வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், ஏப்ரல் 14, 2010

ஆண் குழந்தை வேண்டாம்

என் நண்பனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தைதான் வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். என்ன பண்றது பிறக்கும் குழந்தை எந்த பால் அப்படிங்கிறத முடிவுபண்ற வசதி நம்ம கிட்ட இல்லையே (இருந்திருந்தா 100 பசங்களுக்கு 10 பிள்ளைங்க கூட தேறாது). நான்கு ஆண்டு கழித்து இரண்டாவது குழந்தை பிறந்தது. அப்ப அவன் மருத்துவமனையில் இல்லை. அவனுக்கு செய்தி சொல்லி விட்டாங்க. அவன் கேட்ட கேள்வி குழந்தை பையனா பிள்ளையா? பையன் பிறந்திருப்பதாக சொன்னதும் அவன் பிறந்த குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டான். ஏகப்பட்ட பேர் அவன்கிட்ட பேசி சமாதானம் செய்து குழந்தையை பார்க்கவைத்தார்கள். குழந்தை பிறந்து இரண்டு நாள் கழித்து தான் குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு போனான் என்றால் அவனுக்கு ஆண் குழந்தை மேல் எவ்வளவு வெறுப்பு இருந்திருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.

ஊருக்கு போனப்ப ஏண்டா பிறந்த குழந்தையை பாக்க மாட்டேன்னு அடம்பிடிச்சன்னு கேட்டேன். நீ அமெரிக்காவுல இருக்கற இங்க இருக்குற நிலைமை உனக்கு தெரியாதுன்னு சொன்னான். துருவி கேட்டதும் பையனுக்கு திருமணம் பண்ண பொண்ணு கிடைப்பது கடினம் அதான் காரணம்ன்னு  சொன்னான். அடப்பாவி, அது பையன் பெரியவன் ஆனதும் கவலைப்படுறது அதுக்கு இப்பவே ஏண்டா கவலைப்படுற அப்படின்னேன்.

பெண் குழந்தை பிறந்தா நல்ல மாப்பிளை கிடைக்கனுமே நிறைய சீர்வரிசை செய்யனுமே அவ்வளவு வசதி நம்மகிட்ட இல்லையேன்னு மக்கள் கவலைப்படுவதை தான் பார்த்திருப்போம், பலர் முதிர் கன்னிகளாக இருப்பதும் இக்காரணத்தால் தான். பெண் கிடைக்கலை அப்படிங்கிறது புதிது இல்லையா. அவன் கவலைப்படுவதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

அரியானா மாநிலத்தில் பெண் வேண்டாம் பையன் தான் வேண்டும் என்று பலர் நினைத்ததன் பலனை இப்போ அனுபவிக்கறாங்க.திருமணத்துக்கு பெண் கிடைக்காம நிறைய ஆண்கள் வேறு வழியில்லாம பிரமச்சாரிகளாக இருக்காங்களாம். அதாவது முதிர் காளைகள். பணம் இருக்கறவங்க அடுத்த மாநிலத்திலிருந்து பெண் எடுக்கறாங்க. பெண் வீட்டு காரங்க சீர் கொடுத்து மாப்பிள்ளை எடுத்ததுக்கு பதிலாக மாப்பிளை வீட்டுக்காரங்க சீர் கொடுத்து பெண் எடுக்கறாங்க.

ஏன் நாம அரியானாவுக்கு போகனும்.  தங்க தமிழகத்திலேயே அந்த கதை நடந்துகிட்டிருக்கு. என் நண்பனின் வீட்டில் மூன்று பேர். இரண்டு பசங்க, ஒரு பெண். பெண்ணுக்கு சுலபமா மாப்பிள்ளை கிடைத்து கட்டிகொடுத்து நல்லபடியா வாழுது. மாமன் பெண்ணையே இவன் கட்டிக்கிட்டான். இவன் தம்பிக்கு பெண் கிடைக்குங்குள்ள தவிடு தின்னுட்டாங்க. எத்தனை பெண் பார்க்கறது? அப்பப்பா...

இவன் தம்பிக்கு மட்டும் இந்த நிலையா என்றால் அது தான் இல்லை. இவன் நண்பர்கள் (எனக்கும் அவர்கள் நண்பர்கள் தான்) முக்கால்வாசி பேருக்கு இந்த நிலை தான்.  இரண்டு பேர் இங்க தேடுனா நமக்கு பெண்கிடைப்பது என்று கடினம் என்று கேரளா போய் பெண் எடுத்துக்கிட்டு வந்துட்டானுங்க. மாப்பிள்ளை தேடும் மலையாள பெண்களை தெரிந்த தரகருக்கு இப்ப எங்கூருல நல்ல கெராக்கியாம். 30 நாளில் மலையாளம் கற்பது எப்படி? அப்படிங்கிற புத்தகம் அதிகளவு விக்குதாம். எங்க பக்கம் இருக்கற தரகருங்க எல்லாம் இப்ப மலை நாட்டில் தான் இருக்கறதா கேள்வி.

