற கட்சிகள்
மணிப்பூரை வட இந்திய ஊடகங்கள் சுத்தமாக கண்டு கொள்ளவில்லை. இரும்பு பெண்மணி இரோம் சர்மிளா  அரசியல் ஈடுபாடே நம்மை அங்கு ஈர்த்தது. மூன்று தொகுதிகளில் தான் அவரின் கட்சி போட்டியிடுகறது. அவர் 90 வாக்குகளை மட்டுமே பெற்றது கொடுமை. அவரை தோற்கடித்தது தப்பில்லை ஆனால் 90 இக்கு பதிலாக சில ஆயிரம் வாக்குகள் கொடுத்திருக்கலாம். அது அவரைப்போன்ற சமூக போராளிகளுக்கு உத்வேகத்தை கொடுத்திருக்கும்.
காங்கிரசு பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக


மலைப்பகுதிகளில் பாசக அதிக தொகுதிகளை பெற்றுள்ளது. நாகா மக்கள் முன்னனி மக்கள் உட்பட மற்ற கட்சிகள் பள்ளத்தாக்கு பகுதியிலேயே வெற்றி பெற்றது. இதில் நாகா மக்கள் முன்னனிக்கு காங்கிரசு ஆவாது. இது நாகா மக்கள் வாழும் பகுதிகளை இணைத்து அகண்ட நாகாலாந்து அமைக்க போராடுகிறது அதாவது மணிப்பூரின் சில பகுதிகளை கேட்கிறது. தேசிய மக்கள் கட்சி தேசிய சனநாயக முன்னனியில் அதாவது பாசகவுடன் இருந்தாலும் இதை பொதுவுடமை கட்சி ஆதரித்திருந்தது அதனால் மத சார்பற்ற கட்சிக்கு ஆதரவு தரும் படி பொதுவுடமையின் நெருக்குதல் இதற்கு இருக்கிறது.

மணிப்பூரின் ஆளுநர் பாசகவை முதலில் ஆட்சியமைக்க அழைத்து பெரும்பான்மையை 15 நாட்களுக்குள் நிருபிக்க கூறியுள்ளார். நமக்கு என்ன நடக்கும் என்று தெரியும். அதாவது குதிரை பேரம் தான்.

காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் சியாம்குமார் பாசகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரசின் 28 உறுப்பினர்களில் 27 பேர் தான் எதிர்ப்பு மீதி அனைத்து கட்சிகளும் பாசகவுக்கு ஆதரவு.

தேசிய மக்கள் கட்சிக்கு இரு அமைச்சர் பதவிகள் அதில் ஒன்று துணை முதல்வர். நாகா மக்கள் முன்னனிக்கு மூன்று அமைச்சர் பதவிகள். காங்கிரசிலிருந்து வந்த சியாம் குமாருக்கும் லோக் சன சக்தி உறுப்பினருக்கும் அமைச்சர் பதவி. திரிணாமுல் உறுப்பினருக்கும் கட்சி சார்பற்ற உறுப்பினருக்கும்  அமைச்சர் பதவி இப்போதைக்கு இல்லை.

பாசக முதல்வர் ஆக்கியுள்ள நாங்தோம்பம் பீரேன் சிங் காங்கிரசுகாரர் 2016 அக்டோபரில் தான் பாசகவில் இணைந்தவர்.


காங்கிரசு - 28 ( 35.1%)
பாரதிய சனதா - 21 (36.3%)
நாகா மக்கள் முன்னனி-4 ( 7.2%)
தேசிய மக்கள் கட்சி - 4 (5.1%)
திரிணாமுல் காங்கிரசு-1 ( 1.4%)
லோக சனசக்தி - 1 ( 2.5 %)
கட்சி சார்பற்றவர்கள் - 1

கோவா

காங்கிரசு பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக
கோவா சிறிய மாநிலம் என்றாலும் ஆம் ஆத்மி கட்சி இல்லையென்றால் அதிக சுவாரசியம் கோவா தேர்தலில் இருக்காது. இப்ப காங்கிரசு - பாசக - ஆம் ஆத்மி என்று மும்முனைப் போட்டி உள்ளது.
தென் கோவா கிறுத்துவர்கள் நிறைந்தது. இங்கு தான் ஆம் ஆத்மி வேறூன்ற பார்த்தது. அதன் முதல்வர் கிறுத்துவர் என்பதால்.

வட கோவா இந்துகள் நிறைந்தது. பாசகவின் கோட்டை.  அப்பகுதி ஏழை இந்துக்களின் ஆதரவுடன் தான் மகாராட்டிரவாதி கோமந்த கட்சி உள்ளது அது ஏன்னா போர்த்துகீசியர்கள் அதிகாரத்தில் கிறுத்துவர்களுக்கே சலுகைகள் கிடைத்தன, இப்போ இந்துக்களின் ஆதரவு நிறைய பாசகவுக்கு போய்விட்டது. கோவா விடுதலை அடைந்ததிலிருந்து சுமார் இருபது ஆண்டுகள் முதல்வர் பதவியை அலங்கரித்த கட்சி தான் இது. மகாராட்டிரவாதி கோமந்த கட்சி முன்பு பாசகவுடன் கூட்டணியில் இருந்தது. மேலும் RSSஇன் செல்வாக்கு மிக்க தலைவர் தனியாக பிரிந்து போட்டியிட்டதும் பாசகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதில் கோவா முன்னேற்ற கட்சி பாசகவை ஆட்சியிலிருந்து தூக்கிவிடுவது என்று களத்தில் குதித்த கட்சி.
காவி- பாசக, நீலம்-காங்கிரசு, சாம்பல்-மற்ற கட்சிகள்


ஆளுநர் பாசகவை முதலில் ஆட்சியமைக்க அழைத்து பெரும்பான்மையை 15 நாட்களுக்குள் நிருபிக்க கூறியுள்ளார். நமக்கு என்ன நடக்கும் என்று தெரியும். அதாவது குதிரை பேரம் தான்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பாசகவை ஆதரிக்காதவர்கள் காங்கிரசின் 17 உறுப்பினர்களும் கட்சி சார்பற்ற ஒரு உறுப்பினரும்.  காங்கிரசின் விசுவசித் ராணே நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்தார். பின்பு பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிம் கொடுத்தார். காங்கிரசில் இருந்தும் விலகிவிட்டார்.  தேசியவாத காங்கிரசு அவர்களின் ஒரே உறுப்பினர் கட்சி கட்டுப்பாட்டை மீறி அதாவது ஆதரத்து வாக்கு போட்டதற்காக விளக்கம் கேட்டுள்ளது

காங்கிரசு-17 ( 28.4% )
பாரதிய சனதா-13 ( 32.5%)
ஆம் ஆத்மி- 0 (6.3% )
மகாராட்டிரவாதி கோமந்த கட்சி-3 (11.3%)
கோவா முன்னேற்ற கட்சி -3 (3.5 %)
தேசிய வாத காங்கிரசு -1 (2.3% )
கட்சி சார்பற்றவர்கள்  3

திங்கள், மே 09, 2016

2016 தேர்தல் தமிழ்நாடு காங்கிரசு தலைவர் பற்றி

திராவிட இயக்க குருதி ஓடும் தற்போதைய தமிழ்நாடு காங்கிரசு தலைவரின் திறமைகளை தெரிந்து கொள்ளுங்கள்




இனி தமிழ்நாட்டில் காங்கிரசை வளர்க்க முடியாது என்றாலும் காங்கிரசை எப்படி பெரிய கட்சியாக காட்டுவது என்று தொண்டர்களுக்கும் நிருவாகிகளுக்கும் ஆலோசனை வழங்கும் காட்சி.



காங்கிரசை எப்படி பெரிய கட்சியாக காட்டினார் என்பது பற்றிய சிறப்பு பேட்டி.


திமுகவிடம் 41 தொகுதிகள் வாங்கியது குறித்து கருணாநிதி இளங்கோவனை பாராட்டல்.(திராவிட இயக்க வாரிசு என்றால் அது சோடை போகாது என்று நிருபித்ததற்காக)


திமுகவிடம் இருந்து 41 தொகுதிகள் காங்கிரசிற்கு கிடைத்ததை வைத்து குசுபுவும் விசயதரணியும் வாய் விட்டு சிரித்தல்.



இந்தியாவில் வரும் கருத்து கணிப்பு எல்லாம் டுபாக்கூர் என்று அறிந்ததால்அதிமுகவுக்கு ஆதரவாக வரும் கருத்து கணிப்புகளால் கடுப்பாகி நியூசு 7 மூலம் கருத்து கணிப்பு எடுப்பேன் என்று சொல்லும் காட்சி.


மோதிக்கு இணையாக பொய் பேசக்கூடியவர் ஊடக வெளிச்சத்தை பயன்படுத்துவர் இளங்கோவன் என்பதால் ராகுல் தன் மாதாஜியிடம் அவரை பற்றி கூறல்.


கூடிய விரைவில் டெல்லிக்கு வருவீர்கள் என்றும் அவரின் பயிற்சி தனக்கு தேவை என்றும் கூறல்.



