கொங்கு பகுதியின் தொகுதிகளை பற்றி இது வரை யாரும் சரிவர கணிக்கவில்லை. கொங்கு பகுதி வாழ் பதிவர்கள் கணித்தார்களா என்று தெரியாது. கோயமுத்தூர், ஈரோடு பகுதியில் வசிக்கும் பதிவர்கள் பலர் உள்ளனர். ஏன் அவர்கள் செய்யவில்லை?
சென்னை வாழ் பதிவரே சென்னை, மதுரை, விருதுநகர், கடலூர் பற்றி கணித்துள்ளார். மதுரைக்காரங்க மதுரையை பற்றி ஒன்னும் சொல்லக்காணோம்.
தேமுதிகவின் பாதிப்பு பற்றி பேசி இருக்காங்க. சரத்குமாரின் சமுத்துவ கட்சியின் பாதிப்பு பற்றி பேசி இருக்காங்க. விருதுநகர்ல நடிகர் கார்த்தி தேவர் சமுதாய வாக்குகளை பிரிப்பதால் வைகோ வெற்றி இழுப்பறின்னு பேசறாங்க. இது மாதிரி ஆளுக்கு வேண்டிய மாதிரி கணிப்பு எழுதறாங்க. எழுதட்டும் எழுதட்டும் தேர்தல் முடியும் வரை இதத்தான செய்யமுடியும்.
சரி கொங்கு பகுதி பற்றி நாம கொஞ்சம் அலசுவோம்.
இங்கு கொங்குநாடு முன்னேற்றப் பேரவை போட்டியிடுகிறது. எனக்கு தெரிந்து இப்பேரவையை யாரும் (கணிப்பு பதிவர்கள்) கணக்கில் எடுத்த மாதிரி தெரியவில்லை. ஆனால் கொங்கு பகுதியில் இதன் பாதிப்பு பலமாக இருக்கப்போகிறது. கள நிலைமையை பார்த்தவர்கள் இப்பேரவைக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கும் என்று நினைக்கவில்லை என்பது தான் உண்மை.
இதனால திமுக கூட்டணி பாதிக்கப்பட போகுதா இல்ல அதிமுக கூட்டணி பாதிக்கப்பட போகுதான்னு தான் தெரியலை. சில தொகுதிகளில் இரண்டாம் இடம் வரவும் வாய்ப்பிருக்கு. குறிப்பா கோவை, பொள்ளாட்சி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் தொகுதிகளில்.
கோவை, நீலகிரி, பொள்ளாட்சி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர் ஆகிய 12 தொகுதிகளில் கொங்குநாடு முன்னேற்றப் பேரவை போட்டியிடுகிறது.
இப்பகுதிகளில் அதிமுக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என்று சொன்னாலும் கொங்குநாடு முன்னேற்றப் பேரவை அதை பாதிக்குமா என்று தெரியவில்லை.
4 கருத்துகள்:
//கள நிலைமையை பார்த்தவர்கள் இப்பேரவைக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கும் என்று நினைக்கவில்லை என்பது தான் உண்மை.//
ஆம்... நீலகிரி, ஈரோடு, கோவை தொகுதிகளுக்குட்பட்ட நண்பர்கள்/உறவினர்களிடம் பேசும் போது இதே கருத்தைத் தான் கூறினார்கள்...
16ம் தேதி தான் தெரியவரும் !!!!
//16ம் தேதி தான் தெரியவரும் //
ஆம்.
சொல்ல மறந்தது கரூர் தொகுதியிலும் பேரவையின் பாதிப்பு அதிகம். இது அதிகாரபூர்வமான பணக்கார வேட்பாளரை எந்த அளவு பாதிக்குமுன்னு தான் தெரியலை.
உங்களுக்கு இனிப்பான செய்திகள் கிடைக்க வாழ்த்துகள்! ;-)
//உங்களுக்கு இனிப்பான செய்திகள் கிடைக்க வாழ்த்துகள்! ;-)//
வாழ்த்துக்கு நன்றி பழைமைபேசி. :-)
கருத்துரையிடுக