என்னோட பதிவில் ஏகப்பட்ட Gadget களும் இல்லை இருப்பதும் சிலவே, அவையும் நம்பகமானவை... என் வார்ப்புருவும் கூகுள் கொடுத்தது தான், மற்றவர்களிடம் இருந்து தரவிறக்கம் பண்ணியது இல்லை. அப்படி இருக்கும் போது ஏன்? என்ன காரணத்தால் இப்படி ஆகுதுன்னு மண்டைய பிச்சுக்கிட்டேன்.
blogspotக்கு மயில் அனுப்பலாம்ன்னா மயில் முகவரி தெரியலை... நம்ம நிலைமை இப்படி ஆகிப்போச்சேன்னு கவலையாயிடுச்சு.
நம்ம சிக்கலை சொல்லி தேடுனா சில பேரு தரவிருக்கம் செய்யப்பட்ட வார்ப்புருவில் மாற்றம் செய்தா அல்லது மூன்றாவது ஆளோட Gadget ஐ நீக்கிட்டா சிக்கல் தீர்ந்திடும்ன்னு சொல்லியிருந்தாங்க. சில பேர் அந்த மாதிரி செய்து சிக்கல் தீர்ந்துன்னு சொல்லியிருந்தாங்க.
நானும் உருப்படியா இருந்த சில Gadget களை நீக்கிபார்த்தேன். புண்ணியம் இல்லை. வார்ப்புரு கூகுள் கொடுத்த எளிமையான ஒன்று, அதனால அதில் சிக்கல் இருக்க வாய்ப்பில்லை...
வேற வழியில்லை\தோன்றவில்லை என்பதால் வார்ப்புருவ சோதனை பண்ணிபார்ப்போம்ன்னு முடிவு எடுத்தேன். வார்ப்புருவ நோட்பேட்ல வெட்டி ஒட்டி Tamilers இருக்கான்னு பார்த்தா,அட, அந்த கருமம் அங்க இருந்துச்சு. அது tamilish கொடுத்த ஜாவா சிகிரிப்டுக்கு மேல இருந்துச்சு. உடனே Tamilers இருந்த ஜாவா சிகிரிப்டை வார்ப்புருவில் இருந்து நீக்கிட்டு சேமித்ததும் நம்ம வலைப்பதிவு ஒழுங்கா வேலை செய்யுதுங்க.
எப்படி Tamilers ஜாவா சிகிரிப்டு என் வார்ப்புருவில் வந்ததுன்னு தான் தெரியலை.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக