வணக்கம்

வருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா?



புதன், ஆகஸ்ட் 14, 2019

பத்து ஒழுங்குகள் உள்ள படம் - முதலாவது

எழுதியுள்ள ஒழுங்குகளை ஐந்து காளை ஐந்து கரடி என்று பிரித்து பார்ப்போம். இதுவரை எழுதியுள்ள முப்பதுக்கு மேற்பட்ட ஒழுங்குகளில் எல்லாவற்றையும் விட விழுங்கியும் புள்ளதாச்சியுமே சக்தி வாய்ந்த ஒழுங்குகள்.
இதோ   முதல் படம்


காளை ஒழுங்குகள்
சுத்தியல்
தலைகீழ் சுத்தியல்
விழுங்கி
துளை
புள்ளத்தாட்சி

கரடி ஒழுங்குகள்
தொங்கும் மனிதன்
விழும் விண்மீன்
விழுங்கி
கார்முகில்
புள்ளத்தாட்சி

திங்கள், ஆகஸ்ட் 12, 2019

மூனு வடக்கத்தி விண்மீன் - கரடி Three Northern stars

மூனு தெக்கத்தி விண்மீன்கள் இருந்தா வடக்கத்தி விண்மீனும் இருக்கனுமில்ல. இங்கயும் தெக்கத்தி பக்கம் வருமானம்  வருவது அதை சுரண்டி தின்பது வடக்கத்தி. இது  மிக  அரிதாக  தோன்றும் ஒழுங்கு. இதை எப்படி அறிவது?



  1. ஏறுமுகத்தில் தான் இது தோன்றும்
  2. பெரிய வெள்ளை உடல் நீளமான மேல் குச்சியுடன் தோன்றும். கீழ் குச்சி இருக்காது, இருந்தாலும் பூதக்கண்ணாடியை வைத்து தேடும் அளவு தான் இருக்கும்.
  3. அடுத்ததாக அதை விட சிறிய வெள்ளை உடல் தோன்றும். இதன் முடிவு முந்தைய வெள்ளை உடலை விட அதிகமாக இருக்கும். இந்த உலக்கையை முந்தைய நாள் உலக்கைக்குள் அடக்கி விடலாம்
  4. அடுத்து முந்தைய நாளை விட சிறிய வெள்ளை உடல் தோன்றும், இதுக்கு மேல் கீழ் குச்சிகள் இருக்காது.






வெள்ளி, ஆகஸ்ட் 02, 2019

புள்ளத்தாச்சி டோஜி Harami CROSS candlestick pattern

புள்ளத்தாச்சி காளை, புள்ளத்தாச்சி கரடியை  பார்த்துள்ளோம். புள்ளத்தாச்சி டோஜி அதிலிருந்து சிறிது வேறுபட்டது. அது என்னன்னா அங்க புள்ளயோட நிறம்  தெரியும் இங்க சரியா தெரியாது.



  1. இறங்கு முக போக்கோ ஏறுமுக போக்கோ இருக்கனும்.
  2. அந்த போக்கின் தொடர்ச்சியா உடலுள்ள உலக்கை இருக்கனும். (ஏறுமுகம்னா வெள்ளை இறங்கு முகம்னா கருப்பு)
  3. அந்த உலக்கைக்கு அடுத்து டோஜி தோன்றனும். முன்னாடி உள்ள உலக்கையின் உடலுக்குள்  இந்த டோஜி அடங்கனும்.
  4. ஏறு முகத்தில் வெள்ளை நிற உடல் தோன்றிய பின் அடுத்த நாள் டோஜி என்றால் அது கரடி புள்ளத்தாச்சி டோஜி.
  5. இறங்கு முகத்தில் கருப்பு நிற உடல் தோன்றிய பின் அடுத்த நாள் டோஜி என்றால் அது காளை புள்ளத்தாச்சி டோஜி.

இது  புள்ளத்தாச்சி  தான் என்றாலும் உண்மையான புள்ளத்தாச்சி  மாதிரி இதுல நம்பிக்கை வைப்பது தவறாக முடியும் ஏன்னா டோஜி நிறமற்றது.

காளை புள்ளத்தாச்சி என்றால் டோஜிக்கு (கிடை கோடு) மேல் விலை போனால் வாங்கலாம்.
கரடி புள்ளத்தாச்சி  என்றால் டோஜிக்கு (கிடை கோடு) கீழ் விலை போகும் எனலாம்.

வியாழன், ஆகஸ்ட் 01, 2019

நீள் குச்சிகள் Long and short Shadows

நீள கீழ்  குச்சி
உடலின் கீழ் நீளமான குச்சியும் மேலே சிறிய குச்சியும் இருந்தால் நாளின் முற்பகுதியில் கரடி\விற்பவர்கள் செல்வாக்கு அதிகரித்திருந்தது என்று  பொருள்.

இதை எப்படி அறிவது?
பார்த்தா தெரியும் என்கிறீர்களா? ;) சில விதிகள் இதற்கு உண்டு.


  1. கீழ் குச்சியின்  நீளம் உலக்கையின் மொத்த நீளத்தில் மூன்றில் இரண்டு பங்கோ அதற்கு மேலோ இருக்கவேண்டும்.
  2. இது கரடியாகவோ காளையாகவோ இருக்கலாம்.
  3. கரடியாக இருந்தால் அன்றைய நாளின் முடிவுக்கும் குச்சியின் கீழ் விலைக்கும் பெரும் வேறுபாடு இருக்கும்.
  4. காளையாக இருந்தால்  அன்றைய நாளின் தொடக்கத்துக்கும் குச்சியின் கீழ் விலைக்கும் பெரும் வேறுபாடு இருக்கும்.
  5. காளையாக இருந்தால் காளை கொஞ்சம் வலிமை குன்றியதாக  இருக்கும்
ஆதரவு கோட்டில் அல்லது தடை கோட்டில் நீள் குச்சி தோன்றினால் இதன் சிறப்புத்துவம்   அதிகரிக்கும்.

நீள் மேல் குச்சி
உடலின் மேல் நீளமான குச்சியும் கீழ் சிறிய குச்சியும் இருந்தால் நாளின் முற்பகுதியில் காளை\வாங்குபவர்கள் செல்வாக்கு அதிகரித்திருந்தது என்று  பொருள்.

இதை எப்படி அறிவது?
பார்த்தா தெரியும் என்கிறீர்களா? ;) சில விதிகள் இதற்கு உண்டு.


  1. மேல் குச்சியின்  நீளம் உலக்கையின் மொத்த நீளத்தில் மூன்றில் இரண்டு பங்கோ அதற்கு மேலோ இருக்கவேண்டும்.
  2. இது கரடியாகவோ காளையாகவோ இருக்கலாம்.
  3. கரடியாக இருந்தால் அன்றைய நாளின் தொடக்கத்துக்கும் குச்சியின் மேல் விலைக்கும் பெரும் வேறுபாடு இருக்கும்.
  4. காளையாக இருந்தால்  அன்றைய நாளின் முடிவுக்கும் குச்சியின் மேல் விலைக்கும் பெரும் வேறுபாடு இருக்கும்.
  5. கரடியாக இருந்தால் கரடி கொஞ்சம் வலிமை குன்றியதாக  இருக்கும்
ஆதரவு கோட்டில் அல்லது தடை கோட்டில் நீள் குச்சி தோன்றினால் இதன் சிறப்புத்துவம்   அதிகரிக்கும்.