5 ஆண்டுகளுக்கு முன் ஊருக்கு போயிருந்த பொழுது தமிழ் விக்கிபீடியாவுக்கு பயன்படுத்தலாம் என்று பல படங்கள் எடுத்து வந்திருந்தேன். சில படங்கள் கட்டற்ற முறையில் கிடைக்காது மேலும் சில படங்கள் வணிக ஊடகம் உட்பட எந்த இடத்திலும் (ஊடகத்திலும்) வந்திருக்காது. எடுத்த படங்களை பிளிக்கர் தளத்திலும் ஏற்றியிருந்தேன். எப்பொழுதாவது பிளிக்கர் கணக்கை திறந்து பார்ப்பது வழக்கம். நான் நொய்யல் ஆற்றை எடுத்த படத்தை பயன்படுத்த அனுமதி கேட்டு ஒரு பின்னூட்டம் சரி பயன்படுத்திக்கங்கன்னு சொல்லிட்டேன். நான் ஏற்றிய படங்கள் அனைத்துக்கும் காப்புரிமை விலக்கு அளித்துள்ளேன். இப்ப கணக்கை திறந்து பார்த்தா இன்னும் இரண்டு தளங்கள் இவற்றை பயன்படுத்தியுள்ளோம் என பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார்கள். 3 மாதத்துக்கு முன் புகழ்பெற்ற வணிக ஊடகத்திலிருந்து இதை பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டிருந்தார்கள். தக்க சன்மானம் தருகிறோம் அதிக resolution உள்ள படம் கிடைக்குமா என்று கேட்டிருந்தார்கள். இன்னும் அதிக resolution உள்ள என் படம் வேண்டுமா என கேட்டுள்ளேன். புகழ்பெற்ற வணிக ஊடகம் என் படத்தை பயன்படுத்தியதா என தெரியவில்லை. என் படத்தையும் நாலு பேர் பயன்படுத்தாறங்ளேன்னு எனக்கு மகிழ்ச்சி.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் எந்த படம் எப்ப யாருக்கு பயன்படும் என்று சொல்ல முடியாது. படத்தை புடிச்சி போடுங்க. அமராவதி ஆறு, அணை, பவானி ஆறு, அணை, வைகை ஆறு, அணை, தாமிரபரணி ஆறு, அணை, .....