வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?திங்கள், மே 03, 2010

ஆதவனின் கொதிப்பு - அசையும் அசையா படங்கள்

கதிரவனை ஆராய 850 மில்லியன் செலவில் நாசா சூரிய இயக்க வானாய்வகம் (Solar Dynamics Observatory) என்ற வான்ஆய்வகத்தை பிப்ரவரி 11 அன்று வானில் செலுத்தியது. அதிலிருந்து பெறப்பட்ட கதிரவனின் படங்களை இப்போது நாசா வெளியிட்டுள்ளது. இவை இது வரை காணக்கிடைக்காத படங்கள். இன்னும் இது முறையாக செயல்பட தொடங்கவில்லை சோதனை ஓட்டம் நிலைநிறுத்தும் பணி நடந்துக்கிட்டு இருக்கு, இன்னும் ஒரு மாதத்தில் பணி முழுமையடைந்து முழு செயல்பாட்டுக்கு இவ்வாய்வகம் வந்துடும். இப்பவே இந்த மாதிரியான அற்புதமான காணகிடைக்காத படங்கள் கிடைக்க ஆரம்பிச்சாச்சு. முழுமையாக செயல்பட தொடங்கினதும் சூரியனைப்பற்றிய பல தகவல்கள் புரிதல்கள் நமக்கு கிடைக்கும் என உறுதியாக நம்பலாம்.

கதிரவனின் இப்படங்கள் நாசாவினால் தற்போது வெளியிடப்பட்டன.


ஆதவனின் அளவுடன் ஒப்பீடு. ஆதவனிலிருந்து வரும் தீ கனலின் அளவுக்கு கூட பூமி இல்லையேப்பா... நம்ம பூமி இவ்ளோ சிறுசா?


புற ஊதா கதிர்கள் வெளியிடும் கதிரவனின் தோற்றம். வண்ணங்கள் நமக்காக தீட்டப்பட்டவை. சிவப்பு ஒப்பீட்டளவில் குறைந்த வெப்பமுடையது (தோராயமாக 60,000 கெல்வின் அல்லது 107,540 டிகிரி பாரன்கீட்), நீலம் மற்றும் பச்சை வண்ணங்கள் சிவப்பை வண்ண இடத்தை விட சூடானவை. (மில்லியன் கெல்வின் அல்லது 1,799,540 டிகிரி பாரன்கீட்டைவிட அதிகம்)

கொதிக்கும் கதிரவன் கனல் வெளிவரும் படம்.  


மிகச்சிறந்த முறையில் படம் பிடிக்கப்பட்ட கதிரவன் கனல். அனல் கக்கும் ஆதவன் -

நீல நிறத்தில் ஆதவன் - கதிரவனின் பல கனல்களும் அதனுடன் தொடர்புடைய அலைகளும்.

நிழற்படம் மட்டும் இல்லாமல் அசையும் படங்களையும் நாசாக்காரங்க வெளியிட்டிருக்காங்க. அதையும் பாருங்க.
.
.

கருத்துகள் இல்லை: