வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



திங்கள், ஏப்ரல் 12, 2010

விவாகரத்து

ஊர்ல பேசிக்கிட்டு இருந்தப்ப எங்கம்மா நம்ம சின்னுசாமி மகளுக்கு போன வருசம் கல்யாணம் ஆச்சுல்ல, அதுக்குள்ள ஏதோ மனக்கசப்பு வந்து புருசன்  வேண்டான்னு வெட்டிக்கிட்டு வந்துட்டாளாம் என்று சொன்னாங்க.

சின்னுசாமி மகள் மட்டுமா?? முன்பெல்லாம் விவாகரத்து என்பது அரிதாக இருக்கும். இப்ப ஆன்னா ஊன்னா விவாகரத்துன்னு ஆகிப்போச்சு. அதுக்கு பல காரணங்கள்.

பொருளாதாரம்.
முன்பெல்லாம் பெண்கள் வீட்டு வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. வரும்படி ஆண்கள் கையில் இருந்தது. இப்ப அப்படி அல்ல, பெண்களும் வேலைக்கு போறாங்க சம்பாதிக்கறாங்க. துணையில்லாம வாழராங்க. பெண்களை அதிகம் படிக்க வைக்காம இருந்தது ஒரு காலம், ஏன்னா பொண்ணு நிறையா படிச்சா நிறைய படிச்ச மாப்பிளையா பார்க்கணும் அந்த மாதிரி மாப்பிளைக்கு நிறைய சீர் வரிசை செய்யனும். இதுக்கு பொண்ண அதிகம் படிக்க வைக்காம இருந்தா சிக்கலே இல்லை, அதுவும் அல்லாமல் படிச்சா எங்க வேலை கிடைக்கும்? மென்பொருள் துறை வேலைவாய்ப்புகள் இதனை புரட்டி போட்டுள்ளது.

நான் எட்டாவது படித்த பொழுதபோது கூட படித்த நண்பனின் அக்கா பத்தாவது படித்தார்கள், அவங்க வகுப்பில் முதல் பத்து இடத்துக்குள் வருவாங்க. எட்டாவதுடன் அவங்க வேற ஊருக்கு போயிட்டாங்க. இரண்டு ஆண்டு கழித்து ஒரு குழந்தையுடன் அவனோட அக்காவை பார்த்தேன். நன்றாக படித்த பெண்ணை பத்தாவது முடித்த கையுடன் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். பெற்றோரின் சுமை குறைஞ்சது பாருங்க ஆனா என் நண்பனின் அக்காவோட நிலை? இந்த மாதிரி பலபேர் உங்களுக்கும் தெரிந்து இருப்பார்கள்.

பெண்களை படிக்க வைக்க இருந்த தயக்கம் கொஞ்சம் ஒழிந்தது. அடுத்தபடியா படித்த பெண்களை வேலைக்கு அனுப்புவதில் பெரிய தயக்கம் இருந்தது, அப்படியே அனுப்ப ஒத்துக்கிட்டாலும் வெளியூரா? மூச். இப்ப இந்த நிலையிலும் நல்ல மாற்றம். அதிகளவில் நகரங்களில் உள்ள மகளிர் விடுதிகள் இதற்கு சான்று.

பொருளாதார நிலையில் பெண்களின் நிலை மேம்பட்டு  உள்ளதால் அடிமையாக இருக்க அவர்கள் மறுக்கிறார்கள். ஆணாதிக்கம் மிக்கவன் கணவனாக வந்தால் பழைய காலம் போல் அல்லாமல் குடும்பநல நீதிமன்றத்தை அனுகிவிடுகிறார்கள். கல் ஆனாலும் கணவன்,  புல் ஆனாலும் புருசன் போன்றஆணாதிக்க பழமொழிகள் எல்லாம் இப்ப செல்லாது என்பது பலருக்கு புரிவதில்லை.

பெற்றோர்
செல்லம் கொடுத்து வளர்த்த பெண், கணவனுடன் கோபம் கொண்டு சீராட்டிகிட்டு வந்தா பெற்றோர் அவளை சமாதான படுத்தனும் அதை விட்டு விட்டு பெண்ணை விட இவர்கள் அதிகம் சண்டை போட்டு சமாதானத்திற்கான வழிகளை அடைத்து விவாகரத்து தான் ஒரே வழி என்று ஆக்கி பெண் வாழ்வை சிதைப்பவர்கள்.

கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்குமா? அவற்றை பெரிது படுத்தாமல் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் தான் வாழ்க்கை இனிக்கும். சிறியவர்கள் தவறு செய்தால் பெரியவர்கள் தகுந்த அறிவுரை கூறி அதை சரி செய்ய முயலவேண்டும். ஆனால் சிலர் அப்படி நடப்பதில்லை. நிறைய இடங்களில் பெற்றோர் (ஆண் மற்றும் பெண்) மீது தான் குற்றம் சொல்ல வேண்டியதாக உள்ளது.

14 கருத்துகள்:

Robin சொன்னது…

/செல்லம் கொடுத்து வளர்த்த பெண், கணவனுடன் கோபம் கொண்டு சீராட்டிகிட்டு வந்தா பெற்றோர் அவளை சமாதான படுத்தனும் அதை விட்டு விட்டு பெண்ணை விட இவர்கள் அதிகம் சண்டை போட்டு சமாதானத்திற்கான வழிகளை அடைத்து விவாகரத்து தான் ஒரே வழி என்று ஆக்கி பெண் வாழ்வை சிதைப்பவர்கள். // True!

manjoorraja சொன்னது…

விட்டுக்கொடுத்து வாழாவிட்டால் எல்லா இடத்திலும் பிரச்சினைகள் தான். முன்பெல்லாம் வேறு வழியே இல்லை என அப்படியே ஒடுங்கி இருந்துவிடுகின்றனர். ஆனால் இப்ப அப்படி இல்லை. அதே நேரத்தில் பெண்களிலும் நிறைய படித்தவர்களை திருமணம் செய்துக்கொள்ளும் அவரை விட கொஞ்சம் குறைவாக படித்த கணவன்மார்கள் படும் கஸ்டமும் குழந்தைகளுக்காக சகித்துக்கொண்டு போவதும் நடந்துக்கொண்டுதான் இருக்கு.

முக்கியமாக விவாகரத்துகள் கொஞ்சம் குறைவதற்கு காரணம் குழந்தைகள். குழந்தை இல்லாமல் கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்படும் போது அது வெகு சீக்கிரத்தில் விவாகரத்துக்கு கொண்டுவந்து விட்டுவிடுகிறது.

பழமைபேசி சொன்னது…

ஆமாங்க... எல்லாம் அந்நியமாகிப் போகிச்சு...

குசும்பன் சொன்னது…

//கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்குமா? //

சண்டையில் கிழியாத சட்டை எங்கே கிடைக்கும்:)))

குறும்பன் சொன்னது…

ஆமாங்க Robin.

குறும்பன் சொன்னது…

உண்மை மஞ்சூர் ராசா.

குறும்பன் சொன்னது…

நன்றி பழம.

குறும்பன் சொன்னது…

//சண்டையில் கிழியாத சட்டை எங்கே கிடைக்கும்:)))//

சண்டையில் சட்டை கிழியலைன்னா அது சண்டையே அல்ல.:-))

வல்லிசிம்ஹன் சொன்னது…

அத்தனையும் உண்மை.
விட்டுக் கொடுத்தல் என்ற வார்த்தைக்கே அர்த்தம் மறந்த வாழ்வாகிவிட்டது இப்போது.

குறும்பன் சொன்னது…

நன்றி வல்லிசிம்ஹன். திருமண வாழ்க்கைக்கு இன்றியமையாதது 'விட்டுக்கொடுத்து வாழ்தல் 'அது இல்லாதது தான் எல்லா சிக்கல்களுக்கும் காரணம்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

அழகா சொன்னீங்க குறும்பன். சொந்த காலுல நிக்கறதும் நல்ல நிலைல இருக்கறதும் சந்தோசமான விசயம் தான். அது இல்வாழ்க்கைக்கு பாதகம் விளைவிக்கறது தான் வருத்தமானது. இதுல இன்னொரு விசயம் என்னனா ஒரு சிலர் அப்படி இருக்கறதால வேலைக்கி போற எல்லா பொண்ணுகளையும் அதே மாதிரி பாக்கற நிலை உருவாகி கிட்டு இருக்கு. நல்ல பதிவு

குறும்பன் சொன்னது…

நன்றி அப்பாவி தங்கமணி. பெண்கள் சொந்த காலில் நிற்கும் போது இது மாதிரி சிக்கல்கள் வரத்தான் செய்யும். எல்லாத்தையும் பொதுப்படுத்தி பார்ப்பதே மக்கள் வேலை. அதுக்காக கவலைப்படமுடியுமா?

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல இடுகைங்க. முன்னெப்போதும் இல்லாதபடி மணமுறிவுகள் இப்போது மிகவும் அதிகமாகி விட்டன.

குறும்பன் சொன்னது…

நன்றி ராமலஷ்மி. எனக்கு தெரிந்தே நிறைய நடக்கிறது, அதன் ஆதங்கமே இந்த இடுகை.