வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், அக்டோபர் 21, 2009

வாஸ்து - எதிரில் கண்டது

இப்பொழுதெல்லாம் வீடு கட்டறவங்க வாஸ்து பார்க்காம கட்டறதில்லைன்னு தெரியும். வீட்டின் ஒவ்வொரு அறையும் அதிலுள்ள பொருட்களும் வாஸ்துவின் படி தான் உள்ளன. வீடு மட்டும் இல்லை கோயிலும் வாஸ்து படி இருந்தால் தான் அக்கோயில் சிறக்கும் என்பது வாஸ்துகாரர்களின் கூற்று. திருப்பதி திருமலை வேங்கடவன் கோயிலுக்கு மட்டும் ஏன் அவ்வளவு செல்வம் வருகிறது? ஏனென்றால் வாஸ்து படி அமைந்த சிறந்த கோயில் அதுவாகும். மற்றகோயில்கள் சைவ்வாறு அமையவில்லையா? சாமிக்கே வாஸ்தா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதை வாஸ்து அறிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

வடக்கிலும் கிழக்கிலும் அதிக காலியிடம் வேண்டும் என்பது வாஸ்து விதி. அப்ப தெற்கு, மேற்கு? அது இரண்டும் ஆகாத இடங்கள் அதனால் அங்கு காலியிடங்கள் கூடாது அல்லது குறைவான காலியிடம் இருக்கலாம். குறிப்பாக வடக்கு & கிழக்கு காலியிடத்தை ஞவிட தெற்கு & மேற்கு காலியிடங்கள் குறைவாக இருக்க வேண்டும். தெற்கு, மேற்கு பகுதி உயர்ந்தும் வடக்கு, கிழக்கு பகுதி தாழ்ந்தும் இருக்கவேண்டும். ஈசானிய மூலையாகிய வடகிழக்கில் கிணறு அதாவது நீர் தேங்கும் தொட்டி (நிலத்தில்) இருக்க வேண்டும். அக்னி மூலையாகிய தென்கிழக்கில் சமையலறை இருக்கவேண்டும். பழனி மூலையாகிய தென்மேற்கு மூலை உயர்ந்து இருக்கவேண்டும், அதனால் இப்பகுதியில் நீர் தேங்கும் தொட்டியை (மாடியில்) அமைக்கவும். வாயு மூலையாகிய வடமேற்கு மூலையிலோ அல்லது மேற்கு பகுதியிலோ கழிவறை & கழிவறை தொட்டி இருக்கவேண்டும்.

எந்த பகுதியில் பூசை அறை, படுக்கை அறை, பணம் வைக்கும் பெட்டி இருக்கலாம் என்றெல்லாம் வாஸ்துவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

வாஸ்துவினால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன. இது விற்கும் மனைகளின் விலையில் கூட தெரியும். கிழமேற்காக செல்லும் சாலையின் இருபுறமும் உள்ள நிலங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. எப்பகுதி நிலம் அதிக விலைக்கு போகும்? தென் பகுதி நிலம் அதாவது வடக்கு நோக்கி உள்ள நிலம் வடபகுதி நிலத்தை விட அதிகமாக விலை போகும். அதுபோலவே கிழக்கு நோக்கி உள்ள நிலம் மேற்கு நோக்கி உள்ள நிலத்தை விட மதிப்பு அதிகமாக இருக்கும்.

வாஸ்து படி வீடு கட்டி வாழ்ந்தால் செல்வத்திற்கும் நலத்திற்கும் குறைவிருக்காது என்பது வாஸ்துகாரர்களின் கூற்று. எனவே வாஸ்து அறிஞர்களின் அறிவுரைபடி வீடு கட்டி நலமாக வளமாக வாழவும்.
.
.

கருத்துகள் இல்லை: