- MGR என்று சொன்னாலே வெள்ளை நிற தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடி நினைவுக்கு வரும். அவரு போட்ட வெள்ளை நிற தொப்பியின் வடிவமைப்பில் தமிழ்நாட்டில் யாரும் தொப்பி போட்டு நான் பார்த்ததில்லை. விபி சிங்கும் அந்த வடிவமைப்புல்ல தொப்பி போட்டிருப்பார்.
- கருணாநிதி என்றாலே கர கர குரலும் கருப்பு கண்ணாடியும் நினைவுக்கு வரும். பலருக்கு கடிதமும் தந்தியும் நினைவுக்கு வரும்.
- செயலலிதா என்றால் கொடாநாடு நினைவுக்கு வருதோ இல்லையோ கொடாநாடு என்றால் செயலலிதா நினைவுக்கு வருவார்.
- இரஜினிகாந்த் என்றால் தூக்கி போட்டு சிகரெட் பிடிப்பது, தலை முடியை கையால் கோதி விடுவது நினைவுக்கு வரும்.
- நம்பியார் என்றால் கையை பிசைந்து கொண்டு பேசுவது, சபரிமலை ஐயப்பன் சாமி நினைவுக்கு வரும்.
- பாகவதர் என்றால் சிகை அலங்காரம் நினைவுக்கு வரும்.
- என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டிங்கிறிங்களே அப்படின்னா அது சத்தியராஜ்.
- 007 அப்படின்னா அது James Bond.
- கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளவனை சுவற்றில் ஏறி உதைச்சா அது விஜயகாந்த்.
- அப்துல் கலாம் என்றால் அக்னி & பிருத்வி இராக்கெட்டு, அணுகுண்டும் நினைவுக்கு வரும்.
- தமிழ்வாணன் என்றால் தொப்பியுடன் கண்ணாடி அணிந்த படம் நினைவுக்கு வரும்.
- பாரதியார் என்றால் முண்டாசு & முறுக்கு மீசை நினைவுக்கு வரும்.
- பெரியார் என்றால் வெண்தாடி உடைய வயதானவர் நினைவுக்கு வருவார்.
- பேஷ் பேஷ் நன்னா இருக்குன்னு சொன்னா நரசூஸ் காபி நினைவுக்கு வரும். (இது உசிலைமணி நடிச்சதுங்க)
- நான் வளருகிறேனே மம்மி அப்படின்னா காம்பிளான் நினைவுக்கு வரும்.
- 32 ஊட்டச்சத்துக்கள் உள்ளது அப்படின்னா கார்லிக்ஸ் (Horlicks) நினைவுக்கு வரும்.
- இது பில்டர் காபியான்னு கேட்டா புரூக் பாண்ட் நினைவுக்கு வரும்.
- புதுசு கண்ணா புதுசு அப்படின்னா குங்குமம் இதழ் நினைவுக்கு வரும்.
- நான் தொலைக்காட்சி பார்த்து நாளாகிவிட்டது. ( சொல்லாமலே தெரியுது அப்படிங்கிறீங்களா)
- பழம FETNA வுல தொப்பியோட இருக்கும் படத்தை பார்த்ததும் எழுத ஆரம்பித்தது. (என்னா சுறு சுறுப்பு)
அதுபோல பழமைபேசி என்றால் தொப்பி நினைவுக்கு வரும்\வரவேண்டும். . இப்ப புரியுதா அவர் தொப்பியோடயே சுத்தும் இரகசியம்.
தொப்பில என்ன கொக்கி? பழமை தொப்பியில் ஒரு சின்னம் போட உள்ளார், அது என்னவென்று இன்னும் முடிவாகவில்லை. உங்களுக்கு ஏதாவது தோன்றினால் தெரிவிக்கவும். ஏன் நீல நிறம்? அது பழமைக்கு பிடித்த நிறம்.
5 கருத்துகள்:
ஓ... இது தான் ரகசியமா? இப்ப புரியுது.
ஆமாங்க பெயரிலி.
என் இடுகை & பின்னூட்டம் தமிழ்மணத்துல தெரியமாட்டிக்குது. அதனால இது சோதனை பின்னூட்டம்.
அஃகஃகா! இப்பிடி வேறயா.... அவ்வ்வ்வ்....
\\அஃகஃகா! இப்பிடி வேறயா.... அவ்வ்வ்வ்....\\
உண்மை தெரிஞ்சா இடுகை போட்டுறுவம்மல்ல இஃகிஃகி
கருத்துரையிடுக