வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?வெள்ளி, ஏப்ரல் 09, 2010

கோவை - மாநாடு - சாலை

கோவையின் வழியாக தேநெ 47, தேநெ 67, தேநெ 209 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. திருச்சி, தஞ்சை, கரூர் பகுதிகளில் இருந்து செல்பவர்கள் 67ஐயும் சேலம், ஈரோடு, சென்னை பகுதிகளில் இருந்து செல்பவர்கள் 47ஐயும் திண்டுக்கல், மதுரை பகுதிகளில் இருந்து செல்பவர்கள் 209ஐயும் பயன்படுத்துவார்கள்.

கோவைக்கு தொழில் நிமித்தமாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். பஞ்சாலைகள் நிறைய இருக்கா அதனால் சுமையுந்துகளும் அதிகமாக வரும். வடநாட்டு வண்டிகள் நிறைய இங்கு வரும். பக்கத்தில் மற்றொரு பெரிய தொழில் நகரம் திருப்பூர் இருக்கிறது, அங்க காசு இருக்கறவங்க எதுக்கெடுத்தாலும் இங்க தான் வருவாங்க. பல கல்லூரிகளும், பெரிய மருத்துவமனைகளும் உள்ளதால் மேற்கு மாவட்ட மக்கள் இங்கு தான் அதிகம் வருவாங்க.

நான் ஈரோட்டிலிருந்து கோவைக்கு சென்ற போது பெருமாநல்லூர் வரை விரைவாக போக்குவரத்து நெரிச்சல் இல்லாமல் போனேன். அதுவரை இரட்டை வழி சாலையும் இருந்தது. பெருமாநல்லூரில் திருப்பூரில் இருந்து வரும் வண்டிகள் இணைந்து கொள்ளும். சாலையில் செல்லும் வண்டிகளின் எண்ணிக்கையும் இருமடங்காக பெருகிடும். அங்கிருந்து ஒற்றை வழி சாலை தான். வண்டி மெதுவாக நகர்ந்து தான் செல்லும். நம்ம வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டாகிடும். இது வழமை.
மற்ற சாலைகளில் போக்குவரத்து எப்படி என்று தெரியாது. தெரிஞ்சவங்கதான் சொல்லனும்.

ஜூன் மாதத்தில் செம்மொழி மாநாடு நடக்கப்போகுது. அப்ப மாநாட்டு கூட்டம் கோவையை மொய்க்கப்போகுது. சென்னை மற்றும் வட மாவட்ட மக்கள் தே.நெ 47 ஐ பயன்படுத்தி தான் கோவைக்கு வரனும். அப்ப போக்குவரத்து நெரிச்சல் எப்படி இருக்கும்? நினைத்துப்பாருங்கள்.

தமிழகத்தின் மற்ற பெருநகரங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் இரட்டை வழி சாலைகளாக உள்ள போது தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரும் தொழில் நகருமான கோவைக்கு இரட்டை வழி சாலை இல்லாதது பெரிய குறை. தி. ரா. பாலு அமைச்சரா இருந்தப்ப தமிழகத்தின் நெடுஞ்சாலைகளுக்கு நிறைய பணம் ஒதுக்கி நெடுஞ்சாலைகளை விரைவாக இரு வழி சாலைகள் (4 வழி) அமைத்து புண்ணியம் பண்ணினார். ஆனால் ஏனோ கோவைக்கு மட்டும் அவர் செய்யவில்லை. கோயம்புத்தூர்காரங்க ஏதாவது எக்குதப்பா நடந்து இருப்பாங்க. பொங்கலூர் பழனிச்சாமிக்கும் பாலுவுக்கும் தகராறா? ஏதோ ஒன்னு. கோவைக்கு இரட்டை வழி சாலை இன்னும் கிடைக்கலை. இப்ப பாருங்க எவ்வளவு தொந்தரவுன்னு.

ஏதாவது ஒரு வண்டி பழுதுபட்டு நின்றால் இரு பக்கமும் போக்குவரத்து பாதிக்கப்படும். அதிலும் நிறைய வண்டிகள் செல்லும் சாலையில் ஏற்பட்டால் சொல்லத்தேவையில்லை. மாநாட்டை ஒட்டி நிறைய வண்டிகள் செல்லும் போது அவ்வாறு பழுதுபட்டு நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதனால் தேவையில்லாமல் மாநாடு நடக்கும் நாட்களில் கோவைக்கு வண்டிகளில் செல்லாதீர்கள். தொடருந்தில் செல்லலாம், மாநாட்டை ஒட்டி சிறப்பு தொடருந்துகள் இயக்கப்படுவதாக செய்திகள் சொல்கின்றன.

6 கருத்துகள்:

தமிழினி சொன்னது…

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

Prasanna Rajan சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே

இப்படிக்கு,
போன வார நட்சத்திரம் :D

ஆயில்யன் சொன்னது…

//என்னை நன்கு அறிந்த பல பேர் வலையுலகில் இருக்காங்க. ஆனா யாருக்கும் நான் வலைப்பதிவு வச்சிருப்பது தெரியாது. நம்ம எழுத்து மூலமாக வலைப்பதிவை தெரிஞ்சிக்கிட்டும் (அப்ப அவங்க தெரிஞ்சுக்க வாய்ப்பே இல்லையான்னு நீங்க கேட்பது புரிகிறது)///


என்னா டிரிக்ஸா வலைப்பதிவு நடத்திக்கிட்டு வர்றீங்க

நட்சத்திர வாழ்த்துக்கள் அசத்துங்க :)

குறும்பன் சொன்னது…

வாங்க நட்சத்திரம் (பிரசன்ன ராஜன்).

குறும்பன் சொன்னது…

வாங்க ஆயில்யன். நானும் வலைப்பதிவு வச்சிறுக்கேன்னு சொன்னா நம்பவா போறாங்க. நம்ம மேல் இருக்கும் மதிப்பு அப்படி. அதனால சொல்லாம இருக்கறது தான் எனக்கு நல்லது. இஃகிஃகி.

மஞ்சூர் ராசா சொன்னது…

இனிய நட்சத்திர வாழ்த்துகள். செம்மொழி மாநாட்டிற்கு முன் போர்கால அடிப்படையில் தே.நெ.47ஐ இரு வழிப்பாதையாக மாற்றவேண்டும். இல்லையெனில் மிகவும் சிரமமே. அது போல மேட்டுப்பாளையம் சாலையையும் (அதிக விபத்துகள் இங்குதான் நடக்கின்றன)