கருத்து கணிப்பும் திமுகவும் அதிமுகவும்


கருத்து கணிப்பு அப்படின்னுட்டு இந்த நாளிதழ்களும் செய்தி தொக்காவும் அடிக்கற கூத்து இருக்குதே அதை சொல்லி மாளாது. 

தந்தி தொக்கா அதிமுகவுக்கு அடிமையா நடக்குது என்பது ஊர் அறிந்த இரகசியம். ஏன்னு சிந்தித்து பார்த்தா தொழில் என்பது தெரியவரும். ஏன்னா திமுகவுக்கு சன், கலைஞர் என்று இரு தொக்காக்கள் உள்ளன. அதிமுகவுக்கு செயா மட்டும் தான் உள்ளது. சன் எல்லோரையும் விட பலம் வாய்ந்தது. தந்தியும் திமுகவுக்கு அடிமை வேலை பார்த்தால் தொழில் சிறக்காது, அதனால் அதிமுகவுக்கு அடிமை வேலை பார்க்குது. புதிய தலைமுறை இந்த விளையாட்டில் கலந்துக்கவில்லை என்பது ஆறுதல். பச்சமுத்துவுக்கு சட்டத்துக்கு புறம்பாக\சட்டத்தை வளைத்து ஏரியில் கட்டிய  தன் கல்லூரிகள் மூலம் வரும் காசே போதும். இந்த தொக்கா வருமானம் பெரிதில்லை. அதனால புதிய தலைமுறை தப்பித்தது. (இதை எழுதிய பின்பு புதவும் கூத்தில் இணைந்துள்ளது) மேலும் தந்திக்கு தினத்தந்தி என்ற நாளிதழும் உண்டு அது தான் அதன் பெரும்பலம் அந்ந நாளிதழுக்கு அரசு விளம்பரம் வேண்டும். யார் ஆட்சிக்கு வருகிறார்களோ அவர்களுக்கு தகுந்த மாதிரி சட்டையை தினந்தந்தி போட்டுக்கொள்ளும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. 

தாது கொள்ளையன் வைகுண்டராசன் நியூசு 7 என்ற செய்தி தொலைக்காட்சியை தொடங்கினார். ஏன்னு தெரியுமா? அவரு தாது கொள்ளை வழக்கில் நீதிமன்றத்துக்கு வந்த போது செய்தியாளர்கள் நிறைய கேள்விகளை அவரிடம் கேட்டனர்  இந்த செய்தி தொக்கா ஆளுங்க அதையும் அவரையும் படம் பிடித்து தங்கள் தொக்காவில் போட்டார்கள். பல நாட்களுக்கு இது தான் எல்லா இடத்திலேயும் சிறப்பு செய்தி. 

எழுதப்படாத விதி என்னவென்றால் செய்தி நிறுவன முதலாளி ஊரை அடித்து உழையில் போட்டாலும் அதை மற்ற செய்தி நிறுவனங்கள் கண்டுக்கப்படாது என்பது தான். வெளியில் பெரிய அளவில் தெரிந்தாலும் அச்செய்திக்கு சிறப்பிடம் கொடுக்காமல் சிறிது காட்டி விட்டு மற்றதுக்கு சிறப்பிடம் கொடுத்து இதை பெரிதாக காட்டக்கூடாது என்பது. ஏன் வைகுண்டம் செய்தி தொக்கா தொடங்கினார் என்று இப்ப புரிகிறதா? வைகுண்டத்துக்கு காசு பற்றி எந்த கவலையும் இல்லை. விளம்பரமே வரவில்லையென்றாலும் அவரால் நியூசு 7 தொக்காவை நடத்தமுடியும். 

நியூசு 7 இளம் செய்தி தொக்கா, எப்படி பார்வையாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது? தந்தி காரன் அதிமுகவுக்கு ஆதரவா கருத்து கணிப்பு போடறான் அப்ப திமுவுக்கு ஆதரவா போடறது தான் சரியான வியாபார தந்திரம். நியூசு 7உம் அதைத்தான் செய்தது. இதுக்கு நம்பக்கத்தன்மையை கூட்ட பங்காளி சண்டையில் உள்ள தினமலரை கைக்குள் போட்டுக்கொண்டது. 
சென்னை புதுச்சேரி கோவை மதுரை பதிப்பு தான் நியூசு 7 உடன் ககவில் ஈடுபட்டது

தினமலர் எப்படி அதிமுகவுக்கு எதிராக என்று நினைப்பது புரிகிறது. ஒரு பங்காளி அதிமுகவுக்கு நெருக்கமாக உள்ளதால் எதிர் பங்காளிகள் அவர்களுக்கு ஆதரவானவர்களுக்கு எதிராக கருத்து கணிப்பை வெளியிட்டார்கள். கவனிக்க சென்னை புதுச்சேரி கோவை மதுரை பதிப்பு தினமலர் இன்னும் பங்காளிகள் கையில்தான் உள்ளது. சண்டை நீதிமன்றத்தில் உள்ளது. சில  தினமலர் ( சென்னை புதுச்சேரி கோவை மதுரை பதிப்பு) பதிப்புகள்  ஒரு பங்காளிகிட்டயும் மீதமுள்ள பதிப்பு மற்றொரு பங்காளி பொருப்புலேயும் உள்ளது. அது தான் தினமலர் பெயர் வந்துள்ளது. 

நியூசு 7 கருத்து கணிப்பால் அதிமுக கடுப்பாகி தன் தேர்தல் அறிக்கையில் தான் ஆட்சிக்கு வந்தால் தாது மணல் அள்ளும் வணிகத்தை அரசே ஏற்ற நடத்தும் என்று வைகுண்டத்துக்கு பெரிய குண்டை போட்டது. இப்ப வரவில்லையென்றாலும் அடுத்த தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்பது வைகுண்டத்துக்கு தெரியும். ஆப்பு உறுதி. மேலும் தற்போது அதனிடம் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் பாசகவிற்கு அதிமுக ஆதரவு தேவை. கூட்டி கழித்து பார்த்தால் வைகுண்டத்தின் அடி மடியிலேயே அதிமுக கை வைக்கிறது. மேலும் அரசு கம்பிவட வலையமைப்பில் நியூசு 7 இக்கு அதிமுக சிக்கலை ஏற்படுத்தியது. (தற்போது அதிமுக தான் ஆளுங்கட்சி என்பதை புரிந்து கொள்க)



அதிமுக தேர்தல் அறிக்கையீல் தாது மணல் பற்றி
அதனால் கலவரமடைந்த வைகுண்டம் வெள்ளம் பாதித்த சென்னையில் அதிமுகவுக்கு பெரு ஆதரவு உள்ளது என்று கருத்து கணிப்பை வெளியிட்டார்.  அவரின் நல்ல காலம் சென்னையை பற்றி அதுவரை நியூசு 7 கருத்து கணிப்பை வெளியிடாததுதான்.

வைகுண்டத்துக்கு கிலி பிடித்தபின்பு

தமிழகத்தில் கருத்து கணிப்பின் போக்கு இப்படித்தான். அதனால இந்திய அளவில் சிறப்பாக உள்ளது என்று நினைக்காதிர்கள் அங்கும் கருத்து கணிப்பு பல்லிளிக்கிறது. பொய் கருத்து கணிப்பை வைத்தே தேர்தல் காலம் முழுவதும் ஓட்டுபவர்கள் தான் அவர்கள்..

இப்ப தந்தி, நியூசு 7 உடன் புதிய தலைமுறையும் இக்கூத்தில் இணைந்துள்ளது. ஒன்றிய அளவில் காட்ட ஆங்கில தொக்கா என்டிடிவியும் இணைந்துள்ளது.

வியாழன், ஏப்ரல் 14, 2016

2016 சட்டமன்ற தேர்தல் - தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு
















படத்தை சொடுகினால் இன்னும் பெரிதாக தெரியும் எழுத்துக்களை படிக்க சிரமிருப்பின் சொடுக்கி பெரிதாக்கி படியுங்கள்.

புதன், ஏப்ரல் 13, 2016

2016 தேர்தல் காலம் என் பார்வை



தேர்தல் காலம் தொடங்கிருச்சு வைகோ பாலோட பழத்தை கொண்டு போயிட்டார். எங்கேயும் மரியாதை கிடைக்காததால் வாசனும் வைகோக்கிட்ட வந்துட்டார். பழம் கிடைக்காத ஏமாற்றத்தில் திமுக சந்திரகுமார் போன்ற தோல்களை பொறுக்க ஆரம்பித்துள்ளது.  கருப்பா இருக்கறவங்க எல்லாம் கருப்பு மகோரா (MGR) ஆகிடமுடியுமா?

                                                               --**--

நல்ல ஆதரவு இருந்தப்ப அரசியல் செய்யாமல் கருணாநிதியை பற்றி நன்கு அறிந்திருந்தும் ஏமாந்து விட்டு வைகோ இப்பத்தான் உண்மையாக அரசியல் செய்கிறார். காலம் கடந்த ஞாயிரு வணக்கம் எந்த அளவு பலன் தரும் என்று தெரியவில்லை.
                     
                                                               --**--

5 ஆண்டு ஆட்சியில் மதுவுக்கு ஆதரவாகவும் அதை எதிர்த்தவர்களை தேச விரோத சட்டத்திலும் சிறையிலடைத்த செயலலிதா வாக்குக்காக இறங்கி வந்து ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாக நடைமுறைக்கு வரும் என்று பொதுக்கூட்டதில் பம்முகிறார். திமுகவும் ஆட்சிக்கு வந்தா மதுவிலக்கு என்கிறது. இது சொல்வதை ஏற்கலாம் ஏன்னா இது எதிர்கட்சி. ஆளும் கட்சியான அதிமுகவும் சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பெண்கள் வாக்கு செய்யும் வேலை இம் இம் அதுக்கு ஆட்சியை மாற்றக்கூடிய அளவு  ஆற்றல் உள்ளது என்பதை எல்லோரும் புரிந்து உள்ளார்கள்.


                                                                  --**--

சென்னை வெள்ளம் வந்து நிருவாகம் சந்தி சிரித்ததால் செயலலிதாவின் போலியாக பல்வேறு ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட நிருவாக திறமை தெரியவந்துள்ளது. அப்ப மட்டும் மறத்தமிழன் போலி அடிமை பன்னீர் முதல்வராக இருந்திருந்தால் இன்னும் செயலலிதாவின் நிருவாக திறன் இன்மையை உணராமல் ஏமாந்து இருப்போம் ஊடகங்களும் நம்மளை இன்னும் ஏமாற்றிக்கொண்டிருக்கும். .

இப்பக்கூட நத்தம், பன்னீரு இவ்வளவு அமுக்கிட்டாங்க அதை தெரிந்த செயலலிதா நடவடிக்கை என்று இவரை காப்பாற்றவும் பலியை அவர்கள் மேல் போடவும் முயற்சி நடக்கிறது. இவருக்கு தெரியாமல் நத்தம், பன்னீரு பணத்தை அமுக்கிட்டாங்க என்பதே வடிகட்டின பொய். கேக்கறவன் கேனயனா இருந்தா கேப்பையில் நெய்வழியுதுன்னு சொல்வாங்களாம். தமிழக மக்கள் கேனயர்கள் என்று நினைச்சிக்கிட்டார்.


அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் சுயநிதிக்குழுவினர் அனைவருக்கும் இலவச மன்னிக்க விலையில்லா செல்பேசி வழங்கப்படும் என்ற அறிவிப்பு இருக்குமென நினைக்கிறேன். வேறு என்ன விலையில்லா பொருட்கள் தருவார்கள் என்று அறிய ஆர்வமாக உள்ளேன்.

                                                                   --**--

அதிமுக திமுக தேமுதிக பொதுவுடமைவாதிகள் விசிக  புத என்று எல்லோரும் சாதிக் கட்சிகளே.  பாமக மட்டும் தான் முத்திரை பெற்றுள்ளது. வேடிக்கை! சாதி சங்கம் தான் பின்னால் கட்சியாக மாறியது. பொதுவுடமைவாதிகளைப் பற்றி பொய் சொல்றேன்று நினைக்காதிங்க அக்கட்சியில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள்  யாரு விசாரிச்சு பாருங்க.


மற்ற கட்சிகள் போல் அல்லாமல் அரசு நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் வழங்கும் போது மாற்று நிதிநிலை அறிக்கை என்று பல உருப்படியான பணிகளை செய்தவர்கள் இவர்கள். இந்திய ஒன்றிய அமைச்சராக  இருந்த போதும் இக்கட்சியினர் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.


தேர்தல் நடைமுறை கோளாறுகளால் சின்னத்தை தக்கவைக்க அது பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தது, அதுக்கு வடதமிழகத்தில் (வன்னியர் பகுதிகளில்) மட்டுமே ஆதரவு உண்டு மற்ற இடங்களில் இல்லை என்பதை நாம் உணரவேண்டும். யானை போய் தான மாம்பழம் வந்திருக்கு? இந்த தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றிபெறலைன்னா அதுவும் போயிரும். மற்ற கட்சிகளும் இவர்களுடனும் மற்றவர்களுடனும்  மாறி மாறி கூட்டணி வைத்தபோதும் பாமகவிற்கு மட்டுமே கெட்ட பெயர். இதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் கட்சி தொடங்கின நேரம் சரியில்லைன்னு தோணுது.

                                                                   --**--

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி அமைச்சரவை அமையவேண்டும் என்பதே என் விருப்பம்.

தேமுதிக + மநகூ+தமாகா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு என் அடுத்த பார்வை வரும் எப்படியும் தேர்தல் முடியும் முன் ஒரு இடுகையை போடலாமுன்னு  திட்டம் வைத்துள்ளேன்.


சனி, மே 09, 2015

பிரித்தானியா தேர்தலும் இசுக்காட்லாந்து வாக்காளர் மனநிலையும்



இத்தேர்தலில் டோரிக்கள் என்று அடையாளப்படுத்தப்படும் கன்சர்வேடிவ் கட்சி எனப்படும் பழமைவாத கட்சி 331 தொகுதிகளில் வென்று அறுதிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. லேபர் கட்சி எனப்படும் தொழிலாளர் கட்சி 232 தொகுதிகளில் வென்றுள்ளது.

இசுக்காட்லாந்து தேசிய கட்சி  56 தொகுதிகளில் வென்றுள்ளது.  கடந்த பொது தேர்தலில் (2010) இக்கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

அப்புறம் தான் ஏழு மாதத்திற்கு முன்பு 2014, செப்டம்பர் மாதத்தில் இசுக்காட்லாந்து பிரிந்து தனி நாடாகலாமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பு நடந்தது.

ஐக்கிய இராச்சியத்தின் (பிரித்தானியா) வரைபடம்
பச்சை நிறத்தில் உள்ளது இங்கிலாந்து (இது தான் பெரிய பகுதி, மக்கள் தொகை அடிப்படையிலும் இது தான் மிகப்பெரியது)
வெளிர் கத்திரிப்பூ நிறத்தில் உள்ளது வேல்சு
ஆரஞ்சு நிறத்தில் உள்ளது இசுக்காட்லாந்து (பிரித்தானியா (ஐக்கிய இராச்சியத்தின் எண்ணெய் வளம் இங்கு தான் உள்ளது)
 ஒரு வகையான வெளிர் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் உள்ளது  வட அயர்லாந்து

வட அயர்லாந்து இணைந்த பின்பு பிரித்தானியா ஐக்கிய இராச்சியம் என அதிகாபூர்வமாக பெயர் மாற்றம் பெற்றது.


இத்தேர்தலில் இசுக்காட்லாந்து தேசிய கட்சியின் பெரு வெற்றியே நம்மால் கவனிக்பட வேண்டியது.

வாக்கெடுப்பில் பிரித்தானியாவிலிருந்து பிரியவேண்டாம் என்று பெரும்பான்மை மக்கள் வாக்களித்தனர், அதோடு அடுத்த பத்தாண்டுகளுக்கு இது பற்றி யாரும் பேசமாட்டார்கள் என்று அனைவரும் நினைத்தனர்\ நினைத்துக்கொண்டுள்ளனர்.

அவ்வாக்கெடுப்புக்கு பிறகே இசுக்காட்லாந்து தேசிய கட்சியில் அதிக உறுப்பினர்கள் சேர்ந்தனர். இசுக்காட்லாந்து தேசிய உணர்வை தட்டி எழுப்பி இவர்கள் பிரிய வேண்டும் என்று வாக்கெடுப்பில் கோரியதால் அவர்களுக்கு ஏற்பட்ட பலன்.

கடந்த முறை நடந்த தேர்தலில் (2010) ஏறக்குறைய 20% வாக்குகளை இசுக்காட்லாந்து பகுதியில் பெற்ற இசுக்காட்லாந்து தேசிய கட்சி இம்முறை ஏறக்குறைய 50% வாக்குகள் பெற்றுள்ளது.  கடந்த முறை 2010 தேர்தலில் இசுக்காட்லாந்தில் தொழிலாளர் கட்சி பெற்றது ஏறக்குறைய 42% வாக்குகள் இம்முறை பெற்றது 24.3% வாக்குகள்.

இசுக்காட்லாந்தின் 59 தொகுதிகளில் 56 இசுக்காட்லாந்து தேசிய கட்சிக்கு சென்றுள்ளது. இதுவரை தொழிலாளர் கட்சி பலமாக இருந்த இடம் இசுக்காட்லாந்து. கடந்த தேர்தலில் 41 தொகுதிகளில் தொழிலாளர் கட்சி வென்றது. இம்முறை இசுக்காட்லாந்தில் பெற்றது ஒன்றே ஒன்று தான்.

இங்கிலாந்து ஒரு முடிவெடுத்தது இசுக்காட்லாந்து பிரித்தானியாவில் இருந்து பிரிவினை வேண்டும் என்று கோரும் கட்சிக்கு பேராதரவு கொடுத்துள்ளது. அதுவும் ஏழு மாதத்திற்கு முன் இதற்கு தோல்விய கொடுத்த பின்பு. அதிலும் தொழிலாளர் , பழமைவாதம் ,  தாராளவாத சனநாயம் & மற்றவர்கள் என்று எல்லோரும் ஓர் அணி இசுக்காட்லாந்து தேசிய கட்சி மட்டும் எதிர் அணி.

இது தொழிலாளர் கட்சிக்கு கிடைத்த சம்மட்டி அடி. ஏனென்றால் பழமைவாத கட்சி இசுக்காட்லாந்தில் பலம் பொருந்திய கட்சி அல்ல. அதன் வேர் பலம் எல்லாம் இங்கிலாந்து தான்.

2014இல் நடந்த பிரியலாமா வேண்டாமா என்ற வாக்கெடுப்பில் பிரிய வேண்டாம் என்று 61% வாக்குகள் பதிவான எடின்பர்க் பகுதியின் நான்கு தொகுதிகளும் இம்முறை இசுக்காட்லாந்து தேசிய கட்சிக்கே. இது வியப்பான ஒன்று.  தெற்கு எடின்பர்கில் மட்டும் இயன் முர்ரே வென்று தொழிலாளர் கட்சிக்கு ஆறுதல் கொடுத்துள்ளார்.

இசுக்காட்லாந்து தேசிய கட்சியின் பெரு வெற்றி சொல்லாமல் பல செய்திகளை பிரித்தானியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் சொல்லுகிறது.  இந்தியா இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டால் நல்லது.

மற்றவை

ஐக்கிய இராச்சிய விடுதலைக் கட்சி (UKIP) 12.6% வாக்குகள் பெற்றிருந்தாலும் ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது.  இசுக்காட்லாந்து தேசிய கட்சி இசுக்காட்லாந்தில் மட்டுமே போட்டியிட்டது அதனால் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அதன் வாக்கு வீதம் 4.7 ஆனால் நிறைய தொகுதிகளை பெற்றது. ஐக்கிய இராச்சிய விடுதலைக் கட்சி எல்லா இடங்களிலும் போட்டியிட்டது அதனால் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 12.6% வாக்குகள் பெற்றாலும் குறைந்த (ஒன்று) இடங்களே கிடைத்தது. இது தேர்தல் ஆணையங்கள் குறிப்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆராய வேண்டியது. கட்சி மாநில கட்சியா என்று முடிவெடுக்கவும் பொது சின்னம் வழங்கவும் இது இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உதவும்.

கட்சி மாநில கட்சியா என்பது குறித்தும் பொது சின்னம் வழங்குவது குறித்தும் முடிவெடுத்தால் இப்போ பலன் பெறப்போவது பாமக ஆக தமிழகத்தில் இருக்கும்.  பாமகவானது அதிமுக திமுக என்று தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறி கூட்டணி வைத்தது ஏன் என்று இப்போது புரிகிறதா? கட்சிக்கு மாநில கட்சி என்ற நிலை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்பது அதில் முதன்மையானதாக இருக்கலாம்.

வட அயர்லாந்தில் பழமைவாத & தொழிலாளர் கட்சிகள் குறிப்பிடத்தக்க வாக்குகளை கூட பெறவில்லை. அவை இரண்டுமே வட அயர்லாந்தின் தலையெழுத்தை பெரிய இடத்தில் இருந்து (நடுவண் அரசு) எழுதுபவை இது தமிழ்நாட்டின் நிலையை நினைவு படுத்துகிறதா?

இசுக்காட்லாந்து தேசிய கட்சியின் சார்பில் பெய்சிலி- ரென்பிரசுய்வொயர் தெற்கு தொகுதியில் வென்ற 20 வயதுடைய மெகரி பிளாக் என்ற பெண்மணியே 350 ஆண்டு வரலாற்றில் பிரித்தானியாவின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.


சனி, டிசம்பர் 27, 2014

சம்மு காசுமீர் தேர்தல் அலசல்

2014 ஆம் ஆண்டு  சம்மு காசுமீர் சட்டமன்ற தேர்தல்.

இது சிறிது தாமதம் தான், சுட சுட நம்மால் கொடுக்க முடியாது :(. ஆனால் இன்னும் நிறைய சூடு உள்ளது. முதல்வர் யாருன்னு இன்னும் தெரியலை ஏன்னா எக்கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. மக்களின் சனநாயக கட்சி தான் ஆட்சி அமைக்கும் என்று நினைக்கிறேன் அதற்கு பாசக தவிர்த்த மற்ற கட்சிகள் ஆதரவளிக்கலாம்.

மக்களின் சனநாயக கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிக தொகுதிகளில் வென்ற கட்சியாக இருந்தாலும் இது பெற்ற வாக்கு விழுக்காடு 22.7 தான். 25 தொகுதிகளில் வென்ற பாசக பெற்ற வாக்கு விழுக்காடு 23.
 
மக்களின் சனநாயக கட்சி லடாக் பகுதியின் 4 தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. சம்மு பகுதியில் முப்பத்தேழு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் வென்றுள்ளது. மீதி எல்லா இடங்களும் காசுமீர் பள்ளத்தாக்கில் பெற்றதே.

பாசக  லடாக் பகுதியில் ஒரு இடத்தையும் மீதி எல்லா இடங்களையும் சம்மு பகுதியிலும் பெற்றது (தேர்தல் ஆணைய தளத்தில் லடாக் பகுதியில் வெற்றி பெறவில்லை என்று தெரிகிறது, நாளிதழ்களை பார்த்து இப்படி எழுதினேன்). காசுமீர் பள்ளத்தாக்கில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.  காசுமீர் பள்ளத்தாக்கை சேர்ந்த ஒரு தொகுதியில் மட்டும் பிணையை மீட்டுள்ளது மீதி எல்லா இடங்களிலும் பிணை தொகை போயிற்று. ரசௌரி மாவட்டத்தில் கலகடெ (Kalakote ) தொகுதியில் பாசகவின் முசுலிம் வேட்பாளர் தேசிய மாநாட்டு கட்சியின் இந்து வேட்பாளரை (இரு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்) தோற்கடித்தார்.

தேசிய மாநாட்டு கட்சி லடாக் பகுதியில் வெற்றி பெறவில்லை. ஆனால் மற்ற இரு பகுதிகளிலும் வென்றுள்ளது.

காங்கிரசு கட்சி லடாக் பகுதியின் 4 தொகுதிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. எல்லா பகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சி என்றால் அது இந்திரா காங்கிரசு தான்.

அதனால இக்கட்சியை தான் அனைத்து பகுதி மக்களும் ஆதரிக்கிறார்கள் என்று சொல்லலாமா?


கட்சி வெற்றி பெற்றது% வாக்குகள்மொத்த வாக்குகள்
பாரதிய சனதா கட்சி (பாசக)2523 %11,07,194
மக்களின் சனநாயக கட்சி2822.7 %10,92,203
தேசிய மாநாட்டு கட்சி1520.8 %10,00,693
காங்கிரசு1218%8,67,883
மார்க்சிய பொதுவுடைமை10.5%24,017
மக்கள் கூட்டமைப்பு21.9%93,182
மக்கள் சனநாயக முன்னனி10.7%34,886
கட்சி சாராதவர்கள்36.8%3,29,881


மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முப்தி முகமது சையது அனத்நாக் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இவர் தான் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர்.  இவர் காங்கிரசு கட்சியின் வேட்பாளரை 6,028 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

2008-இல் முதல்வராக இருந்த ஒமர் அப்துல்லா, அப்துல்லா குடும்பத்தாரின் கோட்டை என கருதப்படும் காடர்பால் தொகுதியில் போட்டியிடாமல் இம்முறை சோனவார், பீர்வாக் என்ற இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சோனவாரில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரிடம் 4,783 வாக்குகள் வேறுபாட்டில் தோற்றார். பீர்வாக் தொகுதியில் காங்கிரசு கட்சியின் வேட்பாளரை 910 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து வென்றார். காடர்பால் தொகுதியை ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியின் இசுவாக் அகமது சேக் 597 வாக்குகள் வேறுபாட்டில் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளரை தோற்கடித்து வென்றார.

சோனவாரில் ஒமர் அப்துல்லாவை வென்ற மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முகமது அசுரப் மிர் வெற்றி கொண்டாட்டத்தில் இயந்திர துப்பாக்கியால் வானை நோக்கி பல முறை சுட்டார் இது மற்ற கட்சிகளின் பலத்த கண்டனத்துக்கு உள்ளானது. இது மிக மோசமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.  இப்பவே அடித்து கூறலாம் இவரால் தொகுதி மக்களுக்கு ஒரு பயனும் விளையப்போவதில்லை என்று.  சம்மு காசுமீரில் முதல்வராக இருப்பவர் தோற்பது இதுவே முதல் முறை.

பாசக சம்மு பகுதியிலும் லடாக் பகுதியிலும் வென்றது (செய்தித்தாளில் அப்படிதான் படித்தேன் ஆனால் தேர்தல் ஆணைய தளத்தில் அப்படி இல்லை என்று தெரிகிறது). தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்களின் சனநாயகக் கட்சியும் காசுமீர் பள்ளத்தாக்கிலும் சம்மு பகுதியிலும் வென்றன.

