வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?ஞாயிறு, ஏப்ரல் 18, 2010

நன்றி நன்றி - எரிமலை வெடித்தது.

தமிழ்மண நட்சத்திரமாக இருந்த இந்த ஒரு வார காலத்தில் என் பதிவை படித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. படித்து பின்னூட்டம் போட்டவர்களுக்கு இரட்டை நன்றி.

நான் நட்சத்திரமாக இருக்கிறேன் என்று தெரிந்ததும் அதுவரை உறங்கிக்கிடந்த எரிமலை வெடித்து தன் கோபத்தை காட்டியுள்ளது. அதன் கோபத்தால் ஐரோப்பில் உள்ள வான் வழி போக்குவரத்து தடை பட்டுள்ளது என்பதை தாங்கள் அறிந்திருக்கலாம்.

ஐஸ்லாந்து நாட்டிலுள்ள எரிமலை வெடித்து கற்குழம்புகளை வெளித்தள்ளிக்கொண்டுள்ளது. அதனால் பெரும் புகை  உருவாகியுள்ளது அதில் நிறைய சாம்பல் உள்ளது. இது ஐரோப்பாவை நோக்கி நகர்வதால் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தங்கள் வான் வழியை மூடிவிட்டன.

இந்த சுட்டியில் 18  நிழற்படங்கள் உள்ளன. எல்லாமே அருமையாக உள்ளன, சுட்டு போட்டால் 18ஐயும் போடனும் அதனால் இணைப்பை கொடுத்துவிட்டேன், பார்க்கவும்.

எரிமலை வெடித்து சிதறும் காட்சி.
எரிமலை வெடிச்சா புகை வரத்தான் செய்யும், அதில் சாம்பல் இருக்கத்தான் செய்யும். செருமனியின் அதிபர் தன் வெளிநாட்டுப் பயணம் முடிந்து வான் வழியே தன் நாட்டுக்கு செல்ல முடியவில்லை. இத்தாலிக்கு போய் அங்கிருந்து தரை வழி பயணமாக தான் தன் நாட்டுக்கு சென்றார்.

போலந்து அதிபரின் இறுதி ஊர்வலத்துக்கு இதனால் அமெரிக்க அதிபர், பிரெஞ் அதிபர், செருமன் அதிபர், சுவிடன் மன்னர், எசுப்பானிய மன்னர், வேல்ஸ் இளவரசர், துருக்கி அதிபர், பின்லாந்து அதிபர், கனடா பிரதமர், தென் கொரிய பிரதமர் மற்றும் ஐஸ்லாந்து அதிபர். இதிலிருந்து இந்த எரிமலை சாம்பல் புகையின் பாதிப்பை அறியலாம்.

எல்லா எரிமலை வெடிப்பும் சாம்பல் புகையை வெளியிடும் அவை அனைத்தும் வான் போக்குவரத்துக்கு ஏற்றதல்ல. ஏனென்றால் அந்த சாம்பல் 20000-55000 அடி உயரத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கும். வணிக நோக்கில் பறக்கும் வான் ஊர்திகள் இந்த உயரத்தில் தான் பறக்கும். மேலும் இந்த எரிமலை சாம்பல் மிக நுண்ணியது இரவிலும் மேகமூட்டத்திலும் கண்ணுக்கு புலப்படாது. ரேடார்களும் இவற்றை சரியாக கணிக்காது. இந்த துகள்கள் வானூர்தியின் அனைத்து பகுதிகளையும் எளிதாக அரித்துவிடும் தன்மை கொண்டது. வானூர்தியின் வெளிப்புறமுள்ள பல கருவிகளும் இதனால் பாதிக்கப்படும் இதனால் வானூர்தி பறக்கும் உயரம், காற்றின் வேகம், வெப்பநிலை போன்ற பல அவசியமான கருவிகளுக்கு ஏற்படும் பாதிப்பு வானூர்தியின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிவிடும்.

1980ல் இந்தோனிசியாவின் ஜாவா தீவிலுள்ள எரிமலை வெடித்த போது ஏற்பட்ட சாம்பல் புகையினால் போயிங் 747 வானூர்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அது பிரிட்டிஸ் ஏர்வேசுக்கு சொந்தமானது. அதன் 4 இயந்திரங்களும் செயல் இழந்துவிட்டன, அதன் வானோடிகள் முயன்றதில் வானூர்தி குறைந்த உயரத்தில் இருக்கும் போது இயந்திரங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது மேலும் எரிமலை சாம்பலின் பாதிப்பும் தெரியவந்தது.

இந்த எரிமலை வெடிப்பின் பாதிப்பு அதிகமாக இருக்க காரணம் இது அதிக அளவிலான வான் போக்குவரத்து உள்ள பகுதியில் ஏற்பட்டதே.

பசிபிக் எரிமலை வளையம் எனப்படும் பகுதியில் தான் அதிகளவில் வெடிப்பு ஏற்படும் அது வான் போக்குவரத்து குறைவாக உள்ள பகுதி.

நன்றி.

5 கருத்துகள்:

ராமலக்ஷ்மி சொன்னது…

இயற்கையின் சீற்றம்:(!

பகிர்வுக்கு நன்றி.

அமைதிச்சாரல் சொன்னது…

விமான நிலையங்களில் மாட்டிக்கொண்டவர்கள் பாடு திண்டாட்டம்தான் :-((

பகிர்வுக்கு நன்றி.

குறும்பன் சொன்னது…

நன்றி ராமலக்ஷ்மி.

குறும்பன் சொன்னது…

வாங்க அமைதிச்சாரல். பாவம் அவங்க. நடுவுல மாட்டிக்கிட்ட மருந்து சாப்பிடும் வயசானவங்க பாடு இன்னும் திண்டாட்டம்.

எனக்கு தெரிந்தவரின் அம்மா இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கறாங்க. அவங்க வைத்திருந்த மருந்து தீர்ந்து போயிடுச்சு பாவம். :(

நாமக்கல்லான் சொன்னது…

good post