இந்து
யார் இந்து? இதுக்கு தெளிவான பதில் உண்டா? இல்லை என்பதே பதில். ஏன்னா இந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை. இந்து என்ற பதம் ஈரான் நாட்டை சார்ந்த மக்களால் சிந்து ஆற்றுக்கு அப்பால் இருந்த மக்களை குறிக்க பயன்பட்டது.
இப்ப இந்து மதம் என்ற பெயரால் குறிப்பிடப்படுவர்கள் பல்வகையான நம்பிக்கைகளை உடையவர்கள். வைணவத்துக்கும் சைவத்துக்கும் நடந்த சண்டை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்திய அரசியலமைப்பு சட்டதிலும் இந்து மதம் என்பதைப்பற்றி வரையறை இல்லை. என் நண்பன் ஒருவன் சிவ பக்தன், தவறியும் பெருமாள் கோயிலுக்கு போகமாட்டான். சில ஆண்டுகளுக்கு முன் காஞ்சி மடம் திருமலை கோயிலில் சில மாற்றம் சொல்ல ஜீயர் மடத்துக்காரங்க அதெல்லாம் எங்களுக்கு தெரியும் உன் வேலை எதுவோ அதை ஒழுங்கா பாருன்னு சத்தம் போட்டாங்கில்லையா... எல்லாம் இந்த சண்டையால தான்.
இசுலாம்
இசுலாம் தோன்றிய சிறிது காலத்திலேயே யார் உண்மையான தலைமை என்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் சன்னி, சியா என இரண்டாக பிளவுபட்டுவிட்டது. இஃப்படி (Ibadi) அப்படிங்கிற பிரிவு மற்ற இசுலாமிய பிரிவினரை நம்பிக்கையற்றவர்கள் (கபீர்கள்) என்று கருதுகிறது. அகமதியா என்பவர்களை முசுலிம்களாகவே பெரும்பான்மை பிரிவை சார்ந்த முசுலிம்கள் நினைப்பதில்லை. ஒவ்வொரு பிரிவுளிலும் உட்பிரிவு உண்டு.குரானை மட்டுமே நம்பும் பிரிவு உண்டு அவங்க கதீசு கிதீசு அப்படிங்கிற எதையும் ஒத்துக்கமாட்டாங்க. குரான்ல இல்லாததா கதீசுல இருக்கு? அப்படிங்கிறது அவங்க வாதம்.
கிருத்துவம்
உரோமை தலைமையிடமாக கொண்டு ரோமன் கத்தோலிகர்கள் உள்ளார்கள். அவர்களின் செயல்பாடு பிடிக்காதவர்கள் பிரிந்து சென்று அமைத்தது புரட்ஸ்தாந்து. மரபு வழாத (பழமைக்கோட்பாடு சார்ந்த) கிருத்துவர்கள். சிரியன் கிருத்துவர்கள், மாரோனைட் கிருத்துவர்கள், ஆர்மினியன் அபோஷ்டோலிக் கிருத்துவர்கள், காப்டிக் மரபு வழாத கிருத்துவர்கள் ... இவங்க எல்லாம் புரட்ஸ்தாந்து அல்ல. ரோமன் கத்தோலிகர்களுக்கு முன்னாடியே உருவான பிரிவுகள்.
ரோமன் கத்தோலிக்கர்கள் அல்லாதவர்களை குறிக்க புரட்ஸ்தாந்து என்ற சொல் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
ஆங்கிலிக்கன், அட்வண்டிஸ்ட், பாப்டிஸ்ட், லுதரேன, பின்னாளைய துறவி கிருத்துவர்கள் (மோர்மன்), மெத்தோடசிம் கிருத்துவர்கள், ஆமிஸ் கிருத்துவர்கள், ஜகோவா கிருத்துவர்கள்.... ....
இன்னும் ஏகப்பட்டது இருக்கு.
பௌத்தம்
ஈனயாணம், மகாயாணம், வச்ரயாணம் என்று பிரிந்து உள்ளது. இலங்கை, பர்மா, தாய்லாந்தில் கடைபிடிக்கப்படும் தேரவாதம் மகாயாணத்தை சார்ந்தது.
அசோகர் காலத்தை சார்ந்தது ஈனயாணம்.
தேரவாதத்துக்கும் தமிழர்களுக்கும் ஆகாது. பர்மா, ஈழம் மறந்து போச்சா? கடைசி கட்ட ஈழ போரில் தாய்லாந்து இலங்கைக்கு போர் விமானம் எல்லாம் கொடுத்து உதவுச்சாம்.
