2012, நவம்பர் 6ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது அனைவருக்கும் தெரியும். உலகின் செய்திஇதழ்கள் அனைத்திலும் அதைப்பற்றி தான் செய்தி இருக்கும். செனட் அவையின் 33 இடங்களுக்கு இச்சமயத்தில் தேர்தல் (நவம்பர் 6, 2012) நடைபெறுகிறது. இதுவும் கவனிக்கத்தக்க தேர்தலாகும். செனட்டை பற்றி இரத்தின சுருக்கமாக இவ்வாறு கூறலாம். அமெரிக்காவின் எந்த சட்டமும் செனட் ஒப்புதல் இல்லாமல் நிறைவேறாது. செனட் ஒப்புதல் இல்லாமல் நீதிபதிகளையோ
அமைச்சர்களையோ நியமிக்கமுடியாது. அதிபருக்கு நிறைய அதிகாரம் இருந்தாலும் செனட் அனுமதி இல்லாமல் சில நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும், நடவடிக்கையை தொடங்கிய பின்பு செனட் ஒப்புதல் பெற்றாகவேண்டும். 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை செனட் தேர்தல் நடைபெறும். செனட்டின் எல்லா இடத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறாது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் இரண்டு செனட் உறுப்பினர்கள் உண்டு. பெரிய கலிபோர்னியாவுக்கும் இரண்டு பேர், சிறிய ரோட்
ஐலேண்டுக்கும் இரண்டு பேர்.
தற்போதைய செனட்டில் ஜனநாயக கட்சிக்கு 51 உறுப்பினர்களும் குடியரசு கட்சிக்கு 47 உறுப்பினர்களும் உள்ளனர். இருவர் கட்சி சாராதவர்கள் ஆனால் அவர்கள் சனநாயக கட்சி சார்பு உடையவர்கள். தேர்தல் நடைபெறும் 33 இடங்களில் 10 இடங்கள் குடியரசு கட்சி வசம் உள்ளவை, 21 சனநாயக கட்சி வசம் உள்ளவை. 2 இடங்கள் கட்சி சாராதவர்கள் வசம் உள்ளவை. கட்சி சாராத இருவரும் சனநாயக கட்சியுடன் இணைந்து செயலாற்றுபவர்கள் அதனால் சனநாயக கட்சி 23 இடங்களில் போட்டியிடுகிறது என்பர். எனவே அதிக இடங்களை தக்க வைக்க வேண்டியது சனநாயக கட்சி. தற்போதைய சனநாயக கட்சிஉறுப்பினர்கள் 7 பேர் போட்டியிடுவதில்லை என்று அறிவித்துள்ளார்கள். குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் 3 பேர் போட்டியிடுவதில்லை என்று அறிவித்துள்ளார்கள். கட்சி சாராத உறுப்பினர் ஒருவரும் ட்டியிடுவதில்லை
என்று அறிவித்துள்ளார்.
இத்தேர்தலில் 14 இடங்களில் வெற்றி பெற்றாலே குடியரசு கட்சிக்கு செனட்டில் பெரும்பான்மை கிடைத்துவிடும்.
ஓய்வு பெறும் குடியரசு கட்சி செனட்டர்கள் (அரிசோனா, மேய்ன், டெக்சாசு)
அரிசோனா
தற்போதய செனட் உறுப்பினர் குடியரசு கட்சியின் ஜான் கைல் (Jon Kyl)ஓய்வு.
குடியரசு கட்சி சார்பாக ஜெஃவ் பிளேகும் (Jeff Flake) சனநாயக கட்சி சார்பாக ரிச்சர்ட் கார்மனாவும் (Richard Carmona) போட்டியிடுகிறார்கள்.
மேய்ன்
தற்போதய செனட் உறுப்பினர் குடியரசு கட்சியின் ஒலிம்பியா சுனோவி (Olympia Snowe) ஓய்வு.
இங்கு மும்முனைப்போட்டி நிலவுகிறது. சனநாயக கட்சி சார்பில் சிந்தியா டில்லும் (Cynthia Dill) குடியரசு கட்சி சார்பில் சார்ளி சம்மர்சும் (Charlie Summers), கட்சி சார்பற்றவராக முன்னாள் ஆளுனர் ஆங்குசு கிங்கும் (Angus King ) போட்டியிடுகிறார்கள் சனநாயக கட்சி தன் வேட்பாளருக்கு பெரும் ஆதரவை வழங்கவில்லை, கிங் வெற்றி பெற வேண்டும் என அது எதிர்பார்க்கிறது. கிங் சனநாயக கட்சியுடன் இணைந்து இயங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவர் வெற்றி பெற வேண்டும் என சனநாயக கட்சி எதிர்பார்க்கிறது. கிங்கிற்கு நியூ யார்க் நகர தந்தை மைக்கேல் புளூம்பெர்க், மனித உரிமை அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளன. கிங் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்சாசு
குடியரசு கட்சியின் தற்போதய செனட்டர் கேய் பெய்லி அச்சிசன் (Kay Bailey Hutchison) ஓய்வு.
குடியரசு கட்சியின் டெட் குருசை (Ted Cruz) எதிர்த்து சனநாயக கட்சியின் பால் சேட்லர் ( Paul Sadler) போட்டியிடுகிறார். டெட் எளிதாக வென்று விடுவார் என
எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியிடும் குடியரசு கட்சியின் தற்போதய செனட்டர்கள் (மாசச்சூசெட்ஸ், மிசிசிப்பி, நெவாடா, டென்னிசி, யூட்டா, வயோமிங்)
மாசச்சூசெட்ஸ்
குடியரசு கட்சியின் தற்போதய செனட்டர் இசுக்காட் பிரௌனுக்கு (Scott Brown) கடும் போட்டியை சனநாயக கட்சியின் எலிசபெத் வார்ரென் (Elizabeth Warren)
கொடுக்கிறார். இம்மாநிலம் சனநாயக கட்சி சார்புடையது ஆனால் செனட்டர் டெட் கென்னடி மறைந்ததும் நடத்த இடைத்தேர்தலில் குடியரசு கட்சியின் இசுக்காட் பிரௌன் வெற்றி பெற்றார். இங்கு போட்டி கடுமையாக உள்ளது.
மிசிசிப்பி
குடியரசு கட்சியின் தற்போதய செனட்டர் ரோசர் விக்கரை (Roger Wicker) எதிர்த்து சனநாயக கட்சியின் ஆல்பர்ட் கோர் (Albert N. Gore) போட்டியிடுகிறார். ரோசர் எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெவாடா
குடியரசு கட்சியின் தற்போதய செனட்டர் டீன் எல்லரை (Dean Heller) எதிர்த்து சனநாயக கட்சியின் செல்லி பெர்க்லி (Shelley Berkley) போட்டியிடுகிறார்.
இம்மாநிலத்தில் அதிகளவில் சனநாயக கட்சியினர் இருப்பதால் (நாம் எக்கட்சியை சேர்ந்தவர் என வாக்காளராக பதிவு செய்யும் போதே சொல்லலாம்) செல்லி வெற்றி பெறுவார் என சனநாயக கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
டென்னிசி
குடியரசு கட்சியின் தற்போதய செனட்டர் பாப் கோர்கரை (Bob Corker) எதிர்த்து சனநாயக கட்சியின் மார்க் கிளேடென் (Mark Clayton) போட்டியிடுகிறார். பாப் எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யூட்டாகுடியரசு கட்சியின் தற்போதய செனட்டர் ஓர்ரின் ஏட்ச்சு (Orrin Hatch) எதிர்த்து சனநாயக கட்சியின் இசுக்காட் ஆவெல் (Scott Howel) போட்டியிடுகிறார். உட்கட்சி தேர்தலில் டீ பார்ட்டி வேட்பாளர் டான் லிஜென்குயிசுட்டை (Dan Liljenquist) வென்று குடியரசு கட்சி வேட்பாளரான ஓர்ரின் எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வயோமிங்
குடியரசு கட்சியின் தற்போதய செனட்டர் ஜான் பார்ரசசோவை (John Barrasso) எதிர்த்து சனநாயக கட்சியின் டிம் செசுநட் (Tim Chesnut) போட்டியிடுகிறார். ஜான்
எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதவியில் உள்ள செனட்டர் உட்கட்சி தேர்தலில் தோற்றது.
இந்தியானாவில் தற்போதய குடியரசு கட்சி செனட்டர் ரிச்சர்ட் லுகர் உட்கட்சி தேர்தலில் டீ பார்ட்டி உறுப்பினர் ரிச்சர்ட் முர்டாகிடம் தோற்றதால் ரிச்சர்ட் முர்டாக் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடுகிறார். உட்கட்சி தேர்தலில் தோற்ற பதவியில் இருக்கும் செனட்டர் இவர் மட்டுமே ஆவார். ரிச்சர்ட் லுகர் 1977 முதல் இந்தியானா செனட்டராக தொடர்ந்து 6 முறை தேர்வாகி உள்ளார்.
தற்போதய செனட் உறுப்பினர் ரிச்சர்ட் லுகர் (Richard Lugar) குடியரசு கட்சியின் உட்கட்சி தேர்தலில் தோற்றதால் அவரை தோற்கடித்த ரிச்சர்ட் முர்டாக் (Richard Mourdock) குடியரசு கட்சி சார்பாகவும் ஜோ டான்னிலி (Joe Donnelly) சனநாய கட்சி சார்பாகவும் போட்டியிடுகிறார்கள். ரிச்சர்ட் முர்டாக்
' உயிர் கற்பழிப்பு போன்ற கடும் சூழலில் தோன்றினாலும் அது கடவுள் விருப்பப்படியே நடந்ததாகும்' என்று கற்பழிப்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதால் இந்தியானா குடியரசு கட்சி சார்பு உடைய மாநிலமாக இருந்தபோதிலும் அவரின் போட்டி கடுமையாக உள்ளது.
ஓய்வு பெறும் சனநாயக கட்சி செனட்டர்கள் (அவாயி, நெப்ராசுக்கா, நியூ மெக்சிக்கோ, வட டக்கோட்டா, வர்ஜீனியா, விசுக்கான்சின்)
அவாயிதற்போதய செனட் உறுப்பினர் சனநாயக் கட்சியின் டேனியல் அகாகா (Daniel Akaka) (இவர் சீன அமெரிக்கர்) ஓய்வு.
சனநாயக கட்சி சார்பில் மாசி கிரனோவும் (Mazie Hirono) குடியரசு கட்சி சார்பில் முன்னால் ஆளுனர் லின்டா லிங்களும் (Linda Lingle) போட்டியிடுகிறார்கள். 2002ல் நடந்த ஆளுனர் தேர்தலில் இவர் மாசியை தோற்கடித்தார் ஆனால் அதிபர் தேர்தல் நடைபெறும் இச்சமயத்தில் மாசி கிரனோவ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வென்றால் செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் ஆசிய அமெரிக்க பெண்ணாக அவர் இருப்பார். (இவர் நிப்பான் அமெரிக்கர்).
நெப்ராசுக்கா
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் பென் நெல்சன் (Ben Nelson) ஓய்வு.
சனநாயக கட்சியின் முந்தைய செனட்டர் & ஆளுனர் பாப் கெர்ரியை (Bob Kerrey) எதிர்த்து குடியரசு கட்சியின் டெப் பிச்சர் (Deb Fischer)போட்டியிடுகிறார். நன்கு அறியப்பட்ட பாப் கெர்ரி முன்னால் ஆளுனராக இருந்தாலும் செனட்டில் இருந்து வெளியேறிய பின்னர் தன் வாழ்வில் பெரும்பகுதியை நியூ யார்க் நகரில் கழித்ததால் பாப் கெர்ரியின் வெற்றி எளிதில்லை.
நியூ மெக்சிக்கோ
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் ஜெஃவ் பிங்காமன் (Jeff Bingaman) ஓய்வு.
சனநாயக கட்சியின் மார்ட்டின் எய்ன்ரிசை (Martin Heinrich) எதிர்த்து குடியரசு கட்சியின் எதர் வில்சன் (Heather Wilson) போட்டியிடுகிறார். இச்செனட்டை கைப்பற்ற இது தக்க தருணம் என குடியரசு கட்சியினர் கருதுகின்றனர். சனநாயக கட்சியின் சார்புடைய இம்மாநிலத்தில் தீவிர போக்கில்லாத எதர் சரியான தேர்வு என கருதுகின்றனர். ஆனால் அவர் மார்ட்டினின் பரப்புரையை முறியடிக்க முடியாமல் உள்ளார்.
வட டக்கோட்டா
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் கென்ட் கான்ராட் (Kent Conrad ) ஓய்வு.
சனநாயக கட்சியின் எய்ட்டி எயிட்டாமை (Heidi Heitkam) எதிர்த்து குடியரசு கட்சியின் ரிக் பெர்க் (Rick Berg) போட்டியிடுகிறார். 2010ல் ஓய்வு பெற்ற சனநாயக கட்சியின் செனட் பதவியை கைப்பற்றியது போல் இம்முறையும் மீண்டும் நடக்கும் என குடியரசு கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். எய்ட்டி இச்செனட் பதவியை சனநாயக கட்சியினர் தக்கவைக்க உதவுவார் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வர்ஜீனியா
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் ஜிம் வெப் (Jim Webb) ஓய்வு
சனநாயக கட்சியின் டிம் கெய்னை (Tim Kaine) எதிர்த்து குடியரசு கட்சியின் ஜோர்ஜ் ஆலன் (George Allen) போட்டியிடுகிறார். இருவரும் வர்ஜீனியாவின் முன்னால் ஆளுனர்கள். இருவரும் புகழ்பெற்றவர்கள். ஜோர்ஜ் ஆலன் 1994-98 வரை ஆளுனராக இருந்தார். டிம் கெய்ன் 2007-2011 வரை ஆளுனராக இருந்தார். ஜோர்ஜ் ஆலன் 2001-2007 வரை செனட் உறுப்பினராக இருந்தார். 2007ல் சனநாயக கட்சியின் ஜிம் வெப்பிடம் 10,000 வாக்குகள் வேறுபாட்டில் தோல்வியுற்றார். அவர் கட்சி மாநாட்டை படம் பிடித்த இந்திய மாணவரை இனவாத சொற்களால் திட்டியதால் அவருக்கு தோல்வி ஏற்பட்டது. 2008ல் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதாக இருந்தார். 2007ல்
ஏற்பட்ட தோல்வி அந்த எண்ணத்தை கைவிடச்செய்தது.
விசுக்கான்சின்
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் எர்ப்பு கோல் (Herb Kohl) ஓய்வு
சனநாயக கட்சியின் டேம்மி பால்ட்வினை (Tammy Baldwin) எதிர்த்து குடியரசு கட்சியின் டாம்மி தாம்சன் (Tommy Thompson) போட்டியிடுகிறார். டாம்மி முன்னால் ஆளுனர் ஆவார். இருவருக்கும் போட்டி கடுமையாக உள்ளது.