People Democratic Party என்றால் மக்கள் சனநாயகக் கட்சி; People's Democratic Party என்றால் மக்களின் சனநாயகக் கட்சி என்பது சரி தானே.

சம்மு காசுமீரில் மட்டும் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் சட்டமன்ற தேர்தல் நடைபெறும், மற்ற மாநிலங்களுக்கும் மக்களவைக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை.

தேர்தல் 5 கட்டங்களாக நடந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் எப்பகுதியில் எக்கட்சி எத்தனை தொகுதிகளில் வென்றது என்ற விபரம். இது இன்னும் விபரமா சிலதை புரியவைக்கும்.

முதலாம் கட்டம் (15) வாக்குப்பதிவு நாள் நவம்பர் 25

சம்மு பகுதி: (6) பாசக 04
காங்கிரசு 02
காசுமீர் பகுதி: (5) காங்கிரசு 01
தேசிய மாநாடு 04
லடாக் பகுதி: (4) காங்கிரசு 03
கட்சி சாராதவர் 01

இரண்டாம் கட்டம் (18) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 02

சம்மு பகுதி: (9) பாசக 03
காங்கிரசு 03
தேசிய மாநாடு 01
மக்களின் சனநாயகம் 01
கட்சி சாராதவர் 01
காசுமீர் பகுதி: (9) காங்கிரசு 01
தேசிய மாநாடு 01
மக்களின் சனநாயகம் 03
மார்க்சிய பொதுவுடமை 01
மக்கள் கூட்டமைப்பு 02
கட்சி சாராதவர் 01

குல்காம் (Kulgam) தொகுதியில் மார்க்சிய பொதுவுடைமை வேட்பாளர் வென்றார்.

மூன்றாம் கட்டம் (16) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 09

காசுமீர் பகுதி: (16) காங்கிரசு 01
தேசிய மாநாடு 03
மக்களின் சனநாயகம் 11
மக்களின் சனநாயக முன்னனி 01

நான்காம் கட்டம் (18) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 14

சம்மு பகுதி: (2) பாசக 02
காசுமீர் பகுதி: (16) தேசிய மாநாடு 04
மக்களின் சனநாயகம் 11
காங்கிரசு 01

ஐந்தாம் கட்டம் (20) வாக்குப்பதிவு நாள் டிசம்பர் 20

சம்மு பகுதி: (20) பாசக 16
மக்களின் சனநாயகம் 02
தேசிய மாநாடு 02



முடிவுகளை காட்டும் தேர்தல் ஆணைய இணைய தளம்

ஞாயிறு, ஜூன் 01, 2014

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் 2 தொகுதிகளில் 4ம் இடம், 3இல் 3ம் இடம்

நடந்து முடிந்த 16வது மக்களவை தேர்தலில் (2014ம் ஆண்டு) மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளில் திரிணாமுல் 34 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  இரு தொகுதிகளில் 4ம் இடமும் மூன்று தொகுதிகளில் 3ம் இடமும் மூன்று தொகுதிகளில் 2ம் இடமும்  பெற்றுள்ளது. அதாவது 5 தொகுதிகளில் இது இரண்டாம் இடம் கூட பிடிக்கவில்லை.


                                                                      அசோனல்
வேட்பாளர்கட்சிவாக்குகள்
பாபுல் சுப்ரியோபாசக419983
டோலா சென்திரிணாமுல்349503
பன்சா கோபால் சௌத்திரி மார்க்சிய பொதுவுடமைவாதி255829
இந்ராணி மிசுராஇந்திரா காங்கிரசு48502

                                                                      டார்சிலிங்
வேட்பாளர்கட்சிவாக்குகள்
அலுவாலியாபாசக488257
பாய் சங் பூட்டியாதிரிணாமுல்291018
சாமன் பதக் (சுரச்)மார்க்சிய பொதுவுடமைவாதி167186
சுசய் காடக்இந்திரா காங்கிரசு90076

                                                                      ராய்கன்ஞ்
வேட்பாளர்கட்சிவாக்குகள்
சலிம்மார்க்சிய பொதுவுடமைவாதி317515
தீபா தாசுமுன்சிஇந்திரா காங்கிரசு315881
நிமு போமிக்பாசக203131
பபித்ரா ரன்சன் தாசுமுன்சி (சத்யா)திரிணாமுல்192698

                                                                      முர்சிடாபாத்து
வேட்பாளர்கட்சிவாக்குகள்
படருட்டோசு கான்மார்க்சிய பொதுவுடமைவாதி426947
அப்துல் மன்னன் உசைன்இந்திரா காங்கிரசு408494
அலி முகமதுதிரிணாமுல்289027
சுசித் குமார் கோசுபாசக101069


                                                                      உத்தர மால்டாகா
வேட்பாளர்கட்சிவாக்குகள்
மாவுசம் நூர்இந்திரா காங்கிரசு388609
காகன் முர்முமார்க்சிய பொதுவுடமைவாதி322904
சௌமித்ர ரேதிரிணாமுல்197313
சுபாசு கிருசுணா கோசுவாமிபாசக179000

                                                                       தட்சிண மால்டாகா
வேட்பாளர்கட்சிவாக்குகள்
அபு காசிம் கான் சௌத்திரிஇந்திரா காங்கிரசு380291
பிசினு பட ராய்பாசக216180
அப்துல் ஆசன்ட் கான்மார்க்சிய பொதுவுடமைவாதி209480
மோசிம் உசைன்திரிணாமுல்192632


                                                                      சாங்கிபூர்
வேட்பாளர்கட்சிவாக்குகள்
அபிசித் முகர்சிஇந்திரா காங்கிரசு378201
முசாபர் உசைன்மார்க்சிய பொதுவுடமைவாதி370040
நூருல் இசுலாம்திரிணாமுல்207455
சாம்ராட் கோசுபாசக96751
அபிசித் முகர்சி குடியரசு தலைவர் பிரணாப் முகர்சியோட மகன். பிரணாப் குடியரசு தலைவர் ஆனதும் 20012ல் நடந்த இடைத்தேர்தலில் மார்க்சிய கட்சியை 2536 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார். அத்தேர்தலில் திரிணாமுல் போட்டியிடவில்லை என்பதும் அவர் வெற்றிக்கு காரணமாகும். இப்போது திரிணாமுல் போட்டியிட்டு 2.07,455 வாக்குகள் பெற்றாலும் அதனால் மூன்றாவது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. இப்போது வாக்கு வேறுபாடு 8161.

                                                                      பகரம்பூர்
வேட்பாளர்கட்சிவாக்குகள்
அதிர் ரன்சன் சௌத்திரிஇந்திரா காங்கிரசு583549
இந்ராணில் சென்திரிணாமுல்226982
பிரமோத் முகர்சிபுரட்சிகர சோசலிசுட்டு225699
தீபசு அதிகாரிபாசக81656


தொகுதியின் எண்களை கொண்டு அத்தொகுதி எங்கு உள்ளது என்பதை அறியலாம்.

1 - DARJEELING (டார்சிலிங்)
5 - RAIGANJ (ராய்கன்ஞ்)
7 - MALDAHA UTTAR (உத்தர மால்டாகா)
8 - MALDAHA DAKSHIN (தட்சிண மால்டாகா)
26 - ASANSOL (அசோனல்)
28 - JANGIRPUR (சாங்கிபூர்)
29 - BAHARAMPUR (பகரம்பூர்)
30 - MURSHIDABAD (முர்சிடாபாத்து)

கவனித்தோமானால் மேற்கு வங்கத்தின் கழுத்து போன்ற பகுதியில் இன்னும் திரிணாமுல் பலம் பெறவில்லை என்பதை அறியலாம். காங்கிரசிற்கு ஆதரவும் அக்கழுத்து பகுதியிலேயே உள்ளது.

மாவட்டங்கள் என்று பார்த்தால் மால்டா, முர்சிதாபாத்து, உத்தர தினாக்பூர் போன்றவற்றில் திரிணாமுல் வளர்ச்சி தடைபட்டுள்ளது. டார்சிலிங் மலைப்பகுதியில் இன்னும் தாதாக்கள் இராசாங்கம் தான் என்றாலும் பிடி சிறிது தளர்ந்துள்ளது.

திங்கள், மே 26, 2014

பொதுவுடைமைவாதிகளின் மோசமான தோல்வி

இத்தேர்தலில் எல்லோரும் இந்திரா காங்கிரசின் படுதோல்வியை குறித்தே பேசுகிறார்கள் ஆனால் பொதுவுடமைவாதிகளின் (இடதுசாரிகள்) படு தோல்வியை பேசுவதில்லை. காங்கிரசின் படுதோல்வி இவர்களின் படுதோல்வியை மறைத்துவிட்டது.

இவர்கள் மேல் கடும் விமர்சனம், மன நிறைவின்மை இருந்தாலும் ஆட்சியின் குறைகளை தட்டி கேட்க இவர்கள் தேவை என்பதை மறுக்கமுடியாது. இவர்கள் மட்டுமே ஓரளவு எதிர்கட்சிக்குரிய பணிகளை செய்து வந்தனர்.  பெரும் வணிக நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டாலும் அதை அவ்வப்போது எதிர்ப்பவர்கள் இவர்கள் தான். தற்போது 10 உறுப்பினர்களை மட்டும் கொண்டுள்ள இவர்கள் திறமையாக செயல்படுவது கடினம் . இவர்களைப்பற்றிய விமர்சனத்தை தனி இடுகையாக தான் போட வேண்டும் அவ்வளவு இருக்கு, இங்க எழுதினால் இவ்விடுகையின் நோக்கம் மாறி விடும்.

இவர்கள் பலமாக உள்ளது மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே. மற்ற மாநிலங்களில் மாநில கட்சிகள் பார்த்து பிழைத்துப்போ என்று போடும் பிச்சை மட்டுமே.

மேற்கு வங்கத்தில்  34 ஆண்டுகளுக்கு  தொடர்ச்சியாக ஆண்டவர்களுக்கு மரண அடி. காங்கிரசு கூட அங்கு 4 தொகுதிகளில் வென்றுள்ளது. இவர்கள் கூட்டணி வென்ற தொகுதிகள் 2 (மார்க்சிய பொதுவுடைமைவாதிகள் இதை பெற்றனர்). பாரதிய சனதாவும் அங்கு 2 தொகுதிகளில் வென்றுள்ளது.

கேரளத்தில் மார்க்சிய பொதுவுடமைவாதிகள் வென்றது 5 தொகுதிகள், இந்திய பொதுவுடமைவாதிகள் வென்றது 1 தொகுதி. இவர்கள் ஆதரவுடன் இரு கட்சி சாரா வேட்பாளர்கள்.  இவர்கள் அணியில் இருந்து பிரிந்து சென்ற புரட்சிகர சோசலிசுட்டு 1 தொகுதியில் வென்றுள்ளது. மார்க்சிய கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பேபியையும் கொல்லத்தில் போட்டியிட்டு தோற்றுள்ளார்

திரிபுராவில் 2 தொகுதிகளையும் மார்க்சிய பொதுவுடமை வென்றுள்ளது .

மாநிலவாரியாக கட்சிகள் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை.

ஆறுதல் இந்திய அளவில் இரண்டே கால் கோடிக்கு அருகில் இக்கூட்டணி பெற்ற வாக்குகளே.

இவர்கள் பெற்ற படுதோல்வி அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் குண்டர்கள் ஆதிக்கம் செலுத்தியதும் இவர்கள் மேல் அம்மக்களுக்கு வெறுப்பு வர காரணம். ஆட்சிக்கு வரும் வரை தான் இவர்களும் ஓரளவு நல்லவர்களாக இருப்பார்கள் போல் உள்ளது.

2004ங்கில் நல்ல வெற்றியை பெற்றாலும் பின் இக்கட்சி (கூட்டணி) தேயத் தொடங்கியது. 2009லிலேயே இதன் வெற்றி வெகுவாக குறைந்தது. கட்சி தோல்விக்கான காரணத்தை ஆய்ந்து திருத்த தவறியதின் பலன் 2014ல் படு தோல்வி. 

இதில் கொடுமை என்னவென்றால் இன்னமும் தோல்விக்கான காரணத்தை ஆராய தவறுவது தான். படுதோல்விக்கு பொறுப்பேற்று பொலிட் பீரோ உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகியிருக்க வேண்டும். பொதுச்செயலாளர் உடனடியாக பதவி விலகியிருக்க வேண்டும். பழைய பொலிட்பீரோ உறுப்பினர்களை கொண்டு எவ்வாறு கட்சியை வளர்ப்பது? அவர்கள் சிந்தனை பழையதாகவே இருக்குமே.

காங்கிரசு அழிவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை இவர்கள் அழிவு நீக்கி விடுகின்றது.

இடதுசாரிகளின் கூட்டணியில் பல கட்சிகள் இருந்தாலும் அவற்றில் வலுவானதான இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசுடு) பெற்ற வாக்குகளையை இக்கூட்டணி பெற்றதாக கொள்ளலாம். இவர்களே கூட்டணிக்கு எல்லாம் மற்றவர்கள் சிறு உதவி அவ்வளவே.  அதனால் அவர்கள் பெற்ற வாக்கு விழுக்காட்டையே இங்கு குறித்துள்ளேன்.

மேற்கு வங்காளம்

கட்சி   பெற்ற வாக்குகள் % 
திரிணாமுல்   39.3
மார்க்சியம்   22.7
பாசக   16.8
இ. காங்கிரசு   9.6

கேரளம்

கட்சி
  பெற்ற வாக்குகள் % 
இ. காங்கிரசு   31.6
மார்க்சியம்   21.6
பாசக   10.3

திரிபுரா
 
கட்சி
  பெற்ற வாக்குகள் % 
மார்க்சியம்   64.0
இ. காங்கிரசு   15.2
திரிணாமுல்   9.6
பாசக   5.7


புதன், ஏப்ரல் 09, 2014

தேர்தல் கருத்து கணிப்பு


இந்த தேர்தலில் பலவிதமாக கருத்து கணிப்புகள் வந்தாலும் அனைத்தையும் புதினமாக பார்க்கவேண்டுமே தவிர உண்மை என்று நம்பினால் அது உங்கள் தவறு என்று தான் சொல்ல வேண்டும். தமிழக ஊடகங்களின் கருத்த கணிப்பு இன்னும் நகைச்சுவையானது. நக்கீரன் கருத்து கணிப்பு ஜூனியர் விகடன் கருத்து கணிப்பு என்று ஆளாளுக்கு முடிவு எப்படி வர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்களோ அது போல் கருத்து கணிப்பை எழுதி  தங்கள் இதழின் பக்கத்தை நிரப்புகிறார்கள். பச்சமுத்துவின் புதிய தலைமுறை தொலைக்காட்சி பாசக கூட்டணி தான் இந்திய அளவில் வெல்லும் என்றும் தமிழகத்தில் மோடி அலை எதிர்பார்க்காத விதம் அடிப்பதாகவும் அதனால் பாசக கூட்டணி நிறைய இடங்களில் அதாவது 15க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்றும் சொல்லுவார்கள். வேற வழி.



நம்ம பதிவுலகில் நிறைய பேர் அரசியல் சார்பு உடையவர்கள். ஆனா இத்தேர்தலில் பாசகவுக்கு பெரும் வாக்கு வங்கி உருவாகி விட்டது என்று பாசக ஆதரவாளர்கள் நம்மை நம்ப சொல்கிறார்கள். இதை இல கணேசன், வானதி சீனிவாசன், பொன் இராதாகிருட்டிணன், தமிழிசை போன்றோரே நம்ப மாட்டார்கள். ஆனா பாமகவையும் தேமுதிகவையும் தன் கூட்டணியில் சேர்த்ததை பாராட்டத்தான் வேண்டும். இதுக்கு அவங்க பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா.

அதிமுகவின் வாக்கு வங்கி 35%க்கு மேல் கிடையாது (புரட்சி தலைவர் காலத்திலேயே அதுக்கு மேல போனதில்லை என்பதுல புகழ் பெற்ற பதிவரின் கூற்று). தேமுதிக அதில் கைவைக்கும். அப்ப அது குறையும். பொதுவுடமைவாதிகளுக்கு 2~3 % வாக்கு மட்டும் இருந்தாலும் அதை இழந்தது மாபெரும் தவறு. மின் கட்டண உயர்வு, பேருந்து கட்டண உயர்வு போன்றவை அதிமுகவை எந்த அளவு பாதிக்கும் என்று தெரியவில்லை. இன்னும் பெருமளவில் மின்வெட்டு உள்ளது அதன் தாக்கம் அதிமுகவிற்கு இருக்கும். தொழில் நகரங்களில் மின் வெட்டு தேர்தலில் பெரும் பங்கு வகிக்கும். அம்மா உணவகம், அம்மா தண்ணி (பாட்டில் குடிநீர்) போன்றவை எந்த அளவு பலன் கொடுக்கும் என்று தெரியவில்லை. அம்மாவின் சாதனைகள் என்ற பரப்புரைக்கு இது உதவும் அதுக்கு மேல் இதற்கு பலன் இல்லை என்பதே என் கணிப்பு. அம்மா தண்ணி என்றால் அரசே சாராயம் விற்பதை குறிக்கும் என்றாலும் அதுக்கு அம்மா பேர் வைக்காமல் அம்மாவிற்கு துரோகம் விளைவித்து விட்டார்கள்.

திமுகவின் வாக்கு வங்கி மிக அதிகளவாக 26% தான் இருக்கும் என்றாலும் அழகிரியினால் குறிப்பாக தென் மாவட்டங்களில் இன்னும் குறைய வாய்ப்புண்டு, எவ்வளவு என்பது கேள்விக்குறி. கூட்டணி கட்சிகளால் வாக்கு 3% அதிகமாக வாய்ப்புள்ளது. இசுலாமிய கட்சிகளால் அதற்கு என்ன பயன் என்றால் அதை விட்டு சிறு அளவில் இசுலாமிய மக்கள் விலகிச்செல்லமாட்டார்கள். அதனால் இசுலாமிய கட்சிகளால் திமுகவிற்கு பெரும் பயன் இல்லை எனலாம். விடுதலைச்சிறுத்தைகளாலும் புதிய தமிழகத்தினாலும் அதற்கு தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கு குறிப்பிடத்தக்க அளவு கிடைக்கும்.

