வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?வியாழன், அக்டோபர் 22, 2009

வாஸ்து - எதிரில் கண்டது 2

வாஸ்து முறைப்படி வீடு கட்டினால் செல்வச்செழிப்போடு நலமாக வாழலாம் என்று வாஸ்து அறிஞர்கள் சொன்னதை பார்த்தோம். மனையடி சாத்திர நூலை படித்த பொழுது வீட்டின் உள்கூட்டளவு எந்த அடிகளில் இருந்தால் என்ன வகையான பலன்கள் கிடைக்கும் என்று போட்டிருந்தது. 120 அடி வரைக்கும் கொடுத்திருந்தார்கள் , இங்கு 60 அடி வரை கொடுத்துள்ளேன். அது என்ன உள்கூட்டளவு? அதாவது அறையின் அளவு இதுவாகும். சுவற்றின் அளவை கணக்கில் கொள்ளமாட்டார்கள். பெரும்பாலான கொத்தனார்கள் இந்த அளவு படி கட்டடம் கட்டுவார்கள்.
6x6, 6x8, 8x8, 8x10, 10x10, 10x17, 10x11, 10x16, 16x17 என்று அறையின் அளவு இருப்பதன் ரகசியம் இது தான் (நம்மூரில்).

அடி அளவுகளின் பலன்கள்

6 - நன்மை ஏற்படும்
7 - தரித்திரம் பிடுங்கி தின்னும்
8 - செல்வம் செல்வாக்கு படிப்படியாக உயரும்
9 - துன்பம் துயரம்
10 - பொருள் சேரும் தினமும் விருந்து
11 - மகிழ்ச்சியும் வளமும் பெருகும்
12 - துயரம் புத்திரசோகம்
13 - துன்பம் நோயினால் அவதி
14 - பொருள் இழப்பு, கவலை
15 - துன்பம் துயரம்
16 - தனசேர்க்கை, குறைவற்ற வாழ்க்கை
17 - விரோதிகள் பணிவர்
18 - கைப்பொருள் இழப்பு, வீடு அழியும்
19 - புத்திர பாக்கியம் கிடையாது, வறுமை உண்டு
20 - செய்தொழில் வெற்றி, சுகபோகம்
21 - பொருள் விருத்தி, புகழ் உண்டு
22 - விரோதிகள் நாசம்
23 - கெடுதி ஏற்படும்
24 - வரவும் செலவும் சமம்
25 - மனைவிக்கு கண்டம்
26 - பொருள் அபிவிருத்தி
27 - சமூக கவுரவம் அதிகரிக்கும்
28 - தெய்வ அருள் கிட்டும், சுபிட்சம் உண்டாகும்
29 - வறுமை ஒழியும்
30 - லட்சுமி கடாட்சம், மக்கள் செல்வம் அதிகரிக்கும்
31 - தெய்வ அருள் கிட்டும்
32 - செல்வ அபிவிருத்தி, வெளிநாடு பயணம்
33 - வாழ்க்கையின் நிலை உயரும்
34 - இடமாற்றம் ஏற்படும்
35 - திருமகள் அருள்
36 - சுகபோக வாழ்க்கை ஏற்படும்
37 - செய்தொழில் முன்னேற்றம்
38 - வறுமை, துன்பம்
39 - நல்ல வாழ்வு
40 - விரோதிகள் வலிமை பெறுவர்
41 - செல்வம் பெருகும்
42 - அஷ்டலட்சுமி வாசம்
43 - நன்மை ஏற்படாது
44 - பெரிய இழப்பு உண்டாகும்
45 - மக்கள் செல்வம் அதிகரிக்கும்
46 - வறுமை, நோய்
47 - பொருள் இழப்பு
48 - தீயினால் ஆபத்து
49 - தவறுகள், இழப்புகள்
50 - நன்மை உண்டாகாது
51 - வீண் தொல்லைகள்
52 - பொருள் அபிவிருத்தி
53 - பெண்களால் பொருள் நட்டம்
54 - அரசின் சீற்றம்
55 - உறவினர் விரோதம்
56 - குடும்ப விருத்தி
57 - சந்ததி நாசம்
58 - கண்டம் ஏற்படும்
59 - கவலைகள் வறுமை
60 - செய்தொழில் அபிவிருத்தி
.
.

2 கருத்துகள்:

சித்தூர்.எஸ்.முருகேசன் சொன்னது…

ஐயா !
ப்ரவுசிங் என்றாலே மேய்தல் தான். அதற்காக இப்படியா நுனிப்புல் மேய்வது.

குறும்பன் சொன்னது…

வணக்கம் சித்தூர். :(
என்ன நுனிப்புல் என்றால் தெரிந்து கொள்வேன்.