போட்டியிடும் சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர்கள் (கலிபோர்னியா, டெலவேர், புளோரிடா, மேரிலாந்து, மிச்சிகன், மினசோட்டா, மிசௌரி, மான்டானா, நியூ செர்சி, நியூ யார்க், ஓகியோ, பென்சில்வேனியா, ரோட் ஐலேண்ட், வாசிங்டன், மேற்கு வர்ஜீனியா)
கலிபோர்னியா
சனநாயக கட்சியின் தற்போதய செனட் உறுப்பினர் டையானா பெயின்சுஉடைனை (Dianne Feinstein) எதிர்த்து குடியரசு கட்சி சார்பாக எலிசபெத் எம்கென் (Elizabeth Emken) போட்டியிடுகிறார். டையானா எளிதாக வென்றுவிடுவார் என்று கருதுகிறார்கள்.
டெலவேர்
சனநாயக கட்சியின் தற்போதய செனட் உறுப்பினர் டாம் கார்பரை (Tom Carper) எதிர்த்து குடியரசு கட்சி சார்பாக கெவின் வேட் (Kevin Wade) போட்டியிடுகிறார். டாம் எளிதாக வென்றுவிடுவார் என்று கருதுகிறார்கள்.
புளோரிடா
சனநாயக கட்சியின் தற்போதய செனட் உறுப்பினர் பில் நெல்சனை (Bill Nelson) எதிர்த்து குடியரசு கட்சி சார்பாக கானி மேக் (Connie Mack IV) போட்டியிடுகிறார்.
நெல்சன் முன்னனியில் இருந்தாலும் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேரிலாந்து
சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் பென் கார்டின் (Ben Cardin) எளிதாக குடியரசு கட்சியின் டானியல் பாங்கினோவை (Daniel Bongino) தோற்கடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிச்சிகன்சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் டெப்பி இசுடேப்னோவை (Debbie Stabenow) எதிர்த்து குடியரசு கட்சி சார்பாக பீட்டர் ஆக்சுடிரா (Peter Hoekstra)
போட்டியிடுகிறார். ஆரம்பத்தில் டெப்பி தோற்றுவிடுவார் என கருதப்பட்டாலும் குடியரசு கட்சியினர் தகுந்த வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்குள் அவர் நிதி திரட்டல் மற்றும் கருத்து கணிப்புகளில் பல மடங்கு முன்னேறி உள்ளார்
மினசோட்டாசனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் ஏமி குலோபசரை (Amy Klobuchar) எதிர்த்து குடியரசு கட்சியின் குர்ட் பில்சு (Kurt Bills) போட்டியிடுகிறார்.
சனநாயக கட்சியின் ஏமி எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிசௌரிசனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் கிளாரி மெக்காசுகில்லை (Claire McCaskill) எதிர்த்து குடியரசு கட்சியின் டாட் அகின் (Todd Akin) போட்டியிடுகிறார். இவர்
முறையான கற்பழிப்பு நடந்தால் பெண்கள் உடலானது கர்பமாவதை தடுத்துவிடும் என்று கற்பழிப்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இதனால் தோற்றுவிடும் சூழலில் இருந்த கிளாரி வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்தி விட்டார்.
மான்டானாசனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் ஜான் டெசுட்டரை (Jon Tester) எதிர்த்து குடியரசு கட்சியின் டென்னிசு ரெக்பெர்க் (Dennis Rehberg) போட்டியிடுகிறார். இருவருக்கும் செல்வாக்கு உள்ளதால் போட்டி மிக கடுமையாக உள்ளது.
நியூ செர்சிசனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் ராபர்ட் மென்ன்டேசு(Robert Menendez) எதிர்த்து குடியரசு கட்சியின் ஜோ கிரில்லாசு (Joe Kyrillos) போட்டியிடுகிறார்.
ராபர்ட் எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூ யார்க்சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் கிரிசுட்டன் கில்லிபிராண்டு (Kirsten Gillibrand) எதிர்த்து குடியரசு கட்சியின் வென்டி லாங் (Wendy Long)
போட்டியிடுகிறார். கிரிசுட்டன் எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓகியோசனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் செர்ராடு பிரௌனை (Sherrod Brown) எதிர்த்து குடியரசு கட்சியின் ஜோசு மாண்டெல் (Josh Mandel) போட்டியிடுகிறார்.
இவர் செனட்டில் உள்ள முற்போக்கான உறுப்பினர் என்பதால் குடியரசு கட்சி இம்முறை வென்று விடலாம் என்று கருதுகிறது.
பென்சில்வேனியாசனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் பாப் கேசியை (Bob Casey) எதிர்த்து குடியரசு கட்சியின் டாம் சுமித்து (Tom Smith) போட்டியிடுகிறார். சில கருத்து
கணிப்புகள் குடியரசு கட்சி நம்பிக்கை அளித்தாலும் தற்போதய செனட்டர் பாப் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டுள்ளார் இது இவர் முன்னர் செய்யாதது ஆகும்.
ரோட் ஐலேண்ட்சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் செல்டன் வொயிட்அவுசை (Sheldon Whitehouse) எதிர்த்து குடியரசு கட்சியின் பாரி இன்க்லே (Barry Hinckley)
போட்டியிடுகிறார். செல்டன் எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாசிங்டன்சனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் மரியா கான்ட்வெலை (Maria Cantwell) எதிர்த்து குடியரசு கட்சியின் மைக்கல் பவும்கார்ட்னெர் (Michael Baumgartner) போட்டியிடுகிறார். மரியா எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வர்ஜீனியாசனநாயக கட்சியின் தற்போதய செனட்டர் ஜோ மான்சினை (Joe Manchin) எதிர்த்து குடியரசு கட்சியின் ஜான் ரெச்சி (John Raese) போட்டியிடுகிறார். ஜோ மான்சின் மேற்கு வர்ஜீனியாவின் முன்னால் ஆளுனர் ஆவார். அப்போதய செனட்டர் ராபர்ட் பைர்டு (Robert Byrd) (இவரே அதிக காலம் அமெரிக்காவில் செனட் உறுப்பினராக இருந்தவர்) இறந்ததால் 2010ல் நடைபெற்ற செனட்டுக்கான இடைத்தேர்தலில் இருவரும் போட்டியிட்டனர். சனநாயக கட்சியில் இருந்தாலும் சுதந்திரமாக முடிவெடுக்கும் மான்சின் தற்போது எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வு பெறும் கட்சி சாரா செனட்டர்.
கனெடிகட்
தற்போதய உறுப்பினர் யோசப் லிபர்மன் (Joseph Lieberman) (கட்சி சார்பற்றவர்) ஓய்வு. இவர் சனநாயக கட்சி சார்பாக நடப்பவர். இவர் முன்னால் சனநாயக கட்சி உறுப்பினர். கடந்த சனநாயக கட்சியின் உட்கட்சி தேர்தலில் தோல்வியுற்றதால் கட்சி சார்பின்றி போட்டியிட்டு வென்றார்.
சனநாயக கட்சி சார்பில் கிரிசு மர்பியும் (Chris Murphy) குடியரசு கட்சி சார்பில் லின்சா மெக்மஓனும் (Linda McMahon) போட்டியிடுகிறார்கள். போட்டி கடுமையாக இருந்தாலும் மர்பி வென்றுவிடுவார் என கருதப்படுகிறது.
போட்டியிடும் கட்சி சாரா தற்போதய செனட்டர்
வெர்மான்ட்
தற்போதய கட்சி சாரா செனட்டர் பெர்னி சான்டர்சை (Bernie Sanders) எதிர்த்து குடியரசு கட்சியின் ஜான் மெக்கவர்ன் (John MacGovern) போட்டியிடுகிறார். பெர்னி சனநாயக கட்சியோடு சேர்ந்து இயங்குவதால் அவரை எதிர்த்து சனநாயக கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் அவர் வெற்றிக்கு பாடுபடுகிறது. பெர்னி எளிதாக வென்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
*************************************
http://www.cnn.com/2012/10/26/politics/senate-races/index.html?hpt=hp_t2http://www.270towin.com/2012_senate_election/