வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், நவம்பர் 27, 2012

கார்த்திகை பெருவிளக்கு நன்னாள் வாழ்த்து

அனைவருக்கும் கார்த்திகை பெருவிளக்கு நன்னாள் வாழ்த்து. எங்க பகுதியில் இதை கூம்பு நோம்பி  என்று சொல்லுவோம். நோம்பி என்றால் திருவிழா. கூம்பு அவிஞ்ச பின் (கார்த்திகை விளக்கு ஏற்றிய பின்) எந்த நல்ல செயலையும் அம்மாதத்தில் தொடங்கமாட்டார்கள்.



தீபாவளி போல் இதுவும் அமாவாசை அன்று வரும் விழா என்றே நினைத்திருந்தேன், ஆனால் இது கார்த்திகை மாதத்தில் முழுநிலவு அன்று வரும் என்று இப்போ கண்டுகொண்டேன். சில சமயம் முன்ன பின்ன வருமோ? ஒரு இணையத்தில் கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய நாளில் வரும் என்று போட்டுள்ளார்கள்.  சில இணையதளங்களில் கார்த்திகை மாதத்தில் வரும்  கார்த்திகை நட்சத்திர நாளில் வரும் என்று போட்டுள்ளார்கள். 

செவ்வாய் கிழமை நவம்பர் 27, 2012 அன்று கார்த்திகை கொண்டாடப்படுகிறது. இன்று பரணி நட்சத்திரம், சதுர்த்தசி திதி. புதன் கிழமை நவம்பர் 28, 2012 அன்று பௌர்ணமி திதி கார்த்திகை நட்சத்திரம் ஏன் ஒரு நாள் முன்னாடியே திருவண்ணாமலையில் கொண்டாடினார்கள்?


செவ்வாய் கூம்பு அப்படின்னா திங்கள் இரவிலிருந்தே வீட்டு வாசலில் விதவிதமாக கோலம் போடுவார்கள். வீட்டு வாசலுக்கு முன் மட்டுமே என்று நினைக்காதிர்கள். தங்கள் வீட்டிற்கு முன் உள்ள எல்லா இடத்திலேயும் கோலம் போடுவார்கள். யாரு கோலம் அழகா இருக்குங்கிறதில் ஒரு சின்ன போட்டி இருக்கும். சில பேர் புள்ளி வைத்த கோலம் போடுவதில் கில்லாடியாக இருப்பார்கள் அது நிறைய பேருக்கு நல்லா வராது அவங்க வண்ண பொடியை வைத்து கோலம் போடுவார்கள். கோலத்தில் விளக்கு வைத்து அதை இன்னும் அழகாக்குவார்கள். கோலம் காலை வரை அழியாமல் பத்தரமாக இருக்கும் பின் வீட்டிற்கு வருபவர்களால் அழியத்தொடங்கி விடும்.




4 கருத்துகள்:

semmalai akash சொன்னது…

உங்களுக்கும் கார்த்திகை தீபம் வாழ்த்துகள் .
வருடத்திற்கு ஒரு கதை எழுதினால் எப்படி? அடிக்கடி எழுதுங்க,,

எனது பக்கமும் வந்துபோங்க.

பழமைபேசி சொன்னது…

சூந்து விளையாடினா சொல்லி அனுப்புங்க!!

குறும்பன் சொன்னது…

வந்தா போச்சு செம்மலை.

குறும்பன் சொன்னது…

சூந்துன்னா என்னான்னு உங்க இடுகையை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன். சூந்து விளையாட ஆசை வந்தா உங்கள தான் பிடிப்பேன்.