வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?வியாழன், ஆகஸ்ட் 20, 2009

வெண்ணைவெட்டி யார்?

ஐநா சபை தலைவர் பான் கீ மூன் தான் சிறந்த வெண்ணைவெட்டி என ஐ.நாவுக்கான நார்வே தூதர் மோனா ஜூல் கூறியுள்ளார். அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்யுது. இவர் ஐநா தலைவரா இருக்கும் வரை ஐநா தலையிடும் நல்லது நடக்கும் என்று யாராவது எதிர்பார்த்தால்????? தப்பு எதிர்பார்ப்பவர்களிடம் தான் பான் கீ மூனிடம் இல்லை.

http://www.washingtonexaminer.com/world/ap/53694632.html

http://thatstamil.oneindia.in/news/2009/08/20/world-norway-diplomat-blasts-absent-un-chief.html

இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக பலவீனமான ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் இருக்கிறார். இலங்கை உள்ளிட்ட எந்தப் பிரச்சினையையும் தீர்க்க அவர் தவறி விட்டார். உலகப் பொருளாதார நெருக்கடி உள்பட உலகில் ஏற்பட்ட எந்த நெருக்கடியையும் சமாளிக்கவும், தீர்க்கவும் அவர் முயற்சிக்கவில்லை. அவரிடம் கொண்டு செல்லப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுமே செவிடன் காதில் ஊதிய சங்காக மாறியுள்ளது என்று நார்வே கடுமையாக விமர்சித்துள்ளது.

ஐ.நாவுக்கான நார்வே தூதர் மோனா ஜூல் இதுதொடர்பாக நார்வே வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை நார்வேயின் ஆஃப்டன்போஸ்டன் இதழ் வெளியிட்டுள்ளது.

அதில் மோனா கூறியிருப்பதாவது...

இதுவரை இருந்த ஐ.நா. பொதுச் செயலாளர்களிலேயே மிக மிக பலவீனமானவர் பான் கி மூன்தான். கொஞ்சம் கூட திறமையே இல்லாமல் இருக்கிறார். எந்தவிதமான ஆக்கப்பூர்வமான செயல்பாடும் அவரிடம் இல்லை. சமீபத்திய பல்வேறு உலக நெருக்கடிகளை தீர்த்து வைக்கவோ அல்லது சமாளிக்கவோ அவர் சிறிதும் முயற்சி எடுக்கவில்லை.

சவால்களை துரிதமாக சந்திக்கவும், தீர்த்து வைக்கவும் அவர் தவறி விட்டார். அவர் மிகத் தாமதமாக விழித்து எழுந்தபோது கிட்டத்தட்ட அந்த நெருக்கடிகள் கை விட்டுப் போயிருந்தன அல்லது எல்லாமே நடந்து முடிந்து போயிருந்தன. பான் கி மூனின் செயல்பாடுகள் ஐ.நா. சபையின் அனைத்துத் தரப்பினைரயும் எரிச்சல்பட வைத்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு உலகப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலையில் ஐ.நா. சபை உள்ளது. ஆனால் அதற்கேற்ற வேகமோ, விவேகமோ பான் கி மூனிடம் இல்லாதது வேதனை அலிக்கிறது. எல்லாப் பிரச்சினைகளிலும் அவர் தலையிடாமல் ஒதுங்கியிருப்பது புரியாத புதிராக உள்ளது. சந்தேகங்களை எழுப்புகிறது.

உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதுகுறித்து ஐ.நா. சபையிலிருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. அதேபோல உலக சுற்றுச்சூழல் தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் கூட ஐ.நா. பங்கெடுக்காமல் உள்ளது வியப்பைத் தருகிறது.

இலங்கையில் அப்பாவிகள் கொல்லப்பட காரணம் மூன்தான்...

மியான்மர் ஜனநாயகத் தலைவி ஆங் சான் சூகியி விடுதலை தொடர்பாக பான் கி மூன் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வாய் மூடி மெளனியாக இருந்து வருகிறார். அவர் அங்கு சென்றதால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. மியான்மரில் நடப்பதை அவர் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இலங்கையில் இந்த ஆண்டு நடந்த இனப்போரின் முடிவின்போது நடந்த பெருமளவிலான போர்க் குற்றங்கள், அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள், அட்டூழியங்களை தடுக்க பான் கி மூன் தவறி விட்டார். அதற்காக அவர் முயற்சிகளைக் கூட எடுக்கவில்லை.

இவை மட்டுமல்ல, தர்பூர், சோமாலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, காங்கோ என எந்தவித பிரச்சினை குறித்தும் அவர் ஆக்கப்பூர்வமாக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரிடம் கொண்டு செல்லப்பட்ட எல்லா பிரச்சினையிலும், செவிடன் காதில் ஊதிய சங்காகவே அவர் நடந்து கொண்டிருக்கிறார். எதையும் கவனிக்கும் அக்கறையும் அவரிடம் காணப்படவில்லை.

பான் கி மூன் சிறப்பாக செயல்பட சிறிது கால அவகாசம் தரலாம் என்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், தூதர்களும் முன்பு கூறினார்கள். ஆனால் இப்போது பான் கி மூனின் போக்கைப் பார்த்தால் அவரிடம் எந்தவிதமான செயல் திறனும் இல்லாததுதான் பெரிய பிரச்சினையாகத் தெரிகிறது என்று சரமாரியாக விமர்சித்துள்ளார் மோனா.

நார்வே தூதரின் இந்த பகிரங்க விமர்சனத்தால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பான் கி மூன் நார்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்த நிலையில் மோனா வெளியிட்டுள்ள இந்த அறிக்கை நார்வே அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: