வணக்கம்
ஞாயிறு, பிப்ரவரி 12, 2017
தமிழகத்தின் குழப்பமும் ஒன்றிய அரசின் சித்து விளையாட்டும்
அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அவர்களே முதல்வராக வரவேண்டும். எட்டாந் தேதி இரவு வரை ஆளுநர் சென்னைக்கு வரவில்லை. அதாவது அடுத்த முதல்வரை நியமிக்க காலதாமதம் எடுத்துக்கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் சொல் கேட்காமல் போகக்கூடிய பணபலம் பொருந்திய சசிகலா வருவதை விரும்பவில்லை. செயலலிதா உயிரோடு இருந்த பொழுது சசிகலாவின் ஆதிக்கம் அதிகமிருந்ததும் காரணமாக இருக்கும். அவர் விலகியிருந்த போது தான் சோக்களிடம் சசிகலா நிருவகித்த மிடாசு சாராய ஆலை உட்பட பொருப்புகளை தற்காலிகமாக செயா தந்தார். அவாளிடம் அவாள் அல்லாத ஆளின் நெருக்கம் அவாள் அவாளை தன்னிடம் நெருங்க விடாதது எல்லாம் பாசகவின் சசிகலா வெறுப்புக்கு காரணமாக இருக்கலாம்.
சசிகலா முதல்வர் பதவி ஏற்றால் 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றே தீரவேண்டும். அவரை எதிர்ப்பவர்கள் அங்கு அவரை மக்கள் ஆதரவுடன் தோற்கடித்தால் பிரச்சனை சுலபமாக முடிந்து விடுமே. வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை தோற்கடித்து அவரது தலைமையால் அதிமுகவிற்கு பயன் இல்லை என்று காட்டலாமே. அதிமுக நிருவாகிகளே அப்போ அவரை எதிர்ப்பார்களே.
ஆளுநர் ஐந்தாம் தேதியே சென்னையில் இருந்திருந்தால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைமையை ஏற்று ஆட்சி அமைக்க அழைத்திருப்பார் அல்லவா? ஏன் ஐந்தாம் தேதி ஊட்டியிலிருந்து மும்பைக்கு போகிறார்? ஏன் பன்னீரின் பதவி விலகல் மடலை ஏற்றுக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்? எதற்காக காலதாமதம்? காலதாமதம் குதிரை பேரத்தை வளர்ப்பது அல்லவா. பன்னீருக்கு இரு நாட்களுக்கு பிறகு செயா ஆவியிடம் பேச தோன்றி கட்டாயப்படுத்தி கையெழுத்து என சொன்னது ஏன்?. ஏன்னா மோதி சொல்லியிருப்பார் அதனால செயா சமாதிக்கு சென்று 5 நிமிடம் சிறு உறக்கம் போடுகிறார். தியானம் என்பது கடும் பயிற்சி இல்லாம வராது தம்பி.
மோதி ஆட்டுவித்தது போல் பன்னீர் பேசியாயிற்று, பாசக ஆளுநர் அதற்காகத்தானே தாமதம் செய்தார். பன்னீரின் வயசென்ன அரசியல் அனுபவம் என்ன? (எத்தனை பேரை மிதித்துவிட்டு மேல வந்திருப்பார்) இப்ப முதல்வராகவும் உள்ளார். அவரை மிரட்டி கையெழுத்து வாங்க முடியுமா அப்படியே வாங்கியிருந்தாலும் மிரட்டலுக்கு பணிகின்றவர் நமக்கு முதல்வராக இருக்கலாமா?முதல்வரே கட்டாயத்திற்கு உள்ளாகி கையைழுத்து போட்டால் குடிகளின் கதி? அவர்களுக்கு என்ன பாதுகாப்பு? நாளைக்கு வேறொருவரின் மிரட்டலுக்கு பன்னீர் பணியமாட்டார் என்பதற்கு என்ன உறுதியிருக்கு?
ஆகசட்டு 31, 2017 தமிழக ஆளுநராக ரோசையாவின் கடைசி நாள். அவருக்கு பதவி நீடிப்பு இல்லை என்று ஒன்றிய அரசு முடிவெடுத்தபின் வழக்கமாக இறுதி நாளுக்கு முன்பே ஒரு மாதத்திற்கு முன் அடுத்த ஆளுநரை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கி விடும். சரி ஒரு மாதத்தில் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றால் அடுத்த மாதத்திற்குள் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். தமிழகமும் மகாராட்டிரமும் இந்தியாவின் பெரிய மாநிலங்கள், ஒன்றியத்துக்கு பெரும் அளவில் வரியை ஈட்டி தருபவை. பெரிய மாநிலமான தமிழகத்திற்கு இன்னும் நிரந்தர ஆளுநரை போடாடதன் அரசியல் என்ன? ஒன்றிய பாசக அரசே விளக்கவேண்டும்.
துரை முருகன் பழுத்த அரசியல்வாதி எப்படி பேசி, எதை புரியவைக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். துரைமுருகன் உங்களுக்கு துணையாக இருப்போம் என்பதை புரிந்து கொண்டால் சரி. ஊழல்வாதி செயலலிதா மருத்துவமனையில் மரண படுக்கையில் இருந்த போதே நடைபெற்ற மூன்று சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல், முழு தேர்தல்களில் 20,000இக்கும் அதிகமான வாக்கு வேறுபாட்டில் திருக்குவளை கொள்ளைக்கூட்டத்தின் கட்சி தோற்றது. இத்தனைக்கும் கருணாநிதி, இசுடாலின் பரப்புரை இருந்தது. தமிழக மக்களின் நம்பிக்கையை பெறமுடியாததால் இப்போ குழப்பத்தை பயன்படுத்தி குறுக்கு சால் ஓட்டுகிறார்கள். திமுக நண்பர்கள் இந்த ஆட்சி கவிழவேண்டும் அடுத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எண்ணி இந்த ஆட்சி கவிழாதா என்று ஆசையாக காத்துக்கொண்டுள்ளார்கள்.