நாத்திகம்
நாத்திகம் என்பதால் நமக்கு தெரிந்த திராவிட கழகத்தை எடுத்துக்கொள்வோம்.
திராவிட கழக வீரமணியின் செயல்பாடு பிடிக்காமல் பலர் பிரிந்து சென்று வேறு அமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். தொல்லை கொடுப்பவர்கள்\எதிர்ப்பவர்கள் பிரிந்து போனதும் அவரும் தான் பெத்த ராசாவை அடுத்த திக தலைவராக தயார்படுத்தி வருகிறார். இப்ப அந்த இயக்கத்திலிருப்பவர்களும் ஆமாம் சாமி நீங்க சொல்றது தான் சரி என்று தலையாட்டிக்கொண்டுள்ளார்கள்.
எந்த மதமும் மக்களை ஒன்றிணைக்கவில்லை. அதிலுள்ள பிரிவுகளே இதற்கு சாட்சி. மதமெல்லாம் மக்களை சுரண்ட வந்த பம்மாத்து என கூறிய நாத்திக இயக்கங்களும் மதங்கள் போன்றே உள்ளன. இந்த பிரிவுகளுக்கு காரணம் அதிகாரம் தனக்கு மட்டுமே வேண்டும் என நினைப்பதே. அதிகாரம் கிடைக்காது என்று தெரிந்தால் அதிகாரம் வேண்டுபவர் தன் ஆதரவாளர்களுடன் தனியாக பிரிந்து வந்திடுவார் இல்லையென்றால் அதிகாரத்துக்கு போட்டியாக உள்ளவர்கள் அதிகாரத்திலுள்ளவர்களால் பிரிக்கப்படுவார்கள்\ஓரங்கட்டப்படுவார்கள்\ஒழிக்கப்படுவார்கள்.
தவறாக இருந்தாலும் மக்களுக்கு ஏதாவது ஒன்று தேவையாக உள்ளது. இந்த தேவை தான் மதத்துக்காரர்களின் முதலீடு. மதச்சண்டை எல்லாம் வருவது இதனால் தான். யாரும் சண்டை போடலைன்னா அவங்க எப்படி பொழப்ப ஓட்டறது?
நமக்கு ஏதோவொரு நம்பிக்கை வேண்டும். தவறில்லை ஆனால் நம்ம நம்பிக்கைக்கு எதற்கு அடுத்தவர்கள் தரகு வேலை பார்க்கனும்? தரகுகாரர்கள் அவர்கள் சுயநலத்துக்காக நம்மை அல்லவா பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இல்ல எனக்கு தரகர் வேண்டும் என்பவர்கள் தரகர் தங்களை ஏமாற்றாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஊருல நிலத்தின் விலை அநியாயத்துக்கு ஏறியதுக்கு யார் காரணம் எல்லாம் தரகரின் சுயநலம் தான். சமூகத்தில் தரகரின் பங்கு பற்றி விலாவரியாக இன்னொரு இடுகை தான் போடனும், இந்த இடுகைக்கு இது போதும் என்று எண்ணுகிறேன்.
நம் நம்பிக்கையை மற்றவர்கள் முதலீடாக பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.
.
.
5 கருத்துகள்:
உண்மைதான்.
இந்தக் கருத்துகளைப் பரப்புவதற்கு என்று சொல்லி உங்கள் தலைமையில் ஒரு அணி அமைக்கலாம் என்றிருக்கிறேன். சரின்னு ஒரு வார்த்தை சொல்லு தலைவா.
பிரிவுகள் இல்லாத துறைகளே கிடையாது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சமூகத்திலிருந்து விலகி காட்டுக்குள்தான் வாழ வேண்டும்
வாங்க தமிழ் மீரான். நான் என்ன உயிரியல், வேதியல், இயற்பியல், கணக்கியல்,... போன்ற துறைகளை பற்றி பேசுகிறேன். அவை வளர்பவை அவற்றில் பிரிவுகளை உருவாக்கி அதில் நிபுணத்துவம் அடைய முயல்கிறார்கள்.
மதமும் வளரும் துறை என்றால் அதில் பிரிவுகள் வருவதில் தவறில்லை. எனக்கு தெரிந்து மதம் என்பது பழைய கதையை பேசுவது மட்டுமே.
//நம் நம்பிக்கையை மற்றவர்கள் முதலீடாக பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். //
சூப்பர்
நன்றி கோவி.
கருத்துரையிடுக