வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், நவம்பர் 28, 2006

கரும்பு விலை அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில், ஒரு டன் கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ.1,025 என்று நிர்ணயம் செய்து முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்து உள்ளார்.

இது பற்றி தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரூ.222.50 உயர்வு

2006-2007 சர்க்கரை ஆண்டில் 9 சதவீதம் பிழி திறனுள்ள ஒரு டன் கரும்புக்கு ரூ.802.50 என்று மத்திய அரசு குறைந்தபட்ச விலையாக நிர்ணயம் செய்துள்ளது.

தமிழக கரும்பு விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட தி.மு.க. அரசு, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச விலையை விடக் கூடுதலாக ரூ.222.50 உயர்த்தி, 9 சதவீதம் பிழி திறன் உள்ள ஒரு டன் கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ.1,025 என்று நிர்ணயம் செய்து முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

முன்தேதியிட்டு.....

இந்த விலை உயர்வு, இந்த நடப்புக் கரும்பாண்டில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கும் பொருந்துமாறு முன் தேதியிட்டு வழங்கப்படும்.

மேலும் 9 சதவீதம் பிழிதிறனுக்குக் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 0.1 சதவீத பிழிதிறனுக்கும் டன் ஒன்றுக்கு ஒன்பது ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


கரும்பு விலையை அதிகரித்து விவசாயிகளை மகிழ்வித்த முதல்வர் கலைஞர் அவர்களை பாராட்டுகிறோம்.

கருத்துகள் இல்லை: