வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், நவம்பர் 09, 2009

குமாரமங்கலம் - புரியாதது

குமாரமங்கலம் அப்படின்னு சொன்னா உங்களில் பல பேருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராசன் குமாரமங்கலம் நினைவுக்கு வருவார். சிலருக்கு ஆதித்ய குமாரமங்கலம் பிர்லா நினைவுக்கு வருவார். ரங்கராசன் குமாரமங்கலம் முன்னாள் மத்திய அமைச்சர் மோகன் குமாரமங்கலத்தோட மகன் என்று பலருக்கு தெரிந்திருக்கும், அவரு முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பராயனோட மகன். சுப்பராயன் விடுதலைக்கு முன் சென்னை மாகாண முதல்வராக இருந்திருக்கிறார். இது நிறைய பேருக்கு தெரியாது.

இவங்க சொந்த ஊர் திருச்செங்கோடுக்கு பக்கத்திலுள்ள குமரமங்கலம். குமரமங்கலத்துல இருந்த ஜமீன் பரம்பரையை சேர்ந்தவங்களாம் இவங்க. இவங்க பேரு ரங்கராசன் குமரமங்கலம், மோகன் குமரமங்கலம் அப்படின்னு தான் இருந்திருக்கனும். குமரமங்கலம் எப்படி குமாரமங்கலம் ஆச்சின்னு தெரியலை. kumar - குமார் மாதிரி Kumaramagalam என்று ஆங்கிலத்தில் எழுதினதை குமாரமங்கலம் என்று தப்பா படிச்சு அப்படி ஆகி இருக்கலாம் என்பது என் கணிப்பு.

பிர்லா குழுமத்தை சார்ந்தவரோட பெயருல எப்படி குமாரமங்கலம் சேர்ந்துச்சுன்னு தான் புரியலை. ஆதித்ய குமாரமங்கலம் பிர்லாவோட அம்மா இராஜசிரீ தமிழ்நாட்டை சேர்ந்தவங்க. மதுரை மார்வாரி குடும்பத்தை சேர்ந்தவங்க. மதுரைல படிப்ப முடிச்சாங்க. அவங்களுக்கும் குமாரமங்கலம்\குமரமங்கலத்துக்கும் எந்த தொடர்பும் இல்ல. இவரு அப்பா பேரு ஆதித்திய விக்ரம் பிர்லா. இவங்க நிருவாகத்தின் கீழ் தான் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான BITS பிலானி வருது.

குமார் மங்கலம் அப்படிங்கிறத தான் சிலர் குமாரமங்கலம் அப்படின்னு சொல்லறாங்களா அல்ல குமாரமங்கலம் அப்படிங்கிறதை சிலர் குமார் மங்கலம் அப்படிங்கறாங்களான்னு புரியலை. இந்த இடுகையை படிக்கறவங்க யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க

3 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

அதான! நான் பிறக்குறதுக்கு முன்னாடி, எங்க வீட்டு வழக்கு ஒன்னு நடந்துட்டு இருந்துச்சு...

அதுல எங்க எதிராளிக்கு N.T.வானமாமலை, எங்க வீட்டாருக்கு மோகன் குமாரமங்கலம். வழக்கு முடிவுக்கு வந்த சில காலத்துலயே ஒரு விமான விபத்துல அவர் போயிட்டதா எங்க அப்பத்தா இருக்குற வரைக்கும் சொல்வாங்க!

குறும்பன் சொன்னது…

பழமை, ஆமாங்க இரண்டு பேருமே பெரிய வழக்கறிஞர்கள். மோகன் குமாரமங்கலம் அரசியலிலும் நுழைஞ்சு மந்திரி ஆகிட்டார். எல்லாம் அப்பா செல்வாக்கு தான். வானமாமலை புகழ்பெற்ற வழக்கறிஞராகவே அறியப்படுகிறார். சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு மோகன் குமாரமங்கலம் பெயர் தான் வைத்திருக்காங்க. இப்ப மருத்தவகல்லூரி மருத்துவமனை. காரணம் என்னவா இருக்கும்ன்னு நினைக்கறீங்க?

குறும்பன் சொன்னது…

பழமை ஆறைநாட்டுக்காரங்க லேசுபட்ட ஆளு இல்ல போலிருக்கு இஃகிஃகி.