வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?வியாழன், மே 21, 2009

சொக்க தங்கமும் அமைச்சர் பதவியும்

மத்திய அரசுக்கு திமுக வெளியில் இருந்து ஆதரவு தருவதாக கூறியது பல திமுக எதிர்ப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. நாளை என்ன திருப்பம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை அறிந்தும் அவர்கள் அற்ப மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

சொக்க தங்கம் சோனியா அம்மையாரும் பிரதமரும் திமுக கேட்ட அமைச்சகங்களை தருவதாக திமுக தலைவர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளார்கள். இதற்கு மேலும் வேறு என்ன உறுதி மொழி வேண்டும்? அவர்கள் சொன்ன சொல்லை காப்பார்கள் என்பது உங்களுக்கு வேண்டுமானால் நகைப்புக்குரியதாக இருக்கலாம் ஆனால் கருணாநிதிக்கு தெரியும் அது நகைப்புக்குரியது அல்ல என்று.

இந்த தள்ளாத வயதிலும் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் விமானம் ஏறி வேண்டிய அமைச்சகங்களை தன் குடும்பத்தாருக்கு (திமுகழகமே அவர் குடும்பம்) வாங்குவதற்காக டில்லி சென்றிருப்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல. இப்ப காங்கிரசு ஓங்கி இருப்பதையும் அறியாதவர் அல்ல இந்த சாணக்கியர்.

கருத்துகள் இல்லை: