உத்தரப் பிரதேசம்
இதில் அனைவராலும் கவனிக்கப்படுவது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைத் தான். 81 மக்களவை உறுப்பினர்களை அனுப்பும் பெரிய மாநிலம். 2014 மக்களவை தேர்தலில் இங்கு பாசக 71 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான அப்னா தளம் (2) இடங்களையும் பெற்றது, தொகுதிகளில் வென்றது. இங்கு பெற்ற 71 தொகுதிகளால் தான் பாசக கூட்டணி கட்சிகள் இல்லாமலே பெரும்பான்மை பெற்றது. 282 தொகுதிகளில் பாசக வென்றது. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகளில் வென்றால் போதும். இதிலிருந்து இது பாசகவிற்கு எத்தனை சிறப்புத்துவம் வாய்ந்த மாநில தேர்தல் என்பது புரியும். கூட்டணி கட்சிகளோடு சேர்த்து 336 தொகுதிகள். செல்லாக்காசு போன்ற நாட்டு மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை பயமில்லாமல் எடுக்கிறது.
பாசக பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக |
மாயாவதி வரமுடியாது என்றே பல வட இந்திய நாளேடுகளும் காட்சி ஊடகங்களும் கூறின. அதே போன்று 19 தொகுதிகளைத்தான் பெற்றுள்ளார். இசுலாமியர்களை அளவுக்கு அதிகமாக கூப்பிட்டது, ஐசு வைத்தது, மற்றவர்களுக்கு வெறுப்பை கொடுத்து விட்டததோ?
காங்கிரசு தலித் முசுலிம் வாக்கு வங்கியை வைத்திருந்தது. தலித் மாயாவதிக்கு போய் விட்டது. முசுலிம்களை இழுக்க முடியும். மாயாவதியுடன் காங்கிரசு கூட்டு வைத்திருந்தால் தலித் முசுலிம் வாக்குகள் இக்கூட்டணிக்கு அதிகம் கிடைத்திருக்கும். பாசக 39.7% வாக்குகள் வாங்கி 312 தொகுதிகளை பெற்றது பசக 22.8% வாக்குகள் பெற்று 19 தொகுதிகளைப் பெற்றது. காங்கிரசு இதனுடன் இணைந்திருந்தால் இக்கூட்டணி குறைந்தது 30% வாக்குகளை பெற்றிருக்கும் மேலும் இது பாசகவின் வாக்கு % குறைத்திருக்கும் என்பது என் கணிப்பு.
பச்சை சமாச்வாதி+, நீலம் பசக, காவி பாசக+ |
ஏழ்மையான பகுதியான புதல்காண்டம் பகுதி முழுவதும் பாசக கைப்பற்றியது கவனிக்கத்தக்கது. வடக்கு பகுதியில் முசுலிம்கள் அதிகம் உள்ள மத கலவரம் நிகழ்ந்த தாத்ரி போன்றவை நிறைந்த அப் பகுதியில் பாசக 73% வெற்றி பெற்றுள்ளது. எது எப்படி இருந்தாலும் பாசகவின் பெரு வெற்றி பல காலம் பேசப்படக்கூடியது.
ஏழு கட்டங்களில் வாக்குப்பதிவு நடந்தது. |
பாரதிய சனதா - 312 ( 39.2% )
சமாச்வாதி+காங்கிரசு - 54 (47+7) (21.8%+6.2)
பகுசன் சமாச் - 19 ( 22.2%)
அப்னா தளம் (சோனேவால்)-9 (1%)
சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி -4 ( 0.7%)
ராசுட்டிரிய லோக்தளம் - 1 ( 1.8%)
நிர்பல் இந்தியன் சோகித் அமாரா ஆம் தளம் - 1 (0.6%)
கட்சி சார்பற்றவர்கள் - 3
(பம்பர் பரிசு மாநிலம்)
அடுத்த பெரிய மாநிலம் பஞ்சாப்,
காவி அகாலி+, கத்தரிப்பூ- ஆம் ஆத்மி+, நீலம்-காங்கிரசு |
இங்கு அகாலி தளம் - பாசக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அகாலி முதல்வர் பாதல் குடும்பத்து மேலும், அகாலிகள் மேலும் கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன. நிதி அமைச்சர் அருண் செயிட் லீ பஞ்சாபிலுள்ள நவசோத் சிங் சித்து வெற்றி பெற்ற அகாலி-பாசக பலமான இருந்த அமிர்தசரசு தொகுதியில் மோதி அலையிலும் தோற்றவர் தான்.
காங்கிரசு பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக |
ஆம் ஆத்மி கட்சி இல்லையென்றால் அதிக சுவாரசியம் பஞ்சாப் தேர்தலில் இருக்காது. இப்ப காங்கிரசு - அகாலி தளம்- பாசக - ஆம் ஆத்மி என்று மும்முனைப் போட்டி உள்ளது. ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் அல்லது தொங்கு சட்டமன்றம் வரும் என்றார்கள் இப்போது காங்கிரசு பெரு வெற்றி பெற்றுள்ளது ஆம் ஆத்மி 20 மட்டுமே பெற்றுள்ளது. 20இக்கும் மேலான தொகுதிகளில் வைப்புத்தொகையை இழந்துள்ளது. அகாலி-பாசக கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டாலும் வாக்கு % அடிப்படையில் அது இரண்டாவது இடத்தில் உள்ளது. மால்வா பகுதியில் தான் ஆம் ஆத்மிக்கு அதிக செல்வாக்கு என்றார்கள் அங்கு தான் அதிக தொகுதிகளை பெற்றுள்ளது. மகசா பகுதியில் வெல்பவரே ஆட்சியமைக்க முடியும் என்றார்கள் அது போலவே அங்கு காங்கிரசு வென்றுள்ளது. ஆம் ஆத்மி அங்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. 2014 மக்களவை தேர்தலில் பாட்டியாலா, பரித்தாகோட், பாட்டாஃகரப் சாகிப், சங்குரூர் ஆகிய நான்கு மக்களவைத் தொகுதிகளில் ஆஆக வென்றிருந்தது. பாட்டியாலா மக்களவை தொகுதியில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இப்போது தோற்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 5 தொகுதிகளில் வென்றிருந்தது. பரித்தாகோட் மக்களவை தொகுதியில் 9 இல் 3சட்டமன்ற தொகுதிகளிலும் மட்டும் இப்போது வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 8 தொகுதிகளில் வென்றிருந்தது. பாட்டாஃகரப் சாகிப் மக்களவை தொகுதியில் 9 இல் 1 சட்டமன்ற தொகுதிகளிலும் மட்டும் இப்போது வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 6 தொகுதிகளில் வென்றிருந்தது. சங்குரூர் மக்களவை தொகுதியில் 9 இல் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் மட்டும் இப்போது வென்றுள்ளது. 2014 ஆம் ஆண்டு 9 இல் 7 தொகுதிகளில் வென்றிருந்தது. இந்த நான்கு தொகுதிகளும் மால்வா பகுதியில் உள்ளன. ஆஆக இக்கு இத் தேர்தல் தோல்வி. 2014இல் 24% வாக்குகளை பெற்றிருந்த இக்கட்சி இப்போது 23.7% தான் பெற்றுள்ளது. உட்கட்சி பூசல் மாநில தலைமை இல்லாதது பெரும் தொல்வியை இதற்கு கொடுத்துள்ளது. தன்னார்வத் தொண்டர்கள் நிரம்பிய இக்கட்சியை அரவிந்து கெச்ரிவால் தில்லியில் இருந்து இயக்க முற்பட்டது போணியாகவில்லை இது தோற்றதே நல்லது இப்போதாவது கெச்ரிவாலுக்கு அறிவு வருதான்னு பார்ப்போம். இது சீக்கியர்களிடம் தான் அதிக ஆதரவை பெற்றிருந்தது. காங்கிரசு 40 ஊர்ப்புற தொகுதிகளில் வென்றுள்ளது அதாவது அங்கு பெரிய நகரங்கள் இல்லை. அதில் 30இல் ஆஆக மூன்றாவதாக வந்துள்ளது. டரன் டரன் மாவட்டமே அதிக சீக்கியர்களை கொண்டது அதில் உள்ள நான்கு தொகுதிகளையும் காங்கிரசு அள்ளிவிட்டது, அங்கும் ஆஆக மூன்றாவது இடம் தான். லோக் இன்சாப் கட்சி ஆஆக துணையுடன் போட்டி போட்டது அதனால் தான் ஆம் ஆத்மி பஞ்சாபில் 22 இடங்களை பெற்றதாக செய்தி இதழ்களில் போடுவார்கள்.
