என்னையும் ஒரு பதிவரா மதிச்சு தமிழ்மணத்துக்காரங்க நட்சத்திரமா தேர்ந்தெடுத்து இருக்காங்க. எப்படி இந்த முடிவு எடுத்தாங்கன்னு தெரியலை. என் இடுகைகளை பார்த்த பின்னும் என்னை கூப்பிட்டுறுக்காங்கன்னா அதுக்கு காரணம் என்னுடைய நல்லூழ் தான். இந்த தேதியில் நட்சத்திரமா இருக்க சம்மதமான்னு கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தாங்க அதுக்கு நான் பதில் அனுப்பலை, காரணம் அந்த மின்னஞ்சலை சரியான சமயத்தில் நான் பார்க்கலை, இரண்டு வாரம் கழித்து தான் பார்த்தேன். பார்த்ததும் அடடா வாய்ப்பு போச்சேன்னு கவலைப்பட்டாலும், மன்னிக்கவும் இந்த தேதியில் என்னால் இருக்க முடியாது, வேற தேதி இருந்தா சொல்லுங்கன்னு பதில் போட்டேன். அப்புறம் இரண்டு நாளைக்கு ஒரு தரம் தமிழ்மணத்திலிருந்து ஏதாவது மின்னஞ்சல் வந்திருக்கான்னு பார்ப்பதே பொழப்பா போச்சு. ஒரு நாள் ஏப்ரல் 12ல் தொடங்கும் வாரத்துக்கு நட்சத்திரமாக முடியுமான்னு கேட்டாங்க. இந்த வாய்ப்பை விடுவனா? எனக்கு சம்மதம் எனக்கு சம்மதம் எனக்கு சம்மதம் அப்படின்னு 3 பதில் மின்னஞ்சல் அனுப்பிட்டேன்.அவங்க மனசு மாற கூடாது பாருங்க.
என்னை பற்றி சொல்வதற்கு அதிகமில்லை. தமிழ்மண நட்சத்திரம் என்பதால் ஏதாவது சொல்லியாகனும் இல்லையா? தமிழகத்தில் கொங்கு மண்டலத்தை சார்ந்த 24 நாடுகளில் ஒன்றாகிய கொட நாட்டின் மன்னிக்க வாழவந்தி நாட்டின் துணை நாடாகிய தூசூர் நாட்டிலுள்ள பெரிய ஊரில் பிறந்து வளர்ந்தேன், வாழவந்தி நாட்டுலயும் அது தான் பெரிய ஊர். ஓர் ஆண்டு சிலிகான் பள்ளத்தாக்கில் குப்பை கொட்டிட்டு 9 ஆண்டுகளாக அமெரிக்க தலைநகர் வாசிங்டன் பெருநகரத்திற்கு அருகில் வர்ஜீனியா மாநிலத்தில் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். தமிழில் புலமை கிடையாது, ஆர்வம் உண்டு.
பள்ளி, கல்லூரிகளில் படித்தபொழுதெல்லாம் தமிழ் மீது அவ்வளவு பற்று இருந்ததில்லை. பள்ளி முழுஆண்டு விடுமுறையில் எங்கப்பா இந்தி படிக்க சொல்லி தொல்லை படுத்தினார். அதனால் நான் இந்தி எதிர்ப்பாளனாக மாறினேன். விடுமுறையில் விளையாட விடாம இந்தி படி சிந்தி படின்னு... அப்பாக்களே இப்படித்தானோ? அப்ப இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது இராஜீவ்காந்தி தான் பிரதமர். ஏன் நடந்தது? காரணம் தெரியவில்லை, அப்ப திமுக எதிர்கட்சி, ஆளுங்கட்சியா இருந்தா கண்டுக்காம விட்டுருப்பாங்களோ என்னவோ. ஏன் அப்ப இராஜீவ்காந்தி பிரதமர் அப்படின்னு சொன்னேன்? இல்லைன்னா என்னை ரொம்ப ரொம்ப யூத்துன்னு நீங்க நினைச்சிருவீங்களேன்னு தான். இந்தியை எதிர்ப்பவர்கள் அனைவரும் தமிழ் வெறியர்கள் என்ற கருத்தாக்கத்தின் படி நான் தமிழ் வெறியன் ஆனேன். அமெரிக்கா வந்த பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் ஆர்வம் அதிகமாகியது. 2005 நவம்பர் மாதத்தில் முதல் இடுகையை இட்டேன் அதனால் நான் ஒரு மூத்த பதிவர் என்பதை விருப்பம் இல்லாவிடிலும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். அதாவது 6 ஆண்டுகளாக நான் அப்பப்ப வலைப்பதிவு எழுதிக்கிட்டு வலைப்பதிவின் தொடர்பு அறுந்து போகாமா பார்த்துக்கிட்டிருக்கேன்.
என்னை நன்கு அறிந்த பல பேர் வலையுலகில் இருக்காங்க. ஆனா யாருக்கும் நான் வலைப்பதிவு வைத்திருப்பது தெரியாது. நம்ம எழுத்து மூலமாக வலைப்பதிவை தெரிஞ்சிக்கிட்டும் (அப்ப அவங்க தெரிஞ்சுக்க வாய்ப்பே இல்லையான்னு நீங்க கேட்பது புரிகிறது).
குறும்பன் என்ற பெயரை வைச்சது நண்பனுக்கு பின்னூட்டம் போட. உண்மையான பெயரை வெளியில் சொல்லல. அது வசதியா இருந்ததால அப்படியே தொடர்ந்தேன், இப்ப தமிழ்மணம் நட்சத்திரம் ஆகியிருக்கறதால அந்த வசதியை விட்டு கொடுக்கனும்மா என்ன? அதனால குறும்பன் என்ற பெயரிலேயே தொடர்கின்றேன்.
