வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், பிப்ரவரி 28, 2007

செயலலிதா - லட்சுமி மிட்டல் ஒப்பீடு

நண்பனுடன் வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டிருந்தபோது பணக்கார ஆசாமிகளை பற்றிய பேச்சு வந்தது. இந்தியாவிலேயே பெரிய பணக்காரர் அம்பானியா, டாடாவா என்று வந்தபோது நான் அம்பானி சகோதரர்கள் என்க அவன் டாடா என்றான்.

டாடா பழைய ஆளு, அம்பானி தான் இப்ப பெரிய பணக்காரர் என்றேன் நான், அவன் ஒத்துக்கொள்ளவில்லை. எங்க சண்டைய யாராவது தீர்த்து வைங்கப்பா...

சரி யார் பணக்கார இந்தியர் என்ற கேள்வி வந்த போது இருவரும் இரும்பு ஆலை முதலாளி மார்வாடி லட்சுமி மிட்டல் என்பதை ஒத்துக்கொண்டோம்.

இந்த வெட்டி அரட்டைல இருந்து சேட்டும் சேக்கும் தான் பணத்துல குளிக்கிற ஆளுங்கன்னு புரிந்தது.

நம்ம சேட்டு லட்சுமி மிட்டலை பாராட்டணும், உலகின் 5 வது பெரிய பணக்காரரா இருந்தாலும் , இங்கிலாந்தில் வசித்தாலும் இன்னும் இந்திய கடவுச்சீட்டை (Passport) தான் வைத்துள்ளார். நாமல்லாம் அப்படியா? எப்படா குடியுரிமை கிடைக்கும்ன்னு அல்லாடறோம்.

முன்னாள் முதல்வர் ஏழைகளின் தலைவி, புரட்சித்தலைவி வெற்றிச்செல்வி ( செயலலிதா தாங்க) க்கும் லட்சுமி மிட்டலுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது என்றான். எனக்கு ஆச்சரியம் என்னன்னு சொல்லுடான்னு கேட்டேன்.

இரண்டு பேரும் அவங்க பசங்களுக்கு உலகம் வியக்கற அளவு மா மா மா பெரும் அளவில் திருமணம் நடத்துனாங்க அந்த விதத்தில் இரண்டு பேருக்கும் ஒற்றுமை என்றான்.

நான் கடுப்பாயிட்டேன் , டேய் லட்சுமி மிட்டல் அவரு காசை போட்டு திருமணம் நடத்தினார், முன்னாள் முதல்வர் வெற்றிச்செல்வி நம்ம காசை ( அதாங்க நம்ம அரசாங்கம்) வைத்து திருமணம் நடத்தினார், இரண்டையும் ஒப்பிடாதன்னு திட்டினேன்.

நீங்களே சொல்லுங்க செயலலிதாவே அந்த திருமணத்தை மறக்க நினைக்கறப்போ இவன் அதை வைத்து ஒப்பீடெல்லாம் நடத்தினா நல்லா இருக்குங்களா?

கருத்துகள் இல்லை: