எனக்கும் சமையல் கட்டுக்கும் காத தூரம். சில குறிப்புகள் எனக்கு தெரிஞ்சிடுச்சி, அதை யார்கிட்டயாவது சொல்லலைன்னா என் மண்டை வெடிச்சிடும், அதான் இங்க இஃகி இஃகி.
வீட்டுல சூடம் வாங்கி வைத்திருப்போம். கொஞ்ச நாள் ஆனா அது கரைய தொடங்கும். குப்பியில் போட்டு மூடி வைத்திருந்தாலும் கரைவதை தடுக்க முடியாது. சூடம் கரைவதை தடுக்க ஒரு எளிய வழி உள்ளது. குப்பியில் சில மிளகுகளை போட்டு மூடி வைத்தால் சூடம் கரையாது.
காய்கறிகளை வாங்கி அதை குளிர்சாதன பெட்டியில் வைத்தாலும் விரைவில் அது கெட்டு விடும். இதை தவிர்க்க காய்கறிகளில் உள்ள ஈரப்பதத்தை எடுத்துவிட்டு (தாளில் காய்கறிகளை ஒற்றி எடுத்தால் ஈரப்பதம் நீங்கிவிடும்) தாளில் சுற்றி வைத்தால் சீக்கிரம் கெடாமல் இருக்கும்.
சிலர் ஆனா ஊன்னா சாமிக்கு தேங்காய் உடைப்பார்கள். நிறைய தேங்காய்கள் (உடைந்த தேங்காய் மூடி தான்) சேர்ந்து விடும். அந்த தேங்காயை என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள். சமையலுக்கும் எவ்வளவு தான் பயன்படுத்தறது, மீதியை என்ன செய்வது? தேங்காய் மூடியை நன்றாக துருவி தேங்காய் துருவல்களை எடுத்து அதை நெகிழி பையில்(plastic bag) போட்டு நன்றாக மூடி குளிர்சாதன பெட்டியின் உறையவை (freezer - குளிர்சாதன பெட்டியின் மேல் கதவுடன் பனிக்கட்டி செய்யக்கூடிய ஒரு பகுதி இருக்குமே அதான்) இல் வைத்துவிடவும். தேவையான போது பையில் உள்ள தேங்காய் துருவலில் தேவையான அளவு எடுத்து அதை நுண்ணலை சூடாக்கல் கருவியில் (microwave) வைத்து சிறிது சூடாக்கி பயன்படுத்தலாம், நுண்ணலை சூடாக்கல் கருவி இல்லாதவர்கள் அல்லது அதை பயன்படுத்துவதை விரும்பாதவர்கள் வாணலியில் சிறிது சூடாக்கி பயன்படுத்தலாம். சூடாக்காமலும் தேங்காய் துருவலை பயன்படுத்தலாம் ஆனால் அப்படி பயன்படுத்தினால் திரி திரியாக (திப்பி திப்பியாக) தேங்காய் இருக்கும் சுவையே இருக்காது, சூடாக்கி பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
4 கருத்துகள்:
//சூடம் கரைவதை //
கருகுவதற்கும் கரைவதற்கும் என்ன வேறுபாடு??
ம்ம்
தீயில் போட்டு பொசுக்குவது- கருகுவது அதாவது கருமை ஆக்குவது.
கரைவது - காணாமல் போவது. சூடம் தீயில் எறிந்து காணாமல் போவதால் கரைதல்.
-- நான் சொல்வது சரியா. கேள்வி கேட்டாலும் கேட்டிங்க "கரை"ங்கறது தப்போ "கறை"ன்னு எழுதனுமோன்னு அகரமுதலிய பார்க்க வைச்சுட்டீங்க இஃகி.
//கரைவது - காணாமல் போவது.//
ஏதோ ஒன்றில் ஒன்றி மறைபொருளாகிப் போவது. காற்றில் கரைந்து விட்டது.
//சூடம் தீயில் எறிந்து காணாமல் போவதால் கரைதல். //
வெம்மையில் எரிந்து கருகிப் போனது.
மடச்சாம்பிராணி குறித்த விளக்கம் காணவும். மடத்தில் இருக்கும் சாம்பிராணிக்கட்டி காற்றில் கரைந்து உரு குலைந்து போய் அரைகுறையாக ஆகிவிடும். அப்படியாக, அரைகுறையாக இருப்பவர் மடச்சாம்பிராணி.
சரியான பொருள் தெரியாம முட்டாளுக்கு மாற்றா "மடச்சாம்பிராணி" அப்படின்னு திட்டியிருக்கேன். இனிமே பொருள் தெரிஞ்சு திட்டப்போறேன் இஃகி.
கருத்துரையிடுக