வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



செவ்வாய், நவம்பர் 28, 2006

கரும்பு விலை அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில், ஒரு டன் கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ.1,025 என்று நிர்ணயம் செய்து முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்து உள்ளார்.

இது பற்றி தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரூ.222.50 உயர்வு

2006-2007 சர்க்கரை ஆண்டில் 9 சதவீதம் பிழி திறனுள்ள ஒரு டன் கரும்புக்கு ரூ.802.50 என்று மத்திய அரசு குறைந்தபட்ச விலையாக நிர்ணயம் செய்துள்ளது.

தமிழக கரும்பு விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட தி.மு.க. அரசு, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச விலையை விடக் கூடுதலாக ரூ.222.50 உயர்த்தி, 9 சதவீதம் பிழி திறன் உள்ள ஒரு டன் கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ.1,025 என்று நிர்ணயம் செய்து முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

முன்தேதியிட்டு.....

இந்த விலை உயர்வு, இந்த நடப்புக் கரும்பாண்டில் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கும் பொருந்துமாறு முன் தேதியிட்டு வழங்கப்படும்.

மேலும் 9 சதவீதம் பிழிதிறனுக்குக் கூடுதலாக உள்ள ஒவ்வொரு 0.1 சதவீத பிழிதிறனுக்கும் டன் ஒன்றுக்கு ஒன்பது ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


கரும்பு விலையை அதிகரித்து விவசாயிகளை மகிழ்வித்த முதல்வர் கலைஞர் அவர்களை பாராட்டுகிறோம்.

ஜெயலலிதாவுக்கு வீரபாண்டியார் பதில்

கரும்புக்கான ஆதார விலையை தமிழக அரசு கமுக்கமாக 200 ரூபாய் குறைத்து விட்டது என்று கூறி அதை கண்டித்து அதிமுக போராட்டம் நடத்தும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதற்கு தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கரும்பு விலை

அ.தி.மு.க. ஆட்சியில் கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.1014 கொடுக்கப்பட்டதாகவும் இப்போது தி.மு.க. ஆட்சியில் கரும்பு விலை ரூ.802 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தவறான தகவலை கூறி இருக்கிறார்.

தி.மு.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு கரும்பு உற்பத்தியாளர்கள்-சர்க்கரை ஆலை அதிபர்கள்-கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் தனி அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய முத்தரப்பு கூடி விவசாயிகளுக்கு கட்டுப்படியாககக்கூடிய விலையாக மாநில அரசாங்கத்தின் பரிந்துரை விலை அறிவிக்கப்பட்டு வந்தது. மேலும் 8ஷி சதவீத பிழிதிறனுக்கு மேல் இருந்தால் ஒவ்வொரு புள்ளிக்கும் கூடுதலான விலையை சேர்த்து வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு அதன்படி அளிக்கப்பட்டு வந்தது.

தடை உத்தரவு

மாநில அரசாங்கம் பரிந்துரை விலையை அறிவிக்க சட்டத்தில் இடமில்லை என்று தென்னிந்திய சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் சங்கம் 2.1.2000 அனëறு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. அதைத்தொடர்ந்து தடை உத்தரவு வழங்கப்பட்டது. அந்த தடை உத்தரவை நீக்க வேண்டும் என்று அரசு சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால், மாநில அரசாங்கம் பரிந்துரை விலையை அறிவிக்க முடியாது என்று கோர்ëட்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், பொதுத்துறை ஆலைகள் மத்திய அரசு அறிவித்த சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலையுடன் மாநில அரசாங்கம் பரிëந்துரை விலையை சேர்த்து 10 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.1000 வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

தவறான தகவல்

தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவுத்துறை, பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு கரும்புக்கான உரிய விலை தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இதைக்கூட அறிந்துகொள்ளாமல் தி.மு.க. ஆட்சியில் திடீரென கரும்பு விலை ரூ.802 ஆக குறைக்கப்பட்டுவிட்டதாக ஜெயலலிதா கூறுவது தவறானது ஆகும்.

2001-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 2006 ஆண்டு வரை 5 ஆண்டு காலம் முத்தரப்பு கூட்டத்தையே கூட்டவில்லை. ஐகோர்ட்டின் உத்தரவை காரணம் காட்டி மாநில அரசாங்கம் பரிந்துரை விலையை மத்திய அரசாங்கத்தின் சட்டப்பூர்வ விலையோடு சேர்த்து விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

ஓட்டு வாங்க தந்திரம்

ஆனால், சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று வாதாடி மாநில அரசாஙëகம் பரிந்துரை விலையை நிர்ணயம் செய்யலாம் என்று ஜெயலலிதா கூறி இருப்பது தவறானது. அவருக்கு உண்மையிலேயே விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும் எனëற எண்ணம் இருந்திருந்தால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய 2004-ம் ஆண்டிலேயே கரும்பு விலையை ரூ.1014 ஆக உயர்த்தி இருந்திருக்கலாம்.

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தபோது அடுத்த நடைபெற இருந்த 2006 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொணëடு விவசாயிகளை ஏமாற்றி ஓட்டுகளை வாங்க வேணëடும் என்று கருதி 9 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு ரூ.1014 வழங்க வேண்டும் என்று ஒரு உத்தரவை 2005-2006-ல் போட்டு விவசாயிகளை ஏமாற்றி ஓட்டுகளை வாங்க செய்த தந்திரமான செயல் ஆகும்.

முத்தரப்பு கூட்டம்

2006-2007-ம் ஆண்டு மத்திய அரசாங்கம் சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலையாக டனë ஒன்றுக்கு ரூ.802.50 என்று வழங்கி உத்தரவிட்டுள்ளது. எப்போதுமே ஆலைகளுக்கு கரும்பு கொடுத்த விவசாயிகளுக்கு சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலை ரூபாயை 15 நாட்களுக்குள் கொடுக்கப்பட வேணëடும் எனëபது சட்டம். அந்த அடிப்படையில்தான் சர்க்கரை ஆலைகள் மத்திய அரசாங்கத்தின் சட்டப்பூர்வ குறைந்தபட்ச விலையான ரூ.802.50 முதலில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாநில அரசாங்கத்தின் பரிந்துரை விலை, முத்தரப்பு கூட்டத்திற்கு பின்னர் வழங்கப்பட்டு வருவது நடைமுறையில் உள்ள ஒன்று ஆகும். இந்த ஆண்டு மாநில அரசின் பரிந்துரை விலையை அறிவிக்க முத்தரப்பு கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தனது ஆட்சியின் அலங்கோலத்தை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று கருதி, தி.மு.க. அரசு மீது உண்மைக்கு மாறான அறிக்கை விடுவதை ஜெயலலிதா இனிமேலாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறி உள்ளார்.

ஞாயிறு, நவம்பர் 26, 2006

விவசாயிகளுக்கு எதிராக தமிழக அரசு.

விவசாயிகளுக்கு எதிராக இருப்பதென்று தமிழக அரசு கங்கனம் கட்டி கொண்டுள்ளது போல் தெரிகிறது. நல்ல விளைச்சல் தரும் பாசன வசதியுடைய விவசாய நிலங்களை பறித்து துணை நகரம் அமைப்பேன் என்பது, கரும்புக்கு ஆதார விலையை குறைப்பது என்று திமுக அரசு முடிவெடுத்திருப்பது விவசாயிகளின் நலனின் மேல் இந்த அரசுக்கு உள்ள அக்கரையை காட்டுகிறது.

கரும்புக்கு ஆதார விலையை தமிழ அரசு ஒரு டன்னுக்கு 200 ரூபாய் குறைத்துள்ளது. வழக்கமாக தேர்தல் சமயத்தில் கரும்பின் ஆதார விலையை உயர்த்துகிறேன் என்று தான் எல்லா அரசியல் கட்சிகளும் சொல்லும். யார் ஆட்சிக்கு வந்தாலும் உயர்த்தமாட்டார்கள், விவசாயிகள் கடுமையாக போராடினால் தேர்தல் வருவதாக இருந்தால் வாக்கு அறுவடை செய்ய ஆதார விலையை கொஞ்சம் உயர்த்தி விவசாயிகளின் மேல் அக்கரையுள்ளதாக காட்டிக்கொள்வார்கள்.

இந்த முறை நிலைமை இன்னும் மோசம், இருக்கும் ஆதார விலையை குறைத்துள்ளார்கள். தற்போது 1014 ரூபாயாக இருப்பதை 802 ரூபாயாக சத்தமில்லாமல் கமுக்கமாக குறைத்துள்ளார்கள். கரும்பு வெட்டு கூலி டன்னுக்கு 200 ல் இருந்து 300 ரூபாயாக அதிகரித்துவிட்டது. இதற்காகவா இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்? எப்பப்பார்த்தாலும் எதுக்கெடுத்தாலும் விவசாயி தலையிலேயே ஏன்யா கை வைக்கிறீங்க. "உழுதவன் கணக்கு பார்த்தா ஒரு ஆலாக்கு கூட மிஞ்சாது" என்பது விவசாயியின் நிலை அறிந்தோருக்கு தெரியுமே.

இதுல வேற நம்ம முதல்வர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று அப்பப்ப கூறிக்கொள்வார், இப்ப நான் புரிந்து கொண்டது என்னவென்றால் அவர் கம்யூனிஸ்ட் அல்ல கம்யூனிஸ்ட் கட்சிகாரர் மாதிரி என்று. கம்யூனிஸ்ட் வேற கம்யூனிஸ்ட் கட்சிக்காரர் வேற என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

கரும்பு விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றால் அவர்கள் பெரும்போராட்டம் நடத்தினால் தான் உண்டு அல்லது மருத்துவர் இராமதாசு அரசை கடுமையாக கண்டித்து அறிக்கை விடவேண்டும். ஜெயலலிதா விலை குறைப்பை குறித்து கண்டன அறிக்கை விட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

கலைஞர் குடும்பத்து ஆட்கள் சர்க்கரை ஆலையில் பெரும்முதலீடு செய்திருந்தால் கரும்பின் ஆதார விலை அதிகரிப்பு என்பது இந்த ஆட்சியில் நடக்கும் என்பதை மறந்துவிட வேண்டியதுதான். சிமெண்ட் கதை தான் நமக்கு தெரியுமே.

"ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி" என்பது இப்போ "ஊருக்கு(அரசுக்கு) இளைச்சவன் விவசாயி" என்று மாறிவிட்டது.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்
.

பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.

வள்ளுவன் வாக்கு பொய்யா? தெரியாது, ஆனால் திருக்குறளுக்கு உரை எழுதிய கலைஞருக்கு நன்றாக தெரியும்.

ஞாயிறு, நவம்பர் 19, 2006

புலியின் முதலை வேட்டை

இந்த படத்தில் புலியானது முதலையை வேட்டையாடும் காட்சி உள்ளது. முதலை பலமானது தான் ஆனால் அதன் பலம் நீரில் தான் அல்லவா? அதனால் தான் தரையில் புலியை எதிர்த்து முதலையால் போரிட்டு வெல்ல முடியாமல் தோற்றுவிட்டது.




என்ன தான் பலசாலியா இருந்தாலும் சில இடங்களில் பலம் இருக்காது / செல்லுபடியாகாது அப்போ அங்க பலமுள்ள எதிரி அடிச்சா பரலோகம் தான்.

புதிர்:-

புலி சிங்கத்தையும் சிங்கம் புலியையும் வேட்டியாடுவது எங்கு நடக்குது தெரியுமா?






இலங்கையில் தான்

சனி, நவம்பர் 18, 2006

Burger King - Outsource.

Outsourcing ஐ கிண்டலடித்து வந்த நகைச்சுவை ஒளிப்படம், நீங்களும் பாருங்க சிரிங்க. அமெரிக்காவில் பிரபலமான "Burger King" துரித உணவகம் தன்னுடைய உணவை "Order" எடுக்கும் பிரிவை "Outsourcing" செய்து விடுகிறது. அப்புறம் என்ன நடக்கிறது? இந்த ஒளிப்பதிவை பாருங்க.



இந்தியாவுக்கு வந்து சீனாவுக்கு போயிடுதுப்பா இந்த outsourcing வேலையும் :(

SU-30 Crash

ரஷ்யாவின் SU 30 விமானம் பாரிஸ் விமான கண்காட்சியில் விபத்துக்குள்ளானதை காட்டும் படம். இதை செலுத்திய இரு விமானிகளும் திறமையாக தப்பித்தனர் அதை இந்த ஒளிப்படத்தின் முடிவில் நீங்கள் பார்க்கலாம்.


ஞாயிறு, நவம்பர் 12, 2006

சனி கோளில் மாபெரும் புயல்.

மாபெரும் புயலின் மையப்பகுதியான கண் எவ்வாறு இருக்கும் என்று தெரியுமா? இப்படத்தை பாருங்கள் இப்படி தான் இருக்கும். கண்ணுன்னா இது கண், என்ன அற்புதமா இருக்கு பாருங்க. இதற்கு தமிழில் பெயர் வைக்க சொன்னால் நான் "கருவிழியாள்" என்று வைப்பேன் :-).

அறிவியலாளர்கள் சனி கோளில் தோன்றிய இந்த மாபெரும் புயலினை நாசாவின் காசினி (Cassini space probe) கொண்டு அறிந்துள்ளார்கள்.

இந்த புயல் எவ்வளவு பெரியது தெரியுமா? 8000 கி.மீ விட்டமுடையது, காற்று சுழலும் வேகம் மணிக்கு 500 கி.மீ, உயரம் 30-70 கி.மீ.

பூமியை தவிர இப்போழுது தான் வேறு கோளில் ஹரிகேன் போன்ற புயலை கண்டுள்ளார்கள். இதை ஹரிகேன் போன்ற புயல் என்று சொன்னாலும் இது பூமியின் ஹரிகேனிலிருந்து வேறுபட்டது. அதாவது சனியின் இந்த புயல் அசையாமல் நகராமல் ஓர் இடத்திலேயே கட்டி வைத்தாற் போல் இருக்கும்.



சனியின் இப்புயலை விட ஜீபிடரின் சிகப்பு புள்ளி புயல் பல மடங்கு பெரியது ஆனால் அதற்கு புயலின் கண் & கண் சுவர் இல்லாததால் அதை ஹரிகேன் வகை புயலில் சேர்க்கமுடியாது.

பூமியில் ஹரிகேன் வகை புயல் கடலில் உருவாகும் , சனி வாயு கோளானதால் ஹரிகேன் வகை புயல் உருவானாலும் அங்கு கடல் கிடையாது.

தொட்டியில் கையை விட்டு நீரை வேகமாக சுழற்றுங்கள் பின் கையை எடுத்துவிட்டால் தொட்டியில் நீர் சுழி இருக்கும், இந்த புயலின் தோற்றம் அவ்வாறு இருக்கும் ஆனால் அளவு மிகப் மிகப் ... பெரியதாக.

சனி கோளை ஆராய அனுப்பப்பட்ட காசினி விண்கலத்தால் (Cassini space probe) வரும் நாட்களில் மேலும் பல புதிய செய்திகள் வருன் என்று நம்பலாம்.

யானை வேட்டை

போஸ்ட்வானா நாட்டில் சிங்கங்கள் யானையை வேட்டையாடும் காட்சி. இரவிலும் பார்க்க கூடிய புகைப்பட கருவியை கொண்டு எடுக்கப்பட்டது.






சுட்ட இடம் பி.பி.சி .

வெள்ளி, நவம்பர் 10, 2006

இந்தியரால் செனட்டை கோட்டை விட்ட GOP.

அமெரிக்க செனட் தேர்தல் முடிந்து விட்டது. வெர்ஜினியாவில் ஜிம் வெப் வெற்றி பெற்றதன் மூலம் குடியரசு கட்சி (GOP)பெரும்பான்மை இழந்து சனநாயக கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. குடியரசு கட்சிக்கு 49 இடங்களும் சனநாயக கட்சிக்கு 49 இடங்களும் சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்த 2 சுயேச்சைகளும் சனநாயக கட்சி சார்பானவர்கள்.

இதில் கனடிகட் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சையான ஜோ லிபர்மேன் முன்பு 2000 ல் சனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டவர். இந்த முறை நடந்த சனநாயக உட்கட்சி தேர்தலில் தோல்வியடைந்ததால் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

வெர்ஜினியாவில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜார்ஜ் ஆலன் சுலபமாக வெற்றி பெற்று விடுவார் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். 2008 அதிபர் தேர்தலுக்கு குடியரசு கட்சி சார்பில் போட்டியிடக்கூடியவர் என்று எதிர்பார்க்கப்பட்டவர்.

இவர் வெர்ஜினியாவின் ஆளுநராக இருந்தவர் (1994-98)அப்போது இவரின் போட்டியாளர் மெரி சு டெரி கருத்துக்கணிப்பில் 29% முன்னிலையில் இருந்தார், அதை முறியடித்து 58.3% வாக்கு வாங்கி வெற்றி பெற்றார். அதற்கு இப்போ சனநாயக கட்சி பழி வாங்கியுள்ளது.

ஜுலை மாதம் நடந்த கருத்துக்கணிப்பில் இவர் ஜிம் வெப் ஐ விட 16% முன்னிலையில் இருந்தார்.