அதிமுகவிற்கு சிறிதளவு இசுலாமியர்களின் வாக்கும் பெருமளவு தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கும் கிடைக்கும். எல்லாம் இரட்டை இலை செய்யும் மாயம்.

  • திமுக காங்கிரசு பாசக என்று அனைவரும் விரும்பிய தேமுதிகவுக்கு தமிழகம் முழுவதும் 8-10% வாக்கு வங்கி உண்டு. இவருக்கும் தாழ்த்தப்பட்டவர்களின் வாக்கு கிடைக்கும். அதிமுகவின் வாக்கு வங்கி இவர்களால் கணிசமாக குறையும்.
  • பாமகவுக்கு வடமாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு உண்டு தேமுதிக அதை இப்ப ஆட்டைய போட வாய்பில்லாததால் பாமகவின் வாக்கு வங்கி பாதிக்கப்படாது.
  • மதிமுகவுக்கு தமிழகம் முழுவதும் சராசரியா 5-6% வாக்கு உண்டு. அவங்க பாசகவின் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு செலுத்த மாட்டார்கள் என்பது உடன்பிறப்புகளின் ஆசையாக வேண்டுமானால் இருக்கலாம்.
  • அது போலவே பாசகவின் பார்ப்பனர்கள் பாசக போட்டியிடாத இடத்தில் அதிமுகவிற்கு வாக்கு செலுத்துவார்கள் என்றும் நம்பிக்கை உள்ளது, 50% பாசக பாப்சு இவ்வாறு நடக்க வாய்ப்பு உள்ளது. பாசகவுக்கு கன்னியாகுமரியில் மட்டும் நல்ல வாக்கு வங்கி உள்ளது, 2011 சட்டமன்ற தேர்தலில் மாநில அளவில் பாசக 2.22% வாக்கு வாங்கி இருக்கு, இப்ப அதிகமாக வாங்கும் என்பது உறுதி. 
  • மேற்கு மாவட்டங்களில் சில தொகுதிகளில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கு சிறு செல்வாக்கு உண்டு. கொங்கு கட்சியில் பெரும்பாலானவர்கள் அதிமுக அனுதாபிகள். இதனாலும் அதிமுகவிற்கு சறுக்கல் தான்.
  • மோடி அலை என்பது பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிதளவு உள்ளது அதனால் இக்கூட்டணிக்கு கட்சி சாராதவர்களின் வாக்கு கணிசமாக கிடைக்கலாம்.
  • பாமகவுக்கும் தேமுதிகவுக்கும் ஆகாது அதனால தேமுதிககாரங்க பாமகவுக்கும் பாமககாரங்க தேமுதிகவிற்கும் வாக்கு செலுத்த மாட்டார்கள் என்பது உண்மையல்ல. சில இடங்களில் இது நடக்க வாய்ப்புண்டு. ஆனால் எல்லா (மிகப்பெரும்பாலான) இடங்களிலும் இது நடக்காது. 
  • பாசகவுக்கு கன்னியாகுமரி நம்பிக்கை தரும் தொகுதி மற்ற இடங்களில் துளியும் வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். பாசகவுக்கு ஒதுக்கப்பட்ட வேலூரில்  புதிய நீதிக்கட்சியின் சண்முகம் வேட்பாளர். பாசகவின் சின்னத்தில் இவர் போட்டியிடுகிறார். இறுதி வரை இவர் களத்திலேயே இல்லை ஆனால் பாசகவின் தொகுதியை பெற்றுவிட்டார். இதுவல்லவோ அரசியல். 
  • பாசக கூட்டணியில் தேமுதிக 14 இடங்களிலும், பாமக 8 இடங்களிலும், பாசக 8 இடங்களிலும், மதிமுக 7 இடங்களிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியும், பச்சமுத்துவும் தலா ஒரு இடத்தில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இப்ப நீலகிரி போச்சு, வேலூரை சண்முகத்துக்கு கொடுத்தாச்சு இறுதியாக பாசக 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எட்டு தொகுதி வேணுமுன்னு என்னா அலப்பறை.

ஆம் ஆத்மி கட்சிக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தொகுதிகளில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்களால் நல்ல வாக்கு வங்கி உள்ளது (கட்சிக்கு என்பதை விட அந்த வேட்பாளர்களுக்கு என்பது பொருத்தம்) புது வாக்காளர்களில் கணிசமானவர்கள் இதற்கு வாக்கு செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். டெல்லி சட்டமன்றத்தில் பெரு வெற்றி பெற்றதும் ஊடகங்களில் அதிக அளவு பேசப்பட்டதும் இதற்கு கை கொடுக்கலாம். இவர்களால் எந்த அளவு பாதிப்பு இருக்கும் என்பது தெரியவில்லை. இவர்கள் தமிழகத்தில் வென்றால் அது கன்னியாகுமரியாக மட்டுமே இருக்கும், அதுவும் சுலபம் இல்லை.

காங்கிரசிற்கு கன்னியாகுமரி தொகுதியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. அது வெற்றி பெறும் அளவுக்கு உதவுமா என்பது ஐயமே. அங்கு முன்பணம் காப்பாற்றப்படும் என்பது உறுதி.

ஆத்தாவின் நாற்பதும் நமக்கே என்பது வெற்று கோசம் என்பது ஆத்தாவிற்கு இப்போ தெள்ளத் தெளிவாக புரிந்திருக்கும். உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப இரணகளம் ஆக்கிட்டாங்களே.

இந்த மும்முனைப்போட்டியில் போட்டி கடுமையாக இருக்கும். குறைந்த வாக்கு வேறுபாட்டிலேயே வெற்றி இருக்கும். அதிமுக அளவிற்கு திமுக வெற்றி பெறும் என்பது என் கணிப்பு. பாசக கூட்டணியும் வெற்றி பெறுவார்கள் ஆனால் எத்தனை இடத்தில் என்று தெரியவில்லை. இது தொகுதியில் அவர்கள் எவ்வளவு பலமாக உள்ளார்கள் என்பதை பொறுத்தது. கூட்டணிக் கட்சிக்கும் குறிப்பிட்ட பங்கு உண்டு.

கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே உண்மையான ஐம்முனைப்போட்டி உள்ளது.

சவுக்கு தன் இணையத்தில் ( http://savukku.in/5527 )மார்ச் 24 அன்று அதிமுக 18ம் பாசக கூட்டணி 15ம் திமுக கூட்டணி 7ம் பெறும் என்று எழுதி  இருந்தது. அது வியப்பாக தான் இருந்தது. சவுக்கு கட்சி சார்பில்லாமல் செயல் படக்கூடியது என்பதால் அது கருத்துகணிப்பை வாங்கிய மூலம் கொடுத்ததை விருப்பு வெறுப்பில்லாமல் அப்படியே போட்டுள்ளது.

அரசியலில் எப்போ எது நடக்கும் என்று சொல்லமுடியாது. தேர்தல் சமயத்தில் சொல்லவே முடியாது. அரசியலில் அதுவும் தேர்தல் சமயத்தில் ஒரு நாள் போதும் நிலைமையை தலைகீழாக மாற்ற.

இப்ப நீலகரியில் பாசக வேட்பாளர் வேட்பு மனு தள்ளுபடி. இன்னும் என்னவெல்லாம் கூத்து நடக்கப்போகுதோ.  அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாம் வதைபடப்போவதால் இப்போ நடக்கும் கூத்தை நாம இரசிப்போம்.

தகுதியானவர்களுக்கு அவர்களின் வெற்றி வாய்ப்பை பார்க்காமல் வாக்களிப்போம். முதல் மாற்றம் நம்மிடம் தொடங்கட்டும். இப்படி பலர் சிந்தித்தால் அது மாற்றத்தை கொண்டு வரும்.

புதன், ஏப்ரல் 02, 2014

வாக்காளர்கள் விபரம்.

இந்த 16வது மக்களவைத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 814,591,184. இந்திய கணக்கில் 81,45,91,184. புதுச்சேரியில் அதிக பெண் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் அடிப்படையில் பெரிய மக்களவை தொகுதி தெலுங்கானாவின் மல்காச்கிரி (ஐதராபாத்தின் புறநகர்). அட்டவணையை பார்த்தீர்கள் என்றால் விளக்கமாகப் புரியும்.

எத்தனை வாக்காளர்கள் மாநில \ ஒன்றியப் பிரதேச வாரியாக உள்ளார்கள். எத்தனை விழுக்காட்டினர் வாக்காளர் நிழற்பட அட்டை வாங்கியுள்ளனர் என்பதன் அட்டவணை.
மாநிலம் \ ஒன்றியப்பிரதேசம் வாக்காளர்கள் மொத்த வாக்காளர்களில் இவர்களின் விழுக்காடு நிழற்பட அட்டை உடைய வாக்காளர்கள் விழுக்காட்டில்
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 257,856 0.032% 98.54%
ஆந்திரப் பிரதேசம் 62,385,949 7.659% 100.00%
அருணாச்சலப் பிரதேசம் 753,216 0.092% 97.60%
அஸ்சாம் 18,723,032 2.298% 0.00%
பீகார் 62,108,447 7.624% 90.60%
சண்டிகார் 580,700 0.071% 99.95%
சத்தீசுகர் 17,521,563 2.151% 95.67%
தாத்ரா & நகர் அவேலி 188,783 0.023% 99.99%
தமன் & தியூ 102,260 0.013% 96.01%
கோவா 1,043,304 0.128% 98.66%
குசராத் 39,871,571 4.895% 99.96%
அரியானா 15,594,427 1.914% 100.00%
இமாச்சலப் பிரதேசம் 4,674,187 0.574% 100.00%
சம்மு & காசுமீர் 6,933,118 0.851% 86.86%
ஜார்க்கண்ட் 19,948,683 2.449% 99.55%
கருநாடகம் 44,694,658 5.487% 99.23%
கேரளம் 23,792,270 2.921% 2.921%
இலட்ச தீவு 47,972 0.006% 100.00%
மத்தியப் பிரதேசம் 47,544,647 5.837% 100.00%
மராட்டியம் 78,966,642 9.694% 91.60%
மணிப்பூர் 1,739,005 0.213% 99.62%
மேகாலயா 1,553,028 0.191% 100.00%
மிசோரம் 696,448 0.085% 100.00%
நாகாலாந்து 1,174,663 0.144% 0.00%
டெல்லி 12,060,493 1.481% 100.00%
ஒடிசா 28,880,803 3.545% 97.33%
புதுச்சேரி 885,458 0.109% 100.00%
பஞ்சாப் 19,207,230 2.358% 100.00%
இராச்சசுத்தான் 42,559,543 5.225% 99.74%
சிக்கிம் 362,326 0.044% 100.00%
தமிழ் நாடு 53,752,682 6.599% 100.00%
திரிபுரா 2,379,541 0.292% 100.00%
உத்திரப் பிரதேசம் 134,351,297 16.493% 99.92%
உத்திரா கண்டம் 6,786,394 0.833% 100.00%
மேற்கு வங்காளம் 62,468,988 7.669% 100.00%
மொத்தம் 814,591,184 100.000% 95.64%

தமிழ்நாட்டில் எல்லோருக்கும் வாக்காளர் நிழற்பட அட்டை கொடுத்துட்டாங்களா?
---------------------------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு மாநிலத்திலும் \ ஒன்றியப் பிரதேசங்களிலும் எத்தனை ஆண்கள், பெண்கள் வாக்காளர்கள் உள்ளனர் என்பதன் அட்டவணை.
மாநிலம் \ ஒன்றியப்பிரதேசம் ஆண்கள் பெண்கள் மற்றவர் மொத்தம்
அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 136,356 121,500 0 257,856
ஆந்திரப் பிரதேசம் 31,359,303 31,022,225 4,421 62,385,949
அருணாச்சலப் பிரதேசம் 375,927 377,289 0 753,216
அஸ்சாம் 9,694,654 9,028,378 0 18,723,032
பீகார் 33,098,022 29,008,544 1,881 62,108,447
சண்டிகார் 315,336 265,364 0 580,700
சத்தீசுகர் 8,882,939 8,638,607 17 17,521,563
தாத்ரா & நகர் அவேலி 101,262 87,521 0 188,783
தமன் & தியூ 50,595 51,665 0 102,260
கோவா 520,264 523,040 0 1,043,304
குசராத் 20,864,446 19,006,837 288 39,871,571
அரியானா 8,442,220 7,152,207 0 15,594,427
இமாச்சலப் பிரதேசம் 2,390,117 2,284,068 2 4,674,187
சம்மு & காசுமீர் 3,657,764 3,275,354 0 6,933,118
ஜார்க்கண்ட் 10,508,420 9,440,237 26 19,948,683
கருநாடகம் 22,800,918 21,885,287 8,453 44,694,658
கேரளம் 11,442,927 12,349,343 0 23,792,270
இலட்ச தீவு 24,216 23,756 0 47,972
மத்தியப் பிரதேசம் 24,959,925 22,583,669 1,053 47,544,647
மராட்டியம் 41,841,934 37,124,438 270 78,966,642
மணிப்பூர் 852,953 886,052 0 1,739,005
மேகாலயா 769,711 783,317 0 1,553,028
மிசோரம் 341,934 354,514 0 696,448
நாகாலாந்து 594,572 580,091 0 1,174,663
டெல்லி 6,684,476 5,375,379 638 12,060,493
ஒடிசா 15,038,356 13,841,339 1,108 28,880,803
புதுச்சேரி 424,958 460,488 12 885,458
பஞ்சாப் 10,112,897 9,094,333 0 19,207,230
இராச்சசுத்தான் 22,406,058 20,153,464 21 42,559,543
சிக்கிம் 186,826 175,500 0 362,326
தமிழ்நாடு 26,893,009 26,856,677 2,996 53,752,682
திரிபுரா 1,212,509 1,167,032 0 2,379,541
உத்திரப் பிரதேசம் 73,613,039 60,731,628 6,630 134,351,297
உத்திரா கண்டம் 3,562,721 3,223,661 12 6,786,394
மேற்கு வங்காளம் 32,489,949 29,978,526 513 62,468,988
மொத்தம் 426,651,513 387,911,330 28,341 814,591,184

சண்டிகர், கேரளம், கோவா போன்றவற்றில் ஒரு வாக்காளர் கூட மற்றவர்கள் இல்லை என்பது பெரும் வியப்புக்குரியது.

பெண்கள் கேரளாவில் அதிகம்.பெண் வாக்காளர்களும் அதிகம். ஆனால் புதுச்சேரியில் அதிக பெண்கள் உண்டு என்பது தெரியாது. மலையாள தேசத்தில் உள்ள மாஹேல அதிக பெண்கள் இருந்து மொத்த புதுச்சேரி கணக்க அதிகப்படுத்திட்டாங்களோ..

அதிக பெண் வாக்காளர்கள் உள்ள மாநிலங்கள் \ ஒன்றியப் பிரதேசங்கள் அட்டவணை.
மாநிலம் \ ஒன்றியப்பிரதேசம் ஆண்கள் எண்ணிக்கை பெண்கள் எண்ணிக்கை ஆண்கள் விழுக்காட்டில் (%) பெண்கள் விழுக்காட்டில் (%)
புதுச்சேரி 424,958 460,488 48.0% 52.0%
கேரளம் 11,442,927 12,349,343 48.1% 51.9%
மணிப்பூர் 852,953 886,052 49.0% 51.0%
மிசோரம் 341,934 354,514 49.1% 50.9%
தமன் மற்றும் தியூ 50,595 51,665 49.5% 50.5%
மேகாலயா 769,711 783,317 49.6% 50.4%
கோவா 520,264 523,040 49.9% 50.1%
அருணாச்சலப் பிரதேசம் 375,927 377,289 49.9% 50.1%


காசியாபாத் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் டெல்லி முதல்வர் ஏகே49 குடியிருந்த இடமில்ல?. உத்திரப்பிரதேசத்துக்கு சேர்ந்தது என்றாலும் டெல்லியை சேர்ந்தது என்று சொல்லலாம். (தலைநகருக்கு உட்பட்ட பகுதி)
வாக்காளர்கள் அடிப்படையில் முதல் ஐந்து பெரிய மக்களவை தொகுதிகள்
எண் மாநிலம் மக்களவை தொகுதி மொத்த வாக்காளர்கள்
1 ஆந்திரப் பிரதேசம் (ஐதராபாத்தின் புறநகர், தெலுங்கானா) மல்காச்கிரி 29,53,915
2 உத்திரப் பிரதேசம்(ஆனா டெல்லிக்கு சேர்ந்தது என்று சொல்வது தான் பொருத்தம்) காசியாபாத் 22,63,961
3 கருநாடகம் வடக்கு பெங்களூரு 22,29,063
4 உத்திரப் பிரதேசம் உன்னாவ் 21,10,388
5 டெல்லி வட மேற்கு டெல்லி20,93,922

வாக்காளர்கள் அடிப்படையில் ஐந்து சிறிய மக்களவை தொகுதிகள்
எண் மாநிலம் \ ஒன்றியப்பிரதேசம் மக்களவை தொகுதி மொத்த வாக்காளர்கள்
1 இலட்ச தீவு இலட்ச தீவு 47,972
2 தமன் மற்றும் தியூ தமன் மற்றும் தியூ 1,02,260
3 சம்மு காசுமீர் லடாக் 1,59,949
4 தாத்ரா & நகர் அவேலி தாத்ரா & நகர் அவேலி 1,88,783
5 அந்தமான் & நிக்கோபார் தீவுகள் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் 2,57,856



தரவு: இந்திய தேர்தல் ஆணையம் (பெப்ரவரி 14, 2014 வரை உள்ள தகவல்.

குறிப்பு: அனைத்து தகவல்களும் என்டிடிவியின் இணையதளத்தில் இருந்து எடுத்தது.