இந்த வாரம் குறைந்தது ஏழு இடுகைகள் உறுதி. ஆதரவு காட்டுங்கப்பா. (ஆதரவு காட்டவில்லை என்றாலும் நான் இடுகை இடுவதில் இருந்து விலகமாட்டேன்).
45 கருத்துகள்:
வாழ்த்துகள்
ஆகா.... இவ்வார விண்மீனுக்கு வாழ்த்துகளோ வாழ்த்துகள்!
Congrats.
நட்சத்திரப் பதிவரானதற்கு எமது மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்!
dear kurumban,
interesting,
please send me your mail address.
---vignesrajjournalist@hotmail.com
அப்பா மூத்த பதிவரே வாழ்த்துக்கள்
நாங்களும் மூத்த பின்னுட்டக்காரர்கள் தான்.வாழ்த்துக்கள்.
அன்புடன்
சந்துரு
விண்மீன் வாழ்த்துகள் அன்பரே!!
உங்களுக்கு ஆதரவு நிச்சயம் உண்டு :)
வாழ்த்துக்கள் அங்கிள்..:))
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் பெரியவரே :D
நன்றி திகழ்.
நன்றி அஹமது இர்ஷாத்.
நன்றி பழம.
Thanks Suresh.
நன்றி தங்க முகுந்தன்.
தாமோதர் சந்துருவே மூத்த பின்னூட்டகாரரே வணக்கம். மாசத்துக்கு ஒரு முறையாவது மூத்த பதிவரை கண்டுக்குங்க. பின்னூட்டம் போடற மாதிரி இடுகை போடுன்னு சொல்லாதிங்க. சட்டியில் இருந்தா தான ஆகப்பையில் வரும்.
நன்றி செந்தில் வேலன், உங்கள மாதிரி நாலு பேரு ஆதரிச்சா தான் உண்டு.
வாங்க நாஞ்சில் பிரதாப். என்னது அங்கிளா???? இந்த மாதிரி யாரும் நினைச்சிடக்கூடாதுன்னு தான் இராஜிவ்காந்தி பிரதமருன்னு போட்டேன். அதை நீங்க படிச்சமாதிரி தெரியலையே. அவ்வ்வ்...
நன்றி துபாய் ராஜா.
ஆஆஆ பெரியவரா?? என்னங்க சுடுதண்ணி கால்ல சுடுதண்ணிய கொட்டிட்டிங்க. நாஞ்சில் அங்கிள் அப்படிங்கறார், நீங்க பெரியவருங்கிறிங்க... நான் சின்னப்பையங்க... நம்புங்க நம்புங்க நம்புங்க.....
வாழ்த்துகள் குறும்பன்.
நட்சத்திர வாழ்த்துக்கள் குறும்பன்.
வாழ்த்துக்கள்...
குறும்பன்..
தொடர்ந்து அசத்துங்கள்..
கலகலப்பான பதிவு:)!
நட்சத்திர வாழ்த்துக்கள்!
பாராட்டுகள் நண்பரே.
இந்த வாரம் சிறந்த வாரமாக இருக்க வாழ்த்துகள்.
நட்சத்திரப் பதிவரானதற்கு எமது நல் வாழ்த்துக்கள்!
ஸ்ரீரங்கன் அச்சுதன்
பங்குச்சந்தை - ஸ்ரீலங்கா
நட்சத்திர வாழ்த்துக்கள் குறும்பன்!
2005 நவம்பர்ல தான் நானும் பதிவு எழுதத் தொடங்கினேன். இன்னும் ஐந்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடலை. நீங்க என்னடான்னா ஆறு வருடமா எழுதுறதா சொல்றீங்களே?! குறும்பனுக்கு கணக்கு மணக்கு ஆமணக்கோ? :)
வாழ்த்துக்கள் மூத்தப்பதிவரே:))
நன்றி குமரன்.
நன்றி சுப்பையா வாத்தியார் அவர்களே.
நன்றி Cool Boy
நன்றி ராமலஷ்மி. நான் கலகலப்பா இடுகை போட்டாலும் இந்த மாதம் தண்ணி காட்டறது என்னமோ நீங்க தான்.
நன்றி மஞ்சூர் ராசா.
நன்றி ஸ்ரீரங்கன் அச்சுதன்.
நன்றி அன்புடன் அருணா.
என்னங்க குமரன் இப்படி சொல்லிட்டிங்க. 2005 நவம்பர் - 2010 நவம்பர் என்று கணக்கு வைத்தா தான் உங்க கணக்கு வரும்.
2005, 2006, 2007, 2008, 2009, 2010
ஆறு ஆண்டுகளாக நாம வலைப்பதிவு எழுதிக்கிட்டு இருக்கோம். இப்ப கணக்கு சரியா வருதுங்களா. :-))
நன்றி குசும்பன்.
அறிமுகமே அசத்தலாக இருக்கு. கலக்குங்க சார்.
அமெரிக்கா போன பிறகு தான் தமிழ் கற்றுக்கொள்ளும் ஆர்வம் வந்ததது.
இதைவிட வேறு என்ன வேண்டும். எண்ணித்துணிக கருமம்.
கோவி கண்ணன் சொன்னது தான்?
நன்றி கோவி. கண்ணன்.
நன்றி ஜோதிஜி.
பள்ளியில் படிக்கும் போது ஒழுங்கா இலக்கணம் கற்கவில்லையே என்ற வருத்தம் இப்போதும் உண்டு.
arumayana pathivu
nalla pathivu
Thanks Thameem.
கருத்துரையிடுக