வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?வெள்ளி, நவம்பர் 10, 2006

இந்தியரால் செனட்டை கோட்டை விட்ட GOP.

அமெரிக்க செனட் தேர்தல் முடிந்து விட்டது. வெர்ஜினியாவில் ஜிம் வெப் வெற்றி பெற்றதன் மூலம் குடியரசு கட்சி (GOP)பெரும்பான்மை இழந்து சனநாயக கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. குடியரசு கட்சிக்கு 49 இடங்களும் சனநாயக கட்சிக்கு 49 இடங்களும் சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்த 2 சுயேச்சைகளும் சனநாயக கட்சி சார்பானவர்கள்.

இதில் கனடிகட் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சையான ஜோ லிபர்மேன் முன்பு 2000 ல் சனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டவர். இந்த முறை நடந்த சனநாயக உட்கட்சி தேர்தலில் தோல்வியடைந்ததால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

வெர்ஜினியாவில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜார்ஜ் ஆலன் சுலபமாக வெற்றி பெற்று விடுவார் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். 2008 அதிபர் தேர்தலுக்கு குடியரசு கட்சி சார்பில் போட்டியிடக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்பட்டவர்.

இவர் வெர்ஜினியாவின் ஆளுநராக இருந்தவர் (1994-98)அப்போது இவரின் போட்டியாளர் மெரி சு டெரி கருத்துக்கணிப்பில் 29% முன்னிலையில் இருந்தார், அதை முறியடித்து 58.3% வாக்கு வாங்கி வெற்றி பெற்றார். அதற்கு இப்போ சனநாயக கட்சி பழி வாங்கியுள்ளது.

ஜுலை மாதம் நடந்த கருத்துக்கணிப்பில் இவர் ஜிம் வெப் ஐ விட 16% முன்னிலையில் இருந்தார்.

பிறகு தான் இவரின் பிரபலமான நிற வெறி "மக்கக (Macaca)" " கேலி பேச்சு வந்தது.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த 20 வயதுடைய சித்தார்த் என்ற சனநாயக கட்சியை சேர்ந்த தன்னார்வ தொண்டர் இவரின் அனைத்து கூட்டங்களையும் படம் பிடிக்க பணிக்கப்பட்டிருந்தார். கொடுத்த பணியை அவர் செவ்வனே செய்து வந்தார் அதனால் ஜார்ஜ் ஆலனுக்கு சித்தார்த்தை நன்கு தெரியும். ( ஜிம் வெப் ஐ விட என்று நான் கூறுவேன் :-) )

அவருடைய வெள்ளை மக்கள் மட்டும் கலந்து கொண்ட கூட்டத்தை கருத்தாக சித்தார்த் படம் எடுத்துக்கொண்டிருந்ததை பார்த்த ஜார்ஜ் ஆலம் ஒக்கமக்கா "மக்கக (Macaca)" படம் எடுக்கறான் பாருடோய்ன்னு மனதில் கருவிக்கொண்டு "இங்கு மகக்காவை வரவேற்போம்! அமெரிக்காவிற்கு வருக , வெர்ஜீனியாவின் உண்மையான உலகத்திற்கு வருக " என்று கிண்டல் பண்ணினார்.

மக்கக என்றால் குரங்கு என்று பொருள் படும், இது ஆப்பிரிக்க மக்களை கிண்டல் பண்ண வெள்ளையர்கள் பயன்படுத்தும் சொல்.

இந்த நிறவெறி பேச்சையும் சித்தார்த் படம் எடுத்துவிட்டார். இதை பார்த்த மிடையங்கள் ஆலனின் மக்கக பேச்சை எடுத்து மக்களுக்கு போட்டு காட்டின. இது அவருடைய வெற்றிக்கு பெரிய அடியாக விழும் என்று அவர் நினைக்கவில்லை.

அவருடைய முன்னனி வெகுவாக சரிந்தது. 1 மாதம் போராடி மககவால் ஏற்பட்ட சேதத்தை ஓரளவு குறைத்தார். ஆனாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. அவரின் மக்கக பேச்சு அவருடைய கனவுகளுக்கு இடியாக விழுந்து விட்டது.

இதற்கு இன்னொரு முக்கிய காரணம் வடவெர்ஜீனியா பல்வேறு இன மக்கள் வாழும் இடமாக மாறிவருவதும் ஆகும். இவரின் தோல்விக்கு முக்கிய காரணம் வடவெர்ஜீனியாவில் இவருக்கு விழுந்த அடி ஏனெனில் அவருடைய மொழியில் நிறைய மக்கக வாழும் இடம் இது.

இன்னும் அடுத்த 10 ஆண்டுகளில் வெர்ஜீனியா குடியரசு கட்சியின் கோட்டையில் இருந்து விலகி பக்கத்து மேரிலாண்டை போல சனநாயக கட்சி கோட்டையாக மாறிவிடும். எல்லாம் வேகமாக வளர்ந்து வரும் வட வெர்ஜினியாவினால் தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ.

கருத்துகள் இல்லை: