வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?திங்கள், மார்ச் 06, 2017

காருண்யா என்னும் கொலைக்களம்.

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈசா  இப்போது பெரிய சர்ச்சையில் சிக்கி தவிக்கிறது. ஆனா அவர்களை விட ஏழு மடங்கு நிலத்தை வனப்பகுதியில் வளைத்துப் போட்டு யானைகளின் வழித்தடத்தை மறித்து கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் பால் தினகரனின் காருண்யா குழுமம் பற்றி இது வரை யாரும் மூச்சு விடவில்லை. அது ஏனோ? நமக்கு ஈசாவோ காருண்யாவோ சட்ட விரோதமாக வளைத்துப் போட்டுள்ள வனத்துறையின் நிலங்கள் பற்றி தெரியாது. நான் அதைப் பற்றி சொல்லப் போவதில்லை.

பல ஆண்டுகளாக நிறைய பேரிடம் காருண்யா பற்றி பேசியிருக்கிறேன் ஆனால்எ இவர்களைப் பற்றி எழுதி இருக்கிறேனா என்று தெரியவில்லை. இப்ப ஈசா சூட்டுல்ல சொன்னா சிலருக்கு மண்டையில் ஏறலாம்.

என் எதிர்த்த வீட்டு நண்பன் கூறிய உண்மைச் சம்பவங்கள் இது.  இது இப்போ கூறினது இல்லை. கூறி கிட்டதட்ட இருபது ஆண்டுகள் ஆகிறது. அவனுக்கு மருத்துவம் படிக்கனும் என்று ஆசை,  1992ஆம் ஆண்டு எடுத்த மதிப்பெண்கள் பற்றாததால் மீண்டும் தேர்வு எழுதினான் அப்பவும் மருத்துவம் படிக்கும் அளவு மதிப்பெண் பெறவில்லை அதனால் காருண்யாவில் பொறியியல் (1993-1997) சேர்ந்தான்.

அங்கு எல்லோரும் கல்லூரி விடுதியில் தான் தங்க வேண்டுமாம். வீடு கல்லூரிக்கு அடுத்த தோட்டம் என்றாலும் அவர்களுக்கும் கல்லூரி விடுதி தான். வீட்டிலிருந்து எம்மாணவரும் கல்லூரிக்கு வரமுடியாது அனுமதியில்லை. யாரும் பொட்டு வைத்துக்கொள்ளக் கூடாது, பூ வைத்துக் கொள்ளக் கூடாது. யாரும் திரு நீறு, குங்குமம், சந்தனம் வைத்துக்கொள்வது கூடாது, அவை\ தினகரன் குடும்பத்தால் அதாவது கல்லூரி நிருவாகத்தால் தடை செய்யப்பட்டவை.

இதனால் பல மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கோபம். என்ன செய்ய முடியும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் வெளியில் போய் வர அனுமதியுண்டு அதனால் ஞாயிறன்று நகர பேருந்து மூலம் அருகிலுள்ள சின்மயா மிசனுக்கு போவார்கள். இப்படித்தான் தங்கள் எதிர்ப்பை காட்டிக்கொண்டிருந்தார்கள். இதில் சாமி என்றாலே காத தூரம் ஓடுபவனும் அடக்கம். அப்ப  எந்த அளவு நொந்து போயிருப்பார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

தேர்வு சமயத்தில் மாணவர்கள் தேர்வு எழுதும் போது அப்பாடத்தை நடத்திய ஆசிரியர் மாணவர்களுக்காக அதற்காக உள்ள அறையில் செபம் செய்து கொண்டிருப்பார். எதுக்கய்யா செபம்? ஒழுங்காக சொல்லிக்கொடுத்திருந்தால் அப்பாடத்தில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கப்போகிறார்கள். இவரின் இப்போதைய செபத்தால் ஏதும் மாறப்போகிறதா?

மதமாற்ற முயற்சிகளும் விடுதியில் நடக்குமாம். அதன் விளைவாக சிலர் மதம் மாறியும் உள்ளார்கள். இங்கு நிறைய மலையாள கிறுத்துவர்களும் படிக்கிறார்கள்.  அதில் சிலர் பெரும் பணக்கார மலையாள கிறுத்துவர்கள்.

1997ஆம் ஆண்டு இறுதியாண்டு மாணவர்களுக்கும் நிருவாகத்துக்கும் மோதல். மாணவர்களுக்கு தலைமை பெரும் பணக்கார மலையாள கிறுத்துவ மாணவன். நிருவாகம் காலிப்பயல்களை இரும்பு தடிகளுடன் விடுதியில் இறக்கி காருண்யம் இல்லாமல் மாணவர்களை தாக்கியுள்ளது. பலருக்கு மண்டை உடைந்தது. காயமுற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

விடுதி மூடப்பட்டது.  தலைவன் அசரலை, கேரளாவில் இருந்து ஆட்களை கொண்டாந்தான். கோயமுத்தூரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். எந்த தமிழ் இதழ்களும் அதை துண்டு செய்தியாக கூட போடவில்லை. இந்துவோ இந்தியன் எக்சுபிரசோ தான் ஒரு முறை துண்டு அதாவது பெட்டி செய்தியாக போட்டது. இத்தனைக்கும் ஆதாரத்துடன் அனைத்து இதழ்களிடமும் கல்லூரி நிருவாகம் செய்ததை சொல்லி இதழில் எழுதுமாறு கேட்டனர். காவல் துறையில் புகார் செய்யப்பட்டும் நடவடிக்கை இல்லை. கல்லூரி சார்பில் எதிர் புகார் அளிக்கப்பட்டிருந்தது. தினகரனின் வீச்சு அப்படிப்பட்டது.

இந்த அடிதடி கேரள இதழ்களில் இடம்பெற்றது. மாணவர்கள் கோயமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரிடமும் புகார் அளித்துள்ளனர்.  அப்போது திமுகவின் ஆட்சி என்பது தெரியும் தினகரனை பகைத்துக்கொண்டால் திருநெல்வேலி பக்கம் சில ஆயிரம் வாக்குகளை இழக்க வேண்டியிருக்கும் என்பதால் திமுகவும் கண்டு கொள்ளவில்லை.

1997ஆம் ஆண்டு இறுதியாண்டு மாணவர்களை கல்லூரி நிருவாகம் இறுதில தேர்வை (8th semester எழுத அனுமதிக்க வில்லை. மன்னிப்பு கேட்டால் தான் அனுமதி என்றதால் மன்னிப்பு கேட்ட  நாலைந்து பேர் மட்டும் எழுதினர். மற்றவர்கள் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை.  என் நண்பன் பிரச்சனையில் கலந்து கொள்ளாமல் வீட்டுக்கு வந்து விட்டாலும் மன்னிப்பு கேட்க மறுத்து அடுத்த முறை தேர்வு எழுதி 1998 தான் பட்டம் பெற்றான். கல்லூரியில் ஒவ்வொரு தேரவிலும் 75% இக்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் மற்றவர்களுடன் இணைந்தே தேர்வு எழுதினான். அவங்க அப்பா கண்டிப்பானவர் எப்போதும் கல்லூரி நிருவாகத்தை ஆதரித்து பேசி வந்தாலும் இறுதி தேர்வை மன்னிப்பு கேட்டு எழுத வேண்டும் என்பதை புறக்கணித்து இறுதியில் மாணவர்கள் பக்கம் நின்றார் என்பதையும் சொல்ல வேண்டும்.

இப்போ மாணவர்கள் வெளியில் தங்கி கல்லூரிக்கு வரலாம் என்று கேள்விப்பட்டேன்.  அதுக்கு 1997இல் அடிவாங்கி மண்டை உடைந்து நடந்திய போராட்டமே காரணம். இப்போது பூ வைக்க, பொட்டு வைக்க, திருநீறு வைக்க அனுமதியுண்டா என்று அறியேன். போராடாமல் அடிப்படை உரிமை கூட இக்காலத்தில் கிடைக்காது.

கருத்துகள் இல்லை: