சிலரின் இடுகைகள் எப்போதும் 40க்கும் அதிகமான வாசகர் பரிந்துரை வாக்குகளையும், சமீபத்திய ஒரு இடுகை 80க்கும் அதிகமான வாக்குகளையும் பெற்றதனால் தமிழ்மணம் இப்புதிய முறைக்கு வந்திருக்கலாம். அதாவது பதிவர் அல்லாதவரும் பரிந்துரைப்பதால் இவ்வாறு நேருகிறது என கருதியிருக்கலாம், அதுக்கு வாய்ப்பு அதிகம் தான். சில குழுக்கள் மூலம் இவ்வாறு நடப்பதற்கு அதிக வாய்ப்புண்டு. இது வாசகர் பரிந்துரை என்பதையே கேலிக்குள்ளாக்கிவிடுகிறது.
வாசகர் பரிந்துரை என்பதற்கு பதிலாக பதிவர்கள் பரிந்துரை என தலைப்பை மாற்றலாம். வாசகர் அனைவரும் பதிவராக இருப்பது அவசியமில்லையே?
தமிழ்மணத்தில் வாக்களிப்பதற்கு உங்கள் OpenIDஐ பயன்படுத்த வேண்டும்.
உங்கள் ப்ளாகர், வேர்ட்பிரஸ் முகவரிகளே OpenID முகவரி ஆகும். உதாரணமாக கீழே உள்ள பெட்டியில் உங்களது ப்ளாகர் முகவரியை இவ்வாறு அளிக்க வேண்டும் - username.blogspot.com அல்லது username.wordpress.com
அவ்வாறு அளித்தவுடன் ப்ளாகர் தளத்திற்கோ, வேர்ட்பிரஸ் தளத்திற்கோ நீங்கள் கொண்டு செல்லப்படுவீர்கள். அங்கு உங்கள் பயனர்பெயரையும், கடவுச்சொல்லையும் அளிக்க வேண்டும். ப்ளாகர்/வேர்ட்பிரஸ் அதனை சோதித்து அது ஒரு சரியான முகவரியே என்ற தகவலை மட்டும் தமிழ்மணத்திற்கு வழங்கும்
முக்கிய குறிப்பு : உங்கள் பயனர் பெயரோ, கடவுச்சொல்லோ தமிழ்மணத்திற்கு தெரியாது. உங்களது வலைப்பதிவு முகவரி மட்டுமே தமிழ்மணத்திற்கு தெரியும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு OpenID குறித்த தகவல்களை வாசிக்கலாம்
16 கருத்துகள்:
என்னமோ போங்க..
எனக்கு அதிக பட்சம் பத்து ஓட்டுதான் விழும். அதிலயும் மண்ணா..?
இன்னிக்கு போட்ட போஸ்ட்டுக்கு ஒரு ஓட்டுக் கூட விழலை
என்னாலயே ஓட்டுப் போடமுடியவில்லை
உங்களுக்கும் என்னால ஓட்டுப் போட முடியவில்லை
பிளாகர், வேர்டுபிரெசு என்பதை ஒரு எடுத்துக்காட்டுக்காகத் தான் தமிழ்மணம் தந்திருக்கிறது. இவை தவிர்த்த எண்ணற்ற அடையாளங்களை openid ஆகப் பயன்படுத்தலாம்.
நான் என்னுடைய yahoo மின்மடல் முகவரியைத் தந்து வெற்றிகரமாக ஒரு பதிவுக்கு வாக்களிக்க முடிந்தது. பிற பிரபல openidகள் பற்றி
http://openid.net/get/
பக்கத்தில் காணலாம். கூகுள் கணக்கைக் கூட openidஆகப் பயன்படுத்தலாம்.