சசிகலா கூட்டம் ஒழுங்கா என்றால் இல்லை அவர்கள் செயலலிதா உயிருடன் இருந்த போது அவரின் உதவியுடன் தமிழகத்தை கொள்ளையடித்தவர்கள் தான். பல ஆயிரம் கோடி கொள்ளையடித்தவர்கள், கங்கை அமரனின் சிறுதாவூர் பங்களாவை (உண்மையில் பையனூர் பங்களா தான், அருகில் சிறுதாவூர் உள்ளது) மிரட்டி வாங்கியவர்கள் மன்னிக்க அடி மாட்டு விலைக்கு பரித்துக்கொண்டவர்கள். வாங்கிய கோடிக்கனக்கான மதிப்புள்ள நகைகளுக்கு பணம் தர மறுத்ததால் நகைக்கடையாளர் பாலு இறப்பிற்கு காரணமானவர்கள். அமிர்ந்தாஞ்சன் தலைவலி தைல முதலாளியின் வீட்டை மிரட்டி அடி மாட்டு விலைக்கு பரித்துக்கொண்டவர்கள். மிரட்டி அடி மாட்டு விலைக்கு தான் எந்த நிலத்தையும் வாங்குவார்கள் மன்னிக்க பரிப்பார்கள். மிடாசு சாராய ஆலை அதிபர்கள் இது உருவானது அதிமுக ஆட்சி காலத்தில் தான். டாசுமாக் அவர்களிடம் சரக்கு வாங்குவதிலேயே பல்லாயிரம் கோடிகள் பார்த்திருப்பர்.
பன்னீர் ஒழுங்கா என்றால் அவரும் இல்லை பெரும் ஊழல்வாதி ரெட்டியுடன் பிணைந்திருப்பவர். மெரினா போராட்டத்தை கடைசி நாளில் இரத்தக்களறி ஆக்கியது அவர் தான். இது அலங்காநல்லூரிலும் கோவையிலும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் தொடர்ந்தது. மெரினா போராட்டக்காரர்களை ஒரு முறை கூட சந்திக்காதவர். காவல்துறை அமைச்சரும் இவரே. ஆறு இலட்சம் பேர் மெரினாவில் ஒரு வாரம் இடைவிடாமல் போராட்டம் நடத்தியதை மாநில அரசும் ஒன்றிய அரசும் எளிதில் புறம் தள்ளிவிட முடியாது. ஏன் உச்ச நீதிமன்றமும் புறம் தள்ளமுடியாது. மெரினா மட்டுமல்ல போராட்டம் தமிழகம் முழுக்க நடந்தது. உலகம் முழுக்க நடந்தது. வெளிநாட்டு நாளேடுகளில் செய்தி வந்த பிறகு அதை புறக்கணிக்க முடியாது. அழுத்தமும் முடிவும் போராட்டத்தால் தான் வந்தது, செயலலிதா உயிரோடு இருந்த போதே அவருக்கு தெரியாமல் ஊழல் செய்து பணம் சேர்த்ததால் செயாவின் கோபத்திற்கு ஆளானவர் (செயா பங்கு போனதால் தான் கோபம்). இவருக்கும் கரூரில் அன்புநாதன் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கும் தொடர்பு இருந்தல்லவா? சேகர் ரெட்டிக்கு தமிழகத்தின் மணல் குத்தகையை மொத்தமாக தாரைவார்த்து தமிழக ஆறுகளை சுரண்டியவர் இவரே. தம்பி ராசா பையன் ரவீந்திரநாத் மூலம் வெளிநாட்டு (முறைகளை மீறி) முதலீடுகளுக்கு அடித்தளம் அமைத்தார். டீ கடையும் பால் பண்ணையும் விவசாயமும் பார்த்தவரிடம் எப்படி பல கோடிகள் சேர்ந்தது? சசி கொள்ளை பற்றி தெரிந்த அளவுக்கு நமக்கு பன்னீரின் கொள்ளைகள் தெரியவில்லை என்பது உண்மையே.
சசிகலா கூட்டமும் கொள்ளைக்கார கூட்டம், பன்னீர் கூட்டமும் கொள்ளைக்கார கூட்டம். இருவருக்கும் உள்ள வேறுபாடு கொள்ளையடிக்கும் முறையில் தான் உள்ளது. ஆனால் நம் பொருட்கள் கொள்ளை போவது உறுதி. எனக்கு இவன் தான் கொள்ளையடிக்கனும் , இவன் கொள்ளையடிக்கும் அழகு தான் பிடித்துள்ளது என்று மக்கள் கேட்பது புரியாதது.
அதிமுகவிலும் பழ.கருப்பையா போன்ற நல்லவர்கள் உள்ளார்கள் (பழ. கருப்பையா வெளியேறிவிட்டார் என்பது வேறு) . அவர்களை யாராவது அடையாளம் காட்டி அவர்கள் முதல்வர் ஆக மாணவ & இளைஞர் சமூகம் குரல் கொடுத்தால் ஏற்கலாம் ஆனால் மெரினா சல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்களை ஒரு முறை கூட சந்திக்காதவருக்கு ஆதரவு தருவதை நினைக்க முடியவில்லை.
நமக்கு சசிகலா கூட்டத்தின் மேல் ஒவ்வாமை இருக்கலாம் அதற்காக ஆளுநர் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்த சசிகலாவை ஆட்சியமைக்க கூப்பிடாதது நம் மாநில உரிமையை ஒன்றிய அரசுக்கு தாரை வார்ப்பது ஆகும். இப்பவே மாநில உரிமைகள் ஆடுது, அதை மீட்கவே எத்தனை ஆண்டுகள் போராடனும் என்று தெரியவில்லை! என்பதை நினைவில் கொள்க. ஆளுநருக்கு ஏதாவது ஐயம் இருந்தால் தனித்தனியாக சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்தை ஆளுநர் மாளிகையில் கேட்கலாம் அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க சசிகலாவை கேட்கலாம். அது தான் முறை. ஒன்பதாம் தேதி ஆளுநர் சென்னை வந்தார் பன்னிரெண்டாம் தேதி வரை முடிவு எதையும் எடுக்கவில்லை. நிறைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்னீர் பின் போக அவகாசம் கொடுக்கிறார் அப்படியும் 15 உறுப்பினர்கள் கூட பன்னீர் பின் இன்னும் திரளவில்லை. என்று எட்டுவார் என்றும் தெரியவில்லை, இந்த ஆண்டு நடுவில் குடியரசு தலைவர் தேர்தல் வருகிறது அதற்கா ஒன்றிய பாசக ஏதேனும் சித்து விளையாட்டை அரங்கேற்றுகிறதோ என்னவோ.
செவ்வாய், மே 17, 2016
Exit Poll முடிவுகள் (தேர்தலுக்கு பின்பு வந்த கருத்து கணிப்பு)
பொதுவாக Exit Poll என்றால் முடிவுகளில் பெரும் மாற்றம் இருக்காது. ஆனால் எடுத்த ஐந்து பேரின் முடிவும் பெரிதும் மாறுபட்டுள்ளது. இதிலிருந்தே இது Exit Poll அல்ல என்பதை புரிந்து கொள்ளலாம்.
எப்பவும் கருத்து கணிப்பு வெளியிட்டால் இத்தனை % முன்ன பின்ன இருக்கும் என்பார்கள் இவர்கள் அப்படி எதையும் தெரிவிக்கவில்லை \ தெரிவிப்பதுமில்லை.
Exit Poll என்றால் வாக்கு செலுத்திவிட்டு வருபவர்களிடன் எடுக்கப்படும் கேட்கப்படும் கருத்தை தெரிவிக்கிறார்கள் என்று பொருள். உலக வழக்கம் இது தான். ஆனால் நம்மூரில் அப்படியில்லை
இங்கு Exit Poll என்பது வாக்குப்பதிவு முடிந்த பின் முன்பே எடுத்த கருத்து கணிப்பை வெளியிடும் கருத்து கணிப்பு என்று பொருள்.
இப்படி வெளியாகும் Exit Poll வைத்து அதை நம்புவர்கள் தான் மண்டையை பிச்சுக்கணும், நேரில் சென்று கருத்து கேட்காமல் விட்டத்தை பார்த்து எழுதுவது தன் கருத்தை எழுதுவது அதற்கு செய்தி இதழ்கள் தொக்கா போன்றவை.
இந்திய ஒன்றியத்தில் இதுவரை எந்த தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பும் அதாவது Exit Poll எதுவும் பலித்ததில்லை. காரணம் நம் ஒன்றியம் அதுகூட வேண்டாம் மாநிலங்களே பன்முகத்தன்மை உடையது. ஒவ்வொரு 25\50 கிமீக்கு நம் புவியமைப்பு பழக்கவழக்கம் சமூக அமைப்பு மாறும். வாக்கு போடும் போது சாதி, மதம், ஏழை, பணக்காரன் போன்ற காரணிகளும் பங்குபெரும். மேலும் அந்த வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் இருக்கும். இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் மேற்கத்திய நாடுகள் முறையையே நாமும் பின்பற்றினால் நம் கருத்துகணிப்பு எக்காலத்திலும் பலிக்காது.
திங்கள், மே 09, 2016
2016 தேர்தல் தமிழ்நாடு காங்கிரசு தலைவர் பற்றி
இனி தமிழ்நாட்டில் காங்கிரசை வளர்க்க முடியாது என்றாலும் காங்கிரசை எப்படி பெரிய கட்சியாக காட்டுவது என்று தொண்டர்களுக்கும் நிருவாகிகளுக்கும் ஆலோசனை வழங்கும் காட்சி.
காங்கிரசை எப்படி பெரிய கட்சியாக காட்டினார் என்பது பற்றிய சிறப்பு பேட்டி.
திமுகவிடம் 41 தொகுதிகள் வாங்கியது குறித்து கருணாநிதி இளங்கோவனை பாராட்டல்.(திராவிட இயக்க வாரிசு என்றால் அது சோடை போகாது என்று நிருபித்ததற்காக)
திமுகவிடம் இருந்து 41 தொகுதிகள் காங்கிரசிற்கு கிடைத்ததை வைத்து குசுபுவும் விசயதரணியும் வாய் விட்டு சிரித்தல்.
இந்தியாவில் வரும் கருத்து கணிப்பு எல்லாம் டுபாக்கூர் என்று அறிந்ததால்அதிமுகவுக்கு ஆதரவாக வரும் கருத்து கணிப்புகளால் கடுப்பாகி நியூசு 7 மூலம் கருத்து கணிப்பு எடுப்பேன் என்று சொல்லும் காட்சி.
மோதிக்கு இணையாக பொய் பேசக்கூடியவர் ஊடக வெளிச்சத்தை பயன்படுத்துவர் இளங்கோவன் என்பதால் ராகுல் தன் மாதாஜியிடம் அவரை பற்றி கூறல்.
கூடிய விரைவில் டெல்லிக்கு வருவீர்கள் என்றும் அவரின் பயிற்சி தனக்கு தேவை என்றும் கூறல்.
கருத்து கணிப்பும் திமுகவும் அதிமுகவும்
![]() |
அதிமுக தேர்தல் அறிக்கையீல் தாது மணல் பற்றி |
![]() |
வைகுண்டத்துக்கு கிலி பிடித்தபின்பு |
தமிழகத்தில் கருத்து கணிப்பின் போக்கு இப்படித்தான். அதனால இந்திய அளவில் சிறப்பாக உள்ளது என்று நினைக்காதிர்கள் அங்கும் கருத்து கணிப்பு பல்லிளிக்கிறது. பொய் கருத்து கணிப்பை வைத்தே தேர்தல் காலம் முழுவதும் ஓட்டுபவர்கள் தான் அவர்கள்..
இப்ப தந்தி, நியூசு 7 உடன் புதிய தலைமுறையும் இக்கூத்தில் இணைந்துள்ளது. ஒன்றிய அளவில் காட்ட ஆங்கில தொக்கா என்டிடிவியும் இணைந்துள்ளது.
வியாழன், ஏப்ரல் 14, 2016
2016 சட்டமன்ற தேர்தல் - தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு
புதன், ஏப்ரல் 13, 2016
2016 தேர்தல் காலம் என் பார்வை
தேர்தல் காலம் தொடங்கிருச்சு வைகோ பாலோட பழத்தை கொண்டு போயிட்டார். எங்கேயும் மரியாதை கிடைக்காததால் வாசனும் வைகோக்கிட்ட வந்துட்டார். பழம் கிடைக்காத ஏமாற்றத்தில் திமுக சந்திரகுமார் போன்ற தோல்களை பொறுக்க ஆரம்பித்துள்ளது. கருப்பா இருக்கறவங்க எல்லாம் கருப்பு மகோரா (MGR) ஆகிடமுடியுமா?
--**--
நல்ல ஆதரவு இருந்தப்ப அரசியல் செய்யாமல் கருணாநிதியை பற்றி நன்கு அறிந்திருந்தும் ஏமாந்து விட்டு வைகோ இப்பத்தான் உண்மையாக அரசியல் செய்கிறார். காலம் கடந்த ஞாயிரு வணக்கம் எந்த அளவு பலன் தரும் என்று தெரியவில்லை.
--**--
5 ஆண்டு ஆட்சியில் மதுவுக்கு ஆதரவாகவும் அதை எதிர்த்தவர்களை தேச விரோத சட்டத்திலும் சிறையிலடைத்த செயலலிதா வாக்குக்காக இறங்கி வந்து ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாக நடைமுறைக்கு வரும் என்று பொதுக்கூட்டதில் பம்முகிறார். திமுகவும் ஆட்சிக்கு வந்தா மதுவிலக்கு என்கிறது. இது சொல்வதை ஏற்கலாம் ஏன்னா இது எதிர்கட்சி. ஆளும் கட்சியான அதிமுகவும் சொல்வதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பெண்கள் வாக்கு செய்யும் வேலை இம் இம் அதுக்கு ஆட்சியை மாற்றக்கூடிய அளவு ஆற்றல் உள்ளது என்பதை எல்லோரும் புரிந்து உள்ளார்கள்.
--**--
சென்னை வெள்ளம் வந்து நிருவாகம் சந்தி சிரித்ததால் செயலலிதாவின் போலியாக பல்வேறு ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட நிருவாக திறமை தெரியவந்துள்ளது. அப்ப மட்டும் மறத்தமிழன் போலி அடிமை பன்னீர் முதல்வராக இருந்திருந்தால் இன்னும் செயலலிதாவின் நிருவாக திறன் இன்மையை உணராமல் ஏமாந்து இருப்போம் ஊடகங்களும் நம்மளை இன்னும் ஏமாற்றிக்கொண்டிருக்கும். .
இப்பக்கூட நத்தம், பன்னீரு இவ்வளவு அமுக்கிட்டாங்க அதை தெரிந்த செயலலிதா நடவடிக்கை என்று இவரை காப்பாற்றவும் பலியை அவர்கள் மேல் போடவும் முயற்சி நடக்கிறது. இவருக்கு தெரியாமல் நத்தம், பன்னீரு பணத்தை அமுக்கிட்டாங்க என்பதே வடிகட்டின பொய். கேக்கறவன் கேனயனா இருந்தா கேப்பையில் நெய்வழியுதுன்னு சொல்வாங்களாம். தமிழக மக்கள் கேனயர்கள் என்று நினைச்சிக்கிட்டார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் சுயநிதிக்குழுவினர் அனைவருக்கும் இலவச மன்னிக்க விலையில்லா செல்பேசி வழங்கப்படும் என்ற அறிவிப்பு இருக்குமென நினைக்கிறேன். வேறு என்ன விலையில்லா பொருட்கள் தருவார்கள் என்று அறிய ஆர்வமாக உள்ளேன்.
--**--
அதிமுக திமுக தேமுதிக பொதுவுடமைவாதிகள் விசிக புத என்று எல்லோரும் சாதிக் கட்சிகளே. பாமக மட்டும் தான் முத்திரை பெற்றுள்ளது. வேடிக்கை! சாதி சங்கம் தான் பின்னால் கட்சியாக மாறியது. பொதுவுடமைவாதிகளைப் பற்றி பொய் சொல்றேன்று நினைக்காதிங்க அக்கட்சியில் பெரிய பதவிகளில் இருப்பவர்கள் யாரு விசாரிச்சு பாருங்க.
மற்ற கட்சிகள் போல் அல்லாமல் அரசு நிதிநிலை அறிக்கையை சட்டசபையில் வழங்கும் போது மாற்று நிதிநிலை அறிக்கை என்று பல உருப்படியான பணிகளை செய்தவர்கள் இவர்கள். இந்திய ஒன்றிய அமைச்சராக இருந்த போதும் இக்கட்சியினர் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.
தேர்தல் நடைமுறை கோளாறுகளால் சின்னத்தை தக்கவைக்க அது பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தது, அதுக்கு வடதமிழகத்தில் (வன்னியர் பகுதிகளில்) மட்டுமே ஆதரவு உண்டு மற்ற இடங்களில் இல்லை என்பதை நாம் உணரவேண்டும். யானை போய் தான மாம்பழம் வந்திருக்கு? இந்த தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளில் வெற்றிபெறலைன்னா அதுவும் போயிரும். மற்ற கட்சிகளும் இவர்களுடனும் மற்றவர்களுடனும் மாறி மாறி கூட்டணி வைத்தபோதும் பாமகவிற்கு மட்டுமே கெட்ட பெயர். இதையெல்லாம் பார்க்கும் போது அவர்கள் கட்சி தொடங்கின நேரம் சரியில்லைன்னு தோணுது.
--**--
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி அமைச்சரவை அமையவேண்டும் என்பதே என் விருப்பம்.
ஞாயிறு, ஜூன் 01, 2014
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் 2 தொகுதிகளில் 4ம் இடம், 3இல் 3ம் இடம்
அசோனல்
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் |
---|---|---|
பாபுல் சுப்ரியோ | பாசக | 419983 |
டோலா சென் | திரிணாமுல் | 349503 |
பன்சா கோபால் சௌத்திரி | மார்க்சிய பொதுவுடமைவாதி | 255829 |
இந்ராணி மிசுரா | இந்திரா காங்கிரசு | 48502 |
டார்சிலிங்
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் |
---|---|---|
அலுவாலியா | பாசக | 488257 |
பாய் சங் பூட்டியா | திரிணாமுல் | 291018 |
சாமன் பதக் (சுரச்) | மார்க்சிய பொதுவுடமைவாதி | 167186 |
சுசய் காடக் | இந்திரா காங்கிரசு | 90076 |
ராய்கன்ஞ்
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் |
---|---|---|
சலிம் | மார்க்சிய பொதுவுடமைவாதி | 317515 |
தீபா தாசுமுன்சி | இந்திரா காங்கிரசு | 315881 |
நிமு போமிக் | பாசக | 203131 |
பபித்ரா ரன்சன் தாசுமுன்சி (சத்யா) | திரிணாமுல் | 192698 |
முர்சிடாபாத்து
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் |
---|---|---|
படருட்டோசு கான் | மார்க்சிய பொதுவுடமைவாதி | 426947 |
அப்துல் மன்னன் உசைன் | இந்திரா காங்கிரசு | 408494 |
அலி முகமது | திரிணாமுல் | 289027 |
சுசித் குமார் கோசு | பாசக | 101069 |
உத்தர மால்டாகா
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் |
---|---|---|
மாவுசம் நூர் | இந்திரா காங்கிரசு | 388609 |
காகன் முர்மு | மார்க்சிய பொதுவுடமைவாதி | 322904 |
சௌமித்ர ரே | திரிணாமுல் | 197313 |
சுபாசு கிருசுணா கோசுவாமி | பாசக | 179000 |
தட்சிண மால்டாகா
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் |
---|---|---|
அபு காசிம் கான் சௌத்திரி | இந்திரா காங்கிரசு | 380291 |
பிசினு பட ராய் | பாசக | 216180 |
அப்துல் ஆசன்ட் கான் | மார்க்சிய பொதுவுடமைவாதி | 209480 |
மோசிம் உசைன் | திரிணாமுல் | 192632 |
சாங்கிபூர்
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் |
---|---|---|
அபிசித் முகர்சி | இந்திரா காங்கிரசு | 378201 |
முசாபர் உசைன் | மார்க்சிய பொதுவுடமைவாதி | 370040 |
நூருல் இசுலாம் | திரிணாமுல் | 207455 |
சாம்ராட் கோசு | பாசக | 96751 |
பகரம்பூர்
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் |
---|---|---|
அதிர் ரன்சன் சௌத்திரி | இந்திரா காங்கிரசு | 583549 |
இந்ராணில் சென் | திரிணாமுல் | 226982 |
பிரமோத் முகர்சி | புரட்சிகர சோசலிசுட்டு | 225699 |
தீபசு அதிகாரி | பாசக | 81656 |
தொகுதியின் எண்களை கொண்டு அத்தொகுதி எங்கு உள்ளது என்பதை அறியலாம்.
1 - DARJEELING (டார்சிலிங்)
5 - RAIGANJ (ராய்கன்ஞ்)
7 - MALDAHA UTTAR (உத்தர மால்டாகா)
8 - MALDAHA DAKSHIN (தட்சிண மால்டாகா)
26 - ASANSOL (அசோனல்)
28 - JANGIRPUR (சாங்கிபூர்)
29 - BAHARAMPUR (பகரம்பூர்)
30 - MURSHIDABAD (முர்சிடாபாத்து)
கவனித்தோமானால் மேற்கு வங்கத்தின் கழுத்து போன்ற பகுதியில் இன்னும் திரிணாமுல் பலம் பெறவில்லை என்பதை அறியலாம். காங்கிரசிற்கு ஆதரவும் அக்கழுத்து பகுதியிலேயே உள்ளது.
மாவட்டங்கள் என்று பார்த்தால் மால்டா, முர்சிதாபாத்து, உத்தர தினாக்பூர் போன்றவற்றில் திரிணாமுல் வளர்ச்சி தடைபட்டுள்ளது. டார்சிலிங் மலைப்பகுதியில் இன்னும் தாதாக்கள் இராசாங்கம் தான் என்றாலும் பிடி சிறிது தளர்ந்துள்ளது.
திங்கள், மே 26, 2014
பொதுவுடைமைவாதிகளின் மோசமான தோல்வி
இவர்கள் மேல் கடும் விமர்சனம், மன நிறைவின்மை இருந்தாலும் ஆட்சியின் குறைகளை தட்டி கேட்க இவர்கள் தேவை என்பதை மறுக்கமுடியாது. இவர்கள் மட்டுமே ஓரளவு எதிர்கட்சிக்குரிய பணிகளை செய்து வந்தனர். பெரும் வணிக நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டாலும் அதை அவ்வப்போது எதிர்ப்பவர்கள் இவர்கள் தான். தற்போது 10 உறுப்பினர்களை மட்டும் கொண்டுள்ள இவர்கள் திறமையாக செயல்படுவது கடினம் . இவர்களைப்பற்றிய விமர்சனத்தை தனி இடுகையாக தான் போட வேண்டும் அவ்வளவு இருக்கு, இங்க எழுதினால் இவ்விடுகையின் நோக்கம் மாறி விடும்.
இவர்கள் பலமாக உள்ளது மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே. மற்ற மாநிலங்களில் மாநில கட்சிகள் பார்த்து பிழைத்துப்போ என்று போடும் பிச்சை மட்டுமே.
மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஆண்டவர்களுக்கு மரண அடி. காங்கிரசு கூட அங்கு 4 தொகுதிகளில் வென்றுள்ளது. இவர்கள் கூட்டணி வென்ற தொகுதிகள் 2 (மார்க்சிய பொதுவுடைமைவாதிகள் இதை பெற்றனர்). பாரதிய சனதாவும் அங்கு 2 தொகுதிகளில் வென்றுள்ளது.
கேரளத்தில் மார்க்சிய பொதுவுடமைவாதிகள் வென்றது 5 தொகுதிகள், இந்திய பொதுவுடமைவாதிகள் வென்றது 1 தொகுதி. இவர்கள் ஆதரவுடன் இரு கட்சி சாரா வேட்பாளர்கள். இவர்கள் அணியில் இருந்து பிரிந்து சென்ற புரட்சிகர சோசலிசுட்டு 1 தொகுதியில் வென்றுள்ளது. மார்க்சிய கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பேபியையும் கொல்லத்தில் போட்டியிட்டு தோற்றுள்ளார்
திரிபுராவில் 2 தொகுதிகளையும் மார்க்சிய பொதுவுடமை வென்றுள்ளது .
மாநிலவாரியாக கட்சிகள் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை.
ஆறுதல் இந்திய அளவில் இரண்டே கால் கோடிக்கு அருகில் இக்கூட்டணி பெற்ற வாக்குகளே.
இவர்கள் பெற்ற படுதோல்வி அதிர்ச்சி அளிப்பதாக இருந்தாலும் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் குண்டர்கள் ஆதிக்கம் செலுத்தியதும் இவர்கள் மேல் அம்மக்களுக்கு வெறுப்பு வர காரணம். ஆட்சிக்கு வரும் வரை தான் இவர்களும் ஓரளவு நல்லவர்களாக இருப்பார்கள் போல் உள்ளது.
2004ங்கில் நல்ல வெற்றியை பெற்றாலும் பின் இக்கட்சி (கூட்டணி) தேயத் தொடங்கியது. 2009லிலேயே இதன் வெற்றி வெகுவாக குறைந்தது. கட்சி தோல்விக்கான காரணத்தை ஆய்ந்து திருத்த தவறியதின் பலன் 2014ல் படு தோல்வி.
இதில் கொடுமை என்னவென்றால் இன்னமும் தோல்விக்கான காரணத்தை ஆராய தவறுவது தான். படுதோல்விக்கு பொறுப்பேற்று பொலிட் பீரோ உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகியிருக்க வேண்டும். பொதுச்செயலாளர் உடனடியாக பதவி விலகியிருக்க வேண்டும். பழைய பொலிட்பீரோ உறுப்பினர்களை கொண்டு எவ்வாறு கட்சியை வளர்ப்பது? அவர்கள் சிந்தனை பழையதாகவே இருக்குமே.
காங்கிரசு அழிவதில் கிடைக்கும் மகிழ்ச்சியை இவர்கள் அழிவு நீக்கி விடுகின்றது.
இடதுசாரிகளின் கூட்டணியில் பல கட்சிகள் இருந்தாலும் அவற்றில் வலுவானதான இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசுடு) பெற்ற வாக்குகளையை இக்கூட்டணி பெற்றதாக கொள்ளலாம். இவர்களே கூட்டணிக்கு எல்லாம் மற்றவர்கள் சிறு உதவி அவ்வளவே. அதனால் அவர்கள் பெற்ற வாக்கு விழுக்காட்டையே இங்கு குறித்துள்ளேன்.
மேற்கு வங்காளம்
கட்சி | பெற்ற வாக்குகள் % |
---|---|
திரிணாமுல் | 39.3 |
மார்க்சியம் | 22.7 |
பாசக | 16.8 |
இ. காங்கிரசு | 9.6 |
கேரளம்
கட்சி | பெற்ற வாக்குகள் % |
---|---|
இ. காங்கிரசு | 31.6 |
மார்க்சியம் | 21.6 |
பாசக | 10.3 |
திரிபுரா
கட்சி | பெற்ற வாக்குகள் % |
---|---|
மார்க்சியம் | 64.0 |
இ. காங்கிரசு | 15.2 |
திரிணாமுல் | 9.6 |
பாசக | 5.7 |
புதன், ஆகஸ்ட் 18, 2010
உமாசங்கருக்கு நீதி கிடைக்குமா?
சுடுகாட்டு ஊழலை வெளியில் கொண்டுவந்தவர் உமாசங்கர்.
அவர் திறமையானவர் நேர்மையானவர் என்று திமுக பெரிய தலைக்கு தெரிந்ததால் தான் திருவாரூர் மாவட்டம் உருவானப்ப அவரை அங்க மாவட்ட ஆட்சித்தலைவரா போட்டாங்க. தன் மகனுக்கும் ஒன்றுவிட்ட பேரனுக்கும் சண்டை மூண்டப்ப பேரனின் சுமங்கலி கேபிள் விசனுக்கு எதிராக உருவான அரசு கேபிளுக்கு திறமையானவர் வேண்டும் என்பதால் உமாசங்கர் அதன் தலைவராக்கப்பட்டார்.
முதல்வரின் மனைவிக்கு, மகனுக்கு வேண்டியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்துள்ளார். (அவங்க மீது எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை என்பதை சொல்ல வேண்டியதில்லை)
பல இஆப அதிகாரிகளுக்கு (ஊழலில் ஈடுபட்டவங்க தான், இவருக்கு என்ன அவங்களோட வரப்பு தகராறா) எதிராகவும் நடவடிக்கை எடுக்க சொல்லி அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளார்.
இது போல் பல வகைகளில் ஊழலுக்கு எதிராக இருந்த காரணத்தினால் இப்போ பழி வாங்கப்படுகிறார். இது அரசு மீது பொது சனம் வைத்திருக்கும் நம்பிக்கையை (இருக்கும் கொஞ்சத்தையும்) சிதைப்பதாக உள்ளது.
அவர் மீது எடுக்கப்பட்டிருக்கும் தவறான நடவடிக்கையை நீக்கிக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன்.
நீதிமன்றம் மூலமாகவோ தாழ்த்தப்பட்டவர்களுக்கான தேசிய அமைப்பு மூலமாகவாவது அவருக்கு நீதி கிடைக்கவேண்டும் என வேண்டுகிறேன்.
உங்கள் கண்டனத்தை இங்கும் பதிவு செய்யுங்கள்.
இது தொடர்பான இடுகைகள்
http://dharumi.blogspot.com/2010/08/424-complaint-filed-by-cumashankar-ias.html
http://dharumi.blogspot.com/2010/08/426-just-idea.html
http://dharumi.blogspot.com/2010/08/427.html
வியாழன், மே 21, 2009
சொக்க தங்கமும் அமைச்சர் பதவியும்
சொக்க தங்கம் சோனியா அம்மையாரும் பிரதமரும் திமுக கேட்ட அமைச்சகங்களை தருவதாக திமுக தலைவர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளார்கள். இதற்கு மேலும் வேறு என்ன உறுதி மொழி வேண்டும்? அவர்கள் சொன்ன சொல்லை காப்பார்கள் என்பது உங்களுக்கு வேண்டுமானால் நகைப்புக்குரியதாக இருக்கலாம் ஆனால் கருணாநிதிக்கு தெரியும் அது நகைப்புக்குரியது அல்ல என்று.
இந்த தள்ளாத வயதிலும் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் விமானம் ஏறி வேண்டிய அமைச்சகங்களை தன் குடும்பத்தாருக்கு (திமுகழகமே அவர் குடும்பம்) வாங்குவதற்காக டில்லி சென்றிருப்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல. இப்ப காங்கிரசு ஓங்கி இருப்பதையும் அறியாதவர் அல்ல இந்த சாணக்கியர்.
சனி, மே 12, 2007
1 2 3 - கொடுமை
திமுகவின் அழிவுக்கு காரணம் கருணாநிதியின் குடும்பமாக இருக்கப்போகிறது. இதை தான் காலத்தின் போக்கு என்பதோ? தனது மகனின் அரியணைக்கு போட்டியாக வைகோ இருப்பார் என்பதால் அவரை கட்சியில் இருந்து துரத்திய கருணாநிதி இப்போது என்ன செய்யப்போகிறார்? முன்பே ஸ்டாலினின் ஆதரவாளர் என்று மூத்த திமுக ஆளான முன்னால் அமைச்சர் தா.கிருட்டிணனை அழகிரி கொலை செய்தபோதே இவர் கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பிள்ளை பாசம் தடுத்தது, இப்போது அதே பிள்ளையால் குடும்பத்துக்குள்ளேயே சிக்கல், ஆனால் இவர்களின் யார் வாரிசு என்ற சண்டையில் 3 அப்பாவி உயிர்கள் பலி போனது தான் கொடுமை.
கருத்து கணிப்பை வெளியிட வேண்டாம் என்று சொன்னேன் கேட்காமல் தினகரன் வெளியிட்டுவிட்டார்கள் என்று கருணாநிதி சொல்கிறார். பிரச்சனை என்னவென்றால் தினகரன் கருத்து கணிப்பை வெளியிட்டது அல்ல, தான் முதல்வர் மகன் என்ற தைரியத்தில் அழகிரி செய்த அடாவடியும் அவரின் தொண்டரடிப்பொடி செய்த அட்டூழியங்களுமே.
கருத்துக்கணிப்பு பிடிக்கவில்லை என்றால் கண்டன அறிக்கை விடலாம், ஆர்ப்பாட்டம் நடத்தலாம், தந்தையிடம் முறையிடலாம், அல்லது சன் தொலைக்காட்சி மதுரையில் தெரியாமல் தடை பண்ணலாம் ( இது கொஞ்சம் சிரமமான செயல் தான் ) , வெளியே தெரியாமல் குடும்பத்திற்குள்ளேயே சமரசம் பேசி அடுத்த கருத்து கணிப்பில் அழகிரியின் ஆதரவு பெருகிவிட்டதாக காட்டலாம். இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் ஏன் அடியாட்களை விட்டு அட்டூழியம் செய்ய வேண்டும்? அதிகாரபூர்வமாக கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத போதே நிலைமை இப்படியென்றால் அதிகாரபூர்வமாக கட்சி பொறுப்பு வகித்தால் என்ன செய்வாறோ? எல்லாம் கருணாநிதிக்கே வெளிச்சம்.
இவர்கள் செய்ததிற்கும் அதிமுக காரர்கள் தர்மபுரியில் பேருந்தை எரித்து மாணவிகளை கொன்றதிற்கும் பெரிய வேறுபாடு இல்லை.
இத்தகராறு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே வந்த போதும் காவல் துறை என்ன செய்வதென்று தெரியாமல் கை கட்டி கொலைக்கு சாட்சியாக இருந்துள்ளார்கள். நினைத்துப்பாருங்கள் ஒரு சாதாரண மனிதனின் நிலையை?
இப்படி பட்ட சூழ்நிலையில் மதுரையில் இடைத்தேர்தல் வர இருக்கிறது, அழகிரியின் இந்த அடாவடி தேர்தலில் எதிரொலித்தால் மட்டுமே கருணாநிதி அவர்கள் கொஞ்சமாவது நடவடிக்கை எடுப்பார். பார்க்கலாம் மதுரை மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று.
புதன், பிப்ரவரி 28, 2007
செயலலிதா - லட்சுமி மிட்டல் ஒப்பீடு
டாடா பழைய ஆளு, அம்பானி தான் இப்ப பெரிய பணக்காரர் என்றேன் நான், அவன் ஒத்துக்கொள்ளவில்லை. எங்க சண்டைய யாராவது தீர்த்து வைங்கப்பா...
சரி யார் பணக்கார இந்தியர் என்ற கேள்வி வந்த போது இருவரும் இரும்பு ஆலை முதலாளி மார்வாடி லட்சுமி மிட்டல் என்பதை ஒத்துக்கொண்டோம்.
இந்த வெட்டி அரட்டைல இருந்து சேட்டும் சேக்கும் தான் பணத்துல குளிக்கிற ஆளுங்கன்னு புரிந்தது.
நம்ம சேட்டு லட்சுமி மிட்டலை பாராட்டணும், உலகின் 5 வது பெரிய பணக்காரரா இருந்தாலும் , இங்கிலாந்தில் வசித்தாலும் இன்னும் இந்திய கடவுச்சீட்டை (Passport) தான் வைத்துள்ளார். நாமல்லாம் அப்படியா? எப்படா குடியுரிமை கிடைக்கும்ன்னு அல்லாடறோம்.
முன்னாள் முதல்வர் ஏழைகளின் தலைவி, புரட்சித்தலைவி வெற்றிச்செல்வி ( செயலலிதா தாங்க) க்கும் லட்சுமி மிட்டலுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது என்றான். எனக்கு ஆச்சரியம் என்னன்னு சொல்லுடான்னு கேட்டேன்.
இரண்டு பேரும் அவங்க பசங்களுக்கு உலகம் வியக்கற அளவு மா மா மா பெரும் அளவில் திருமணம் நடத்துனாங்க அந்த விதத்தில் இரண்டு பேருக்கும் ஒற்றுமை என்றான்.
நான் கடுப்பாயிட்டேன் , டேய் லட்சுமி மிட்டல் அவரு காசை போட்டு திருமணம் நடத்தினார், முன்னாள் முதல்வர் வெற்றிச்செல்வி நம்ம காசை ( அதாங்க நம்ம அரசாங்கம்) வைத்து திருமணம் நடத்தினார், இரண்டையும் ஒப்பிடாதன்னு திட்டினேன்.
நீங்களே சொல்லுங்க செயலலிதாவே அந்த திருமணத்தை மறக்க நினைக்கறப்போ இவன் அதை வைத்து ஒப்பீடெல்லாம் நடத்தினா நல்லா இருக்குங்களா?