வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?திங்கள், டிசம்பர் 04, 2006

விவசாயிகளுக்கு எதிராக ஆளும் கம்யூனிஸ்ட் வர்க்கம்.

பொதுவாக விவசாய நிலங்களை ஆக்ரமித்து/அபகரித்து பெரிய ஆலைகளை கட்டும் போது கம்யூனிஸ்ட்கள் அதை எதிர்த்து போராடுவார்கள், முதலாளித்துவம் ஒழிக என்பார்கள். இங்க நிலைமை தலை கீழ். இந்திய கம்யூனிஸ்டின் கோட்டையான மேற்கு வங்கத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் ஆலைக்கு ஆதரவாக செயல்பட திரிணாமுல் காங்கிரஸ் அதை எதிர்த்து விவசாயிகளுக்காக போராடுகிறது. கம்யூனிஸ்ட்டுக்கு எதிராக கம்யூனிஸ்ட் பாணி போராட்டம்.
ஆளும் வர்க்கம் என்று வரும்போது கம்யூனிஸ்ட் மற்றும் எல்லோரும் ஒன்று தான் போல.

இது தொடர்பான செய்தி இங்கே.

டாடா கார் ஆலைக்கு எதிர்ப்பு: கிராமத்தினர் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு

சிங்குர் (மேற்குவங்கம்), டிச. 3: டாடா நிறுவனத்தின் சிறிய கார் தயாரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மீது போலீஸார் ரப்பர் குண்டுகள் நிரப்பிய துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் காயமடைந்தனர்.

மேற்குவங்க மாநிலம் சிங்குர் பகுதியில் ஜாய்மொல்லா கிராமத்தில் டாடா சிறிய கார் தயாரிப்பு ஆலைக்காக நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் ஆலையைத் தொடங்குவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி திரிணமூல் காங்கிரஸ் தலைமையில் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சனிக்கிழமை முள்வேலி அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கிராம மக்கள் சிலர் போலீஸார் மீது கற்களை வீசினர். அவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதில் 5 பேர் காயமடைந்தனர். இதனால் பதற்றம் அதிகமாகி மேலும் பலர் அங்கு வரத்தொடங்கினர். இதனால் நிலைமையைக் கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்தனர், ரப்பர் குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கியால் சுட்டனர்.

போலீஸார் தங்களின் வீடுகளுக்குள் புகுந்து அடித்ததாகவும், வைக்கோல் போருக்கு தீ வைத்ததாகவும் கிராமத்தினர் சிலர் கூறினர். டிஐஜி தலைமையில் பெரும் போலீஸ் படை அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது.

2 கருத்துகள்:

ROSAVASANTH சொன்னது…

இந்த கொடுமையை பற்றி நானும் எழுதலாம் என்று இருந்தேன். நீங்கள் விட்டீர்கள். நன்றி

குறும்பன் சொன்னது…

வருகைக்கு நன்றி ரோசா. இந்த செய்தியை படித்ததும் எனக்கு கோபமும், பின் கம்யூனிஸ்ட்டும் ஆட்சிக்கு வந்தா அவர்களும் "ஆளும் வர்க்கம்" தான் என்று புரிந்து அவர்கள் மேல் இருந்த மதிப்பு குறைந்தது.