வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?சனி, மே 09, 2009

யாருக்கு வாக்கு செலுத்துவது? திமுகவுக்கு மறந்தும் வேண்டாம்

ஈழ தமிழர் விதயம் காரணமாக யாருக்கு வாக்கு போடுவது என்று நமக்கு குழப்பம். இதில் குழப்பமே வேண்டாம். திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு செலுத்தாதீர்கள்.

திமுக கூட்டணி தோற்க வேண்டும் அப்போது தான் இனி வரும் இந்திய அரசு தமிழருக்கு துரோகம் செய்யாது. குறிப்பாக காங்கிரசு படுதோல்வி அடைய வேண்டும். அப்போதான் அதனுடன் சேர்ந்து தமிழர்களை அழித்த திமுகவுக்கும் பாடம் வரும்.

சில திமுக உடன்பிறப்புகளுக்கு இது கடினமான செயல் தான். அவர்கள் 'மழை விட்டும் தூவானம் விடவில்லை' போன்ற அழகிய சொல்லாடலுக்கு மயங்கி நிற்பவர்கள். மயக்கம் தெளிஞ்சா எல்லாருக்கும் நல்லது. மயக்கம் தெளிய கூடாது என்று தான் முழு அடைப்பு அன்று டாஸ்மார்க் திறந்திருந்தது, சன், கலைஞரில் சிறப்பு படம் போட்டார்கள். புரிஞ்சுக்குங்கப்பா...

அதிமுகவுக்கு வாக்கு செலுத்துங்க. அதிமுக பிடிக்கலையா தேமுதிகவுக்கு வாக்கு செலுத்துங்க, அதுவும் பிடிக்கலையா உங்க தொகுதியில் நிற்கும் வேற கட்சிக்கு அல்லது சுயேச்சைக்கு வாக்கு செலுத்துங்க. மறந்தும் உதயசூரியனுக்கோ, கைக்கோ வாக்கு செலுத்தாதிங்க.

கருணாநிதியை விட செயலலிதா எவ்வளவோ மேல்...
முதல் நாள் பிரபாகரன் நண்பன் என்று பேட்டி கொடுக்க வேண்டியது அடுத்த நாள் நான் அப்படி சொல்லவேயில்லை என்பது.

எனக்கு தெரிந்து கருணாநிதி என்றும் ஈழமே தமிழர்களுக்கு தீர்வு என்று ஆணித்தரமாக சொன்னதில்லை. என்றுமே இவரு வழவழா கொழகொழா தான்.
செயலலிதா இத்தேர்தலில் அப்படி சொல்லி உள்ளார். அப்படி சொன்னதற்காக அவரை பாராட்டவேண்டும்.

தமிழகத்தில் ஆட்சி, மத்தியில் பல அமைச்சர்கள் மேலும் அங்கு இவருக்கு பெரும் செல்வாக்கு. எல்லாம் இருந்தும் ஈழ மக்களை காக்க ஒன்றும் செய்யவில்லை... அப்புறம் எதற்கு திமுகவிற்கு வாக்கு செலுத்தவேண்டும்?

2 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

அண்ணா, சோடா கொண்டார்ட்டுங்களா?!

குறும்பன் சொன்னது…

பழமை ஊரு எப்படிங்க இருக்கு? சோடால்லாம் வேண்டாம், திமுகவுக்கு வாக்கு போடாம இருங்க அது போதும். :-))

உங்க அண்ணன் அல்லது நெருங்கிய சொந்தக்காரர் அல்லது நண்பர் திமுக வேட்பாளரா இருந்தா உங்க விருப்பப்படி போடுங்க ;-))

எனக்கென்னமோ சண்முகசுந்தரம் உங்களுக்கு உறவுக்காரர் அப்படின்னு தோணுது.(ஏன்னுதான் தெரியலை) :-))