வணக்கம்
திங்கள், நவம்பர் 09, 2009
குமாரமங்கலம் - புரியாதது
இவங்க சொந்த ஊர் திருச்செங்கோடுக்கு பக்கத்திலுள்ள குமரமங்கலம். குமரமங்கலத்துல இருந்த ஜமீன் பரம்பரையை சேர்ந்தவங்களாம் இவங்க. இவங்க பேரு ரங்கராசன் குமரமங்கலம், மோகன் குமரமங்கலம் அப்படின்னு தான் இருந்திருக்கனும். குமரமங்கலம் எப்படி குமாரமங்கலம் ஆச்சின்னு தெரியலை. kumar - குமார் மாதிரி Kumaramagalam என்று ஆங்கிலத்தில் எழுதினதை குமாரமங்கலம் என்று தப்பா படிச்சு அப்படி ஆகி இருக்கலாம் என்பது என் கணிப்பு.
பிர்லா குழுமத்தை சார்ந்தவரோட பெயருல எப்படி குமாரமங்கலம் சேர்ந்துச்சுன்னு தான் புரியலை. ஆதித்ய குமாரமங்கலம் பிர்லாவோட அம்மா இராஜசிரீ தமிழ்நாட்டை சேர்ந்தவங்க. மதுரை மார்வாரி குடும்பத்தை சேர்ந்தவங்க. மதுரைல படிப்ப முடிச்சாங்க. அவங்களுக்கும் குமாரமங்கலம்\குமரமங்கலத்துக்கும் எந்த தொடர்பும் இல்ல. இவரு அப்பா பேரு ஆதித்திய விக்ரம் பிர்லா. இவங்க நிருவாகத்தின் கீழ் தான் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான BITS பிலானி வருது.
குமார் மங்கலம் அப்படிங்கிறத தான் சிலர் குமாரமங்கலம் அப்படின்னு சொல்லறாங்களா அல்ல குமாரமங்கலம் அப்படிங்கிறதை சிலர் குமார் மங்கலம் அப்படிங்கறாங்களான்னு புரியலை. இந்த இடுகையை படிக்கறவங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க
வெள்ளி, அக்டோபர் 30, 2009
தினமணி கருத்துப்படம் - முல்லை, குவாத்ரோச்சி, உசார், அமைச்சர்
முல்லைப்பெரியார் அணை சிக்கலை என்ன லாவகமா தலைவர் கருணாநிதி தீர்க்கப்போறார்ன்னு பாருங்க.

வழக்கில் இருந்து தப்ப ஒரே வழி பேரை குவாத்ரோச்சின்னு மாத்திக்கிறதுதான். பேரை குவாத்தோச்சின்னு மாத்திக்க நிறைய பேர் வந்ததால அரசு அலுவலகத்தில் விண்ணப்பம் தீர்ந்திடுச்சாம். அந்த விண்ணப்பத்த முதல்லயே பேரை குவாத்ரோச்சின்னு மாற்றிக்கிட்டவர் விலை அதிகம் வைச்சு வெளியில் விக்கறதா பேசிக்கிறாங்க.

பிரமரும் உள்துறை அமைச்சரும் ரொம்ப உசாரா இருக்காங்க. இதைத் தான் வரும் முன் காப்பது என்கிறார்களோ?

தலைவருக்கு தெரியும்யா யாரை சட்டமன்ற உறுப்பினராக்கனும் யாரை மக்களவை உறுப்பினராக்கனும்னு அதுலையும் யாரை எப்ப எங்க அமைச்சராக்கனும்ன்னு. அதனால தான் நாம் அவரை அரசியல் சாணக்கியன் அப்படின்னு சொல்லறோம்.
புதன், அக்டோபர் 28, 2009
அரசு பேருந்தில் தமிழ் பதிவு எண்
TN 33 N 5231 என்ற பேருந்து எண்ணானது தநா 33 நா 5231 என்று தமிழ் படுத்தியிருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்கு N என்பது நா ஆகும்.
எனக்கும் என் வண்டியின் எண்களை தமிழில் எழுத வேண்டும் என்று ஆசை. தமிழக அரசு பேருந்து எண் போல் பாதி தமிழ் அல்லாமல் கர்நாடக அரசு பேருந்துகளில் முழு கன்னடத்தில் இருப்பதை போல் முழு தமிழில் எழுதவே விருப்பம். எனக்கு தமிழ் எண்கள் தெரியும். என் வண்டியின் எண் TN 12 A 3456 அதை தநா ௧௨ A ௩௪௫௬ என்று எழுத ஆசை. இங்கு A என்பதற்கு என்ன தமிழ் எழுத்தை எழுதுவது என்று குழப்பம். A என்பதற்கு அ என்று எழுதலாமா? N என்பதற்கு 'நா' என்று எப்படி எழுதினார்கள் என்று புரியவில்லை. வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலோ அல்லது மற்ற அரசு அலுவலகங்களிலோ இது தொடர்பான செய்தி அல்லது உத்தரவு உண்டா? அவ்வாறு இருந்தால் ஏன் இதை பரவலாக அறியச்செய்யக்கூடாது? எந்த உத்தரவும் இல்லையென்றால் எதை கொண்டு இவர்கள் N என்பதை 'நா' என்று முடிவெடுத்தார்கள்? தமிழ் பரப்பும் இவர்கள் முயற்சியை மற்றவர்கள் ஏன் செய்யக்கூடாது? அதற்கான தகவலை அரசு ஏன் மறைக்கவேண்டும்?
கர்நாடக அரசு பேருந்து மற்றும் தமிழக அரசு பேருந்துகளை படம் பிடிக்க மறந்து விட்டேன். இப்போ எனக்கு அந்த வாய்ப்பு இல்லை. பெங்களூர், தமிழக பதிவர்கள் புகைப்படம் எடுத்து அனுப்பினால் தான் உண்டு.
தமிழ் எண்கள்;
௧ - 1
௨ - 2
௩ - 3
௪ - 4
௫ - 5
௬ - 6
௭ - 7
௮ - 8
௯ - 9
௰ - 10
௱ - 100
௲ - 1000
செவ்வாய், அக்டோபர் 27, 2009
தினமணி கருத்துப்படம் - ஐநா, ஈழம், அரசியல்
கருணாநிதியா தேடி அமைத்த வேலி இது. இதுல இருந்து அவரை காப்பாற்றுவதாவது. அவரை மீறி உடையக்கூடியது ஒரு பக்கம் தான் அது காங்கிரசு கூட்டணி. அது உடையக்கூடாதுன்னு தான் எல்லா வேலையும் செய்கிறார். உடன்பிறப்பே இது 2004 அல்ல 2009, எல்லா கணக்கும் மாறி போயிடுச்சி. மீதி மூனு பக்கமும் அசைக்க முடியாத வலுவோட இருக்கு.

ஐநா-ன்னு ஒன்னு இருக்கா? ஓஓஓ இருந்ததா...

சிபிஐ சோதனை என்பது அரசியல் சதுரங்கத்தில் பயன்படும் ஒரு சீட்டு. அதுக்கு போயி யாராவது(அரசியல்வாதி) கவலைப்படுவாங்களா? அரசியல்ல இதல்லாம் சகஜம்ப்பா...
வெள்ளி, அக்டோபர் 23, 2009
வாஸ்து - எதிரில் கண்டது 3
தெரிந்த ஒருவரின் நிலம்\வீடு இரண்டு கிழமேற்கு தெருக்களுக்கு நடுவில் இருந்தது. தெற்கு பார்த்த பகுதியில் இருந்த தெரு அகலமானது. வடக்கு பார்த்த பகுதியில் இருந்த தெரு அகலம் சற்று குறைவானது. வடக்கு பார்த்த தெருவை அவர்கள் புழங்கவில்லை. உயரமான (8 ~ 10 அடி) மதிலெலுப்பி இருந்தார்கள். அதனால் அவங்க வீட்டை கூட இத்தெருவில் இருப்பவர்களால் பார்க்க முடியாது. செல்வாக்காக இருந்தார்கள். புதிய வீடு கட்டலாமென முடிவு செய்தார்கள். எல்லோரும் வாஸ்து வாஸ்து-ன்னு அலையறப்போ அவங்க மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா? வாஸ்துகாரங்க அறிவுரைப்படி தான வீடு கட்ட முடியும்.
வாஸ்துகாரங்க வந்தாங்க டும் டும் டும்
தெற்கு பார்த்த தெருவுக்கு மதில் வந்தது டும் டும் டும்
வடக்கு பார்த்த தெருவின் மதில் போச்சு டும் டும் டும்
பூமி பூசை, கடக்கால் அதாவது அஸ்திவாரம் எல்லாம் தொழில் முறை வாஸ்துகாரரின் சொல்படி கேட்டு வீடு கட்டதொடங்கினார்கள். பல சிக்கல்கள் எழுந்தன, (எனக்கு என்ன மாதிரியான சிக்கல்கள் என்று தெரியவில்லை). வேறு வாஸ்துகாரரை அழைத்து காட்டினார்கள், அவர் சில வாஸ்து திருத்தங்களை சொன்னார் அப்படியும் சிக்கல் தீரவில்லை வேறு வாஸ்துகாரரை அழைத்து காட்டினார்கள், அவர் சில வாஸ்து திருத்தங்களை சொன்னார். எனக்கு தெரிந்து 4 ~ 5 வாஸ்துகாரரை அழைத்து காட்டியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்படி இப்படின்னு வீடு கட்டி முடித்து புது மனை புகுவிழா நடத்தினார்கள். 3 மாடி கட்டடம். மார்பிள் தரை, தேக்கு மர கதவுன்னு நல்லா செலவு பண்ணி கட்டினார்கள். என்ன இந்த வீடு கட்டினதில் அவர்களுக்கு சில பண நட்டங்கள் ஏற்பட்டது. அதாவது அவர்கள் உடைமைகள் சிலவற்றை விற்க நேரிட்டது.
இவ்வளவு செலவு பண்ணி கட்டிய வீட்டில் அவர்கள் எப்படி இருந்தார்கள்? குடி இருந்தா தான சொல்ல முடியும். மேலும் பல சிக்கல்கள் வரவே சோசியக்காரரின் அறிவுரைப்படி அவர்கள் வாடகை வீட்டுக்கு குடி பெயர்ந்தார்கள். பல லட்சங்கள் போட்டு கட்டிய புது வீட்டை வாடகைக்கு விட்டார்கள். நாலஞ்சு வாடகை வீடு மாற்றி விட்டார்கள். என்ன கொடுமை சரவணன் மன்னிக்க வாஸ்து இது?
ஐந்து ஆண்டுக்குப்பிறகு மூன்றாவது மாடிக்கு குடி வந்துட்டாங்க. மூன்றாவது மாடியில் 2 அறைதான் உள்ளது. உங்களுக்கே தெரியும் கடைசி மாடியை நாம் எப்படி கட்டுவோம் என்று. இதற்கு மேல் சொன்னால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சொல்வது போல் ஆகும், அதனால மேலும் சொல்லாம நிறுத்திக்கிறது தான் நல்லது.
.
.
வியாழன், அக்டோபர் 22, 2009
வாஸ்து - எதிரில் கண்டது 2
6x6, 6x8, 8x8, 8x10, 10x10, 10x17, 10x11, 10x16, 16x17 என்று அறையின் அளவு இருப்பதன் ரகசியம் இது தான் (நம்மூரில்).
அடி அளவுகளின் பலன்கள்
6 - நன்மை ஏற்படும்
7 - தரித்திரம் பிடுங்கி தின்னும்
8 - செல்வம் செல்வாக்கு படிப்படியாக உயரும்
9 - துன்பம் துயரம்
10 - பொருள் சேரும் தினமும் விருந்து
11 - மகிழ்ச்சியும் வளமும் பெருகும்
12 - துயரம் புத்திரசோகம்
13 - துன்பம் நோயினால் அவதி
14 - பொருள் இழப்பு, கவலை
15 - துன்பம் துயரம்
16 - தனசேர்க்கை, குறைவற்ற வாழ்க்கை
17 - விரோதிகள் பணிவர்
18 - கைப்பொருள் இழப்பு, வீடு அழியும்
19 - புத்திர பாக்கியம் கிடையாது, வறுமை உண்டு
20 - செய்தொழில் வெற்றி, சுகபோகம்
21 - பொருள் விருத்தி, புகழ் உண்டு
22 - விரோதிகள் நாசம்
23 - கெடுதி ஏற்படும்
24 - வரவும் செலவும் சமம்
25 - மனைவிக்கு கண்டம்
26 - பொருள் அபிவிருத்தி
27 - சமூக கவுரவம் அதிகரிக்கும்
28 - தெய்வ அருள் கிட்டும், சுபிட்சம் உண்டாகும்
29 - வறுமை ஒழியும்
30 - லட்சுமி கடாட்சம், மக்கள் செல்வம் அதிகரிக்கும்
31 - தெய்வ அருள் கிட்டும்
32 - செல்வ அபிவிருத்தி, வெளிநாடு பயணம்
33 - வாழ்க்கையின் நிலை உயரும்
34 - இடமாற்றம் ஏற்படும்
35 - திருமகள் அருள்
36 - சுகபோக வாழ்க்கை ஏற்படும்
37 - செய்தொழில் முன்னேற்றம்
38 - வறுமை, துன்பம்
39 - நல்ல வாழ்வு
40 - விரோதிகள் வலிமை பெறுவர்
41 - செல்வம் பெருகும்
42 - அஷ்டலட்சுமி வாசம்
43 - நன்மை ஏற்படாது
44 - பெரிய இழப்பு உண்டாகும்
45 - மக்கள் செல்வம் அதிகரிக்கும்
46 - வறுமை, நோய்
47 - பொருள் இழப்பு
48 - தீயினால் ஆபத்து
49 - தவறுகள், இழப்புகள்
50 - நன்மை உண்டாகாது
51 - வீண் தொல்லைகள்
52 - பொருள் அபிவிருத்தி
53 - பெண்களால் பொருள் நட்டம்
54 - அரசின் சீற்றம்
55 - உறவினர் விரோதம்
56 - குடும்ப விருத்தி
57 - சந்ததி நாசம்
58 - கண்டம் ஏற்படும்
59 - கவலைகள் வறுமை
60 - செய்தொழில் அபிவிருத்தி
.
.
புதன், அக்டோபர் 21, 2009
வாஸ்து - எதிரில் கண்டது
வடக்கிலும் கிழக்கிலும் அதிக காலியிடம் வேண்டும் என்பது வாஸ்து விதி. அப்ப தெற்கு, மேற்கு? அது இரண்டும் ஆகாத இடங்கள் அதனால் அங்கு காலியிடங்கள் கூடாது அல்லது குறைவான காலியிடம் இருக்கலாம். குறிப்பாக வடக்கு & கிழக்கு காலியிடத்தை ஞவிட தெற்கு & மேற்கு காலியிடங்கள் குறைவாக இருக்க வேண்டும். தெற்கு, மேற்கு பகுதி உயர்ந்தும் வடக்கு, கிழக்கு பகுதி தாழ்ந்தும் இருக்கவேண்டும். ஈசானிய மூலையாகிய வடகிழக்கில் கிணறு அதாவது நீர் தேங்கும் தொட்டி (நிலத்தில்) இருக்க வேண்டும். அக்னி மூலையாகிய தென்கிழக்கில் சமையலறை இருக்கவேண்டும். பழனி மூலையாகிய தென்மேற்கு மூலை உயர்ந்து இருக்கவேண்டும், அதனால் இப்பகுதியில் நீர் தேங்கும் தொட்டியை (மாடியில்) அமைக்கவும். வாயு மூலையாகிய வடமேற்கு மூலையிலோ அல்லது மேற்கு பகுதியிலோ கழிவறை & கழிவறை தொட்டி இருக்கவேண்டும்.
எந்த பகுதியில் பூசை அறை, படுக்கை அறை, பணம் வைக்கும் பெட்டி இருக்கலாம் என்றெல்லாம் வாஸ்துவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
வாஸ்துவினால் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன. இது விற்கும் மனைகளின் விலையில் கூட தெரியும். கிழமேற்காக செல்லும் சாலையின் இருபுறமும் உள்ள நிலங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. எப்பகுதி நிலம் அதிக விலைக்கு போகும்? தென் பகுதி நிலம் அதாவது வடக்கு நோக்கி உள்ள நிலம் வடபகுதி நிலத்தை விட அதிகமாக விலை போகும். அதுபோலவே கிழக்கு நோக்கி உள்ள நிலம் மேற்கு நோக்கி உள்ள நிலத்தை விட மதிப்பு அதிகமாக இருக்கும்.
வாஸ்து படி வீடு கட்டி வாழ்ந்தால் செல்வத்திற்கும் நலத்திற்கும் குறைவிருக்காது என்பது வாஸ்துகாரர்களின் கூற்று. எனவே வாஸ்து அறிஞர்களின் அறிவுரைபடி வீடு கட்டி நலமாக வளமாக வாழவும்.
.
.
வெள்ளி, அக்டோபர் 16, 2009
தினமணி கருத்துப்படம் - நோபல்
புதன், அக்டோபர் 14, 2009
தினமணி கருத்துப்படம்
வியாழன், ஆகஸ்ட் 20, 2009
வெண்ணைவெட்டி யார்?
http://www.washingtonexaminer.com/world/ap/53694632.html
http://thatstamil.oneindia.in/news/2009/08/20/world-norway-diplomat-blasts-absent-un-chief.html
இதுவரை இல்லாத அளவுக்கு மிக மிக பலவீனமான ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் இருக்கிறார். இலங்கை உள்ளிட்ட எந்தப் பிரச்சினையையும் தீர்க்க அவர் தவறி விட்டார். உலகப் பொருளாதார நெருக்கடி உள்பட உலகில் ஏற்பட்ட எந்த நெருக்கடியையும் சமாளிக்கவும், தீர்க்கவும் அவர் முயற்சிக்கவில்லை. அவரிடம் கொண்டு செல்லப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுமே செவிடன் காதில் ஊதிய சங்காக மாறியுள்ளது என்று நார்வே கடுமையாக விமர்சித்துள்ளது.
ஐ.நாவுக்கான நார்வே தூதர் மோனா ஜூல் இதுதொடர்பாக நார்வே வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை நார்வேயின் ஆஃப்டன்போஸ்டன் இதழ் வெளியிட்டுள்ளது.
அதில் மோனா கூறியிருப்பதாவது...
இதுவரை இருந்த ஐ.நா. பொதுச் செயலாளர்களிலேயே மிக மிக பலவீனமானவர் பான் கி மூன்தான். கொஞ்சம் கூட திறமையே இல்லாமல் இருக்கிறார். எந்தவிதமான ஆக்கப்பூர்வமான செயல்பாடும் அவரிடம் இல்லை. சமீபத்திய பல்வேறு உலக நெருக்கடிகளை தீர்த்து வைக்கவோ அல்லது சமாளிக்கவோ அவர் சிறிதும் முயற்சி எடுக்கவில்லை.
சவால்களை துரிதமாக சந்திக்கவும், தீர்த்து வைக்கவும் அவர் தவறி விட்டார். அவர் மிகத் தாமதமாக விழித்து எழுந்தபோது கிட்டத்தட்ட அந்த நெருக்கடிகள் கை விட்டுப் போயிருந்தன அல்லது எல்லாமே நடந்து முடிந்து போயிருந்தன. பான் கி மூனின் செயல்பாடுகள் ஐ.நா. சபையின் அனைத்துத் தரப்பினைரயும் எரிச்சல்பட வைத்து வருகிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு உலகப் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலையில் ஐ.நா. சபை உள்ளது. ஆனால் அதற்கேற்ற வேகமோ, விவேகமோ பான் கி மூனிடம் இல்லாதது வேதனை அலிக்கிறது. எல்லாப் பிரச்சினைகளிலும் அவர் தலையிடாமல் ஒதுங்கியிருப்பது புரியாத புதிராக உள்ளது. சந்தேகங்களை எழுப்புகிறது.
உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதுகுறித்து ஐ.நா. சபையிலிருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லை. அதேபோல உலக சுற்றுச்சூழல் தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் கூட ஐ.நா. பங்கெடுக்காமல் உள்ளது வியப்பைத் தருகிறது.
இலங்கையில் அப்பாவிகள் கொல்லப்பட காரணம் மூன்தான்...
மியான்மர் ஜனநாயகத் தலைவி ஆங் சான் சூகியி விடுதலை தொடர்பாக பான் கி மூன் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வாய் மூடி மெளனியாக இருந்து வருகிறார். அவர் அங்கு சென்றதால் எந்தப் பலனும் ஏற்படவில்லை. மியான்மரில் நடப்பதை அவர் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இலங்கையில் இந்த ஆண்டு நடந்த இனப்போரின் முடிவின்போது நடந்த பெருமளவிலான போர்க் குற்றங்கள், அப்பாவி மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகள், அட்டூழியங்களை தடுக்க பான் கி மூன் தவறி விட்டார். அதற்காக அவர் முயற்சிகளைக் கூட எடுக்கவில்லை.
இவை மட்டுமல்ல, தர்பூர், சோமாலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, காங்கோ என எந்தவித பிரச்சினை குறித்தும் அவர் ஆக்கப்பூர்வமாக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரிடம் கொண்டு செல்லப்பட்ட எல்லா பிரச்சினையிலும், செவிடன் காதில் ஊதிய சங்காகவே அவர் நடந்து கொண்டிருக்கிறார். எதையும் கவனிக்கும் அக்கறையும் அவரிடம் காணப்படவில்லை.
பான் கி மூன் சிறப்பாக செயல்பட சிறிது கால அவகாசம் தரலாம் என்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும், தூதர்களும் முன்பு கூறினார்கள். ஆனால் இப்போது பான் கி மூனின் போக்கைப் பார்த்தால் அவரிடம் எந்தவிதமான செயல் திறனும் இல்லாததுதான் பெரிய பிரச்சினையாகத் தெரிகிறது என்று சரமாரியாக விமர்சித்துள்ளார் மோனா.
நார்வே தூதரின் இந்த பகிரங்க விமர்சனத்தால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பான் கி மூன் நார்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்த நிலையில் மோனா வெளியிட்டுள்ள இந்த அறிக்கை நார்வே அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய், ஆகஸ்ட் 18, 2009
சிரிக்க சிந்திக்க - 2
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் அறை பக்கம் போறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.
நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
சார்,
டீ மாஸ்டர் டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...
''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''
ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?
இல்லை அவங்களே சொன்னங்க...
திங்கள், ஆகஸ்ட் 17, 2009
சிரிக்க சிந்திக்க - 1
திருமணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
திருமணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து ஆண்டிற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது ஆண்டிற்கு பிறகு டாபர்மேன்...
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா...
அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது!
உன்னை யாரவது லூசுன்னு சொன்னா
கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!
காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா.
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீப் இட் அப்.
டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப அதிகமாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
புதன், ஆகஸ்ட் 12, 2009
புகழ்பெற்ற பதிவரும் அடையாளமும்.
- MGR என்று சொன்னாலே வெள்ளை நிற தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடி நினைவுக்கு வரும். அவரு போட்ட வெள்ளை நிற தொப்பியின் வடிவமைப்பில் தமிழ்நாட்டில் யாரும் தொப்பி போட்டு நான் பார்த்ததில்லை. விபி சிங்கும் அந்த வடிவமைப்புல்ல தொப்பி போட்டிருப்பார்.
- கருணாநிதி என்றாலே கர கர குரலும் கருப்பு கண்ணாடியும் நினைவுக்கு வரும். பலருக்கு கடிதமும் தந்தியும் நினைவுக்கு வரும்.
- செயலலிதா என்றால் கொடாநாடு நினைவுக்கு வருதோ இல்லையோ கொடாநாடு என்றால் செயலலிதா நினைவுக்கு வருவார்.

- இரஜினிகாந்த் என்றால் தூக்கி போட்டு சிகரெட் பிடிப்பது, தலை முடியை கையால் கோதி விடுவது நினைவுக்கு வரும்.
- நம்பியார் என்றால் கையை பிசைந்து கொண்டு பேசுவது, சபரிமலை ஐயப்பன் சாமி நினைவுக்கு வரும்.
- பாகவதர் என்றால் சிகை அலங்காரம் நினைவுக்கு வரும்.
- என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டிங்கிறிங்களே அப்படின்னா அது சத்தியராஜ்.
- 007 அப்படின்னா அது James Bond.
- கைக்கு எட்டும் தூரத்தில் உள்ளவனை சுவற்றில் ஏறி உதைச்சா அது விஜயகாந்த்.
- அப்துல் கலாம் என்றால் அக்னி & பிருத்வி இராக்கெட்டு, அணுகுண்டும் நினைவுக்கு வரும்.
- தமிழ்வாணன் என்றால் தொப்பியுடன் கண்ணாடி அணிந்த படம் நினைவுக்கு வரும்.
- பாரதியார் என்றால் முண்டாசு & முறுக்கு மீசை நினைவுக்கு வரும்.
- பெரியார் என்றால் வெண்தாடி உடைய வயதானவர் நினைவுக்கு வருவார்.
- பேஷ் பேஷ் நன்னா இருக்குன்னு சொன்னா நரசூஸ் காபி நினைவுக்கு வரும். (இது உசிலைமணி நடிச்சதுங்க)
- நான் வளருகிறேனே மம்மி அப்படின்னா காம்பிளான் நினைவுக்கு வரும்.
- 32 ஊட்டச்சத்துக்கள் உள்ளது அப்படின்னா கார்லிக்ஸ் (Horlicks) நினைவுக்கு வரும்.
- இது பில்டர் காபியான்னு கேட்டா புரூக் பாண்ட் நினைவுக்கு வரும்.
- புதுசு கண்ணா புதுசு அப்படின்னா குங்குமம் இதழ் நினைவுக்கு வரும்.
- நான் தொலைக்காட்சி பார்த்து நாளாகிவிட்டது. ( சொல்லாமலே தெரியுது அப்படிங்கிறீங்களா)
- பழம FETNA வுல தொப்பியோட இருக்கும் படத்தை பார்த்ததும் எழுத ஆரம்பித்தது. (என்னா சுறு சுறுப்பு)
அதுபோல பழமைபேசி என்றால் தொப்பி நினைவுக்கு வரும்\வரவேண்டும். . இப்ப புரியுதா அவர் தொப்பியோடயே சுத்தும் இரகசியம்.
தொப்பில என்ன கொக்கி? பழமை தொப்பியில் ஒரு சின்னம் போட உள்ளார், அது என்னவென்று இன்னும் முடிவாகவில்லை. உங்களுக்கு ஏதாவது தோன்றினால் தெரிவிக்கவும். ஏன் நீல நிறம்? அது பழமைக்கு பிடித்த நிறம்.
செவ்வாய், ஜூன் 30, 2009
Indian Express - 10ம் வகுப்பு பொது தேர்வு

10ம் வகுப்பு பொது தேர்வு கூடாதுன்னு கபில் சிபல் ஏன் சொல்லறாருன்னு இப்ப புரியுதா மக்களே...
இப்ப 10 அப்புறம் 12வது அப்புறம் கல்லூரி அப்புறம் தேர்வே கூடாதும்பார். தேர்வு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தை தருகிறது என்பதை இராகுல் சோனியாவை விட யாருக்கு நன்கு புரியும்?
இராகுல் காந்தி பற்றி தப்பா பேசாதிங்க. அவரு தான் இந்தியாவின் விடிவெள்ளி.
காக்கா புடிக்கணும்னு முடிவு பண்ணிட்டா என்னவெல்லாம் பண்றாங்க பாருங்க..
கபில்சிபல் உச்ச நீதிமன்றத்தில் பெரிய வழக்குரைஞராக இருந்தவர் என்று கேள்வி.
வெள்ளி, ஜூன் 19, 2009
தினமணி கருத்துப்படம் - நாட்டு நடப்பு

(1)தோற்றப்போனதுக்கு காரணம் இப்ப தான் தெரிஞ்சுது, மக்களே இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மனு போடுங்க, உங்களுக்கு தந்தி தான் கொடுக்கத்தெரியுமுன்னா தந்தி கொடுங்க.

(2)தமிழக கேப்டன் பெயருக்கு இழுக்கு சேர்த்திட்டார் இந்த கிரிக்கெட் கேப்டன்.

(3) 33% கிடைக்குமான்னே தெரியல 50% கேட்குறீங்களே.

(4) புழல் சிறையில் வெல்டிங் குமாரை போட்டு தள்ளுனதால வந்த பயம். பயப்படுறதுல்ல நியாயம் இருக்கத்தான் செய்யுது.
இ
திங்கள், ஜூன் 08, 2009
என்னுடைய 32 பதில்கள்
நண்பர் பதிவர் பழமைபேசி என்னை இந்த தொடர் இடுகையில் இழுத்து விட்டுட்டார். மூனு நாலு நாளா சிந்தனை பண்ணி இந்த இடுகை இப்ப இங்க.
1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
என் நண்பனுக்கு பின்னூட்டம் இடுவதற்காக இப்பெயரை நான் வைத்துக்கொண்டேன். என் உண்மையான பெயர் (குறும்பன் யாருன்னு) அவனுக்கு தெரியக்கூடாது பாருங்க இஃகி்ஃகி.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
நான் ரொம்ப இளகிய மனம் உள்ளவங்க. யார் கண்ணுலயாச்சும் க(த)ண்ணீர பார்த்துட்டா தானா என் கண்ணுல இருந்து க(த)ண்ணீர் வந்துரும். சோகப் படம் பார்க்கறப்போ சின்ன துணிய கையில் வைச்சிக்கிறது வழக்கம். என்ன போய் இப்படி ஒரு கேள்வி கேக்கறீங்களே?????
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
கோழி கிறுக்கல் எனக்கு புடிக்குமா? என்ன கேள்வி இது?
4.பிடித்த மதிய உணவு என்ன?
சுவையான உணவு அனைத்தும்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
உடனே வச்சுக்கிட்டா அது நட்பே இல்லைங்க. பழகி கொஞ்ச நாள் கழிச்சு தெரிந்தவர் நண்பரா மாறுவார், மாறாமலும் இருப்பார்.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
இரண்டும்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
ஆளை தான்.
8.உங்ககிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
மிகச்சில கொள்கைகளில் உறுதியாக இருப்பது. பல பல..... கொள்கைகளில் உறுதியில்லாமல் இருப்பது.
9. உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விஷயம் எது?
பிடிக்காத விதயமே கிடையாது.
10.யார் பக்கத்தில் இல்லாமல் இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
யாரும் பக்கத்தில் இல்லை அதனால தான் இந்த கேள்விகளுக்கு தட்டச்ச முடிகிறது. என் நிலையை புரிந்து கொண்டு கேள்வி கேளுங்கள்.
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெள்ளை & பச்சை
12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
புதிய பூவிது பூத்தது...
13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நீலம்
14.பிடித்த மணம்?
மரியாதைக்குரிய மணம். அதாங்க திருமணம். இஃகிஃகி.
பசியோடு இருக்கும் போது வரும் சாம்பார், குழம்பு, இரசம், பொரியல் மணம்.
15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
அடுத்தவங்க மேல உங்களுக்கு அப்படி என்ன வெறுப்பு? அடுத்தவங்களாவது் தப்பிக்கட்டும்.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
அவரின் பதிவிலுள்ள எல்லா இடுகையும் பிடிக்கும்.
17. பிடித்த விளையாட்டு?
முதலில் கிரிக்கெட், இப்போ அத சுத்தமா பாக்கறது இல்ல. பார்க்காத என்று அடுத்தவர்களுக்கு அறிவுரை வேற பண்ணுவேன். இப்ப நீச்சல், வலைப்பந்து, உதைபந்து, டென்னிஸ்
18. கண்ணாடி அணிபவரா?
அல்ல
19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
நகைச்சுவைப் படங்கள்.
20.கடைசியாகப் பார்த்த படம்?
Just Cause - தொலைக்காட்சியில் பார்த்ததுங்க, அரங்குக்கு போய் பார்த்து 2 ஆண்டு ஆகிடுச்சி.
21. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
புத்தகம் படிக்கற நல்ல பழக்கம் எனக்கு கொஞ்சம் மன்னிக்க நிறைய கம்மி.
22.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
ஒழுங்கு படுத்தப்பட்ட சத்தம் பிடிக்கும், ஒழுங்கு படுத்தப்படாத சத்தம் பிடிக்காது.
23.பிடித்த பருவ காலம் எது?
இக்கரைக்கு அக்கரை பச்ச. அதனால எனக்கு எல்லா பருவமும் பிடிக்கும்.
24. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
ஆடிக்கொன்னு அமாவாசைக்கொன்னு
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு?
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு, தொலைவை நீங்களே கணக்கு போட்டுக்குங்க.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தன்னடக்கம் தடுக்கிறது. இஃகிஃகி
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ஒன்னா ரெண்டா நிறைய விதயங்கள் இருக்கு.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சோம்பல்.
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?
நண்பர்களோட போயி கூத்தடிக்கும் அனைத்து இடங்களும் எனக்கு பிடித்த சுற்றுலாதலங்களே.
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
அடுத்தவர்களுக்கு உதவும் நிலையில் இருக்க வேண்டும்.
31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
இணையம் பார்ப்பது. (எந்த சிறு இடஞ்சலும் இருக்காது பாருங்க, இஃகிஃகி)
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
பெரிய பெரிய ஆளுங்களெல்லாம் வாழ்வை பற்றி நிறைய சொல்லி இருக்காங்க, அதை தெரிஞ்சுக்குங்க. .
வியாழன், ஜூன் 04, 2009
"ற்க்" பிழையும் பதிவர்களும்
நன்கு அறியப்பட்ட பதிவர்களும் பல புதிய (எனக்கு) பதிவர்களும் தங்களது இடுகைகளில் "ற்க்" பிழை செய்வதை காண முடிந்தது. நான் பிழையின்றி தமிழ் எழுதுபவன் இல்லை, எழுதவேண்டும் என்று முயற்சிப்பவன். ஆனால் எனக்கு நன்கு தெரிந்த தமிழ் இலக்கண விதி இது. அதாவது "ற்" என்ற எழுத்திற்கு அப்புறம் மெய்யெழுத்து வராது. சந்திப்பிழையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
வல்லினப் புள்ளி எழுத்து ஆறின் (க், ச், ட், த், ப், ற்) பின்னும் மெய்யெழுத்து வராது என்பது பதிவர் சவுக்கடியால் அறிந்துகொண்ட புது விதி.
அதற்க்கு, இதற்க்கு (தவறு) ---> அதற்கு, இதற்கு (சரி)
முயற்ச்சி, அயற்ச்சி (தவறு) ---> முயற்சி, அயற்சி (சரி)
என்பதற்க்காக (தவறு) ---> என்பதற்காக (சரி)
தற்ப்போது (தவறு) ---> தற்போது (சரி)
இன்னுமொரு விதி , எந்தச் சொல்லும் மெய்யெழுத்தில் (புள்ளி வைத்தயெழுத்தில்) தொடங்காது. இந்த விதியை மீற கிரந்த எழுத்தை பயன்படுத்துறாங்க. கிரந்தம் தமிழ் எழுத்து இல்லை எனவே தமிழ் இலக்கண விதி இதற்கு பொருந்தாது என்று நினைக்கிறார்கள் போலும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ஸ்டாலின் என்ற பெயரை காட்டுவார்கள். இதை இசுடாலின் என்று எழுதலாம் என்பதை மறந்து விடுகிறார்கள். தமிழகத்தில் இசுடாலின் கருணாநிதியின் மகன், தற்போதய துணை முதல்வர், எனவே இந்த பெயரை காட்டுக்கு அழைப்பவர்கள் ஏராளம். ருசுய அல்லது ஜார்ஜிய மொழியில் இசுடாலினை எப்படி பலுக்குவார்கள்\உச்சரிப்பார்கள் என்று தெரியாது. இதைக்காட்டி பலரும் புள்ளிவைத்த கிரந்தம் எழுத்தில் தமிழ் சொற்களை தொடங்கி எழுதுகிறார்கள், அதுமட்டுமல்லாமல் தமிழ் மெய்யெழுத்திலேயே தமிழ் சொற்களை தொடங்கி எழுதவும் ஆரம்பித்துள்ளார்கள். இது மிக மிக தவறான போக்கு....
விதி என்பதே அதை மீறுவதற்கு தான் என்று சப்பை கட்டு கட்டாமல் இருந்தால் சரி. :-((
சனி, மே 30, 2009
தமிழ்மணத்தின் புதிய வாக்களிக்கும் முறை
சிலரின் இடுகைகள் எப்போதும் 40க்கும் அதிகமான வாசகர் பரிந்துரை வாக்குகளையும், சமீபத்திய ஒரு இடுகை 80க்கும் அதிகமான வாக்குகளையும் பெற்றதனால் தமிழ்மணம் இப்புதிய முறைக்கு வந்திருக்கலாம். அதாவது பதிவர் அல்லாதவரும் பரிந்துரைப்பதால் இவ்வாறு நேருகிறது என கருதியிருக்கலாம், அதுக்கு வாய்ப்பு அதிகம் தான். சில குழுக்கள் மூலம் இவ்வாறு நடப்பதற்கு அதிக வாய்ப்புண்டு. இது வாசகர் பரிந்துரை என்பதையே கேலிக்குள்ளாக்கிவிடுகிறது.
வாசகர் பரிந்துரை என்பதற்கு பதிலாக பதிவர்கள் பரிந்துரை என தலைப்பை மாற்றலாம். வாசகர் அனைவரும் பதிவராக இருப்பது அவசியமில்லையே?
தமிழ்மணத்தில் வாக்களிப்பதற்கு உங்கள் OpenIDஐ பயன்படுத்த வேண்டும்.
உங்கள் ப்ளாகர், வேர்ட்பிரஸ் முகவரிகளே OpenID முகவரி ஆகும். உதாரணமாக கீழே உள்ள பெட்டியில் உங்களது ப்ளாகர் முகவரியை இவ்வாறு அளிக்க வேண்டும் - username.blogspot.com அல்லது username.wordpress.com
அவ்வாறு அளித்தவுடன் ப்ளாகர் தளத்திற்கோ, வேர்ட்பிரஸ் தளத்திற்கோ நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு உங்கள் பயனர்பெயரையும், கடவுச்சொல்லையும் அளிக்க வேண்டும். ப்ளாகர்/வேர்ட்பிரஸ் அதனை சோதித்து அது ஒரு சரியான முகவரியே என்ற தகவலை மட்டும் தமிழ்மணத்திற்கு வழங்கும்
முக்கிய குறிப்பு : உங்கள் பயனர் பெயரோ, கடவுச்சொல்லோ தமிழ்மணத்திற்கு தெரியாது. உங்களது வலைப்பதிவு முகவரி மட்டுமே தமிழ்மணத்திற்கு தெரியும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு OpenID குறித்த தகவல்களை வாசிக்கலாம்
வியாழன், மே 28, 2009
உடன்பிறப்புகளுக்காக ஒரு Cartoon

இருந்தாலும் இந்த cartoon ன பார்த்ததும் மனசு கேக்காம இங்க உங்களுக்காக...;-)

என்னதான் இருந்தாலும் உண்ணாவிரதத்தை இப்படி கேலி ஆக்கி இருக்கக்கூடாது..... (கருத்துபடம் வரைந்தவரை சொல்லலிங்க ... )