பிறகு தான் இவரின் பிரபலமான நிற வெறி "மக்கக (Macaca)" " கேலி பேச்சு வந்தது.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த 20 வயதுடைய சித்தார்த் என்ற சனநாயக கட்சியை சேர்ந்த தன்னார்வ தொண்டர் இவரின் அனைத்து கூட்டங்களையும் படம் பிடிக்க பணிக்கப்பட்டிருந்தார். கொடுத்த பணியை அவர் செவ்வனே செய்து வந்தார் அதனால் ஜார்ஜ் ஆலனுக்கு சித்தார்த்தை நன்கு தெரியும். ( ஜிம் வெப் ஐ விட என்று நான் கூறுவேன் :-) )

அவருடைய வெள்ளை மக்கள் மட்டும் கலந்து கொண்ட கூட்டத்தை கருத்தாக சித்தார்த் படம் எடுத்துக்கொண்டிருந்ததை பார்த்த ஜார்ஜ் ஆலம் ஒக்கமக்கா "மக்கக (Macaca)" படம் எடுக்கறான் பாருடோய்ன்னு மனதில் கருவிக்கொண்டு "இங்கு மகக்காவை வரவேற்போம்! அமெரிக்காவிற்கு வருக , வெர்ஜீனியாவின் உண்மையான உலகத்திற்கு வருக " என்று கிண்டல் பண்ணினார்.

மக்கக என்றால் குரங்கு என்று பொருள் படும், இது ஆப்பிரிக்க மக்களை கிண்டல் பண்ண வெள்ளையர்கள் பயன்படுத்தும் சொல்.

இந்த நிறவெறி பேச்சையும் சித்தார்த் படம் எடுத்துவிட்டார். இதை பார்த்த மிடையங்கள் ஆலனின் மக்கக பேச்சை எடுத்து மக்களுக்கு போட்டு காட்டின. இது அவருடைய வெற்றிக்கு பெரிய அடியாக விழும் என்று அவர் நினைக்கவில்லை.

அவருடைய முன்னனி வெகுவாக சரிந்தது. 1 மாதம் போராடி மககவால் ஏற்பட்ட சேதத்தை ஓரளவு குறைத்தார். ஆனாலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. அவரின் மக்கக பேச்சு அவருடைய கனவுகளுக்கு இடியாக விழுந்து விட்டது.

இதற்கு இன்னொரு முக்கிய காரணம் வடவெர்ஜீனியா பல்வேறு இன மக்கள் வாழும் இடமாக மாறிவருவதும் ஆகும். இவரின் தோல்விக்கு முக்கிய காரணம் வடவெர்ஜீனியாவில் இவருக்கு விழுந்த அடி ஏனெனில் அவருடைய மொழியில் நிறைய மக்கக வாழும் இடம் இது.

இன்னும் அடுத்த 10 ஆண்டுகளில் வெர்ஜீனியா குடியரசு கட்சியின் கோட்டையில் இருந்து விலகி பக்கத்து மேரிலாண்டை போல சனநாயக கட்சி கோட்டையாக மாறிவிடும். எல்லாம் வேகமாக வளர்ந்து வரும் வட வெர்ஜினியாவினால் தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ.

புதன், நவம்பர் 01, 2006

பிரம்ச்சாரிகள் வேலை செய்யும் உணவகம்

(1) பிரம்மச்சாரிகள் மட்டும் வேலை செய்யும் உணவகம் எது என்று தெரியுமா?

துப்பு:- இது ஒரு பிரபலமான உணவகம்.

(2) ஏன் இது பிரம்மச்சாரிகள் மட்டும் வேலை செய்யும் இடமாக ஆகியது என்று தெரியுமா?

துப்பு:- நீங்கள் பத்திரிக்கை படிக்கும் பழக்கம் உடையவராய் இருக்க வேண்டும்.

சரி உங்கள் விடையை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

முதல் கேள்விக்கு பதில்:-
சென்னையில் பிரபலமான "ஹோட்டல் சரவணபவன்"

இரண்டாவது கேள்விக்கு பதில்:-
(௧) மாற்றான் மனையை விரும்புபவர் ஹோட்டல் சரவணபவன் முதலாளி அண்ணாச்சி. திருமணமான ஊழியரின் மனைவியை மறுமணம் செய்பவர் முதலாளி அண்ணாச்சி. அதனால் ஊழியருக்கு திருமணமாலும் அது வீண். மனைவியை விட்டு கொடுக்கலைன்னா கொலை செய்ய கூட அஞ்சமாட்டார். அதாவது ஊழியர் திருமணமாகியும் பிரம்மச்சாரி.

(௨) இந்த சங்கதி தெரிந்ததால் திருமணமாகப்போவதாக இருந்தால் ஊழியர்கள் வேலையை விட்டு முன்பே விலகிவிடுவார்கள்.