ஏண்டா இந்த நிலைமைன்னா... இவனுங்க பள்ளி படிப்பே போதும் அப்படின்னு தொழிலில் இறங்கிட்டானுங்க. பட்டபடிப்பு படிச்சாலும் இதே தொழில் தான் பண்ணனும் அதுக்கு 3 ஆண்டு வீண் பண்ணறதுக்கு அந்த 3 ஆண்டை தொழிலில் பயன்படுத்தினால்  பணம் கிடைக்கும் என்பது இவனுங்க வாதம். அதுவும் சரிதான். ஆனா இப்ப என்னடான்னா பெண்கள் பட்டபடிப்பு படிச்சிட்டு படிக்காத பையனுங்களை கட்டிக்க மாட்டேங்குது. இப்படியெல்லாம் ஆகுமுன்னு யாருக்கு தெரியும்?

இவனுங்க பட்டபடிப்பு படிக்காதது தான் திருமணம் ஆகாம தள்ளிபோனதுக்கு காரணம் (படிக்காத பையனை எந்த படித்த பிள்ளையப்பா கட்டிக்கும்? ஒரு நியாயம் இருக்குள்ள). அதை புரிந்து கொள்ளாத என் நண்பன் ஆண் குழந்தையே வேண்டாம் என்று சொல்றான். இப்படியாவது பெண் குழந்தைக்கு ஆதரவு இருக்கேன்னு மகிழவேண்டியது தான்.

25 கருத்துகள்:

பழமைபேசி சொன்னது…

பகிர்வுக்கு நன்றி!

குறும்பன் சொன்னது…

நன்றி பழம.
கொங்கு நாடும் சேர நாடும் ஒன்னு பிரிச்சி பேசாதிங்க அப்படின்னு நம்மாளுங்க நிருப்பிக்க கிளம்பிட்டாங்க. இஃகிஃகி.

manjoorraja சொன்னது…

சிலருக்கு பெண் பிறந்தா பிடிக்காது. சிலருக்கு ஆண் பிறந்தா பிடிக்காது.

எங்கள் வீட்டின் மாடியில் குடியிருப்பவரின் மகனுக்கு 2 வருடமா பெண் தேடியும் இன்னும் கிடைக்கலெ. பையனுக்கு சொந்த வீடு இருக்கா, அது இதுன்னு ஏகப்பட்ட டிமாண்ட்கள் பெண் வீட்டாரிடமிருந்து.

இன்னொரு நண்பர் ஒருவரும் தொடர்ந்து பெண் தேடியும் கிடைக்கலெ.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

//பெண் வீட்டு காரங்க சீர் கொடுத்து மாப்பிள்ளை எடுத்ததுக்கு பதிலாக மாப்பிளை வீட்டுக்காரங்க சீர் கொடுத்து பெண் எடுக்கறாங்க//

நல்ல மாற்றம் தான். கேக்கறதுக்கே நல்லா இருக்கு. பொண்ணு கெடைக்கரதுங்கறதுதான் இன்னிக்கி நம்ம ஊர்ல பெரிய பிரச்சனையா இருக்கு

தாராபுரத்தான் சொன்னது…

உண்மை...உண்மை..

குறும்பன் சொன்னது…

உண்மைதாங்க மஞ்சூர் ராசா.

என் நண்பனுக்கு அந்த மாதிரியெல்லாம் ஒன்றும் இல்லை, பையனுக்கு திருமணம் பண்ணனுமே அப்படிங்கற கவலை தான் அவனுக்கு, அதனாலயே வேண்டாம் என்கிறான்.

பெண் போற இடத்தில் நல்லா இருக்கனும் என்று எல்லா வசதியும் இருக்கான்னு கேக்கறது\விசாரிக்கறது தப்பில்லை. வசதியான இடமா தேடுனா இப்படி விசாரிக்கத்தான் செய்வாங்க. என்ன பண்றது நம்ம தேடல் அப்படிதான இருக்கு.

குறும்பன் சொன்னது…

வாங்க அப்பாவி தங்கமணி. பெண் குழந்தை வேண்டாம், பையன் தான் வேண்டும் என்று தவமிருந்ததின் பலன். வேற என்ன சொல்ல.

குறும்பன் சொன்னது…

வாங்க தாராபுரத்தான். உங்க ஊருபக்கமும் மலை நாட்டு பக்கம் கிளம்பிட்டாங்களா?

கோவி.கண்ணன் சொன்னது…

பாசிடிவ் தகவல் நெகடீவ் தலைப்பில்.
நன்று !

pudugaithendral சொன்னது…

நீங்க சொல்லியிருப்பது எல்லாம் உண்மை. இப்ப பொண் கிடைப்பது கஷ்டமா போச்சு. ம்ம் இதைவெச்சு ஒரு பதிவு போட ப்ளான் இருக்கு.

"உழவன்" "Uzhavan" சொன்னது…

ஓ.. இப்படி ஒரு கதை இருக்கா :-)

கண்ணா.. சொன்னது…

நல்ல பதிவு.

இதே கருவில் நம்ம் நான் ஆதவன் சூர்யாவும் செம ரகளையா பதிவு போட்டு இருந்தாரு.

அதையும் பாருங்க முதிர் கண்ணன்கள்!!!

எல்லாரும் இதுமாதிரியே இப்போ யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்களே...

இனி கள்ளிப்பாலை ஆண்பிள்ளைகளுக்கு குடுக்காம இருக்கணும்.. :))

குறும்பன் சொன்னது…

வாங்க கோவி. என் நண்பன் ஆண் குழந்தை வேண்டாம் என்றான் அத எழுத போய் மற்றதையும் சொல்லும்\எழுதும் படி ஆயிடுச்சு. என் நண்பனை வச்சு தான் தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.

குறும்பன் சொன்னது…

வாங்க புதுகை தென்றல். போடுங்க போடுங்க உங்க பக்க கதையையும் தெரிஞ்சிக்கிறோம்.

குறும்பன் சொன்னது…

என்னங்க உழவன் Uzhavan, இந்த கூத்து உங்களுக்கு தெரியாதா? நீங்க கொங்கு நாடு இல்லை போலிருக்கு. சீக்கிரம் உங்க பக்கமும் இந்த கதை நடக்கப்போவுதுங்கோ.

குறும்பன் சொன்னது…

கண்ணா எல்லாரும் ஒரே மாதிரி யோசிக்கிக்கலை. நாட்டுல இந்த மாதிரி நடக்குது. அதை பல பேரு பலவிதமா சொல்றோம். அவ்வளவு தான்.
அவரு இடுகையை படித்தேன் கலக்கியிருக்காரு.

கள்ளிசெடிய முதலில் ஒழிக்கனும் அப்பதான் இதுக்கெல்லாம் விடிவு காலம் வரும்.

பெயரில்லா சொன்னது…

கிராமங்கள்ள 40 வயசு நெருங்கும் பல இளைஞர்களை? பார்க்கலாம்.1500 ரூபாய்க்கு எதொவொரு பன்னாடை பல்கலைகலகத்துல பட்டம் வாங்கும் இளம்பெண்கள் டிகிரி படித்தவந்தான் வேணும் என்கிறார்கள்.அது ஓணான் கூட முட்டை வைக்காத பட்டி காட்டு பெண்ணாக இருந்தாலும் தபால் மூலம் டிகிரி படித்துவிடுகிறது.நம்ம ஆள் கான்சி கருவாடா பணம் சம்பாதிக்க நாய பேயா அலையரான்.நிமிர்ந்து பார்க்கும் போது கூன் விழுந்துடுது

பெயரில்லா சொன்னது…

இப்போ பெண் கிடைக்காத சீசன்.காரணம் இருபது வருசத்துக்கு முன்னால பெண் குழந்தை ஒஇறந்ததும் கொண்னாங்க...இப்போ ஸ்கேன் வசதி எடுத்துட்டாங்க.கடும் குற்றம்.அதனால நிறைய பெண் குழந்தைகள் பிறக்குது.ஆனாலும் சம்பாதிக்கத பெண்கள் இல்லை.இன்னும்பத்து வருசம் கழிச்சு ஆண்கள் ,பெண்களின் தொழில் போட்டிகளை சமாலிக்க முடியாமல் தினறுவார்கள்.ஆணும் பெண்ணும் சமம் ஆகும்

pudugaithendral சொன்னது…

http://pudugaithendral.blogspot.com/2010/04/blog-post_2532.html

உங்க பதிவுக்கு என் பதிவில் சுட்டி கொடுத்திருக்கிறேன்

குறும்பன் சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் நன்றிங்க. நீங்க சொன்ன எல்லாம் உண்மை.

பட்டப்படிப்பு படிச்சாதான் இனிமே மதிப்பு & பெண் கிடைப்பதெல்லாம் இதை பசங்க புரிஞ்சு நடந்துக்கிட்டா சரி.

விவசாயிக்கு பெண் கிடைப்பது இப்பவெல்லாம் குதிரை கொம்பு.

குறும்பன் சொன்னது…

இலவச விளம்பரத்திற்கு மிக்க நன்றி புதுகை தென்றல். உங்க இடுகையையும் படித்தேன் நல்லா சொல்லி இருக்கீங்க.

ராமலக்ஷ்மி சொன்னது…

தலைப்பு ஆச்சரியப்பட வைத்தது. விஷயம், அப்படியா கதை என சொல்ல வைக்கிறது:)!

பெயரில்லா சொன்னது…

"ஆடிய ஆட்டம் எனன பாடிய பாட்டம் எனன " கொஞ்ச நஞ்சமா பெண்கள கஷ்ட படுதுநீங்க , பெண்ணே வேணாமுன்னு சொன்னீங்கதான அனுபவியுங்க

குறும்பன் சொன்னது…

வாங்க ராமலஷ்மி, பெண் கிடைக்காம திண்டாடுறவன் பொழப்பு உங்களுக்கு சிரிப்பா இருக்கா :))

குறும்பன் சொன்னது…

பெயரில்லாதவரே, ஆடிய ஆட்டம் தப்பு தான். நிலைமை இப்படியே போனா நல்லதில்லைங்கிளே.