எனவே, பதிவு வைத்திருக்காத வழமையான வாசகர்களும் தொடர்ந்து வாக்களிக்க முடியும். ip மாற்றி ஒரே ஆளே திரும்ப திரும்ப வாக்களிப்பதையும், ஒவ்வொரு வாக்குக்கும் ஒரு அடையாளம் தரவுமே openid கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதில் கூட ஒரே ஆளே பல openidகள் வாக்களிக்க முடியுமா தெரியவில்லை. இரண்டாம் முறை பிளாகர் முகவரி வைத்து முயன்ற போது bad signature என்று வருகிறது.
யெப்பா.... அதீத அறிவியல் கூடவே இம்சையையும் கூட்டி வருதே... அட...ச்சே!
ரவி சொன்னது போல username@yahoo.com புழங்க முடிஞ்சது... இந்த இடுகை மூலமா ஒரு தகவல்... அதனால, உங்களுக்கு ஒரு ஒப்பமுக்கும், சபாசும்!
//எனக்கு அதிக பட்சம் பத்து ஓட்டுதான் விழும். அதிலயும் மண்ணா..?//
உங்களுக்காச்சும் 10 விழும் எனக்கு நானே போட்டுகிட்டாதான் உண்டு.
//இன்னிக்கு போட்ட போஸ்ட்டுக்கு ஒரு ஓட்டுக் கூட விழலை
என்னாலயே ஓட்டுப் போடமுடியவில்லை//
இந்த இடுகைக்கு என்னால வாக்கு போடமுடியலைங்க. :-((
//பிளாகர், வேர்டுபிரெசு என்பதை ஒரு எடுத்துக்காட்டுக்காகத் தான் தமிழ்மணம் தந்திருக்கிறது. இவை தவிர்த்த எண்ணற்ற அடையாளங்களை openid ஆகப் பயன்படுத்தலாம்.
//
தவறான எடுத்துக்காட்டு தருவது நல்லதல்லவே. :-(. இது வீணான குழப்புங்களுக்கு தான் வழிவகுக்கும்.
//ரவி சொன்னது போல username@yahoo.com புழங்க முடிஞ்சது... இந்த இடுகை மூலமா ஒரு தகவல்... அதனால, உங்களுக்கு ஒரு ஒப்பமுக்கும், சபாசும்!//
நான் yahoo, gmail id எல்லாம் முயற்சி செய்து பார்த்தேன் ஒன்னும் பலனளிக்கவில்லை. :-(
3 பரிந்துரை இந்த இடுகைக்கு விழுந்திருக்குங்க. இதுல என்னோடது எதுவும் இல்லை. முதல் முறையா அடுத்தவர்கள் அதிகமா பரிந்துரைத்த எனது இடுகை இது தான். :-))
//3 பரிந்துரை இந்த இடுகைக்கு விழுந்திருக்குங்க. இதுல என்னோடது எதுவும் இல்லை. முதல் முறையா அடுத்தவர்கள் அதிகமா பரிந்துரைத்த எனது இடுகை இது தான். :-))//
முகப்புக்கு கொண்டாந்துட்டமுங்களே? வாழ்த்துகள்!
இப்பொழுது வாக்கிடும் பிரச்சினை தீர்ந்துவிட்டது.
ஓப்பன் ஐடி - தமிழுக்கும், திரட்டிகளுக்கும் பயனாவது இதுவே முதன்முறை.
ஆ...வாசகர் பரிந்துரையில் எனது இடுகையா.... பரிந்துரைத்த அனைவருக்கும் நன்றி...
பழைமைபேசிக்கு சிறப்பு நன்றி.
நன்றி கணேசன். யாகூவ வச்சு எனக்கு ஒரு வாக்க போட்டுட்டேன். :-)
தமிழ்மணத்தில் முதல் ஓட்டு உங்களுக்குத் தான் அண்ணாச்சி!
\\தமிழ்மணத்தில் முதல் ஓட்டு உங்களுக்குத் தான் அண்ணாச்சி!\\
வணக்கம் பாஸ்கர், மிக்க நன்றி. என்னோட எல்லா இடுகைக்கும் வாக்கு போட மறந்துடாதிங்க. :-)))
கருத்துரையிடுக