வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், நவம்பர் 28, 2006

ஜெயலலிதாவுக்கு வீரபாண்டியார் பதில்

கரும்புக்கான ஆதார விலையை தமிழக அரசு கமுக்கமாக 200 ரூபாய் குறைத்து விட்டது என்று கூறி அதை கண்டித்து அதிமுக போராட்டம் நடத்தும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதற்கு தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கரும்பு விலை

அ.தி.மு.க. ஆட்சியில் கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.1014 கொடுக்கப்பட்டதாகவும் இப்போது தி.மு.க. ஆட்சியில் கரும்பு விலை ரூ.802 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தவறான தகவலை கூறி இருக்கிறார்.

தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கரும்பு உற்பத்தியாளர்கள்-சர்க்கரை ஆலை அதிபர்கள்-கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் தனி அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு கூடி விவசாயிகளுக்கு கட்டுப்படியாககக்கூடிய விலையாக மாநில அரசாங்கத்தின் பரிந்துரை விலை அறிவிக்கப்பட்டு வந்தது. மேலும் 8ஷி சதவீத பிழிதிறனுக்கு மேல் இருந்தால் ஒவ்வொரு புள்ளிக்கும் கூடுதலான விலையை சேர்த்து வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு அதன்படி அளிக்கப்பட்டு வந்தது.

தடை உத்தரவு

மாநில அரசாங்கம் பரிந்துரை விலையை அறிவிக்க சட்டத்தில் இடமில்லை என்று தென்னிந்திய சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் சங்கம் 2.1.2000 அனëறு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. அதைத்தொடர்ந்து தடை உத்தரவு வழங்கப்பட்டது. அந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று அரசு சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், மாநில அரசாங்கம் பரிந்துரை விலையை அறிவிக்க முடியாது என்று கோர்ëட்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், பொதுத்துறை ஆலைகள் மத்திய அரசு அறிவித்த சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலையுடன் மாநில அரசாங்கம் பரிëந்துரை விலையை சேர்த்து 10 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.1000 வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

தவறான தகவல்

தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவுத்துறை, பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு கரும்புக்கான உரிய விலை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இதைக்கூட அறிந்துகொள்ளாமல் தி.மு.க. ஆட்சியில் திடீரென கரும்பு விலை ரூ.802 ஆக குறைக்கப்பட்டுவிட்டதாக ஜெயலலிதா கூறுவது தவறானது ஆகும்.

2001-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 2006 ஆண்டு வரை 5 ஆண்டு காலம் முத்தரப்பு கூட்டத்தையே கூட்டவில்லை. ஐகோர்ட்டின் உத்தரவை காரணம் காட்டி மாநில அரசாங்கம் பரிந்துரை விலையை மத்திய அரசாங்கத்தின் சட்டப்பூர்வ விலையோடு சேர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

ஓட்டு வாங்க தந்திரம்

ஆனால், சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று வாதாடி மாநில அரசாஙëகம் பரிந்துரை விலையை நிர்ணயம் செய்யலாம் என்று ஜெயலலிதா கூறி இருப்பது தவறானது. அவருக்கு உண்மையிலேயே விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும் எனëற எண்ணம் இருந்திருந்தால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய 2004-ம் ஆண்டிலேயே கரும்பு விலையை ரூ.1014 ஆக உயர்த்தி இருந்திருக்கலாம்.

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தபோது அடுத்த நடைபெற இருந்த 2006 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொணëடு விவசாயிகளை ஏமாற்றி ஓட்டுகளை வாங்க வேணëடும் என்று கருதி 9 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு ரூ.1014 வழங்க வேண்டும் என்று ஒரு உத்தரவை 2005-2006-ல் போட்டு விவசாயிகளை ஏமாற்றி ஓட்டுகளை வாங்க செய்த தந்திரமான செயல் ஆகும்.

முத்தரப்பு கூட்டம்

2006-2007-ம் ஆண்டு மத்திய அரசாங்கம் சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலையாக டனë ஒன்றுக்கு ரூ.802.50 என்று வழங்கி உத்தரவிட்டுள்ளது. எப்போதுமே ஆலைகளுக்கு கரும்பு கொடுத்த விவசாயிகளுக்கு சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலை ரூபாயை 15 நாட்களுக்குள் கொடுக்கப்பட வேணëடும் எனëபது சட்டம். அந்த அடிப்படையில்தான் சர்க்கரை ஆலைகள் மத்திய அரசாங்கத்தின் சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலையான ரூ.802.50 முதலில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாநில அரசாங்கத்தின் பரிந்துரை விலை, முத்தரப்பு கூட்டத்திற்கு பின்னர் வழங்கப்பட்டு வருவது நடைமுறையில் உள்ள ஒன்று ஆகும். இந்த ஆண்டு மாநில அரசின் பரிந்துரை விலையை அறிவிக்க முத்தரப்பு கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தனது ஆட்சியின் அலங்கோலத்தை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று கருதி, தி.மு.க. அரசு மீது உண்மைக்கு மாறான அறிக்கை விடுவதை ஜெயலலிதா இனிமேலாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை: