வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஆகஸ்ட் 18, 2010

உமாசங்கருக்கு நீதி கிடைக்குமா?

சுடுகாட்டு ஊழலை(யும்) சொல்லி ஆட்சிக்கு வந்தாச்சு. சுடுகாட்டு ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர் இப்ப திமுகவில்.  அரசியலில் இது மாதிரி நடக்கலைன்னா தான் வியப்புன்னு சொல்லறிங்களா.
சுடுகாட்டு ஊழலை வெளியில் கொண்டுவந்தவர் உமாசங்கர்.

அவர் திறமையானவர் நேர்மையானவர் என்று திமுக பெரிய தலைக்கு தெரிந்ததால் தான் திருவாரூர் மாவட்டம் உருவானப்ப அவரை அங்க மாவட்ட ஆட்சித்தலைவரா போட்டாங்க. தன் மகனுக்கும் ஒன்றுவிட்ட பேரனுக்கும் சண்டை மூண்டப்ப பேரனின் சுமங்கலி கேபிள் விசனுக்கு எதிராக உருவான அரசு கேபிளுக்கு திறமையானவர் வேண்டும் என்பதால் உமாசங்கர் அதன் தலைவராக்கப்பட்டார்.

முதல்வரின் மனைவிக்கு, மகனுக்கு வேண்டியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்துள்ளார். (அவங்க மீது எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை என்பதை சொல்ல வேண்டியதில்லை)

பல இஆப அதிகாரிகளுக்கு (ஊழலில் ஈடுபட்டவங்க தான், இவருக்கு என்ன அவங்களோட வரப்பு தகராறா) எதிராகவும் நடவடிக்கை எடுக்க சொல்லி அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளார்.

இது போல் பல வகைகளில் ஊழலுக்கு எதிராக இருந்த காரணத்தினால் இப்போ பழி வாங்கப்படுகிறார். இது அரசு மீது பொது சனம் வைத்திருக்கும் நம்பிக்கையை (இருக்கும் கொஞ்சத்தையும்) சிதைப்பதாக உள்ளது.

அவர் மீது எடுக்கப்பட்டிருக்கும் தவறான நடவடிக்கையை நீக்கிக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன்.

நீதிமன்றம் மூலமாகவோ தாழ்த்தப்பட்டவர்களுக்கான தேசிய அமைப்பு மூலமாகவாவது அவருக்கு நீதி கிடைக்கவேண்டும் என வேண்டுகிறேன்.

உங்கள் கண்டனத்தை இங்கும் பதிவு செய்யுங்கள்.

இது தொடர்பான இடுகைகள்

http://dharumi.blogspot.com/2010/08/424-complaint-filed-by-cumashankar-ias.html
http://dharumi.blogspot.com/2010/08/426-just-idea.html
http://dharumi.blogspot.com/2010/08/427.html

சனி, மார்ச் 20, 2010

கிராம மாணவர் நலனில் அக்கரையுள்ள தமிழக அரசு

தமிழ் படித்தால் போதுமா? ஆங்கிலம் தெரிந்தால் தான் இந்த உலகத்தில் பிழைக்க முடியும். நகர மக்களுக்கு பல ஆங்கில வழி கல்வி நிலையங்கள் அதற்கு துணை புரிகின்றன. கிராம மக்கள் கதி? அதோ கதிதான். ஆங்கில வழி கல்வி கற்று வரும் நகர மாணவர்களின் அறிவுக்கு முன் போட்டி போட முடியாமல் திண்டாடுகிறார்கள். கிராம மாணவர்களின் அறிவை எப்படி வளர்ப்பது? அவர்களுக்கும் ஆங்கில வழி கல்வி கிடைப்பதன் மூலம் இது கைகூடும். ஆனால் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு வசதி குறைவாக இருக்கும். என்ன தீர்வு? அரசே ஆங்கில வழி கல்வி கொடுப்பது தான் ஒரே வழி. இதை கருத்தில் கொண்டு நமது தமிழக அரசு ஆங்கில வழி பள்ளிகளை கிராம்ப்புறங்களில் தொடங்க உள்ளது. ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ளதை தினமணி செய்தியில் இருந்து அறியலாம்.

தமில் வலர தமிலக அரசு துணை இருக்கும் ஆனால் தமிலர்களின் வால்வு தான் இம்பார்ட்டண்ட் என்பதால் அரசு இங்கிலிஸை ஆதரிக்கிறது.

இங்கிலிஸ் நன்றாக தெரியாததால் நமது மக்களவை உறுப்பினர் கேபினட் மினிஸ்ட்டராக இருப்பதை தமிழகத்தின் அப்போசிசன் லீடர் உட்பட பலர் குறை கூறினதை பலரும் அறிவீர்கள், இந்த நிலைமை பியூச்சரில் தமிலகத்தை சார்ந்த யாருக்கும் வரக்கூடாது என்ற நல்நோக்கில் அரசு வொர்க் பண்ணுகிறது என்பதை அனைவரும் அன்டர்ஸ்டேண்ட் பன்னவேண்டும்.

இந்தி தெரிந்தால் நன்றாக இருக்கும் என்பதால் தமிலர்களின் நலம் பேணும் இவ்வரசு இந்தியையும் ஒரு பாடமாக அரசு பள்ளிகளில் வைக்கும் என்பதை மக்கள் குறித்துக் கொண்டு ஹாப்பியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


http://tinyurl.com/yh2lt6v

ஈரோடு மாவட்டத்தில் ​ இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள்

ஈரோடு,​​ மார்ச்.​ 19: ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலம் நடப்பு கல்வி ஆண்டில் இரண்டு அரசு ஆங்கிலப் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் தெரிவித்தார்.​ ​

இதுகுறித்து அவர் கூறியது:​ ஈரோடு மாவட்டம்,​​ நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் பட்டிமணியக்காரபாளையம்,​​ அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாத்தூர் ஆகிய கிராமங்களில் பள்ளிக் கல்வித் துறை மூலம் இரண்டு ஆங்கிலப் பள்ளிகள் நடப்புக் கல்வியாண்டில் தொடங்கப்படவுள்ளது.​ இதற்காக அரசு ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.​ வரும் கல்வியாண்டிலேயே இதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளது.​ ​

பள்ளிகளின் கட்டுமான பணிகளுக்கென முதல் கட்டமாக ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.50 லட்சம் நிதியினை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.​ ​ பள்ளி கட்டுமான பணிகள் முழுமையடைந்த ​ பிறகு இங்கு வகுப்புகள் தொடங்கப்படும்.​ ​ இப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்க முடியும்.​ ​

தனியார் ஆங்கிலப் பள்ளிகளுக்கு இணையாக இப்பள்ளிகளில் பாடத்திட்டம் அமைந்திருக்கும்.​ தமிழ் மொழிப்பாடம் தவிர பிற பாடங்கள் அனைத்தும் ஆங்கில வழியிலேயே கற்றுத் தரப்படும்.​ ​ இப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.​ ​

நகர்ப் புறங்களிóல் உள்ள மாணவர்களுக்கு இணையாக கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.​ ஈரோடு மாவட்டத்தில் வரும் 2010-2011 ம் கல்வி ஆண்டில் மேலும் 3 ஆங்கில வழி பள்ளிகளை தொடங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.​ இந்த பள்ளிகள் அனைத்தும் கிராமப்புறங்களில் மட்டும் தொடங்கப்படும் என்றார் அவர்.​ ​