காங்கிரசு - 77 ( 38.5% )
அகாலிதளம்-பாசக - 18 (15+3) ( 25.2%+5.4%)
ஆம் ஆத்மி - 20 ( 23.7%)
லோக் இன்சாப் கட்சி - 2 ( 1.2 %)
உத்தராகண்டம்
காவி-பாசக, நீலம் - காங்கிரசு |
உத்தராகண்டத்தை பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. காங்கிரசு - பாசக என இரு தேர்வு தான் மக்களுக்கு உள்ளது. இருந்தாலும் இவ்வளவு பெரிய வெற்றி யாரும் எதிர்பார்க்காதது.
பாசக பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக |
இமாச்சலப் பிரதேசதை ஒட்டியுள்ள எல்லைப் புறத்திலும் நேபாள எல்லைப் புறத்திதலும் மட்டும் காங்கிரசு வென்றுள்ளது. நிறைய காங்கிரசு காரர்கள் பாசகவுக்கு தாவி அந்த கட்சி சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதுவும் காங்கிரசின் மரண தோல்விக்கு காரணம் எனலாம்.
ஒரு சிலர் கட்சி மாறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது ஆனால் நிறைய பெருந்தலைகள் மாறியது கட்சி தொண்டர்களுக்கு சோர்வை கொடுக்கும்.
பாசக வேட்பாளர்களாக போட்டியிட்ட 14 முன்னாள் காங்கிரசுகாரர்களில் 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர். முடிந்த 3-வது சட்டமன்றத்தின் தொடக்கத்தில் ஓர் ஆண்டு வரை முதல்வராக இருந்த விசய் பகுகுணா பாசவுக்கு மாறி தன் பையனுக்கு தான் போட்டியிட்ட தொகுதியையே வாங்கிவிட்டார். உத்தராகண்டத்தில் காங்கிரசின் தலித் முகமாக இருந்த மூத்த தலைவர் யசுபால் ஆரியா தனக்கும் தன் மகன் சஞ்சீவ் ஆரியாவுக்கும் பாசகவில் தொகுதிகளை பெற்றார் (பேச்பூர், நைனிடால்). இது பழைய உத்தரப் பிரதேசம் என்பதை மறக்கக் கூடாது. ஆனாலும் இங்கு சமாச்வாதி கட்சி 2% வாக்கு வாங்கும் அளவில் கூட இல்லை. பல இந்து புண்ணிய தலங்கள் அதாவது கேதர்நாத் ரிசிகேசு பத்ரிநாத் அரித்துவார் கங்கோத்திரி யமுனோத்திரி போன்றவை தான் இங்குள்ளன உத்தரப் பிரதேச காத்து இங்கும் பலமாக அடித்துள்ளது போலும்.
பாசக பெருவெற்றி பெற்றாலும் அது கேதார்நாத்தில் நான்காவது இடமே பிடித்தது. மூன்றாவது சட்டமன்றத்தின் வெளியேரும் முதல்வர் அரிசு ரவாட் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் ( அரித்துவார் புறநகர், கிச்சா) தோற்றார்.
பாரதிய சனதா - 57 ( 46.5%)
காங்கிரசு - 11 (33.5)
கட்சி சார்பற்றவர்கள் - 2
மணிப்பூர்
காவி- பாசக, நீலம்-காங்கிரசு, சாம்பல்-மற்ற கட்சிகள் |
காங்கிரசு பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக |
மலைப்பகுதிகளில் பாசக அதிக தொகுதிகளை பெற்றுள்ளது. நாகா மக்கள் முன்னனி மக்கள் உட்பட மற்ற கட்சிகள் பள்ளத்தாக்கு பகுதியிலேயே வெற்றி பெற்றது. இதில் நாகா மக்கள் முன்னனிக்கு காங்கிரசு ஆவாது. இது நாகா மக்கள் வாழும் பகுதிகளை இணைத்து அகண்ட நாகாலாந்து அமைக்க போராடுகிறது அதாவது மணிப்பூரின் சில பகுதிகளை கேட்கிறது. தேசிய மக்கள் கட்சி தேசிய சனநாயக முன்னனியில் அதாவது பாசகவுடன் இருந்தாலும் இதை பொதுவுடமை கட்சி ஆதரித்திருந்தது அதனால் மத சார்பற்ற கட்சிக்கு ஆதரவு தரும் படி பொதுவுடமையின் நெருக்குதல் இதற்கு இருக்கிறது.
மணிப்பூரின் ஆளுநர் பாசகவை முதலில் ஆட்சியமைக்க அழைத்து பெரும்பான்மையை 15 நாட்களுக்குள் நிருபிக்க கூறியுள்ளார். நமக்கு என்ன நடக்கும் என்று தெரியும். அதாவது குதிரை பேரம் தான்.
காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் சியாம்குமார் பாசகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரசின் 28 உறுப்பினர்களில் 27 பேர் தான் எதிர்ப்பு மீதி அனைத்து கட்சிகளும் பாசகவுக்கு ஆதரவு.
தேசிய மக்கள் கட்சிக்கு இரு அமைச்சர் பதவிகள் அதில் ஒன்று துணை முதல்வர். நாகா மக்கள் முன்னனிக்கு மூன்று அமைச்சர் பதவிகள். காங்கிரசிலிருந்து வந்த சியாம் குமாருக்கும் லோக் சன சக்தி உறுப்பினருக்கும் அமைச்சர் பதவி. திரிணாமுல் உறுப்பினருக்கும் கட்சி சார்பற்ற உறுப்பினருக்கும் அமைச்சர் பதவி இப்போதைக்கு இல்லை.
பாசக முதல்வர் ஆக்கியுள்ள நாங்தோம்பம் பீரேன் சிங் காங்கிரசுகாரர் 2016 அக்டோபரில் தான் பாசகவில் இணைந்தவர்.
காங்கிரசு - 28 ( 35.1%)
பாரதிய சனதா - 21 (36.3%)
நாகா மக்கள் முன்னனி-4 ( 7.2%)
தேசிய மக்கள் கட்சி - 4 (5.1%)
திரிணாமுல் காங்கிரசு-1 ( 1.4%)
லோக சனசக்தி - 1 ( 2.5 %)
கட்சி சார்பற்றவர்கள் - 1
கோவா
காங்கிரசு பெற்ற தொகுதிகள் பகுதி வாரியாக |
தென் கோவா கிறுத்துவர்கள் நிறைந்தது. இங்கு தான் ஆம் ஆத்மி வேறூன்ற பார்த்தது. அதன் முதல்வர் கிறுத்துவர் என்பதால்.
வட கோவா இந்துகள் நிறைந்தது. பாசகவின் கோட்டை. அப்பகுதி ஏழை இந்துக்களின் ஆதரவுடன் தான் மகாராட்டிரவாதி கோமந்த கட்சி உள்ளது அது ஏன்னா போர்த்துகீசியர்கள் அதிகாரத்தில் கிறுத்துவர்களுக்கே சலுகைகள் கிடைத்தன, இப்போ இந்துக்களின் ஆதரவு நிறைய பாசகவுக்கு போய்விட்டது. கோவா விடுதலை அடைந்ததிலிருந்து சுமார் இருபது ஆண்டுகள் முதல்வர் பதவியை அலங்கரித்த கட்சி தான் இது. மகாராட்டிரவாதி கோமந்த கட்சி முன்பு பாசகவுடன் கூட்டணியில் இருந்தது. மேலும் RSSஇன் செல்வாக்கு மிக்க தலைவர் தனியாக பிரிந்து போட்டியிட்டதும் பாசகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. இதில் கோவா முன்னேற்ற கட்சி பாசகவை ஆட்சியிலிருந்து தூக்கிவிடுவது என்று களத்தில் குதித்த கட்சி.
காவி- பாசக, நீலம்-காங்கிரசு, சாம்பல்-மற்ற கட்சிகள் |
ஆளுநர் பாசகவை முதலில் ஆட்சியமைக்க அழைத்து பெரும்பான்மையை 15 நாட்களுக்குள் நிருபிக்க கூறியுள்ளார். நமக்கு என்ன நடக்கும் என்று தெரியும். அதாவது குதிரை பேரம் தான்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாசகவை ஆதரிக்காதவர்கள் காங்கிரசின் 17 உறுப்பினர்களும் கட்சி சார்பற்ற ஒரு உறுப்பினரும். காங்கிரசின் விசுவசித் ராணே நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வெளிநடப்பு செய்தார். பின்பு பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிம் கொடுத்தார். காங்கிரசில் இருந்தும் விலகிவிட்டார். தேசியவாத காங்கிரசு அவர்களின் ஒரே உறுப்பினர் கட்சி கட்டுப்பாட்டை மீறி அதாவது ஆதரத்து வாக்கு போட்டதற்காக விளக்கம் கேட்டுள்ளது
காங்கிரசு-17 ( 28.4% )
பாரதிய சனதா-13 ( 32.5%)
ஆம் ஆத்மி- 0 (6.3% )
மகாராட்டிரவாதி கோமந்த கட்சி-3 (11.3%)
கோவா முன்னேற்ற கட்சி -3 (3.5 %)
தேசிய வாத காங்கிரசு -1 (2.3% )
கட்சி சார்பற்றவர்கள் 3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக